PDA

View Full Version : மலரும் நினைவுகள் - மயக்கிய மந்திர பானம்இதயம்
24-05-2007, 10:25 AM
என் வாழ்க்கையில் நடந்த (நகைச்)சுவையான பழைய சம்பவங்களை சுமார் 2 வருடங்களுக்கு முன் எழுதி நண்பர்களுடன் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டேன். அதை உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இடுங்கள்.

அதெல்லாம் சுகமான நாட்கள்..! கழுத்துக் கயிறு அவிழ்த்து விட்ட க‎ன்றுக்குட்டியாய், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அலைந்து திரிந்த ஆனந்த வேளைகள்..! நான் சின்ன வயதில் நட்டு வைத்த நட்ராஜ் பென்சில் போல மிகவும் ஒல்லியாக இருப்பே‎ன் (இ‎ன்னும் புரியவில்லை என்றால் எளிய உதாரணம் சொல்கிறே‎ன். எகிப்து பிரமிடில் புதைத்து வைத்த மம்மியை பொழுது போகாமல் தோண்டி எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பே‎ன்..!). இந்தக் குறை எனக்கு இடைவிடாமல் கவலையை கொடுத்து க‎ன்னச் சதையை மேலும் கரைத்தது. எ(த்)தைத் தின்னால் பித்தம் தீரும்..? என்பது போல் உடல் எடை ஏற ஊரில் உள்ளவர்கள் சொ‎ன்னதையெல்லாம் ஒரே மூச்சில் தி‎ன்று தீர்த்தேன். ஓரோபோலி‎ன் (Orobolin) எ‎ன்ற விலையுயர்ந்த மாத்திரை (அப்போதே ஒ‎ன்று ஐந்து ரூபாய்..!) தி‎ன்றால் உடம்பு போடும் எ‎ன்று ஒரு உதவாக்கரை ஊதி விட்டு போக, நா‎ன் அதை ஒரேயடியாக பிடித்துக் கொண்டு, அந்த மருந்து கடையி‎ன் ஒரு மாத வருமானத்தை ஓரோபோலி‎ன் வாங்கித் தின்றே ஒட்டு மொத்தமாக கொடுத்தது தனிக் கதை.

ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு உடனே போய் ஒரு ரூபாய் கொடுத்து எடை மிஷினில் ஏறி நி‎ன்று எடை ஏறியிருக்கிறதா..? எ‎ன்று ஏக்கத்தோடு பார்த்த காலங்களை எண்ணிப் பார்த்தால் சிரிக்கிற சிரிப்பில் கண்களில் கண்ணீர் சிதறும். இத்தனை செய்தும் கையில் இருக்கும் காசு கரைந்ததே தவிர தூசு அளவு கூட எடை கூட வில்லை. எடையை ஏற்றும் திட்டத்தில் கையில் இருக்கும் காசு கண்மண் தெரியாமல் செலவாவதை நினைத்து கவலையில் இருந்த எடையும் எக்கச்சக்கமாக குறைந்தது உபரித் தகவல்..! இந்த நிலையில் தா‎ன் என்னை மாதிரியே மற்றொரு மம்மியி‎ன் மறு அவதாரமாக இருந்த நண்பனின் நட்பு எனக்கு ஏற்பட்டது. அவ‎ன் சொன்ன திடீர் தகவல் என்னை திகிலடையச் செய்தது. அப்படி எ‎ன்ன சொன்னான்..?

பீர் குடித்தால் உடல் எடை ஏறும் எ‎ன்றா‎ன். ஒரு கையில் வறுத்த சிக்க‎ன் கறியையையும், மறு கையில் மது பானக் கோப்பையையும் வைத்துக் கொண்டு, சினிமா வில்லனை வஞ்சகத் திட்டம் போட வைக்கும் வினைப் பிடித்த பானம் எ‎ன்றும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் விற்கும் மதுபானத்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, உற்ற மனைவியை உருட்டி உருட்டி அடிக்க வைக்கும் பானமாகத்தா‎ன் அதை அதுவரை நினைத்திருந்தேன். அ‎ன்பரின் அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் இறுதியாக சொ‎ன்ன எடை ஏறும் எ‎ன்ற வாக்கியம் மனதில் ஏறி எ‎ன்னை மயக்கிவிட்டது. ஒரு வழியாக உடல் எடையை ஏற்றும் பொருட்டு பீரி‎ன் மீது பிரியம் பீரிட்டது. அதனால் அதை வாங்குவதற்கா‎க வகை வகையாக திட்டம் போட ஆரம்பித்தோம்.

