PDA

View Full Version : தயாநிதிமாறனுடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
24-05-2007, 11:50 AM
லியோ - வணக்கம் அமைச்சரே

தயா - நான் இப்போது அமைச்சர் இல்லை

லியோ - மன்னிக்கவும். திமுகவினர் தினகரன் அலுவலகத்தின் உள் நுழைந்ததை பற்றி......

தயா - Incoming Free எனும் திட்டத்தை கொண்டு வந்தோம் அதனால் அவர்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். என்ன செய்வது.

லியோ - அவர்கள் அடுத்து நொறுக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டார்களே

தயா - ஆம். Outgoing Free என்று தவறாக நினைத்துவிட்டார்கள். அதற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் தரவேண்டும்.

லியோ - ஐயோ. அப்படியா. ஆனால் தமிழகவும் முழுவதும் திமுகவினர் அலைந்து திரிந்து தினகரன் பத்திரிக்கைகளை எரித்திருக்கிறார்களே.

தயா - Roaming FREE எனும் திட்டம் கொண்டு வருவதற்கு முன்னே இப்படி அவர்கள் அலைந்தது ஏற்றுக் கொள்ள முடியாது.

லியோ - கலைஞர் டிவி ஆரம்பித்தால் சன் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு போட்டி நிகழ்ச்சிகள் வருமா

தயா - அவர்கள் போட்டி நிகழச்சிகள் என்னவென்று ஒரு தகவல் கிடைத்தது

லியோ - அப்படியா என்ன அது

தயா -

ஓலங்கள் - தினகரன் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அழுவதை காட்ட முடியாததால் அழகிரி குடும்பத்தினர் அழுவதை காட்டுவார்கள்.

கெஞ்சலி - எனக்கு பதிலாக யாரையாவது அமைச்சாரக போட கெஞ்சுவார்கள்

இரண்டு ரூபாய்க்கு அரிசி - ராதிகாவின் அரசி தொடருக்கு போட்டியாக ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். - அரிசி

நொறுக்கப்போவது யாரு - இது அழகிரியின் ஆதரவாளர்கள் தயாரிக்கும் புதிய தொடர். எல்லா பத்திரிக்கை அலுவலகங்களையும் நொறுக்குவதை நேரிடியாக காட்டுவார்கள்.

Tragedy Time - உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் கொடுத்ததால் அவர்கள் இலவசமாக நடித்து தருகிறார்கள்.

இளமை ஆளுமை - இது ஸ்டாலினின் இளைஞர் கட்சி நடத்துவது

இப்படி பல முயற்சிகள் செய்கிறார்கள். தகவல் கிடைக்கும் போது தருகிறேன்.


லியோ - அடப்பாவமே. அது சரி ராமர் பாலத்தை பற்றி டி ஆர் பாலு....

தயா - ராமருக்கு ராவணனுடன் பேச சரியாக சிங்னல் கிடைக்கவில்லை என்று நான் தான் அனுமாரை முதன் முதலாக Tower கட்ட அனுப்பி வைத்தேன். ஆனால் டி ஆர் பாலு ராமர் டவர் அமைத்தால் அது பிஜேபியினருக்கு incoming & outgoing இலவசமாக்கிவடும் என்று மறுத்துவிட்டார். இப்போது இவர் டவர் கட்டுவது வியப்பாக இருக்கிறது.

லியோ - நீங்கள் புது கட்சி ஆரம்பிப்பீர்களா

தயா - நானும் கலாவும் யோசித்துவருகிறோம். கலைஞர் திமுக வென்று ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்று

லியோ - இதற்கு கலைஞர் ஒத்துக் கொள்வாரா. அவர் பெயரில் ஆரம்பித்தால்...

தயா - ஐயோ நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. இது சன் டிவியின் கலைஞர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு கட்சி. அவர்கள் பிரபலம் அடைந்துள்ளதால் எல்லா தொகுதிகளிலும் நாங்கள் தான் ஜெயிப்போம்.

லியோ -நன்றி.

shivasevagan
24-05-2007, 11:55 AM
நல்ல கற்பனை

இதயம்
24-05-2007, 12:01 PM
அசத்தல் மோகன். ஆனந்த விகடனில் வரும் ஜோக்கிரி@காம் பகுதியையே தூக்கி சாப்பிட்டுவிட்டது போங்கள்..!!

lolluvathiyar
24-05-2007, 12:19 PM
சூப்பர கற்பனை, அதுவும் கலைஞர்கள் நடத்தும் கட்சி என்பதால்
கலைஞர் கட்சி என்று பெயர் வைப்பார்களாம். பாராட்டுகள்
இதுபோன்று சிரிக்க வைக்கும் படைப்பை தொடரவும்

தங்கவேல்
24-05-2007, 12:29 PM
நல்ல பதிப்பு... சிரித்து சிரித்து ...

leomohan
24-05-2007, 12:35 PM
நன்றி சிவசேவகன், ஜாஃபர், வாத்தியார் மற்றும் தங்கவேல். நேயர் விருப்பப்படி யாரை பேட்டி எடுக்க நீங்கள் விரும்பினாலும் என்னிடம் சொல்லுங்கள்.

அவரை நன்கு அறிமுகமாயிருந்தால் பேட்டி எடுத்து உங்களை மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.

நன்றி

lolluvathiyar
24-05-2007, 12:48 PM
நேயர் விருப்பப்படி யாரை பேட்டி எடுக்க நீங்கள் விரும்பினாலும் என்னிடம் சொல்லுங்கள்.


நீங்க நல்லா பேட்டி எடுப்பீங்களா
என்னைவே பேட்டி எடுத்து ஒரு கதை படைக்கலாமே
(ஹி ஹி எனக்கு நெனப்பு கொஞ்சம் அதிகம்)

இதயம்
24-05-2007, 12:55 PM
நீங்க நல்லா பேட்டி எடுப்பீங்களா
என்னைவே பேட்டி எடுத்து ஒரு கதை படைக்கலாமே
(ஹி ஹி எனக்கு நெனப்பு கொஞ்சம் அதிகம்)


ஆசை.. தோசை.. அப்பளம்.. வடை..!!

மனோஜ்
24-05-2007, 06:46 PM
அசத்தல் மோகன் சார் அப்படியே கலைஞரையும் ஒரு பேட்டி எடுங்க ஓகே

சக்தி
24-05-2007, 07:04 PM
நல்ல கற்பனை வாழ்த்துக்கள் மோகன். பெருகட்டும் தங்களின் கற்பனை.

leomohan
24-05-2007, 07:14 PM
நன்றி மனோஜ்.

நன்றி ரோஜா.

gragavan
24-05-2007, 07:25 PM
கலக்கல் பேட்டி.....வயிற்றுவலிதான் போங்கள். செம கிண்டல்.

விகடன்
30-05-2007, 04:18 AM
சிறப்பாக கலந்துரையாடலை வடிவமைத்திருக்கிறீர்கள்.

இந்தியாவின் அரசியல் முழுமையாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இதயம்
30-05-2007, 04:49 AM
நன்றி சிவசேவகன், ஜாஃபர், வாத்தியார் மற்றும் தங்கவேல். நேயர் விருப்பப்படி யாரை பேட்டி எடுக்க நீங்கள் விரும்பினாலும் என்னிடம் சொல்லுங்கள்.

அவரை நன்கு அறிமுகமாயிருந்தால் பேட்டி எடுத்து உங்களை மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.

நன்றி

தயாநிதி பிரச்சினை மூலம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருக்கும் கலைஞரை பேட்டி எடுங்களேன்.