PDA

View Full Version : பாழடைந்த மண்டபம்.தாமரை
24-05-2007, 06:02 PM
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது..

இரண்டாம் ஆண்டு இறுதிப் பகுதி..

எங்கள் மூகாம்பிகைக் கல்லூரியின் வளாகத்தில் ஒரு மண்டபம் உண்டு.. நான்கு பக்கமும் திறந்த அந்த மண்டபத்தின் முன் ஒரு கல்வெட்டும் உண்டு.

மண்டபத்தின் எதிரே சிறிது தூரம் சென்றால் ஒரு குளம் உண்டு. கரைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சதுரக் குளம். அதில் நீர் நின்று பார்த்ததில்லை. ஆனால் கரைகளிம் கற்களின் மத்தியில் காலியிடங்கள் உண்டு.. நீர் வரும்பாதை போல.

நான், கோபி, செல்வராஜ் சுந்தர் ஆகிய நான்கு பேர். காலையில் வயல்வெளிகளுக்கு மத்தியில் உள்ள பெரிய கிணற்றில் குளித்து விட்டு ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்போம்.

ஒருநாள் மாலை மண்டபத்தின் அருகே உள்ள ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தோம். அங்கே ஒரு தாத்தா ஆடு மாடுகளைப் மேய்த்துக் கொண்டிருந்தார்.

சும்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மண்டபத்தைப் பற்றியும் விசாரித்தோம். இந்தப் பகுதியில் தங்கப் புதையல் இருப்பதாகவும், அதன் ரகசியம் கல்வெட்டில் இருப்பதாகவும் சொன்னார். அந்தப் புதையலை எடுக்க வேண்டுமானால் சூல் கொண்ட ஏழு எருமைகளையும் ஏழு பெண்களையும் பலிதந்தால் புதையல் ரகசியம் தெரியும் என்றும் கதை சொன்னார். சரி கல்வெட்டைப் படித்துப் பார்ப்படு என்று முடிவு செய்தோம்.

அப்போது மாலை ஆறு மணி இருக்கும். மண்டபத்திற்கு சகல் பந்தோபஸ்துகளுடன் சென்றோம்.கால்களில் கட்டையான பெரிய ஷூ, நல்ல திக்கான பேண்ட், கைகளில் உருட்டுக் கட்டைகள், கத்தி என தடபுடல்தான்,

மெல்ல இருட்டிக் கொண்டிருந்தது. மெல்ல கல்வெட்டின் அருகில் செல்ல புதரில் இருந்து சீறி வந்தது பாம்பு.

பாம்பை அடித்துக் கொன்று விட்டு, கல்வெட்டை தடவித் தடவி படிக்க முயற்சி செய்தோம். ஒன்றும் புரியவில்லை.

கடைசி வரிக்கு முத வரியில் பள்ளத்துப்பட்டி என்ற ஒரு வார்த்தை மட்டும் புரிய நிமிர்ந்தோம்

சரசர வென ஒரு மின்னல் வெட்டியது. அது மண்டபத்தின் உச்சிக்கும் குளக்கரையின் அருகே இருந்த ஒரு மரத்துக்கும் இணைப்பு தந்தாற் போலத் தெரிய

மரத்தடியில் ஒரு பெரிய சமாதி பளீரெனத் தெரிந்தது...
---------------------------------------------------------------
தொடரும்

அக்னி
24-05-2007, 06:10 PM
எல்லோரும் தொடரும் போட்டே காக்க வைக்கின்றீர்களே...

விறுவிறுப்பாக திகில் கதை போல் போகின்றது. உண்மைச்சம்பவம் தானே... புதையல் தானே...

மனோஜ்
24-05-2007, 06:51 PM
அருமை செல்வன் அண்ணா தொடருங்கள் ரோம்ப காக்க வைக்காதிங்க

சக்தி
24-05-2007, 06:58 PM
என்ன செல்வரே இந்த நடுராத்திரியில இப்படி பயமுருத்துகிறீர்கள். ஆனலும் கதை நல்லாவே இருக்கு.

ஓவியா
24-05-2007, 07:42 PM
பாழடைந்த மண்டபம், எழுதியவர் தாமரை செல்வன் என்று கண்டதும்.

ஹி ஹி ஹி ஹி முதலில் இப்படிதான் சிரித்தேன்.

படித்ததும் நெஞ்சு பக் பக் என்று அடிகிறது, அய்ய்க்கோ பயமா இருக்கே, பேய் கதையா?? சரி நல்லாதான் போகுது, பார்ப்போம் கடைசியிலே என்னாதான் கிடைக்குதுனு. (புதயல சொன்னேன்பா)

இந்த பெங்களூர் கேங்கே இப்படிதான், தொடரும் என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்த மாதிறி புசுக்கு புசுக்குனு போட்டு வைப்பார்கள்.

அசத்தலான ஆரம்பம். :sport-smiley-014: :sport-smiley-014:

விகடன்
24-05-2007, 08:03 PM
மிகவும் எதிர்பார்ப்புக்களைத்தூவி விட்டு சென்றுள்ளார் தாமரைச்செல்வன்.

அடுத்த பாகம் எப்போது?

எதிர்பார்ப்புக்களுடன்

ஜாவா

gragavan
24-05-2007, 08:34 PM
ஆகா...இதென்ன தொடர்கதையா...அடுத்து என்னாச்சு....அதச் சொல்லுங்க...

அன்புரசிகன்
24-05-2007, 08:39 PM
இதிலும் பார்க்க தொலைக்காட்ச்சி தொடரில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் தொடரும் பரவாயில்ல.

சீக்கிரம் தொடருங்கக.

aren
24-05-2007, 09:40 PM
இப்படி பாதியில் நிறுத்தினால் எப்படி. சுவாரசியமாக விஷயம் போகும்பொழுது தொடரும். இப்படியே எல்லோரும் இருந்தால் எப்படி.

ஆனால் பாம்பை கொன்றது தப்பு. அது உங்களை ஒன்றும் செய்திருக்காது.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
24-05-2007, 09:44 PM
கதையா நெசமா. பயங்கரமா இருக்கு அப்பு

தாமரை
25-05-2007, 01:40 AM
இதுவரை இந்தச் சமாதியைக் கவனித்ததில்லையே.. மெதுவாய் சமாதியை பார்த்து நடந்தோம். சமாதியை நெருங்கும் போது மண்டபத்தின் பக்கம் யாரோ சிரிக்கும் சத்தம்.

