PDA

View Full Version : இரட்டைக்கிளவியில் ஓர் கவிதை



சக்தி
25-05-2007, 06:39 AM
இரட்டைக்கிளவியில் ஓர் கவிதை

கடகட-வென இடியின் ஓசை
சடசட- வென மழையின் தூறல்
சலசல- வென நதியின் ஓட்டம்
சிலுசிலு- வென வீசும் குளிர் காற்று
கலகல- வென சிரிப்பொலி
தடதட- வென திரும்பிப்பார்த்தேன்
தளதள- வென படகில் நீ
பளபள- வென ஜொலிக்கும் உன் முகம்
படபட- வென என் நெஞ்சம் பதைக்க
மளமள- வென அருகில் வந்தாய்
மடமட- வென கரங்கள் பற்றி
லொடலொட- வென பேசத்தொடங்கினாய்
பொலபொல- வென பூக்கள் உதிர
குளுகுளு- வென ரசித்தேன் உன்னை

அமரன்
25-05-2007, 06:43 AM
இரட்டைக்கிளவிக்கவிதை சிறப்பாக உள்ளத்து. சின்னதா ஒரு தமாசு. இதை ஒரு கிழவியை நினைத்து எழுதவில்லையே.

ஷீ-நிசி
25-05-2007, 06:52 AM
அடஅட அருமை அருமை....
வரவர கவிதை சூப்பரா இருக்கு..
கிடுகிடு வென கவிதையில் வளர
வாழ்த்துக்கள்!

பிச்சி
25-05-2007, 07:16 AM
நல்லா இருக்குங்க.. சூப்பர்

சக்தி
25-05-2007, 12:50 PM
ஊக்கமளித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்

வெற்றி
25-05-2007, 12:53 PM
பல்லேலக்க...பல்லேலக்க...
ராஜாவின் ராஜா,,,
கலக்குறீங்க...நீங்க வந்த தமிழ்மன்றம் ஊட்டியப்பா....

விகடன்
25-05-2007, 01:04 PM
சுடச் சுட படித்துப்பார்த்தேன்
விறு விறு என்று எழுதிமுடித்த இரட்டைக்கிழவியை.

வாழ்த்துக்கள்

mashiva88
25-05-2007, 01:14 PM
nan muyarcchi.Paarattukkal.

inniya kavidaigal menmelum yakka vazhtthukkal.Nandri.

சக்தி
25-05-2007, 01:20 PM
பல்லேலக்க...பல்லேலக்க...
ராஜாவின் ராஜா,,,
கலக்குறீங்க...நீங்க வந்த தமிழ்மன்றம் ஊட்டியப்பா....


மளையாளக் கரையோரம் கவி பாடும் பொள்ளாச்சி

ஆதவா
25-05-2007, 02:47 PM
inniya kavidaigal menmelum yakka vazhtthukkal.Nandri.

நண்பரே! இங்கே தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.. தமிழ்மன்ற விதிமுறைகள் படித்து தெளிவுறவும்.. அதோடு எத்தனை முறை ஆங்கிலத்தில் எழுதினாலும் இங்கே அழித்துவிடுவார்கள் என்பதையும் நான் நினைவில் கூறுகிறேன்..

ஆதவா
25-05-2007, 02:50 PM
அருமை ரோஜா!! சிறப்பாக முடித்திருக்கிறீர்கள்.. இரட்டைக் கிளவிகள் மறந்துவிட்ட/விடப்போகிற காலத்தில் நினைவுக்குக் கொண்டுவந்தமை அருமை.. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்... ஒரே அலைவரிசை அல்லாமல் வேறுவிதமாக செய்திருக்கலாம்.. ஆனாலும் சுவை குறையவில்லை.. அந்த லொடலொட வெகுபிரமாதம்.... ஹி ஹி..

தொடர்ந்து எழுதவும்.....

சிவா.ஜி
30-05-2007, 07:38 AM
விடு விடு வென சூப்பர் வேக கவிதையெழுதிய ரோஜா கிடு கிடு வென உயர்வடைய வாழ்த்துக்கள்.

மனோஜ்
30-05-2007, 07:48 AM
விறு விறு வென எழுதிய கவி
மள மள வென மனதில் நின்றது
குளு குளு வென கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்

lolluvathiyar
30-05-2007, 08:13 AM
லுலு லுலு
கிடு கிடு
சிடு சிடு
இப்படி இன்னும் நிறைய பாக்கி இருகிறது
அதுக்கு ஒரு தனி கவிதை போடவும்
ஏ.கா

கிடு கிடு வென விலைவாசி ஏறி
லுலு லுலு என்று பாட்டு நிண்று
சிடு சிடு என் முகம் மாரி
கிறு கிறு என கிருக்கு தட்டி
மல மல என் சிக்கனம் தேடி

இப்படி இன்னும் தொடருங்கள்
உங்கள் சிக்னேச்சரில் உனிகோடாக்கம் செய்யவில்லை
அதையும் கவனியுங்கள்

சக்தி
30-05-2007, 02:59 PM
வாத்தியாரே தாங்கள் யுனிகோடாக்கம் செய்யவில்லை என்று எதைப்பற்றி கூறுகின்றீர் என சொல்ல முடியுமா? ஒருவேலை எனது படைப்புகளை இணைக்கவில்லை என கூறுகிறீர்களா? தயவுசெய்து தெளிவு படுத்தவும்.
நன்றி