PDA

View Full Version : தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்.சுட்டிபையன்
25-05-2007, 04:57 AM
தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்.

சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச்
சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித்
தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான
அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல;
மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை
வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு,
காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும்,

நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும்,

இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு,
திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,
குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,

நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய
பல நீர் வகைகளைக் கொண்டும்,

பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும்,

தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர்
மருத்துவ முறையாகும்.

வீரமும், தீரமும், அருளும், ஆண்மையும், பண்பும், பாவும், பாவலரும், இசையும்,
இசைப் போரும், அரசும், நாடும், மக்களும், மன்னரும் மருத்துவமும், சமயமும், தத்துவம் உயிர்புடன் உலவுகின்ற
காட்சியைச் சங்க இலக்கியங்களைப் படிப்பார்.புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிக்கும் புதுமைத் தமிழ் சங்க
இலக்கியங்களில் கிடைக்கும் மருத்துவம் ஒரு சிறந்த அறிவுப் புதையலாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில்
சிறந்தி விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி,
சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில்
மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.

'' சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....''
(-- சித்தர் நாடி நூல் 18 --)

நன்றி:தமிழ் உலகம்

சுட்டிபையன்
25-05-2007, 04:59 AM
மிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். # 2
உடல் ஒரு பஞ்ச பூதம்.
================
உலகத்தில் ஆறு விதமான வைத்திய முறைகள் பயன் பட்டு வருகின்றன. அவை சித்த வைத்தியம், ஆயுர்வேத
வைத்தியம், யூனானி வைத்தியம், அலோபதி வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம், இயற்கை
வைத்தியம் எனப்படும். இவற்றுள் மிக தொன்மை வாய்ந்தது, சித்த வைத்தியம்.

மற்ற வைத்தியங்கள் எப்போது தோன்றின என்று வரையறுத்து கூற முடியும். ஆனால், சித்த வைத்தியம்
எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. சித்த வைத்தியம் தமிழ் நாட்டில் வாழ்ந்த
சித்தர்களால் உருவானது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பன , எளிமையாக்கப்பட்ட சித்தவைத்தியமாகும்.

மொகலாயர் ஆட்சிக் காலத்துக்குப் பின்தான், யூனானி வைத்தியம் பரவியது.

ஆங்கில ஆட்சியின் போது அலோபதி என்னும் ஆங்கில வைத்தியம் பரவியது.

ஹோமியோபதி வைத்தியம் ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட வைத்தியம்.

சித்த வைத்தியம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட வைத்தியம். அந்த
வைத்தியத்திற்குரிய நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்துள்ளன. தமிழில் முதற்சங்கம் தோன்றிய
காலத்துக்கு முன்பிருந்தே சித்த வைத்தியம் தோன்றிப்
பரவியிருந்தாக மொழி நூல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பதினெண் சித்தர்களும் சிறந்த அறிவியல் மேதைகளாய்த் திகழ்ந்தவர்கள்.இவர்கள் அனைவருமே
அண்டத்திலுள்ளதே பிண்டம் என்னும் கொள்கையினர்.

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
- திருமூலர்-.

சுட்டிபையன்
25-05-2007, 05:05 AM
தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம். #3


இந்த மனித பருவ மாற்றங்களால் உடலியக்கத்திலும் உயிரிக்கத்திலும்
மாற்றங்கள் செயல்படுகின்றன.

இந்த பருவ மாற்றங்களுக்கு ஏற்ப, 60 ஆண்டுகளுக்கு உள்ள சூழற்சிக்கு, மனித உடல்
உட்படும் சமயத்தில் ஒளி தேயும். அதாவது பிருத்வி என்னும் மண் அப்புவை [நீரை]
நெருக்கும். 60-ம் வயதில் அப்பு தேயுவை [நெருப்பை]த் தாக்கும். 70-ம் வயதில் தேயுவை
வாயு [காற்று] தாக்கும். அச் சமயத்தில் உணவு தங்காது குன்றும். 80-ம் வயதில் வாயு
ஆகாயத்தைத் தாக்கும். 90 -ம் வயதில் ஆகாயம் ஆத்மாவை தாக்கும். அச்சமயத்தில்
மலரும் நீரும் அடக்கமின்றிப் பிரியும். 100 -வது வயதில் ஆத்மாவில் ஒடுக்கப்பட்ட
உயிர் , வந்த வழியே பிரியும்.

இவ்வாறு சித்தர்கள் மனிதர்களின் உயிர் இயக்கத்திற்கும் இயற்கையின் ஐம்பூதங்களுக்கும் உள்ள தொடர்பை
அறிவித்துள்ளனர்.

எனவே , உலகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் வாத, பித்த, கப [ காற்று,நெருப்பு, நீர் ] நோய்களுக்கு,
இயற்கை வழியே ஐம்பூதத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட
மருந்து வகைக் கண்டறிந்தார்கள். அம்மருந்துகளை அக மருந்துகள் என்றும் புற
மருந்துகள் என்றும் வகைப்படுத்தினர்.மெய்யுணர்வு, உடல் தத்துவம். மண், நீர், தீ, காற்று என்னும்
நான்கு பொருள்களுடன் வான் என்னும் ஐந்தாவது பொருளும் உண்டு. அவற்றின் மூலமாகிய
வேறு மேல் நிலைப் பகுதியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் வேறாக, அறிவு விளக்கத்திற்கு
ஏதுவான உயிரும் உண்டு என்னும் கொள்ளையை,

'' மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை...''
(புறநானூறு- 2)

'' வளியிடை வழங்கா வானம் '' (புறம். 35 )


'' உயர்நிலை யுலகம் அவன் புக " (புறம். 249)


'' உடம்பொடு நின்ற உயிர் '' (புறம். 292)

---------------


தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்.-- 4
============================

'' உடம்பொடு நின்ற உயிர் '' (புறம். 292)

என்னும் திரு மொழிகளின் மூலம் அறியலாம். கருத்திலும் தெளிவு திகழ்ந்து நிறைவுற்றச் சமயம் என்னும்
மெய் உணர்வுப் பேறு பண்டைக் காலத்தில் மிக நுட்பமாகவும்
திட்பமாக புறநானூற்றில் பற்பல குறிப்புக்கள் காணப்படுகின்றன.

நீர் இன்றி வாழாது உடல்; அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரும் ஆவர். உணவால்
உளதாவதுதான் மனித உடல், உணவே நிலத்தின் விளையும் நீரும் ஆகும் என்பதை.

'' நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரி யோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத் திசினோரே....'' (--புறம். 18 --)

அழியாது என்றும் உடலோடு நிலைத்திருக்கும் உயிரென ஒன்றும்
கிடையாது. இது தெளிந்த உண்மை. மாயம் எதுவும் இதில் இல்லை.
சடமும், சக்தியும் ஒன்றறக் கலந்துள்ளதை....,

'' உடம் பொடு நின்ற உயிரும் இல்லை '' என்கிறது புறநானூறு.

எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களுடைய வரலாற்றுக்
குறிப்புக்கள் நம் பண்டையத் தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆதிமருந்தை அடிப்படையாகக் சித்த மருந்துவம்
பண்டைக் காலந்தொட்டு தமிழ் நாட்டில் பரவி இருந்து
உயர்தனிக் கலையாகச் செல்வமாக திகழ்கிறது.

'' சக்திதான் என்றும் சமைந்து உருவாகுமே...'' என்கிறார் திருமூலர். உலகம்
தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தவள் ஆதி பராசக்தி என்று திருமூலர் கூறுகிறார்.
திருமூலர் தவம் செய்த திருவாடுதுறை சித்த மார்க்கத்தின் முதல் நிலையம் எனப் போற்றப்படும்
'' முந்தி உதிக்கின்ற மூலன் மடைவறை '' என்னும் திருமந்திரத்தின் சிறப்புப் பாயிரத்தில்
காணலாம். திருமூலர் இயற்றிய தமிழ் மூவாயிரம் தவிர எண்ணாயிரம் என்ற மற்றொரு நூல்
தமிழ் மருத்துவதுறையில் ஆதி நூல் என்று கேள்விப்படுகிறோம். விலை மதிப்பில்லாத
திருமூலரின் எண்ணாயிரம் முற்றும் நமக்குக் கிடைக்கவில்லை.

நோய் வருவது இயற்கை. அப்போது மருந்துண்பதும் இயல்பு. ஆனால் உடல் நல்ல
உடலாக இருந்தால்தான் மருந்து விரைவில் உடலில் கலந்து நோய் தீர்க்கும். உடல் மிகக்
கெட்ட நிலையிலே நோய் வருமானால் மருந்து பயன் தர நீண்ட நாட்கள் ஆகும்.
இதனை கலித்தொகையிலிருந்து ஒரு பாடலை காண்போம்:--

'' திருத்திய யாக்கையுள் மருந்துவன் ஊட்டிய
மருந்து போல், மருந்தாகி, மனன் உவப்பப்
பெரும் பெயர் மீளி....''
[ கலித்தொகை - 17]

மருந்து என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களால் மருந்துவத்தைத்
திருவள்ளுவர் மிகவும் அழகாக விளக்கியுள்ளார்.

'' மிகினும் குறையினும் நோய் செய்யும்
நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று