திரும்ப பயம். இருந்தும் நாலுபேர் உள்ள தைரியத்தில் திரும்பிப் பார்த்தோம்.. ஒன்றும் தெரியவில்லை. மழை பெய்ய ஆரம்பித்தது..
விடுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.

மறுநாள் மாலை, மீண்டும் புறப்பட்டோம். இம்முறை பள்ளத்துப்பட்டியை நோக்கி,

பள்ளத்துப்பட்டி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். கோபி ஒரு முறை அங்கே சென்றிருப்பதாகச் சொன்னான்.. (எல்லாம் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கும் சித்தாள் கூட்டத்தில் இருந்த ஒரு அழகியைத் தொடர்ந்துதான்)

பள்ளத்துப்பட்டி எல்லை வரை உருட்டுக் கட்டைகள் சகிதம் சென்றவர்கள் அங்கு ஒரு மரத்தின் மேல் கட்டைகளைப் பதுக்கினோம். (எனக்கு பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்திற்கு முன்னால ஆயுதங்களைப் பதுக்கியது நெனப்புக்கு வந்துச்சு போங்க). ஊருக்குள் மெல்லச் சுற்றி வந்தோம்.. ஊர் கோடியில அந்த அற்புதம் இருந்தது.

ஒரு பெரிய கல். பாறை. 30 அடி உயரம் இருக்கும். அந்தப் பாறையை சுற்றி, குளம் மாதிரி தண்ணி தேங்கி இருந்திச்சி. பச்சை குளத்திற்கு மத்தியில பிரௌன் கல். அதனோட உச்சியில கிரீடம் வச்ச மாதிரி ஒரு சின்னக் கோயில்.

கோயிலுக்குப் போக அரையடிப் பாதை மாதிரி குளத்துக்கு மத்தியில எடம் இருந்துச்சு. (ஒத்தையடிப் பாதைதான், பாதி தண்ணிக்குள்ள இருந்திச்சு)

மலை மேல (!) மெல்ல ஏறினோம். குளுகுளுன்னு நல்லா காத்து வீசுச்சு. சுத்தி முத்தி பாத்தா, பள்ளத்துப் பட்டி முழுசா கண்ணுக்குத் தெரிஞ்சது ஒண்ணும் வித்தியாசமா இல்லை. கோயில்ல பார்த்தா...

அட நம்ம ராகவருக்குப் பிடிச்ச முருகர் கோவில். இந்த மாதிரி ரம்மியமான சூழல்ல ஒரு கோவில் இருக்கறத எதிபார்க்கவே இல்லை. காலையில பூசை நடந்திருக்கும் போல. எல்லோரும் கும்பிட்டுகிட்டு வந்தோம்

மெல்ல இருட்ட ஆரம்பிச்சது. கோயிலை விட்டு திரும்ப மனமில்லாம திரும்பினோம்.

எங்க ஆயுதக் குவியில் இருந்த மரத்துக்கு வந்தா, சர சரன்னு சருகுகளில் ஒரு சத்தம். பாத்தா இரண்டடி நீளத்துக்கு ஒரு பச்சைப்பாம்பு, ஊறுதா இல்லை பறக்குதான்னே புரியலை. அப்புடி ஒரு வேகம். அதன் தலை எலை மாதிரி இருக்க உடல் பச்சையாய். பச்சைப்பாம்பை பார்ப்பது இதுதான் மொத தடவை.

ஆயுதங்களை எடுத்துகிட்டு ஆஸ்டல் வந்தோம். இன்னிக்கும் சமாதியை ஆராய முடியலை.

மூணாவது நாள் காலை.

வழக்கம் போல குளிக்கறதுக்கு பெரிய கிணத்துக்குப் போனோம். (இது 52 அடி விட்டமுள்ள ஒரு பெரிய வட்டக் கிணறு. இதிலதான் நான் நீச்சல் கத்துகிட்டது, தினம் 25, 30 ரவுண்ட் நீச்சல் அடிப்போம்.)

நாங்க மூணு பேரும் குளிச்சு முடிச்சு படியில உக்காந்துகிட்டு கதை பேசிகிட்டு இருக்கோம், கோபி இன்னும் குளிச்சிகிட்டு இருக்கான். திடீர்னு பொத்துன்னு ஒரு சத்தம்.

பாத்தா ஒரு பாம்பு கிணத்தில விழுந்திருக்கு, அது அப்படியே சுவரை ஒட்டின மாதிரியே மேலேற முயற்சி செய்ய, கோபி கோபி.. பாம்பு ஜாக்கிரதைன்னு கத்தினோம்.

கோபியை பாம்பு கவனித்ததோ என்னவோ, அதன் ஆயுசு கோபியின் கையால் முடிய வேண்டுமென விதி இருக்கும் போல அவன் படியேறிய நேரம் அதுவும் படி அருகில் வந்துடுச்சி.

எங்கள் ஆயுதங்களுக்கு வேலை வந்துடுச்சி. பாம்பு அடிக்கப்பட்ட போதுதான் அது தண்ணிப் பாம்பு இல்லை, நல்லப் பாம்புன்னுத் தெரிஞ்சது.

அன்னிக்குச் சாயங்காலம் மறுபடியும் பள்ளத்துப்பட்டிக்குப் போனோம்.

முருகன் இம்முறை இன்னும் கொஞ்சம் ஃபிரெஷ்ஸா இருந்தார், அப்பதான் பூசாரி பூசையை முடிச்சுகிட்டு கிளம்பிகிட்டு இருந்தார்.

