PDA

View Full Version : எப்படிச் சொல்வேன்?



rambal
15-05-2003, 02:50 PM
மனக் குளத்தில்
வார்த்தை பிடிக்க
கொக்காய்
ஒற்றைக்காலில்
தவமிருந்த கதையை
எப்படிச் சொல்வேன்?

ஊதிவிட்ட
புகைவளையங்களுக்குள்
ஒற்றைமின்மினியாய்
பறந்து திரியும்
கவிதை கருவிற்கு
வலைதேடி சலித்துப்
போய் நொந்ததை
எப்படிச் சொல்வேன்?

எதையாவது எழுது
என்று பரபரத்து
எழுதிக்குவித்து
முதிர் கன்னியாய்
என் கணிணியில்
காலம் கழிக்கும்
(க)விதைகளைப் பற்றி
எப்படிச் சொல்வேன்?

குறை மாதத்தில்
பிரசவித்த
சதைப்பிண்டங்களை
உயிரோடு
அலைய விட்டு
குற்ற உணர்ச்சியில்
நாள் முழுதும் தவிப்பதை
எப்படிச் சொல்வேன்?

நிலவில் அமர்ந்து
தூண்டில் வீசி
நட்சத்திரம் பிடிக்கப் போய்
பிரபஞ்ச அழகில்
லயித்து
சொக்கிப் போய் நின்றதை
எப்படிச் சொல்வேன்?

சிறு புழு
கொண்டு
எதிர்பாராவிதமாய்
சுறா மீன் பிடித்த
கதையை
எப்படிச் சொல்வேன்?

எப்படிச் சொல்வேன்?
நான் எழுதும் க(வி)தையை...

poo
16-05-2003, 07:25 AM
இன்னொரு சுயவிமர்சணம்?!!!!!....

Nanban
16-05-2003, 08:21 AM
கஷ்டப் பட்டு எழுதி விட்டு, பின்னர் அதை முழுமையாக வாசிக்க ஆளின்றி அனாதையாக நிற்கும் பொழுது ஆயாசமாகத் தான் இருக்கிறது. ஆனால் அதே சமயம் இங்கு வந்து குவியும் கவிதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்க சமயம் இருக்கிறதா? telephone bills, ISP bills எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், எல்லாவற்றையும் படிப்பதும் - படித்தவை எல்லாவற்றிற்கும் விமர்சனம் வாழ்த்துகள் எழுதுவதும் முடிகிற காரியமில்லை. எனக்கும் இது அடிக்கடி நிகழ்கிறது. வாசித்தவர்களின் எண்ணிக்கையில் பத்து சதம் தான் comment பண்ணுகிறார்கள். நிறைய சமயங்களில், குறிப்பிடத் தக்க கவிதைகள் எழுதி வரும் அன்பர்கள் நம் கவிதையை வாசித்தார்களா என்பது கூட தெரியவில்லை. விமர்சனம் வரவில்லையென்றாலும், ஓரளவிற்கு திறம் பட கவிதை செய்யும் அன்பர்கள் வாசித்து விட்டார்கள் என்றால் மனதிற்கு ஒரு திருப்தி. படிக்க வேண்டியவர்கள் படித்தாகி விட்டது என்பதில் ஒரு நிம்மதி. கவிதை எழுதியதன் பயன் கிட்டியது என்ற ஆனந்தம்.

ஆகையினால், நான் ஒரு யோசனையை முன்வைக்கிறேன் - செயல் படுத்தமுடியுமா என்பதை moderators / administrators தான் சொல்ல முடியும். ஒருமுறை ஒரு post open செய்யப்பட்டவுடனே automatically their name should be registered in the posts. பதில் எழுதாவிட்டாலும் கூட. இதன் மூலம் யார், யார் நம் பதிவை, கவிதையை வாசித்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் - அன்பர்கள் பதிலாக எதையும் விட்டுச் செல்லவில்லையென்றாலும். மேலும் தன் anonymous statusற்கு பங்கம் வந்து விடுமோ என்று அஞ்சும் அள்விற்கு இங்கு ஏதுமில்லையே? இங்கு விஜயம் செய்வது பெருமையல்லவா?

கவனிப்பீர்களா?