PDA

View Full Version : ஆதவனின் குளுகுளூ ஜொளுஜொளு பயணம் - பாகம் 2

ஆதவா
24-05-2007, 02:50 PM
தொடர்ச்சி.....

முதல் பாகத்தில் பாதி விரிவாக எழுதாததால் அதை மீண்டும் தொடருகிறேன்....

பைகாராவிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. அந்த மலைபிரதேசங்களில் எப்போதுமே
வானிலை மழை வரும்படியாகவே இருக்கும் ஆதலால் நாங்கள் மழை பிடித்ததும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டோம்.
மழையென்றால் சாதாரண மழையல்ல. பனிக்கட்டிச் சாரல்.. ஒவ்வொருதுளியும் சுள் சுள்ளென பிடித்தது. அதோடு
பனிக்கட்டி மழை பார்த்து வெகு நாட்களாகிவிட்டமையால் ரொம்ப சாலியாக இருந்தது. அருகே இருந்த டீக்கடையில்
பிஸ்கோத்துகளும் டீயும் சாப்பிட்டோம்... வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர். மழை மிகவும் வழுத்தது.
அதோடு மண்வாசனையும் சேர்ந்து பனிக்கட்டிகள் தாளமிட எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நோட்டும் பேனாவும்
இருந்திருந்தால்........

வேறவழியில்லை... பொடானிகல் கார்டன் சுற்றிப் பார்க்க இயலாது. ஆக அடுத்தநாள் தங்கி இருந்து பார்த்துவிட்டு போக
முடிவு செய்தோம். ஸ்கூபியின் மாமாவுக்கு போன் செய்து ஊட்டியில் இருக்கும் சித்தப்பாவை அறை வாடகைக்குப்
பிடிக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னோம்... அதற்குண்டான ஏற்பாடும் நடந்தது.. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம்
மழைக்குப் பின் வண்டியை எடுத்து கிளம்பினோம்... நேரே ஊட்டி..

ஊட்டியில் பொடானிகல் கார்டன் செல்லும் வழியில் ஒரு திரையறங்கு உள்ளது. அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு
நால்வரும் ஸ்கூபியின் சித்தப்பா வருகைக்குக் காத்திருந்தோம். அப்போதே மாங்காய்களையும் மசாலா கடலைகளையும்
சோளக்கருதுகளையும் வாங்கித் தின்று வயிறு உப்பிப் போய்,,,, இடம் தேட வேண்டிய சூழ்நிலைக்கு வந்து அப்பறமாக
வயிறை சுத்தம் செய்துவிட்டு வந்து நிற்பதற்குள் மணீ ஆறாகிவிட்டது. பிறகு வேறொரு இடத்திற்கு சித்தப்பா வந்து
சேர்ந்தார்.. வண்டியை உசுப்பி விட்டு ஸ்கூபி ராக்கி சித்தப்பா மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல நானும் ஹெல்லும்
நடந்துவந்தோம்... இரு கி.மீ தாண்டி அந்த ஹோட்டல் இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டால் ஆயிரத்தி
இருநூறு என்றார்கள்... எங்களுக்கு பக் பக் என்று இருந்தது.. அவ்வளவு பணமும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஸ்கூபி
அந்த பணத்தை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். சரி என்று ஒருமனதாக ஊட்டியில் அறையில் தங்க முடிவு
செய்தோம்... இதற்கிடையே கொண்டு சென்ற கேமிரா போன்களின் பேட்டரி லோ என்று காண்பித்தது... பேட்டரி
சார்ஜரும் கொண்டு செல்லவில்லை. இன்னும் அறையும் பதிவு செய்யப்படவில்லை.. வேறு யாரோ அறையைக் காலி செய்ய இருப்பதாகச் சொல்லி வரவேற்பறையிலேயே தங்க வைத்தார்கள். சரி இந்த விஷயத்தைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று சரியாக 7 மணிக்கு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியிலேயே எங்களுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. கண்கள் பாதையைக் காணாமல் பேதையைக் கண்டது. ஒருவழியாக மூன்று கிமீ வரை நடந்து வந்து ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என்று ஒரு கடைக்குச் சென்று நாங்கள் செய்த கூத்து இன்னும் நினைவிருக்கிறது.