எங்களைப் பார்த்ததும் பூசாரிக்கு என்ன தோணிச்சோ தெரியலை, கோயிலுக்குள்ள போயி தீபாரதனக் காட்டி விபூதி கொடுத்தார். அப்போ முருகனின் பரம பக்தனா இருந்த எனக்கு சந்தோஷம்.. அப்புறம் பூசாரிகிட்ட கீரனூர் போக வேற ஷார்ட் கட் இருக்கான்னு கேட்க, அதோ அந்தக் கண்மாயோரம் இருக்கிற ஒத்தையடிப் பாதை வழியாப் போனா கொஞ்ச தூரத்தில மெயின் ரோடு வந்துரும். அங்கிருந்து கீரனூர் 1 கிலோமீட்டர்னு சொன்னாரு.. முருகனேதான் சொன்னாருன்னு நெனைக்கிறேன்.. பதுக்கிய ஆயுதங்களை எடுத்துகிட்டு அந்த கண்மாயோரம் நடந்தோம்.அப்பதான் அதைப் பார்த்தோம்..

ஒரு பாழடைஞ்ச வீடு. கட்டி 300 நானூறு வருஷமாவது ஆகியிருக்கனும். சுத்தமா புதர்களுக்கு மத்தியில் மறைஞ்சிருந்த குட்டிச் சுவர்கள்.. மனித வாசனையே இல்லாம..

செல்வராஜ் வேர்க்கத் தொடங்கியிருந்தான்.. ஏதோ ஒரு அமானுஷயம் படக்கென கண்விழித்து எங்களை முறைப்பது போல முகெலும்பில் ஒரு ஜிளீர்.

அக்னி
25-05-2007, 02:38 AM
ஓ..! இன்னும் ஒரு சந்திரமுகியா..? வடிவேல் நிலைல தான் நான் இப்போ...

மதி
25-05-2007, 05:05 AM
அடடா...அற்புதம்.. ஒரு வேளை அது புதையல காக்குற பாம்புகளா இருக்குமோ..?அடுத்த பாகம் ப்ளீஸ்..!

அமரன்
25-05-2007, 06:54 AM
இரண்டு பாகமும் அருமௌ செல்வன் அண்ணா. ஒரு திகில் கதையை தத்ரூபமாக எழுதுகின்றீர்கள். காட்சிகளை நீங்கள் வர்ணிக்கும்போது காட்சிகளை மனக்கண்ணால் பார்க்க முடிகின்றது. யதார்த்தமான முறையில் வர்ணனைசெய்கின்றீர்கள். நன்றி அண்ணா.

தாமரை
25-05-2007, 11:30 AM
இது உண்மைச் சம்பவம். செவ்வாய்க்கிழமை தொடருகிறேன். முக்கிய பிரபலத்தின் திருமணத்திற்குச் செல்லவேண்டும்

அன்புரசிகன்
25-05-2007, 08:28 PM
விறுவிறுப்பாக உள்ளது. அது சரி அமானுஷயம் என்றால் என்ன?

ஓவியா
25-05-2007, 09:49 PM
கதை சுவாரஸ்யமாக போகின்றது.

தொடருங்கள்.

அக்னி
25-05-2007, 11:36 PM
விறுவிறுப்பாக உள்ளது. அது சரி அமானுஷயம் என்றால் என்ன?

மனிதனை விஞ்சிய ஒரு சக்தி.
தீயதாகவும் இருக்கலாம். நன்மை தருவதாகவும் இருக்கலாம்...
இது சரியாகவும் இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம்...

சரியானால்... அக்னி சொன்னது...
பிழையானால்... அக்னி யாரது..?

தாமரை
29-05-2007, 07:17 AM
அந்த வீட்டுக்கு கூரை இல்லை. எல்லாமே குட்டிச் சுவர்கள்தான். கீழ கருங்கல் சுவர் ஒரு மூணு அடிக்கு அது மேல சின்னச் சின்ன செங்கல் வச்சு கட்டினது. கண்மாய் மேட்டுலிருந்து பாக்க நீளமான நிழல்கள் பயங்கரமாய் இருக்க, குட்டி குட்டிப் புதர்களின் மத்தியில் நிறைய கரையான் புற்றுகள். எந்தப் புத்தில எந்த பாம்பிருக்குமோ, யாருக்குத் தெரியும்.?

இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சுகிட்டு மெல்ல இறங்கி வீட்டுக்குப் பக்கதில வந்தோம். எது வாசல் எது வழி ஒண்ணும் தெரியாத குட்டிச் சுவத்தை சுத்தி சுத்தி வந்தோம்.

குட்டிச் சுவத்தைச் சுற்றி
குட்டிச் சுவர்கள்

அப்படீன்னு கவிதை எழுதிரலாமான்னு தோணுச்சின்னா பாத்துக்கங்களேன்.. அப்போ சுந்தர் சொன்னான், டேய் இங்க பாரு என்னமோ எழுதி இருக்கு....

ஒரு இரண்டரை உயர வாக்கில் இருந்த கருங்கற்கள்ல தான் எழுத்துக்கள் இருந்திச்சு. அது வீட்டோட வெளி சுவரு முச்சூடும் இருந்துச்சி... என்ன என்னவோ வார்த்தைகள் ஒரு மண்ணும் புரியலை,

ஆனா களமாவூர் அப்படீங்கற ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சோம். எங்க காலேஜ் இருக்கிற இடம் களமாவூர்.. இந்தக் குட்டிச் செவருக்கும் அந்த மண்டபத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு.

அது என்ன?

தொடரும்.

தீபா
29-05-2007, 07:27 AM
இதென்ன
குட்டி கதைப்பகுதி?
பாம்பெல்லாம்
பாம் போடுகிறது
குலை நடுங்க செய்தவைகள்
உண்மையா?
நிழலா?

சிவா.ஜி
29-05-2007, 07:31 AM
சூப்பருங்கோ அடுத்த பாகத்தை படிக்க ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

மதி
29-05-2007, 08:05 AM
ஆஹா...
என்ன அதுக்குள்ள முடிச்சிட்டீங்க..? சீக்கிரமே தொடரவும்..!

இதயம்
29-05-2007, 08:18 AM
ஆஹா..! இனி தமிழ் மன்றத்துக்குள்ள நுழையும் போது துணைக்கு ஒரு ஆளையும் கூட்டி வரணும் போல இருக்கே..?? இனி பகல்ல மட்டும் தான் இந்த பக்கம் வருவேன்.!!

அடுத்த பாகம் எப்ப வரும்?

சூரியன்
29-05-2007, 08:38 AM
இப்படி பயமுருத்துகிறீர்கள். ஆனலும் கதை நல்லாவே இருக்கு.

