PDA

View Full Version : என் பழைய பதிவுகளை காண முடியுமா..??



இதயம்
24-05-2007, 01:36 PM
நான் நம் மன்றத்தில் 20 Feb 2005 அன்று இணைந்தேன். அப்போது திஸ்கியில் நான் பதிந்த பதிவுகளை நான் காண முடியுமா..? முடியும் என்றால் எப்படி..? தயவு செய்து விளக்குவீர்களா..??

பென்ஸ்
25-05-2007, 03:16 AM
உங்கள் பயனாளர் பெயரை சொல்லுங்கள், நான் எடுத்து கொடுக்க முடியுமா பார்க்கிறேன்...

இதயம்
25-05-2007, 07:53 AM
சரியாக நினைவில் இல்லை. கீழே உள்ளவற்றில் ஒன்றாக இருக்கும்.

1. mehajaafar
2. தமிழன்
3. thamizhan

பென்ஸ்
25-05-2007, 11:04 PM
தங்கள் பயனாளர் பெயர் மற்றுன் சம்பந்த பட்ட பதிவுகளை சொல்லுங்கள்.... மாற்றிகொடுக்கிறென்.... நீங்கள் சொல்லிய பெயரை ஒட்டி பல பயனாளர் பெயர் உள்ளது....
எனவே சரியான தகவல் வேண்டும்.

ஓவியா
25-05-2007, 11:14 PM
சரியாக நினைவில் இல்லை. கீழே உள்ளவற்றில் ஒன்றாக இருக்கும்.

1. mehajaafar
2. தமிழன்
3. thamizhan


தங்கள் பயனாளர் பெயர் மற்றுன் சம்பந்த பட்ட பதிவுகளை சொல்லுங்கள்.... மாற்றிகொடுக்கிறென்.... நீங்கள் சொல்லிய பெயரை ஒட்டி பல பயனாளர் பெயர் உள்ளது....
எனவே சரியான தகவல் வேண்டும்.

அடியேனின் சிரிய கருத்து.

இதை தனிமடலில் பேசினால் நலம்.

யாரேனும் உங்கள் பழைய பெயரில் வந்து சபையில் எடக்கு முடக்கா பதிவு போட வாய்ப்பு இருக்கு.

தவறாயின் மன்னிக்கவும்.

எல்லாம் இங்கு கற்றுக்கொண்டதுதான்.:icon_give_rose:

இதயம்
26-05-2007, 10:10 AM
நான் இணைந்த 20 Feb 2005 தேதியில் நான் குறிப்பிட்ட 3 பெயர்களில் ஒத்தவர்கள் கணக்கு தொடங்கியிருப்பார்கள் என்பது அரிதான விஷயமே..!!