PDA

View Full Version : ஜக்கூ - பூச்சிகள்



ஆதவா
24-05-2007, 02:56 PM
வெட்டுபட்ட இலைகளால்
வீடிழந்து நிற்கிறார்கள்
பூச்சிகள்.

தாமரை
24-05-2007, 03:00 PM
வெட்டபட்ட வீடுகள்
வீடுகளாயின
மரம்

சுட்டிபையன்
24-05-2007, 03:03 PM
வெட்டுப்பட்ட இலைகளால்
பசியாறின
ஆடுகள்

மதி
24-05-2007, 03:04 PM
ஜக்கூன்னா..இன்னாங்க?

ஆதவா
24-05-2007, 03:17 PM
எல்லாரும் ஹைக்கூனு ஆரம்பிக்கிறாங்க... நாம ஏன் புதுசா ஜக்கூ னு ஆரம்பிக்கக் கூடாது? :D :D
-------------------------

ஆதவா
24-05-2007, 03:20 PM
செல்வன் அண்ணா.. சூப்பர்.///

அக்னி
24-05-2007, 03:20 PM
வெட்டுப்பட்ட ஆடுகளால்
பசியாறினான்
மனிதன்

ஆதவா
24-05-2007, 03:23 PM
வெட்டுப்பட்ட மனிதர்களால்
ரத்தம் சிரிக்கிறது
பயங்கரவாதம்

அன்புரசிகன்
24-05-2007, 03:26 PM
ஐ கூ சூப்பர்.

எல்லாரும் பசியாறினம். இயற்க்கைக்கு பசியெடுக்கும் போது அது நரபலி எடுக்கும்.
அந்த சமயத்தில் குய்யோ முய்யோ என்று சத்தமிட்டு பிரயோசனமில்லீங்கோ.

அக்னி
24-05-2007, 03:29 PM
வெட்டுப்பட்ட பயங்கரவாதத்தால்
உயிர்க்கிறது
சமாதானம்.

மதி
24-05-2007, 03:43 PM
எத்தன வெட்டுப்பட்ட...
சமாதானமா ஏதாவது எழுதுங்களேன்..

ஆதவா
24-05-2007, 03:52 PM
வெட்டுப்பட்ட சமாதானத்தால்
ஓலமிடுகிறது
நாடுகள்

சக்தி
24-05-2007, 04:28 PM
வெட்டுப்பட்ட மனங்களால்
உண்டாகிறது
புரட்சி

அமரன்
24-05-2007, 04:36 PM
வெட்டுப்பட்ட நாடுகளால்
தழைக்கின்றது
பயங்கரவாதம்.

அன்புரசிகன்
24-05-2007, 04:38 PM
வெட்டுப்பட்ட அரசும்
சுயநிர்ணயத்தை
பயங்கரவாதம் என்கிறதே...

அக்னி
24-05-2007, 05:55 PM
வெட்டுப்படும் சுயநிர்ணயம்
தேசியத்தை
அழிக்கிறதே

சக்தி
24-05-2007, 08:08 PM
வெட்டுப்படும் இதயத்தின்
வலிகள்
காதல்