தாமரை
29-05-2007, 09:09 AM
இடிந்த பங்களா.. பாழடைந்த மண்டபம்.. மனசில படபடன்னு சத்தம்.. வவ்வால் ஏதாச்சும் சிறகடிச்சிருக்கும்னு நெனக்கிறேன்.. இருட்ட ஆரம்பிச்சிருச்சு.. அதனால நாளைக்கு சாயங்காலமோ இல்லை சனிக்கிழமையோ வந்தாச் சரியா இருக்கும்னு நென்ச்சுகிட்டு நாலுபேரும் திரும்பி கண்மாய்க் கரை மேல ஏறி ஹாஸ்டலுக்கு வந்தோம்.

மறுநாள் காலையில முதல் அதிர்ச்சி.. செல்வராஜோட அம்மா இறந்திட்டதா தந்தி வந்திருந்தது.. அவனை இன்னொரு ரூம்மேட்டை துணைக்கு போட்டு மேட்டூர் பஸ் ஏத்திவிட்டுட்டு வந்தோம்.

அன்னிக்கு முழுசும் பொழுது ஒரு மாதிரியாவேப் போச்சு.. ஒண்ணும் ஓடலை. சரின்னு ஏதோ சினிமாவுக்கு போயிட்டு வந்து தூங்க முயற்சி செஞ்சோம்.. தூக்கம் வரல...

கனவுல செத்துப் போன பாட்டி வந்து கூப்பிட்டாங்க.. பாத்துகிட்டிருக்கறப்பவே வானத்துக்கும் பூமிக்குமா விசுவரூபம் எடுத்து இடிச் சிரிப்பு சிரிக்கறாங்க.. செத்துப் போன தாத்தா எங்கயோ கல்லிலயும் முள்ளுலயும் எங்கையப் புடிச்சுகிட்டு ஓடறாரு.. ஒடம்பெல்லாம் கீறல்.. ரத்தம் பீய்ச்சி அடிக்குது.. தாத்தா எதையோ உருவி பாட்டி மேல எறியராரு.. பாட்டி வீல்னு கத்திகிட்டே குட்டியாப் போயிடறாங்க.. இப்படி ஏதோ கனவு.. அன்னைக்கு முழுசும் தூக்கமே இல்லை.

அடுத்த நாள் சனிக்கிழமை.. ஹாஸ்டல்ல ஒரே களேபரம்.. சீனியர்ஸ் சிலபேர் புக்ஸைக் காணோமாம். யாரெடுத்தாங்கன்னு தெரியலை.. நாங்க மூணுபேரும் குளத்தங்கரைச் சமாதியை இன்னிக்கு போயிப் பார்த்திர்ரதுன்னு முடிவு பண்ணினோம்..

தொடரும்

அன்புரசிகன்
29-05-2007, 10:53 AM
கதை முடிஞ்சுது போல... தொடரும் போடல??? :D
ரொம்பத்தான் சஸ்பென்ஸ் வைக்கிறீங்க.

இதயம்
29-05-2007, 10:57 AM
அது எப்படி முடிவுன்னு ஒண்ணு இல்லாம முடியும்..?? மக்கள் கொலைவெறியோட இருக்காங்க.. அவங்க கண்ட்ரோல் போறதுக்குள்ள இண்டர்வெல் வரைக்குமாவது கதைய சொல்லுங்க..!!

அக்னி
29-05-2007, 11:11 AM
நிஜமானால், அது இந்தளவும்தான் என்றாலும் பரவாயில்லை, கற்பனையில் தொடர்ந்து திகிலுக்கு முடிவு கட்டுங்கள்.
இது கனவு என்று முடித்தாலும் பரவாயில்லை. ஆனால், தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

அன்புரசிகன்
29-05-2007, 11:17 AM
பெங்களூருக்கு சின்னதா சைக்கிள் அனுப்பணும். :D

அக்னி
29-05-2007, 11:19 AM
பெங்களூருக்கு சின்னதா சைக்கிள் அனுப்பணும். :D
ஆட்டோ அப்ப ரிப்பேரா..?

அன்புரசிகன்
29-05-2007, 11:21 AM
ஆட்டோ அப்ப ரிப்பேரா..?

பனங்கிழங்கை பிழக்க அரிவாள் தேவையா என யோசித்தேனுங்க.

இதயம்
29-05-2007, 11:25 AM
அதெல்லாம் ரொம்ப பழசு. நீங்க லேட்டஸ்ட்டா தமிழ் படம் பார்க்கிறதில்லையா..? இப்பவெல்லாம் டாடா சுமோ, இல்ல ஸ்கார்ப்பியோ தான்..!!

அக்னி
29-05-2007, 11:30 AM
அதெல்லாம் ரொம்ப பழசு. நீங்க லேட்டஸ்ட்டா தமிழ் படம் பார்க்கிறதில்லையா..? இப்பவெல்லாம் டாடா சுமோ, இல்ல ஸ்கார்ப்பியோ தான்..!!

அதுதான் எல்லோரிட்டயும் இருக்கே...
அதுதான் மன்றத்தில வித்தியாசமா....

இந்த இழுபறியைத் தொடர்வதானால்,

மீண்டும் ஐவரணி - அரட்டைப் பகுதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7640)

செல்வோமே...

திரியைக் குழப்பாமல், அங்கு வைத்துக் கொள்வோம் கச்சேரியை...

தாமரை
29-05-2007, 11:46 AM
சனிக்கிழமை.. சனியனின் நாளாம்.. அதுதான் என் விஷயத்திலும் நடந்தது..

காலை டிஃபனுக்குப் பிறகு சமாதியை அடைந்தோம். சின்ன திட்டு அதன் மீது செங்கற்களால் விளக்கு ஏற்றி வைக்க சிறிய மாடம்.. அவ்வளவுதான். அந்த மண்ணில் புல்கூட முளைக்கவில்லை. மரத்தின் நிழலில்...

சமாதியை நீண்ட நேரம் சுத்தி சுத்தி வந்தோம்.. ஒண்ணும் கிடைக்கல.. அப்படியே குளத்தில் இறங்கினோம்.