ஸ்கூபி பைனாகுலர் வாங்குவதாக விலை விசாரித்தான்.. 300 க்கும் மேலே விலையைச் சொல்ல, அவன் குறைக்கச்
சொன்னான்.. கடைக்காரனும் வாங்குவதாக இருப்பின் நிச்சயம் குறைப்பேன் என்றும் பைனாகுலர் ஜூம் 2 கி.மீ தாண்டும்
என்றான்... நான் வாங்கிப் பார்த்தேன். அது 50 அடியைக் கூட உறுப்பிடியாக ஜூம் செய்யவில்லை.. ஆதலால் 160
ரூபாய்க்குக் கேட்டான்.. கடைக்காரனும் ஒத்துக் கொண்டான்.. இருப்பினும் எங்களுக்குத் திருப்தி இல்லை.. கடைசிக்கு
1 கி.மீ ஜூமாவது ஆகவேண்டும்.. இது பக்கதிலிருக்கும் ஒரு பலகையைக் கூட ஒழுங்காக காண்பிக்கவில்லையாதலால்
நாங்கள் வேண்டாம் என்று ஒதுங்க, அவனோ பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டான்.. நான் அமைதியாக இருந்தேன்..
ஸ்கூபி திட்ட, அவன் திட்ட, இறுதியில் நாங்களே வெளியேறினோம்.. நேரே இசைக்கச்சேரி நடந்த இடத்திற்குச்
சென்றோம். மனம் நிலைகொள்ளவில்லை.. சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல முடிவெடுத்து திரும்புகையில் ஒரு
சம்பவம்.

ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ
ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்..
ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும்
சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி
அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி
தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..

இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது....

தொடரும்....

மழை வந்த போது
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00135.gif
-------------------------------------------------------
பைகாரா விலிருந்து கீழேhttp://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00130.gif
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00129.gif
-------------------------------------------------------
அடர்ந்த உயரமான மரங்கள்...

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00125-copy.gif
-------------------------------------------------------
சூட்டிங் ஸ்பாட்

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00124.gif
-------------------------------------------------------

இது என்ன இடமென்று கண்டுபிடியுங்கள்

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/DSC00097.gif

அக்னி
24-05-2007, 03:09 PM
திக் திக் திரில்... அப்புறம்...

மதி
24-05-2007, 03:24 PM
அப்புறம்...நல்லா தான் அனுபவிச்சிருக்கீங்க....!

ஆதவா
24-05-2007, 04:24 PM
என்னங்க... நல்லா அனுபவிச்சேனா?/ ரொம்ப சிரமப்பட்டேன்... பகல்ல ஜொல்லு விட்டதக்கு சரியான தண்டனை...

மனோஜ்
24-05-2007, 04:34 PM
என்ன ஆதவா சொல்லியிருந்தா எனக்கு தெரிந்த நண்பரின் வீடுக்கு செல்லி அழைத்து கவனிக்க சொல்லியிருப்பனே
அப்ரம் எண்ண ஆச்சு....

தங்கவேல்
25-05-2007, 12:21 AM
அடடா அப்புறம் என்ன ஆச்சு ஆதவன்....

அமரன்
25-05-2007, 07:07 AM
பயணங்கள் முடியாது போல இருக்கே ஆதவா. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் இது குளுகுளு பயணம் மாதிரித் தெரியவில்லை. திக் திக் பயணம் மாதிரி அல்லவா தெரிகின்றது.

lolluvathiyar
25-05-2007, 08:29 AM
ஊட்டி அழகான சுற்றுலா தளமாக இருந்தது. இன்று அவை பழைய பெருமையை இழந்து விட்டது
அதிகமாக காண்கிட் காடுகள் முழைத்து விட்டன. சுகாதரமும் குரைவு. கூட்டமும் அதிகம்

குறிப்பாக மலர் கன்காட்சி நடக்கும் போது அங்கு போகவே கூடாது

பென்ஸ்
25-05-2007, 03:42 PM
பட்ட பெயர் கொடுத்து அழைக்கும் நண்பர்கள்...
பைக் பயணம்...
குளுகுளு ஊட்டி....
மீண்டும் சில நினைவுகளை தட்டி எழுப்பிவிடுகிறய் ஆதவா... நாம் எல்லோரும் இப்படிதானே...

வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர்
நாயர் கடை டீயா... தமிழ் சினிமாவில் வருவதுபோல வெள்ளை ஜாக்கெட் மட்டும் போட்டு ஒரு பெண் "எந்தா வேண்டே சேட்டா..??" என்று கேக்கலையா???

ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ
ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்..
ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும்
சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி
அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி
தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..

சமீபத்தில் அலுவலகத்தில் வெள்ளைகாரி ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது அவர் என்னிடம் அவர் தன்னுடைய இந்திய பயணத்தை பற்றி சொல்லி கொண்டிருந்தார், அதில் அவர் மிக மிக வருந்தி சொல்லியது... "பம்பாய், கோவா, ஹைதிராபாத், சென்னை, கேரளா என்று எல்லா இடங்களுக்கும் சென்றேன், அசிங்கமாக , தேவையில்லாமல் இடித்து, உரசி செல்லும் ஆண்கள் எல்லா இடத்திலும் பார்த்தேன்" என்று கூறிய போது எனக்கு மிக மிக அவமானமாக இருந்தது....
"பாய்ஸ்" இதை எதோ ஒரு சாகாச செயலாக காட்டியிருந்தது அதை விட கொடுமை...

