PDA

View Full Version : ஒருதலைக் காதலனின் உளறல்கள்.....



poo
15-05-2003, 12:32 PM
தினமும் பூக்கிறது
என்வீட்டு ரோஜாச்செடி..
ஐந்தறிவுக்குள்ள உணர்வு
உனக்கில்லாமல் போனதின் அர்த்தம்?!..

சூரியன்தான்
எனக்கும் என் உணர்வுகளுக்கும்
உந்துசக்தியாய்..
மாலையில் வீழ்ந்தாலும்
மறுநாள் எழச்சொல்லும்
மாமந்திரம்..

உணவும் உறக்கமும் மட்டுமே
மறந்துவிட்டதென நினைத்தேன்..
உணர்வுகளும்தான்.. -
நினைவூட்டுகிறது மருத்துப்போன
உன் மனது...

உன்னில் நானிருக்கிறேன்
என்னில் நீயிருக்கிறாய்
நன்றாக உணர்கிறது
நமக்கும் வெளியே நிற்கும் காதல்....

ஆலயம் செல்லாமல்
உன்னத கடவுளை கைதொழுகிறேன்..
காதலெனும்...

என் தலையணைகள்
கதறியழுகின்றன...
கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
தலைச்சுமையைக் காட்டிலும்...

நிலவுக்கு துணையாய்
நியமித்தாய்..
நித்தமும் மௌனமொழிகளால்
கொன்றுவிட்டு போகிறாய்...

உன் இதழ்கள்
காதலென விளித்தாலொழிய
என் இரவுகள்
மொட்டைமாடிகளைவிட்டு
வெளியேறும்....

உணர்வுகளால்
உருவான காதல்... உணர்ந்துகொள்ளும்
காதலை...
உணர்ச்சிகளால் வடிக்கப்பட்ட
உன்னால்
உன் இதயக்கோயிலில்
ஒளியாக்க முடியாதா?!!.....

சொல்.. இல்லையேல்..கொல்..
செய்வதா... செத்து மடிவதா?!!..

rambal
15-05-2003, 12:42 PM
காதல்தரும் வலி சுகமான போதை..

என் தலையணைகள்
கதறியழுகின்றன...

இந்த வரிகளில் தெரிகிறது மொத்தக் காதலின் ஏக்கம்..
நான் லயித்த வரிகள் இவைகள்..

பாராட்டுக்கள் காதல் கவியே...

Nanban
17-05-2003, 04:05 PM
உன்னில் நானிருக்கிறேன்
என்னில் நீயிருக்கிறாய்
நன்றாக உணர்கிறது
நமக்கும் வெளியே நிற்கும் காதல்....

உன்னுள் நானும்,
என்னுள் நீயும்
இருக்கையிலே
காதல் வெளியேறி விட்டதா?

புதுமையான கருத்தாக இருக்கிறதே?

காதல் இன்னமும் ஆழமாக உள்ளே அல்லவா சென்றிருக்க வேண்டும்?
கொஞ்சம் விளக்க முடியுமா?

poo
18-05-2003, 03:09 PM
நண்பரே.........

தலைப்பைப் பாருங்கள்..(உளறலைத்தவிர்த்து..) அவன் ஒருதலைக்காதலன்..
அவர்களிடம் காதல் இருக்கிறது.. ஆனால் அது வெளிப்படாமல் உள்ளது.. வெளிப்படுத்தப்படாமல் உள்ளது.. அந்த ஊமைகளைக்கண்டு காதல் எட்டிநின்று சிரிக்கிறது.. உங்களுக்குள் இருக்கும் என்னை வெளியேற்றிவிட்டு என்னைத் தேடுகிறீர்களேவென....

பொதுவாய் விளக்கம் தந்து ஒரு கவிதை புரியப்பட வேண்டும் என்பதில் விருப்பம் இல்லாதவன் நான்!!.

karikaalan
18-05-2003, 05:36 PM
கைக்கிளை என்றால் மடலேறுவதுதானே! அப்படியாவது அவள் மனம் இறங்குகிறாளா என்று பார்க்கலாம்.

பூமகள்
24-07-2008, 06:19 PM
உன்னில் நானிருக்கிறேன்
என்னில் நீயிருக்கிறாய்
நன்றாக உணர்கிறது
நமக்கும் வெளியே நிற்கும் காதல்....
கற்பனையில்
ஒன்றாக நாமிருக்க..
விலகி இருக்கிறது
காதல் நிஜத்தில்..

என் தலையணைகள்
கதறியழுகின்றன...
கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
தலைச்சுமையைக் காட்டிலும்...
பல்லாயிரம் கனவுகள்
சுமந்த விழிகள்..
வெளியேற்றும் கனவுத் துளிகள்..
கனக்கத்தானே செய்யும்??

ஒரு தலைக் காதலை..
இதம் தரப் படைத்த பூ அண்ணாவுக்கு எனது அன்பு பாராட்டுகள்..!!

shibly591
24-07-2008, 06:34 PM
வலிகளில் எத்தனை சுகங்கள்...
காதலில் மட்டம்..

வாழ்த்துக்கள்..

தொடர்க இன்னும்..

பூமகள்
24-07-2008, 06:35 PM
வலிகளில் எத்தனை சுகங்கள்...
காதலில் மட்டம்..
காதல் மட்டமா ஷிப்லி அண்ணா?? :icon_ush: :lachen001::lachen001:

ஹை:p:cool: நல்லா சிண்டு முடிஞ்சி விட்டுட்டேனே...!! :rolleyes::D:D

shibly591
27-07-2008, 07:54 PM
மட்டும் என்பதே சரி...சுட்டிக்காட்டியமைக்கு கோடி நன்றிகள்