வரிசைக்கு வெளியவோ இல்ல உள்ளவோ போயி கொஞ்சம் வித்தியாசமாத் தெரியற கல்வரிசைகளை குச்சி போட்டுக் குத்தி பார்த்தோம்.. இந்தக் குளத்திலிருந்து அந்த மண்டபத்துக்கு ஒரு சுரங்கப்பாதை இருக்கலாம்னு கதை பேசிகிட்டே குத்திகிட்டு வர...

ஒரு கல்சந்துல குச்சி சர்க்குன்னு உள்ளே போயிருச்சு.. குச்சியை எடுத்தப்ப உஸ்-ஸூன்னு சீறிகிட்டு கூடவே பாம்பு..

கட்டைக்கும் கல்லுக்கும் மறுபடி வேலை... பாம்பு கந்தலாக் கெடந்தது..

இப்போ குளத்தைப் பாக்கவே பயமா இருந்தது.. எந்தக்கல்லு சந்தில என்ன இருக்கோ? எத்தனை பாம்பத்தான் அடிக்கிறது?

குளத்து மதியில இருந்த பெரிய கல்லை தள்ளிப் பார்த்தோம்.. அங்கயும் ஒண்ணுமில்லை..

மதியம் சாப்பிட்ட பின்னால் தான் அவனைப் பார்த்தோம், எங்க ஜூனியர்ல ஒருத்தன் அவன்...

அவன் வயித்தில எதையொ மறைச்சுகிட்டு அவனோட ரூமுக்குப் போனான்.. அப்புறம் வெளிய வந்து ரூமைப் பூட்டிகிட்டு போயிட்டான்...

புத்தகம் காணாமல் போனது ஞாபகம் வந்தது.. ஒருவேளை திருடன் இவந்தானோ!.. துப்பறியும் மூளைக்கு வேலை வந்துருச்சே!

நான், சஃபி, ஜெயக்குமார், சுந்தர், கோபி இன்னும் சிலபேர் பிளான் பண்ணினோம்.. பிசாத்து பூட்டு.. இதைத் திறந்துட்டு போய் பாத்திர வேண்டியத்துதான்...

நான் அவனோட ரூம்மேட்டை அமுக்குவமா, சாவி போட்டே தொறந்து பாத்திரலாமே அப்படீன்னு சொல்ல...

அப்படியே திரும்பிய என்காலில் எதோ தடுக்கியது.. காலில் எதோ ஜில்லென்று பரவ..

அய்யோன்னு ஜெயக்குமார் கத்தினான்...

தொடரும்

அக்னி
29-05-2007, 11:48 AM
ஐயோ........ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ...........!!!!!!!!!!!!!

நானும்தான் கத்துகின்றேன்....

தாமரை
29-05-2007, 12:01 PM
குனிஞ்சு பார்த்தா கனவில பார்த்தமாதிரியே என் காலில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடிச்சிகிட்டிருந்திச்சி.. கோபி ஓடி கேண்டீனில் இருந்து காஃபி பொடியையும் துண்டையும் எடுத்துக் கொண்டு வந்து காலில் வெச்சி அமுக்கினான்.. எனக்கு மயக்கமாய் வந்தது..

அங்கே ஹாஸ்டல் கட்டுவதற்காக சாரம் கட்ட நட்டு வைத்த கம்பில எங்கால் பட்டிருக்கிரது.. லேசான காயம்தான்.. ஆனா கால் நரம்பு மேலே பட்டதால் நரம்பிலிருந்து ரத்தம் ஊத்து மாதிரி பீய்ச்சி அடிச்சிருக்கு.

பஸ்ஸில் கீரனூர் மருத்துவமனைக்கு தூக்கிட்டுப்போனாங்க..நாலு தையல்கள் போட்டாங்க.. படுத்த படுக்கை அடுத்த எட்டு நாளைக்கு..

சீத்தலைச் சாத்தனாக 10 வகுப்பு லீவில இருந்த நான் தலையிலொரு வடுவும் காலிலொரு வடுவுமாய்

பாஸ்போர்ட் அப்ளிகேசன்ல இது ரண்டும் தான் ஐடெண்டிஃபிகேஷன் மார்க்..

அப்புறம்... அந்த மண்டபம்..

நாங்க சரியாகி வர்ரதுக்குள்ள இடுச்சுபுட்டாங்க. அங்கன டாய்லெட் கட்டி எங்க ஆராய்ச்சியை நாறடிச்சுட்டாங்க..

முற்றும்.

அக்னி
29-05-2007, 12:08 PM
கீரனூர்
வேட்டையாடு விளையாட்டில் வந்த அதே கீரனூர் தானே...
ச்சே.. சில ஆராய்ச்சியாளர்களை முளையிலேயே கிள்ளிவிட்டார்களே...

அருமையாக விளித்து எழுதி, பரவசத்தி(கிலி)ல் ஆழ்த்தி விட்டதற்கு பாராட்டுக்கள்... மோகன்...

தாமரை
29-05-2007, 12:09 PM
ஆமாம்.. கௌதம்மேனன் எங்க காலேஜ் ஜூனியர்...

இதயம்
29-05-2007, 12:19 PM
சாரக்கம்பு மட்டும் வம்பு பண்ணாம இருந்திருந்தா தெம்பா போய் ஆராய்ச்சி செஞ்சி ரொம்ப நல்ல ஆராய்ச்சியாளர்களா ஆயிருப்பாங்க..! ச்சே..! நல்ல வாய்ப்பு போச்சே..!!

யாரு கண்டது..? போயிருந்தா சாவி எடுக்கப்போன இடத்தில ஆவி அடிச்சி போட்டு, பாவிப்புள்ளைக பரலோகம் போயிருந்தா கேவி கேவி அழ வேண்டியதிருக்கும்.

அட.. நமக்கும் வருதே..!! இது கவிதை மாதிரியா.. டி.ஆர் வசனம் மாதிரியா..?