அன்புரசிகன்
25-05-2007, 08:01 PM
நன்னாகத்தான் இருக்கு. அப்புறமென்ன? நன்னாக குளிர் காய்ந்தீர்களா?

ஆதவா
26-05-2007, 01:46 AM
நண்பர்களே இன்னும் சில போட்டாங்கள் இணைத்துள்ளேன் பாருங்கள்.. நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக...
-----------------------------------------------------------

ஆதவா
26-05-2007, 01:47 AM
என்ன ஆதவா சொல்லியிருந்தா எனக்கு தெரிந்த நண்பரின் வீடுக்கு செல்லி அழைத்து கவனிக்க சொல்லியிருப்பனே
அப்ரம் எண்ண ஆச்சு....

அப்படித்தான் ஆச்சு...... அடுத்த பாகத்தில் தொடருகிறேன் நண்பரே!

ஆதவா
26-05-2007, 01:52 AM
ஊட்டி அழகான சுற்றுலா தளமாக இருந்தது. இன்று அவை பழைய பெருமையை இழந்து விட்டது
அதிகமாக காண்கிட் காடுகள் முழைத்து விட்டன. சுகாதரமும் குரைவு. கூட்டமும் அதிகம்

குறிப்பாக மலர் கன்காட்சி நடக்கும் போது அங்கு போகவே கூடாது

சில உண்மைகள் சரிதான் லொள்ளூ வாத்தியாரே!! மலர்கண்காட்சிக்கு அதிகம் பேர் வரும் போது நாங்கள் போகமால் இருந்தால் அது சரியா? :D :D

பட்ட பெயர் கொடுத்து அழைக்கும் நண்பர்கள்...
பைக் பயணம்...
குளுகுளு ஊட்டி....
மீண்டும் சில நினைவுகளை தட்டி எழுப்பிவிடுகிறய் ஆதவா... நாம் எல்லோரும் இப்படிதானே...

நாயர் கடை டீயா... தமிழ் சினிமாவில் வருவதுபோல வெள்ளை ஜாக்கெட் மட்டும் போட்டு ஒரு பெண் "எந்தா வேண்டே சேட்டா..??" என்று கேக்கலையா???

சமீபத்தில் அலுவலகத்தில் வெள்ளைகாரி ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது அவர் என்னிடம் அவர் தன்னுடைய இந்திய பயணத்தை பற்றி சொல்லி கொண்டிருந்தார், அதில் அவர் மிக மிக வருந்தி சொல்லியது... "பம்பாய், கோவா, ஹைதிராபாத், சென்னை, கேரளா என்று எல்லா இடங்களுக்கும் சென்றேன், அசிங்கமாக , தேவையில்லாமல் இடித்து, உரசி செல்லும் ஆண்கள் எல்லா இடத்திலும் பார்த்தேன்" என்று கூறிய போது எனக்கு மிக மிக அவமானமாக இருந்தது....
"பாய்ஸ்" இதை எதோ ஒரு சாகாச செயலாக காட்டியிருந்தது அதை விட கொடுமை...

பென்ஸ் அண்ணா... நீங்கள் முதலிலேயே அனுபவித்துவிட்டீர்கள்... நான் இப்போதுதான் அனுபவிக்கிறேன்... பல சிரமங்களுக்கிடையில்...
--------------------
டீக்கடை மட்டுமே எங்களுக்கு ஏமாற்றம்.... அதெல்லாம் கேரளாவிலும் சினிமாவிலும் சாத்தியம் என்று நினைக்கிறேன்
-------------------------------
ரசியுங்கள், கமெண்ட் அடியுங்கள்... ஆனால் துன்புருத்தாதீர்கள்>.. இதுதான் நமக்குண்டான கொள்கை.... நீங்கள் ரசிக்க பெண்களும் ரசிப்பார்கள் ; அவர்களும் கமெண்ட் அடிப்பார்கள் ; ஆனால் நிச்சயம் அவர்களுக்குத் துன்புருத்தத் தெரியாது...

அதிலும் நம் நாட்டின் அவலத்தை அடுத்த நாட்டவர் சொல்லும்போது நமக்கு மிகவும் கேவலமாக இருக்கும்... என்ன செய்வது. விதி.....

அக்னி
26-05-2007, 02:21 AM
அழகிய படத்தொகுப்புக்கள்.

ஆமாம், இரண்டு மோட்டார் சைக்கிள்களூடன் மூன்றாவதாய் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பது போல் தெரிகிறதே...

