PDA

View Full Version : கல்யாணசாப்பாடுசிவா.ஜி
26-05-2007, 10:03 AM
சம்பந்தம் ஊரில் ஒரு கல்யாணத்தையும் விட்டு வைக்க மாட்டார்.முந்தாநாள் ரோட்டில் பார்த்த நபர் பத்திரிக்கை
கொடுத்தாலும் கண்டிப்பாக போவார்.
எதற்கு என்றா கேட்கிறீர்கள்? பந்திக்குத்தான்.நல்ல சாப்பாட்டு ப்ரியர்.25 ரூபாய் மொய் கொடுத்துவிட்டு
50 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வருவார்.
வீட்டில் முதிர்கன்னியாய் ஒரு மகள் இருப்பதை பற்றி கவலைப்படாமல்,அவளின் கல்யாணத்தைப்பற்றி
யோசிக்காமல் ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும்
இவருக்கு மகளை கட்டிக்கொடுத்து அணுப்ப மனமில்லை.காரணம் அவள் கொண்டு வரும் சம்பளம்.
ஆர்த்தி, அப்பாவின் போக்கு பிடிக்கவில்லை என்றாலும்
அனுசரித்து போகும் பெண்.அவளுக்குள்ளும் காதல் பூத்தது.
அவளை அவளாகவே நேசிக்கும் ஒருவன் கிடைத்தபோது அவளால் அந்த காதலை ஒதுக்க முடியவில்லை.
சம்பந்தத்துக்கு இந்த காதல் தெரியவந்தபோது ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதித்து,
அழகாய் பூத்திருந்த அந்த உறவை கொச்சைப்படுத்தி கூறு போட்டுவிட்டார்.
எப்போதும் அனுசரித்து போகும் ஆர்த்தி இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு அழுத்தமான மவுனத்துடன் இருந்தாள்.
அப்பாவை நேரிடும்போது மட்டும் அருவெறுப்பான
ஒரு பார்வையை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவாள்.
வழக்கம்ப்போல் ஓடி ஓடி ஊரார் கல்யாண சாப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருந்த சம்பந்தம் அதிர்ந்து போனது,
அன்று அலுவலகம் போன ஆர்த்தி மாலையில்
வீடு திரும்பவில்லை என்று அறிந்தபோது.மூன்று நாட்கள் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை.
மகள் வராத வருத்தத்தை விட வருமானம் வராது என்ற கவலைதான் அவருக்கு.
அந்த எரிச்சலில் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தபோதுதான் அந்த கடிதம் வந்தது.
"திருவாளர் சம்பந்தம் அவர்களுக்கு
இத்துடன் இனைத்துள்ள கல்யாணப்பத்திரிக்கை உங்களுக்கு
மகளாய் பிறந்த துரதிஷ்டசாலி ஆர்த்தியுடையது.
எனக்கு கண்டிப்பாய் தெரியும் நீங்கள் அவசியம்
இந்த திருமணத்திற்கு வருவீர்கள் என்று.
வந்து அவசியம் சாப்பிட்டுவிட்டு மறக்காமல்
எப்போதும் கொடுக்கும் அந்த மொய் பணமான
25 ரூபாயை கொடுத்துவிட்டுப்போங்கள்
அதையே நீங்கள் எனக்கு கொடுத்த சீதனமாய்
வைத்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ஆர்த்தி

பின் குறிப்பு:அப்பாவாய் உங்கள் கடமையை நீங்கள் செய்ய தவறியிருந்தாலும்,
மகளாய் என் கடமையை மறக்கவில்லை,நீங்களும் அம்மாவும் இருக்கும்வரை
என் பணம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும்.

அக்னி
26-05-2007, 10:06 AM
நெத்தியடிக் கதை...
ஆனால், தாய் என்ன பாவம் செய்தார்? அவருக்கு ஏன் இந்த பிரிவு?
தவிர்க்கமுடியாததுதான்... ஆனால் கேட்டுவிட்டேன்...

சிவா.ஜி
26-05-2007, 10:11 AM
எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு தாயை பிரிந்துதானே ஆக வேண்டும் நன்பரே.பாராட்டுக்கு மிக்க நன்றி.

அக்னி
26-05-2007, 10:15 AM
எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு தாயை பிரிந்துதானே ஆக வேண்டும் நன்பரே.பாராட்டுக்கு மிக்க நன்றி.
அதற்காக இப்படியான பிரிதல் வலியைத்தான் தரும். மேலும், அந்தப்பாத்திரம் இக்கதையில் முக்கியமில்லாததாகையால் பாதிப்பு பெரிதாகவில்லை.

சுட்டிபையன்
26-05-2007, 10:19 AM
ஒரு அழகிய ஒரு பக்க சிறுகதை
பாராட்டுக்கள்

சிவா.ஜி
26-05-2007, 10:28 AM
மிக்க நன்றி சுட்டி. தமிழ்மன்றத்தில் என்னுடைய முதல் கதை இது. பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை பண்படுத்தும்.

lolluvathiyar
26-05-2007, 10:59 AM
அருமையா கதை
சாரி உன்மை

இந்த மாதிரி மகளின் சம்பளத்தில் வயற்றை கழுவும் அப்பன்களை நான் பலபேரை நேரில் பார்த்திருகிறேன்.

எனக்கு தெரிந்த இந்த மாதிரி அனைத்து மகள்களும் ஓடு போய் தான் கல்யானம் செய்தார்கள், வேறு வழி.

அக்னி
26-05-2007, 01:28 PM
மிக்க நன்றி சுட்டி. தமிழ்மன்றத்தில் என்னுடைய முதல் கதை இது. பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை பண்படுத்தும்.

முதல் கதையா...?
கன்னிப்படைப்பிற்கு வாழ்த்துக்கள்...
அப்படியானால் இன்னும் இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கலாம்...

கன்னிமுயற்சிக்கு 50 iCash.

சிவா.ஜி
26-05-2007, 01:38 PM
நன்றி அக்னி.தமிழ்மன்ற நன்பர்களின் ஆதரவோடு ஒரு ரவுண்டு வருவோம்.

மனோஜ்
26-05-2007, 01:56 PM
வாழ்த்துக்கள் அருமையான கதை
முகத்துவாரத்திற்கு இதை சிபாரிசு செய்கிறோன்

சிவா.ஜி
26-05-2007, 02:08 PM
மிக்க நன்றி மனோஜ்

அமரன்
26-05-2007, 04:17 PM
விவாதங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் சமூகத்தில் இருக்கும் சிலருக்கு சாட்டையடி கொடுத்திருக்கின்றீர்கள் சிவா. ஒருவர் திருமணத்துக்கு அழைக்கும்போது கூட்டமாகப் போய் சாப்பிட்டு விட்டு வெட்டி நியாயம் பேசி விட்டு தம்பூலம் தரித்து வீடு திரும்பும் சில குடும்ப உறுப்பினர் வயது ஏறிக்கொண்டிருக்கும் மகள்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்ப்டியான ஒரு தந்தைக்கு சாட்டை அடி கொடுத்து ஒரு மகள் பாத்திரத்தை உருவாக்கி பெண்மையை உயர்த்தி விட்டீர்கள். பாராட்டுகள்.

ஓவியா
26-05-2007, 07:47 PM
அழவச்சுடீங்களே நண்பா!!

கதை பிரமாதம். அருமையான கரு.

இப்படியும் சுயநல பெற்றோர்கள் அதிகமே உண்டு. நானும் பார்த்திருகிறேன்.

நன்றி. பாராட்டுக்கள்.

சக்தி
26-05-2007, 07:55 PM
நல்ல கதை. முதல் முயட்சியிலேயே நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

சிவா.ஜி
27-05-2007, 04:35 AM
அமரன்,ஓவியா, ரோஜா அனைவருக்கும் மிக்க நன்றி. ஊக்கப்படுத்தப்படுவது என்னைப்போல் உள்ள ஆரம்ப எழுத்தாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. மேலும் உங்களின் பாராட்டை பெற தரமான படைப்புகளை தருவேன்.

அன்புரசிகன்
27-05-2007, 10:50 AM
நல்ல கதை. நாட்டு நடப்புக்களில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள்.

விகடன்
27-05-2007, 10:56 AM
நல்லதொரு குறுங்கதை.
வாழ்த்துக்கள் சிவா.ஜீ

Gobalan
07-06-2007, 05:10 PM
பெண்மேல் பாரமாக இருக்கும் அப்பாக்கள் படிக்க வேண்டிய நல்ல சிறுகதை. நன்றாக எழுதிருக்ரீர்கள். கடைசி வரியில் உள்ள பி.கு நெஞ்சத்தை கிள்ளியது. நன்றி. கோபாலன்.

சிவா.ஜி
09-06-2007, 04:35 AM
மிக்க நன்றி கோபாலன். சொல்லவந்ததை சரியாக புரிந்துகொண்டு பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.

maxman
13-06-2007, 07:30 AM
சிறந்த கருத்தை மிக சிறிய கதையில் கூறிய சிவா.ஜி அவர்களுக்கு
என் நன்றி!

சிவா.ஜி
13-06-2007, 08:02 AM
சிறந்த கருத்தை மிக சிறிய கதையில் கூறிய சிவா.ஜி அவர்களுக்கு
என் நன்றி!

மிக்க நன்றி மேக்ஸ்மேன். உங்களைப்பற்றி மன்றத்திற்கு ஒரு அறிமுகம் கொடுங்களேன்.

MURALINITHISH
18-09-2008, 09:10 AM
சரியான சாட்டையடி ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சந்தனமாம் சில உதவாக்கரை அப்பாக்களுக்கு நல்லதொரு பாடம்

சிவா.ஜி
18-09-2008, 10:41 AM
சரியான சாட்டையடி ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சந்தனமாம் சில உதவாக்கரை அப்பாக்களுக்கு நல்லதொரு பாடம்
எங்கோ மறைந்திருக்கும் எழுத்துக்களை தேடிப் படித்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு மனம்நிறைந்த நன்றி முரளி.