ஆனால், இவ்வளவு கேவலமா வர்றதுக்கு வராமலேயே இருக்கிறது நல்லது..!!

lolluvathiyar
29-05-2007, 03:11 PM
நல்ல கதை, முடிவு என்னன்னு புரியாம சற்றே குழப்பம்
நிரைய பாப்ப அடிச்சுட்டீங்க பாவம் அதுக
சிவெனே அதுனுடைய இடத்துல இருந்துச்சு

தாமரை
29-05-2007, 03:18 PM
முடிவா? இது ஒரு சம்பவம் அவ்வளவுதான்.
வாழ்க்கையில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான சட்டென முடிந்து போன அர்த்தம் தெரிய சம்பவங்கள் நடக்கின்றன.

அதுசரி வாத்தியாரே! இப்ப உங்களுக்கு ஒரு புதிர்...

நம்ம ஆதவா அப்படிக்கா போயிட்டு இருக்கும்போது ஒரு பாட்டி அலறிகிட்டு இருக்கு. பார்த்தா ஒரு பாம்பு படம் எடுத்து நிக்குது. ஆதவா கண்டுக்கலை.

அப்பொ அந்தபக்கம் திடீர்னு ஒரு பொண்ணு ஓடி வருது. அந்த களேபரத்தில பாம்பு சரசரன்னு பொண்ணு பக்கம் ஓட...

ஆதவா ஓடிப்போயி, பாம்பை மிதி மிதின்னு மிதிச்சே கொன்னுட்டாரு..
ஏன்னு சொல்லுங்க பாக்கலாம்!

ஆதவா
29-05-2007, 03:24 PM
அய்யய்யோ!! என் பேரு அடிபடுதே... என்ன காரணமாக இருக்கும்????

தாமரை
29-05-2007, 03:30 PM
உங்க பேரு பாம்பா????

leomohan
29-05-2007, 04:48 PM
இது உண்மைச் சம்பவம். செவ்வாய்க்கிழமை தொடருகிறேன். முக்கிய பிரபலத்தின் திருமணத்திற்குச் செல்லவேண்டும்

எல்லா திருமணங்களுக்கும் கமிட் ஆகிக்கிறீங்க. அட எப்படி தான் சமாளிக்கிறீங்களோ

ஆதவா
29-05-2007, 04:52 PM
ரெண்டு பேரும் கொஞ்சம் விளக்கமா சொன்னா எனக்கும் விளங்கும்..

தாமரை
29-05-2007, 04:56 PM
எல்லா திருமணங்களுக்கும் கமிட் ஆகிக்கிறீங்க. அட எப்படி தான் சமாளிக்கிறீங்களோ
கல்யாணத்தில் கமிட் செய்வது மாப்பிள்ளையும் பொண்ணும்தான். நாம இல்லை,

அதிலும் இந்த நண்பர் விஷேச நண்பர்.

ஆதவா
29-05-2007, 05:01 PM
கல்யாணத்தில் கமிட் செய்வது மாப்பிள்ளையும் பொண்ணும்தான். நாம இல்லை,

அதிலும் இந்த நண்பர் விஷேச நண்பர்.

கல்யாணம் (விசேசம்) என்றாலே அந்த நண்பர் விசேச நண்பர்தானே!!

தாமரை
29-05-2007, 05:03 PM
முடிவா? இது ஒரு சம்பவம் அவ்வளவுதான்.
வாழ்க்கையில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான சட்டென முடிந்து போன அர்த்தம் தெரிய சம்பவங்கள் நடக்கின்றன.

அதுசரி வாத்தியாரே! இப்ப உங்களுக்கு ஒரு புதிர்...

நம்ம ஆதவா அப்படிக்கா போயிட்டு இருக்கும்போது ஒரு பாட்டி அலறிகிட்டு இருக்கு. பார்த்தா ஒரு பாம்பு படம் எடுத்து நிக்குது. ஆதவா கண்டுக்கலை.

அப்பொ அந்தபக்கம் திடீர்னு ஒரு பொண்ணு ஓடி வருது. அந்த களேபரத்தில பாம்பு சரசரன்னு பொண்ணு பக்கம் ஓட...

ஆதவா ஓடிப்போயி, பாம்பை மிதி மிதின்னு மிதிச்சே கொன்னுட்டாரு..
ஏன்னு சொல்லுங்க பாக்கலாம்!


அவருக்கு ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!!!

leomohan
29-05-2007, 05:19 PM
கல்யாணத்தில் கமிட் செய்வது மாப்பிள்ளையும் பொண்ணும்தான். நாம இல்லை,

அதிலும் இந்த நண்பர் விஷேச நண்பர்.


ஹா ஹா. சரிதான்.

கல்யாணம் attend செய்வதும் ஒரு பெரிய சந்தோஷம் தான்.

lolluvathiyar
30-05-2007, 10:40 AM
அதுசரி வாத்தியாரே! இப்ப உங்களுக்கு ஒரு புதிர்...
அப்பொ அந்தபக்கம் திடீர்னு ஒரு பொண்ணு ஓடி வருது. அந்த களேபரத்தில பாம்பு சரசரன்னு பொண்ணு பக்கம் ஓட...

ஆதவா ஓடிப்போயி, பாம்பை மிதி மிதின்னு மிதிச்சே கொன்னுட்டாரு..
ஏன்னு சொல்லுங்க பாக்கலாம்!

வேற எதுக்கு அந்த பெண்ணை தான் தான் கடிக்கனும் நினைச்சுருப்பார்
பாம்பு கடிக்க போனா விடுவாரா, ஆதவா பாம்பு மேல கூட இவ்வளவு பொராமையா

ஓவியா
31-05-2007, 09:10 PM
அய்யய்யோ!! என் பேரு அடிபடுதே... என்ன காரணமாக இருக்கும்????

அடிபட்டது பாம்புனு சொன்னாங்க!!! ஹி ஹி ஹி


கல்யாணம் (விசேசம்) என்றாலே அந்த நண்பர் விசேச நண்பர்தானே!!

யாரு பில்கேட்சு மச்சானா!!! ஹி ஹிஅவருக்கு ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!!!

ஆமாம் அவரு ஒரு மிதிலே பாம்பு, சேண்ட்வீச் பன்னுதான்.

ஹி ஹி ஹி

ஓவியா
31-05-2007, 09:12 PM
குனிஞ்சு பார்த்தா கனவில பார்த்தமாதிரியே என் காலில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடிச்சிகிட்டிருந்திச்சி.. கோபி ஓடி கேண்டீனில் இருந்து காஃபி பொடியையும் துண்டையும் எடுத்துக் கொண்டு வந்து காலில் வெச்சி அமுக்கினான்.. எனக்கு மயக்கமாய் வந்தது..