ஆதவா
26-05-2007, 02:28 AM
அந்த மூன்றில் முதலில் இருப்பது மட்டுமே எம்முடையது.. மற்றைய இரண்டும் வேறொருவருடையது..

அக்னி
26-05-2007, 02:41 AM
அந்த மூன்றில் முதலில் இருப்பது மட்டுமே எம்முடையது.. மற்றைய இரண்டும் வேறொருவருடையது..

என்ன 4 பேர் ஒன்றிலா? அதுவும் பெண்கள் பாவிக்கும் பைக்கிலா? நம்பமுடியவில்லையே...

அவினாசி அருகே இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் ஐந்து லிட்டர்கள் அடித்துவிட்டு
கிளம்பினோம்...

இது முதல் பாகம் ஆதவா...

ஆதவா மாட்டியாச்சு ஓடிவாங்கோ...

ஆதவா
26-05-2007, 02:45 AM
ஹி ஹி ஹி.... மீண்டும் சொல்கிறேன்..

மூன்றில் முதலில் இருப்பது எம்முடையது... (எங்களுடையது)
மீதி இரண்டும் வேறொருவருடையது.... எங்களுடையதல்ல...

அக்னி
26-05-2007, 02:50 AM
இன்னும் என்ன :smilie_bett: ?

எழுந்து வாங்கோ நண்பர்களே...

:nature-smiley-008: என்னை ஏமாத்தப் பாக்கிறார்...
நண்பர்கள் வந்து கண்டுகொள்ளட்டும்...

ஆதவா
26-05-2007, 02:53 AM
ஹி ஹி..... :D :D :)

மழைக்கு ஒதுங்கிய போது எம்முடன் இணைந்து வேறு இரு வண்டிகளும் நின்றது... ஆனால் அதில் பெண்டுகள் இல்லை... இல்லையென்றால் சொல்லியிருப்பேனே....

அக்னி
26-05-2007, 07:12 AM
அழகிய படத்தொகுப்புக்கள்.

ஆமாம், இரண்டு மோட்டார் சைக்கிள்களூடன் மூன்றாவதாய் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பது போல் தெரிகிறதே...

அந்த மூன்றில் முதலில் இருப்பது மட்டுமே எம்முடையது.. மற்றைய இரண்டும் வேறொருவருடையது..

என்ன 4 பேர் ஒன்றிலா? அதுவும் பெண்கள் பாவிக்கும் பைக்கிலா? நம்பமுடியவில்லையே...

இது முதல் பாகம் ஆதவா...

ஆதவா மாட்டியாச்சு ஓடிவாங்கோ...

ஹி ஹி ஹி.... மீண்டும் சொல்கிறேன்..

மூன்றில் முதலில் இருப்பது எம்முடையது... (எங்களுடையது)
மீதி இரண்டும் வேறொருவருடையது.... எங்களுடையதல்ல...

இன்னும் என்ன :smilie_bett: ?

எழுந்து வாங்கோ நண்பர்களே...

:nature-smiley-008: என்னை ஏமாத்தப் பாக்கிறார்...
நண்பர்கள் வந்து கண்டுகொள்ளட்டும்...

ஹி ஹி..... :D :D :)

மழைக்கு ஒதுங்கிய போது எம்முடன் இணைந்து வேறு இரு வண்டிகளும் நின்றது... ஆனால் அதில் பெண்டுகள் இல்லை... இல்லையென்றால் சொல்லியிருப்பேனே....

மன்றத்துத் தோழர்களே... இங்கேயும் வந்து பாருங்கள்...

அன்புரசிகன்
26-05-2007, 07:20 AM
போட்டோக்களை பார்க்க பார்க்க மனம் ஏங்குகிறது. எல்லாம் பார்க்க வேணும். பேசாமல் இந்தியாவில் ஒரு பெண்ணை ... பேசி முடியுங்கோ...:D

அக்னி
26-05-2007, 07:21 AM
போட்டோக்களை பார்க்க பார்க்க மனம் ஏங்குகிறது. எல்லாம் பார்க்க வேணும். பேசாமல் இந்தியாவில் ஒரு பெண்ணை ... பேசி முடியுங்கோ...:D

உங்கட மனம் பார்த்து ஏங்குறதுக்கு, அவர் ஏன் முடிக்கோணும்?

ஆதவா சுத்திப் பாத்தத சுத்தப் பாக்கிறது தெரியுதோ?
ஆதாரத்தோட பிடிச்சிருக்கன்..

மனோஜ்
26-05-2007, 09:31 AM
என்ன ஆதவா அக்னீ எதே கண்டுபிடிச்சிருக்காரு அது உண்மையா ?

சூரியன்
19-12-2008, 01:33 PM
இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது....

அப்பறம் அங்கயே தங்கினீர்களா இல்லை வேற ஹோட்டலுக்கு போனீர்களா?