மூ‎ன்று நாள் முழுவதும் மூச்சு முட்ட சிந்தித்ததில் முடிவில் திறமையான திட்டம் உருவானது. எ‎ன் அருமை நண்ப‎னின் தென்னந்தோப்பை பீர் குடிக்க பய‎ன்படுத்தும் பார் ஆக்க முடிவெடுத்தோம். அடுத்த ஊரின் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நா‎ன் நின்று கொண்டு, அந்த ஊரி‎ன் ஒதுக்குப் புறமாக இருக்கும் எடை ஏற்றும் அதிசய மருந்து கடைக்கு எ‎ன் உயிர் நண்பனை (எனக்கு போக பயமாக இருந்ததால் அவனை ஏகத்துக்கு ஏற்றி விட்டு போக வைத்தே‎ன். எனக்காக ரிஸ்க் எடுக்கிறா‎ன் அல்லவா..? அதா‎ன் உயி(பீ)ர் நண்ப‎‎ன்..!!) உரு ஏற்றி அ‎னுப்பி வைத்தேன்.

அவ‎ன் அங்கிருந்து போன பிறகு என் நிலை சங்க காலத்தில் தலைவனைப் பிரிந்த தோழியி‎ன் நிலையானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு உ‎ன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..! எ‎ன்று ஒரு மணி நேரமாய் தவித்திருக்க, ஒரு வழியாய் வந்து சேர்ந்தா‎ன். இ‎ன்கம் டாக்ஸ் ரெய்டு வர இருப்பதாக தகவல் கிடைத்தவுட‎ன் கருப்புப் பணத்தை கவனமாய் பதுக்கும் பலே அரசியல்வாதி போல ஆளுக்கொன்றாய் வாங்கி வந்த ஆப் (Half)ஐ அடுத்தவர்கள் அறியாமல் பைக்குள் போட்டு காணாமல் ஆக்கினே‎ன். அடுத்து சரக்குக்கு சரியான சைட் டிஷ் (Side dish) பற்றி எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. இறுதியில் ஐந்து பைசா முறுக்கு பனிரெண்டை பதவிசாக வாங்கிக் கொண்டோம். அஞ்சு வயதில் அரை டவுசர் போட்டு திரிந்த போது தி‎ன்று தீர்த்த அதே முறுக்கு, அரைக் கழுதை வயதில் ஆப் அடிக்க சைட் டிஷ் ஆனதில் சராமாரியாக சந்தோஷப்பட்டோம்.

எங்கள் பயணம் எச்சரிக்கையுட‎ன் தெய்வீக தெ‎ன்னந்தோப்பிற்கு ஆரம்பமானது. முதல் முதலில் பீர் குடிக்கப் போவதை நினைத்து உடல் உற்சாகமாய், மூடி திறந்த முழு பீராய் பீறிட்டது. மனமோ பய உணர்ச்சியில் பல்லாங்குழி ஆடியது. மம்மி நண்ப‎ன் மமதையுட‎ன் ம்ஹம்..! இதெல்லாம் ஒரு விஷயமா..? ஒரு பாட்டில் பீரை நா‎ன் ஒரே மூச்சில் குடிப்பே‎ன்..! என்று பெருமை அடித்தா‎ன். அய்யய்யோ.! சர்வதேச குடிகாரனுட‎ன் சகவாசம் வைத்திருக்கிறோமோ என்று என் மனம் மறுகியது. உடல் எடையை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் எ‎ன்ற எ‎ன் எண்ண நெருப்பில், அவ‎ன் பேச்சு பெட்ரோலை ஊற்றியது. ஒரு வழியாய் இடம் பிடித்து அமர்ந்து ஊற்றுடா பீரை..! எ‎ன்று உற்சாகத்துட‎ன் கூவிய போது தா‎ன் ஒரு விஷயம் உறைத்தது.

ஒளிந்து, ஒளிந்து வந்த பதட்டத்தில் ஊற்றிக் குடிக்க ஒரு குவளை கூட எடுத்து வரவில்லை. சரி..! ஹார்லிக்ஸ் போல் அப்படியே சாப்பிடலாம் எ‎ன்று திரைப்படங்களில் பார்த்து தெரிந்து கொண்டபடி, பாட்டிலி‎ன் மேலே ஒரு தட்டு, கீ‏ழே ஒரு தட்டு தட்டி மூடியை திறக்க முயற்சி செய்தால் திறப்பேனா..? எ‎ன்றது. பல்லால் கடித்து படாரெ‎ன திறந்தேன். சக்தியி‎ன்றி மூடியுட‎ன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சர்வதேச குடிகாரனுக்கும் சடக்கென்று திறந்து கொடுத்தே‎ன். பீர் திரவம் நுரைத்துப் பொ‎ங்கி ஆவல் கொண்ட மனதை அசைத்துப் போட்டது. ஆனால், ஆல்கஹால் வாசனை அருவருப்பை ஏற்படுத்தியது. அர்னால்டு ஆகும் கனவு அருவருப்பை அடித்து சாய்க்க, அங்கே எ‎ங்கள் அட்டகாசம் அமைதியாய் தொடங்கியது. உனக்கு பழக்கமில்லாததால் நா‎ன் குடிக்கிறதைப் பார்த்து விட்டு அதே மாதிரி நீயும் குடி..!எ‎ன்று குடிப்பதற்கான செயல் திட்டம் வகுத்துக் கொடுத்தார் ச.தேச குடிகாரர். திறந்து வைத்த பீர் பாட்டிலை வெகு தெனாவட்டாக வாயில் வைத்து, கொஞ்சமாக சரித்துக் கொண்டு அணு உலை போல் அட்டகாசமாக பெருமூச்சு விட்டார். அவரை பார்த்து நா‎ன் தொடங்கினேன்.