அங்கே ஹாஸ்டல் கட்டுவதற்காக சாரம் கட்ட நட்டு வைத்த கம்பில எங்கால் பட்டிருக்கிரது.. லேசான காயம்தான்.. ஆனா கால் நரம்பு மேலே பட்டதால் நரம்பிலிருந்து ரத்தம் ஊத்து மாதிரி பீய்ச்சி அடிச்சிருக்கு.

பஸ்ஸில் கீரனூர் மருத்துவமனைக்கு தூக்கிட்டுப்போனாங்க..நாலு தையல்கள் போட்டாங்க.. படுத்த படுக்கை அடுத்த எட்டு நாளைக்கு..

சீத்தலைச் சாத்தனாக 10 வகுப்பு லீவில இருந்த நான் தலையிலொரு வடுவும் காலிலொரு வடுவுமாய்

பாஸ்போர்ட் அப்ளிகேசன்ல இது ரண்டும் தான் ஐடெண்டிஃபிகேஷன் மார்க்..

அப்புறம்... அந்த மண்டபம்..

நாங்க சரியாகி வர்ரதுக்குள்ள இடுச்சுபுட்டாங்க. அங்கன டாய்லெட் கட்டி எங்க ஆராய்ச்சியை நாறடிச்சுட்டாங்க..

முற்றும்.


அடடே, இப்படி ஒரு அபாரமான முடிவா!!!!!

ஆராய்ச்சியை கொன்னுட்டாங்களே!!

ஓவியா
31-05-2007, 11:02 PM
எல்லா திருமணங்களுக்கும் கமிட் ஆகிக்கிறீங்க. அட எப்படி தான் சமாளிக்கிறீங்களோமோகன்,
அண்ணா வெளியூருக்கெள்ளாம் போராராம்...எல்லாம் வீ.வீ.ஐ,பியின் கலயாணதிற்க்குதான்.

அட ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயது!!!! சும்மா ஒரு ரிமாய்ண்டர்தான்.....யாருக்கா!!!!!!!செல்வன் அண்ணாக்குதான். :musik010:

தாமரை
20-06-2007, 01:52 AM
இதை எழுதி முடித்த பின்னால் நண்பர்கள் என்னை ஜாதகம் பார்த்து சொல்ல ஜாதகம் கொடுத்தார்கள்.. நான்கு ஜாதகங்கள்


என்ன ஆச்சர்யம் அனைத்திலும் காலச் சர்ப்ப தோஷங்கள்.. மிதத்திலிருந்து கடுமை வரை...

மதி
20-06-2007, 03:56 AM
இதை எழுதி முடித்த பின்னால் நண்பர்கள் என்னை ஜாதகம் பார்த்து சொல்ல ஜாதகம் கொடுத்தார்கள்.. நான்கு ஜாதகங்கள்


என்ன ஆச்சர்யம் அனைத்திலும் காலச் சர்ப்ப தோஷங்கள்.. மிதத்திலிருந்து கடுமை வரை...
அதே அதே...
"தாமரையுடன் தேன் விருந்து" திரி பாதியிலேயே நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம்..:icon_hmm:

ஓவியன்
22-06-2007, 11:39 PM
செல்வன் அண்ணா புதையல் வேட்டைக்கெல்லாம் போயிருக்கீங்களா?, படிக்க படிக்க அருமையாயிருந்தது.

முடிவாக*

பாஸ்போர்ட் அப்ளிகேசன்ல இது ரண்டும் தான் ஐடெண்டிஃபிகேஷன் மார்க்..
முற்றும் (பைத்தியம்)........

சிரித்தேவிட்டேன் செல்வண்ணா!,

Gobalan
08-07-2007, 05:37 PM
மிக பிரமாதம். நன்றாக எழுதிருக்றீர்கள். வேறு ஆராய்ச்சி ஏதும் பண்ணவில்லையா? அதை பற்றியும் எழுதுங்களேன். கற்பனையானலும் பரவாயில்லை. படிப்போம். மிக நல்ல நடையுடன் எழுதிகிறீர்கள். நன்றி.

இளசு
08-07-2007, 05:52 PM
பகல்வேளையில் படிச்சதால் தப்பிச்சேன்... செல்வன்..

இடையிடையில் உங்கள் இலகுவாக்கும் கமெண்ட்டுகள் இல்லையென்றால்..
கொஞ்சம் வேர்த்துப்பொயிருப்பேன்..

உங்களின் முத்திரை நடையில் ஒரு திகில்−நகைத் தொடர்! நன்றி!

சுகமான பின்னூட்டங்களின் உச்சம் − ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!

தாமரை
29-11-2007, 07:09 PM
மிக பிரமாதம். நன்றாக எழுதிருக்றீர்கள். வேறு ஆராய்ச்சி ஏதும் பண்ணவில்லையா? அதை பற்றியும் எழுதுங்களேன். கற்பனையானலும் பரவாயில்லை. படிப்போம். மிக நல்ல நடையுடன் எழுதிகிறீர்கள். நன்றி.

கூடிய விரைவில் வரப்போகும் மாபெரும் திகில் தொடர் (உண்மைச் சம்பவம்)

:icon_ush:சாமக்கோடங்கி!!!:icon_ush:

கண்மணி
30-11-2007, 03:26 AM
ஏற்கனவே ராத்திரி முச்சூடும் தூங்க முடியாம மக்கள் மன்றத்தில் பேயா உலவறாங்க. இதில இன்னொரு பேய்க்கதையா? அண்ணா இது உங்களுக்கே ஞாயமா?

மதி
30-11-2007, 03:28 AM
மன்றத்தில் பேயா...?
ஏங்க பயமுறுத்தறீங்க... இனிமே ராத்திரி இந்த பக்கமே வரக்கூடாது போலிருக்கு...

யவனிகா
30-11-2007, 06:09 AM
துப்பறியும் சாம்பு சேஞ்சுக்கு, திகிலா ஆரம்பிச்சீங்க தாமரை.

