PDA

View Full Version : மழலை மொழி.......மடந்தை மொழி..........



abdullah
25-05-2007, 12:08 AM
அம்..........அம்.........அம்ம்ம்மா.........
ப்ப...........ப்ப..........அப்ப்ப்பா..........

ம்ம...........ம்ம..................மாமா.............
த்த்தா....................தாத்தா............

வயது ஒன்றில் மழலை பேசியது
பெற்றோருக்கோ மகிழ்ச்சி.

அம்மா அவன்தான்
அப்பா அவன்தான்

அவன்தான் மாமா
அவன்தான் அத்தான்

வயது இருபத்தென்றில் மடந்தை பேசியது
பெற்றோருக்கோ அதிர்ச்சி.

ஓவியா
25-05-2007, 09:58 PM
மன்னிக்கவும் கவிதை சரியாக விளங்கவில்லை.

மடந்தை என்றால் என்ன நண்பர்களே??

அக்னி
25-05-2007, 10:03 PM
மன்னிக்கவும் கவிதை சரியாக விளங்கவில்லை.

மடந்தை என்றால் என்ன நண்பர்களே??

பெண் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஆனால் கவிதை விளங்கவில்லை...

ஓவியா
25-05-2007, 10:36 PM
பெண் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஆனால் கவிதை விளங்கவில்லை...

நன்றி நண்பா.

ஆனாலும் எனக்கு கவிதை விளங்கவில்லை.

abdullah
25-05-2007, 10:50 PM
பெண்களை.....
பேதை பெதும்பை
மங்கை மடந்தை
அறிவை தெறிவை
பேரிளம்பெண்
என அவர்களின் வயதை பொருத்து வகைப்படுத்துவர் என்று படித்ததுண்டு.

பென்ஸ்
25-05-2007, 10:55 PM
அம்..........அம்.........அம்ம்ம்மா.........
ப்ப...........ப்ப..........அப்ப்ப்பா..........

ம்ம...........ம்ம..................மாமா.............
த்த்தா....................தாத்தா............

வயது ஒன்றில் மழலை பேசியது
பெற்றோருக்கோ மகிழ்ச்சி.

அம்மா அவன்தான்
அப்பா அவன்தான்

அவன்தான் மாமா
அவன்தான் அத்தான்

வயது இருபத்தென்றில் மடந்தை பேசியது
பெற்றோருக்கோ அதிர்ச்சி.


ஒருவேளை
அவர்தான் மாமா
அவர்தான் அத்தான் என்று மரியாதை கொடுத்து பேசியிருந்தால் அதிர்சியில்லாமல் இருந்திருக்குமோ....:icon_good:

நம்ம அப்பா அம்மா இப்படி பயந்தால் இந்தியா அமெரிக்கா ஆவது எப்போது ....:cool008: :cool008:

abdullah
25-05-2007, 11:00 PM
குழந்தையாக பேசியவள்....
குமரியாகி தன் காதலனுக்காக பேசுகிறாள்.
இப்பொழுது படியுங்கள் விளங்குகிறதா பார்ப்போம்.

abdullah
25-05-2007, 11:03 PM
மேற்பார்வையாளர் பென்ஸ் அவர்களுக்கு நன்றி.

அக்னி
25-05-2007, 11:45 PM
வயது ஒன்றில் மழலை பேசியது
பெற்றோருக்கோ மகிழ்ச்சி.
மழலை இருபாற்பொதுப் பெயர்.



அம்மா அவன்தான்
ஏன் ஆண்பால்?



வயது இருபத்தென்றில் மடந்தை பேசியது
பெற்றோருக்கோ அதிர்ச்சி.
மழலை பெண்ணானதா? பேசியதா?

முன்னரேயே வலியுறுத்தி, அழுத்திக் கூறுங்கள். அழகான கவியாகிவிடும்...

abdullah
25-05-2007, 11:57 PM
அக்னியின் அலசல்களுக்கு நன்றி.
இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்
கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாகிடும்.

அக்னி
26-05-2007, 12:01 AM
அக்னியின் அலசல்களுக்கு நன்றி.
இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்
கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாகிடும்.

நானும் உங்கள மாதிரிதாங்கோ... மன்றத்தின் தூண்களெல்லாம் தூங்கப்போனதால், நான் ஆட்டம் போடுறன்...

அப்புறம், எழுதுங்கள்... மேலும், எழுதுங்கள்... எழுத்து உங்களுடையதாகும்...