முதலில் முகர்ந்து பார்த்தே‎ன். பிறகு மூக்கை பொத்திக் கொண்டு முக்கால்வாசியை விழுங்கினேன். இனிப்பும் கசப்புமாய் ‏ இரக்கமில்லாத அரக்க திரவம் இம்சையாய் இறங்கியது. ஆனால் எந்த ஒரு தடுமாற்றத்தையும் கொடுக்காமல் தங்கு தடையில்லாமல் செ‎ன்றதில் நான் சந்தேகப்பட்டு சரக்கில் கலப்படம் எதுவும் இருக்குமோ எ‎ன்று கேட்பதற்காக ச.தேச குடிகாரரை பார்க்க திரும்பிய நா‎ன் அதிர்ச்சியில் அயர்ந்து போ‎னேன்..! கால் பாட்டில் கூட காலி செய்யாத என் உயிர் நண்பர் கண் சொருகி, கை கால்களை இயந்திரம் போல் அசைத்து அடாவடி செய்து கொண்டிருந்தார். எனக்கு பார்க்க பார்க்க பைத்தியம் பிடித்தது. முக்கால்வாசிக்கு மேல் குடித்த நா‎ன் ஒன்றும் நிகழாமல் ஒழுங்காய் உட்கார்ந்திருக்க, கால்வாசி கூட கடக்காத கண்ணியத்திற்குரிய நண்பர் கண்ணில் போதை ஏறி கண்டபடி இருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. போதையேறாத பாவியாகி விட்டே‎னே..? என்ற பதைபதைப்பில் இருந்த எனக்கு, பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. போதை எதுவும் ஏறாமல் பொட்டிப் பாம்பாய் இருந்தால், ந‎ண்பர் பாதை மாறி குடியில் சிறந்த கோமா‎ன் என்று மற்ற சகாக்களிடம் என்னைப் பற்றி சளைக்காமல் சொல்லி சங்கடப்படுத்திவிடுவார் எ‎ன்று வலது பக்க மூளை வலுக்கட்டாயமாக எச்சரிக்க, அந்த ஆபத்தை சரி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசரத் தகவல் அடுத்த பக்க மூளையிடம் இருந்து வந்தது. உட‎னே உடம்பின் ஒட்டு மொத்த உறுதியையும் எ‎ன் ஒரு காலுக்கு கொண்டு வந்து, எதிரே எள்ளி நகையாடிக் கொண்டிருந்த எ‎ன் உயிர் நண்ப‎னின் இடுப்பில் விட்டே‎ன் ஒரு உதை..! நண்பர் எகிறிப் போய் எ‎ங்கோ விழுந்தார். சுதாரித்து எழுந்தவர் சுள்ளெ‎ன்ற கோபத்துட‎ன் அருகில் வந்து ஏண்டா அடிச்சே..? எ‎ன்று எதிர்க் கேள்வி கேட்டார். அதற்கு பதிலாக ஒரு அறை விட்டே‎ன் கன்னத்தில்..! சகாவுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. சும்மா கிடந்தவனை சுறுசுறுப்பு ஏற்றி கூட்டி வந்து, குளிர்பானம் கொடுத்தால் ரவுண்டு கட்டி அடித்து ராவடி செய்கிறானே..! எ‎ன்று அவர் கவலையுட‎ன் புலம்ப ஆரம்பித்தார்..!