நானும் நீங்க, கல்வெட்டெல்லாம் படிச்சு பாஸ் பண்ணி புதையலை
எடுத்துருவீங்கன்னு நெனைச்சேன்...கடேசில ஒரு பானை ஓட்டை காலணாவது கிடைக்கும்னு பார்த்தா...உங்களுக்கு ரத்தக் காவு மட்டும் தான் மிச்சம்.படிக்க சுவாரசியமா இருக்கு.அப்புறம் வேறெதும் கல்வெட்டு ஆராய்ச்சி செய்யலையா?
எனக்குத், ராஜராஜன் காலத்து புதையல் கல்வெட்டு கிடைச்சு இருக்கு...அந்த புதையல் கிடைக்கனும்னா ஏற்கனவே புதையல் தேடுற முயற்சில ஈடுபட்டு ரத்தக்காயம் பட்டவங்களைப் பலி குடுக்கணுமாமா...என்ன செய்யலாம்? அப்படி யாராவது உங்களுக்குத் தெரியுமா?

சிவா.ஜி
30-11-2007, 06:29 AM
போச்சுடா....இன்னொரு கோஷ்டி புதையல் எடுக்க கிளம்பிடிச்சா.....ரத்தம் உறுதிடோய்.

மதி
30-11-2007, 06:56 AM
போச்சுடா....இன்னொரு கோஷ்டி புதையல் எடுக்க கிளம்பிடிச்சா.....ரத்தம் உறுதிடோய்.
அது யாரோட ரத்தம்னு தான் உறுதியாகாம இருக்காம்..
ஆமா.சிவாண்ணா நீங்களும் புதையல் வேட்டைக்கு போறதா கேள்விப்பட்டேன்..

தாமரை
30-11-2007, 06:57 AM
துப்பறியும் சாம்பு சேஞ்சுக்கு, திகிலா ஆரம்பிச்சீங்க தாமரை.

நானும் நீங்க, கல்வெட்டெல்லாம் படிச்சு பாஸ் பண்ணி புதையலை
எடுத்துருவீங்கன்னு நெனைச்சேன்...கடேசில ஒரு பானை ஓட்டை காலணாவது கிடைக்கும்னு பார்த்தா...உங்களுக்கு ரத்தக் காவு மட்டும் தான் மிச்சம்.படிக்க சுவாரசியமா இருக்கு.அப்புறம் வேறெதும் கல்வெட்டு ஆராய்ச்சி செய்யலையா?
எனக்குத், ராஜராஜன் காலத்து புதையல் கல்வெட்டு கிடைச்சு இருக்கு...அந்த புதையல் கிடைக்கனும்னா ஏற்கனவே புதையல் தேடுற முயற்சில ஈடுபட்டு ரத்தக்காயம் பட்டவங்களைப் பலி குடுக்கணுமாமா...என்ன செய்யலாம்? அப்படி யாராவது உங்களுக்குத் தெரியுமா?

என் ஜாதகத்தில புதையல் யோகம் இருக்காம். (பாக்யஸ்தானத்தில செவ்வாய் (பூமிக்காரகன்) பாக்ய ஸ்தான அதிபதி சுக்ரன் (அதிர்ஷ்டக் காரகன், களத்திரக் காரகன்) இரண்டு பேரும் பரிவர்த்தனை யோகத்தில பலமா உட்கார்ந்திருக்காங்களாம். அதான் கோயம்புத்தூர்ல எடம் வாங்கிப் போட்டிருக்கேன். தோண்டிப் பார்த்துட்டுச் சொல்றேன்,

:icon_ush:

சிவா.ஜி
30-11-2007, 07:07 AM
அது யாரோட ரத்தம்னு தான் உறுதியாகாம இருக்காம்..
ஆமா.சிவாண்ணா நீங்களும் புதையல் வேட்டைக்கு போறதா கேள்விப்பட்டேன்..

கீழே இருக்கற தாமரையோட பதிவை படிச்சீங்களா.....அவ்ளோ உறுதியா சொல்லும்போது நாமளும் புதையல் வேட்டைக்குக் கிளம்பிடவேண்டியதுதான்.வாத்தியார்கிட்ட சொல்லி தாமரை வாங்கிப் போட்டிருக்கிற இடம் எதுன்னு கண்டுபிடிக்க சொல்லனும்.

ஆதவா
30-11-2007, 08:38 AM
என் ஜாதகத்தில புதையல் யோகம் இருக்காம். (பாக்யஸ்தானத்தில செவ்வாய் (பூமிக்காரகன்) பாக்ய ஸ்தான அதிபதி சுக்ரன் (அதிர்ஷ்டக் காரகன், களத்திரக் காரகன்) இரண்டு பேரும் பரிவர்த்தனை யோகத்தில பலமா உட்கார்ந்திருக்காங்களாம். அதான் கோயம்புத்தூர்ல எடம் வாங்கிப் போட்டிருக்கேன். தோண்டிப் பார்த்துட்டுச் சொல்றேன்,

:icon_ush:


இப்படி பலமா உட்கார்ந்துட்டு இருக்குறவங்களை எப்படி சுமந்துட்டு இருக்கீங்க?

பார்த்துங்க, கோயம்புத்தூர்ல இப்ப தோண்டினா குண்டு கிடைக்குமாம்.... புதையல் தேடறேன்னு வேற எங்காச்சும் போய்டபோறிங்க.

மதி
30-11-2007, 08:41 AM
கீழே இருக்கற தாமரையோட பதிவை படிச்சீங்களா.....அவ்ளோ உறுதியா சொல்லும்போது நாமளும் புதையல் வேட்டைக்குக் கிளம்பிடவேண்டியதுதான்.வாத்தியார்கிட்ட சொல்லி தாமரை வாங்கிப் போட்டிருக்கிற இடம் எதுன்னு கண்டுபிடிக்க சொல்லனும்.

அது அவருக்கு மட்டும் தான் புதையல் கிடைக்குமாம்..
அவர்கூட போறவங்கள பத்தி ஒன்னும் சொல்லலியாம். நரபலி வேணும்னு கூட இருக்கறவங்கள எல்லாம் பலி குடுத்திட போறாங்க.. :icon_b::icon_b: