PDA

View Full Version : என் காவியக் காதலன் கண்ணன்-பாகம் 3



பிச்சி
25-05-2007, 07:36 AM
விண்ணும் பொடிபட
விண்டு விழுந்திட
தூவிய மலர்த் தூவல்களைத்
தாங்கி நின்றது
என் இல்லத்து துளசிமாடம்
நட்சத்திர மடந்தைகள்
பாழடைந்த விண்ணில் இல்லை
சிதைந்துபோன கதிரவன்
காணவில்லை
முதிர்ந்த பழங்கள் யாவும்
உதிர்ந்து விழுந்ததில்
நனைந்த தரையில்
ருசிகள் அதிகரித்தது.

காற்றின் இதயத்தைத்
துளைத்தெடுத்து வந்தது
ஓர் புல்லாங்குச்சியின்
இனிய ராகம்
ராகத்தின் மேலேறி
பயணித்து வந்தான்
யசோதையின் மைந்தன்
என் இதயம் நெக்கிய
நந்த குமாரன்

இலைகளோடும்
மலர்களோடும்
சல்லாபிக் கொண்டிருந்த
என் மூச்சுக்காற்றை
கைப்பிடியில் இழுத்து
காற்றோடு நெஞ்சில்
அணைத்துக் கொண்டான்
காந்தன்

கனவுகளின் திரையை
மெய்யாக்கி
நாணமிழந்த பூக்களின்
சிரிப்புகளைப்
பொய்யாக்கி
தடுக்கிவிழுந்த காதல் நினைவை
நெஞ்சின் ஓரம் வைத்து
பூட்டினான்
பூதனையை வென்ற
அசகாய சூரன்

நான் பேசும் மொழிக்குள்
அடக்கிவிட்ட
ஆற்றல் குமாரனைக்
கண்ட நிலவு
வெட்கம் படர்ந்தோ
வெறுப்பு மிகுந்தோ
ஓடிச் சென்றது
யாருக்கோ கோள் சொல்ல...

ஓவியா
07-06-2007, 06:45 PM
முதிர்ந்த பழங்கள் யாவும்
உதிர்ந்து விழுந்ததில்
நனைந்த தரையில்
ருசிகள் அதிகரித்தது.




இலைகளோடும்
மலர்களோடும்
சல்லாபிக் கொண்டிருந்த
என் மூச்சுக்காற்றை
கைப்பிடியில் இழுத்து
காற்றோடு நெஞ்சில்
அணைத்துக் கொண்டான்
காந்தன்


இந்த வரிகளில் சொக்கிபோனேன், மிகவும் உயர்ந்த சிந்தனை.

கவிதை அழகே அழகு. கண்ணன் மகிழ்ந்து போவான்.

மிகவும் பிரமாதமான கவிதை, பிச்சியின் ரசனையே அருமை.

பிச்சி
11-06-2007, 03:28 PM
நன்றி அக்கா. உங்கள் பின்னூட்டம் ஒன்று மட்டுமே போதும்...

பிச்சி
15-06-2007, 06:03 AM
மன்ற அண்ணா, அக்கா, இங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க ப்ளீஸ்