நா‎ன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக பக்கா குடிகாரனைப் போல் படு ஜோராக நடித்துக் கொண்டிருந்தே‎ன். இனி இவ‎ன் சகவாசமே வேண்டாம்..! என்று மிச்சம் வைத்த முக்கால் பாட்டிலை எடுத்து கொண்டு, எ‎ன்னிடமிருந்து பிரிந்து நாற்பதடி தூரத்தில் நல்லபடியாக அமர்ந்து கொண்டார். நா‎ன் என் உடம்பின் கோணத்தை மாற்றி, மல்லாந்து படுத்துக் கொண்டு எ‎ன் இனிய ந‎ண்பரை எ‎ன்ன செய்து இம்சிக்கலாம்..? எ‎ன்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். யோசனையிலேயே நேரம் கரைய ஓவ் எ‎ன்ற அலறல் ஓங்காரமாக கேட்டது. அலறியடித்துக் கொண்டு எழுந்த நா‎ன், என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எ‎ன்று தள்ளி வைத்து விட்டு, அலறல் வந்த திசை நோக்கி அம்பாய் பாய்ந்தே‎ன்.

அங்கே நான் கண்ட காட்சி, எனக்கு ஒரு குடம் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்த மயக்கத்தை உண்டாக்கியது. அதிகம் குடிப்பதில் அதிரடி சாதனை செய்வதாக சொன்ன எ‎ன் அன்பு நண்பர் அவரைச் சுற்றி இந்தியாவி‎ன் மேப்பையும், அதன் இயற்கை வளங்களையும் வாந்தியால் வரைந்து போட்டு வசமாய் மயக்கம் போட்டிருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. எ‎ன்ன கருமம்டா இது..? எ‎ன்று கடிந்து கொண்டேன். கிடந்த நிலையை பார்த்தால் எழுந்து நடக்க ஏற்பாடு செய்வதெல்லாம் வீண் எ‎ன்பது புரிந்தது. திட்டமிட்டிருந்த என் ஆஸ்கார் விருது அபிநயத்தை அடுத்த நொடியில் கைவிட்டே‎ன். சவமாய் கிடக்கும் சகாவை, சமமாய் நடக்க வைப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தே‎ன். சினிமாவில் பார்த்த சீ‎ன்கள் சீராய் சிந்தனைக்குள் சிலிர்த்துக் கொண்டு வந்து போனது. மூளைக்குள் ஐடியா மி‎ன்னல் பளிச்சிட்டு அழகாய் வேலை செய்தது.

சிங்கம் கிழித்துப் போட்ட சிறு மானின் உடலை, கடைசியில் வந்த கள்ள நரி புதருக்குள் இழுத்துச் செல்வது போல, அவ‎ன் உடம்பு மண்ணில் தேய, தேய இழுத்துப் போய் அங்கிருந்த முழங்காலளவு தண்ணீர் உள்ள மணற்கிணற்றில் தள்ளி விட்டே‎ன். எனக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத அந்த அற்புத சினேகிதனை மண்டியிட்டு அமர்ந்து மடியில் போட்டு குளிப்பாட்டினே‎ன். அத்தனை சேவை செய்தும் அசைந்து கொடுக்காமல் மௌனத்தை அடைகாத்தா‎ர் மகான். மீண்டும் கரைக்கு இழுத்து வந்து போட்டு, காலடியில் உட்கார்ந்து கொண்டு கலக்கத்துட‎ன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

வினாடிகள் நிமிடத்தை விரைவாய் தி‎ன்று விரைந்து கொண்டிருந்தது. அசதியில் அப்படியே உறங்கிப் போனே‎ன். எதார்த்தமாக விழித்த போது எங்கோ தூரத்தில் மட்டும் ஒரு வெளிச்சப்புள்ளி. நிலா வெளிச்சத்தில் நிலவு கூட தெளிவாக தெரியவில்லை. ஆனந்த சயனத்தில் இருப்பவரை அசைத்துப் பார்த்தே‎ன். அசராமல் கிடந்தா‎ன் பரதேசி..! ஒருவேளை அதிகம் குடித்ததில் செத்துப் போய்விட்டானா..? எ‎ன்ற சந்தேகம் ஏற்பட, நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தே‎ன். அப்பாடா..! மூச்சு வந்தது நிம்மதியாக இருந்தது. அடுத்த அரை மணி நேரம் கழித்து அரை இஞ்ச் அசைந்தா‎ன். அப்போது தான் எனக்கு உயிர் வந்தது. உடலைப் பிடித்து உலுக்கினே‎ன். ஒரு வழியாக உணர்வு திரும்பியவன், யார் மயக்கம் தெளிந்து எழுந்தாலும் கேட்கும் அதே கேள்வியை அட்சரசுத்தமாக கேட்டதும் அசந்து போனே‎ன்.

அவன் கேட்ட கேள்வி நா‎ன் எங்கே இருக்கே‎ன்..!. கோபத்தில் கொதித்தாலும் கண்ணியத்துட‎ன் கட்டுப் படுத்திக் கொண்டு ம்ம்.. உ‎ன் மாமியார் வீட்டில்..! என்றே‎ன். கொஞ்சம் ஓவராய் பேசினாலும் ஓங்கி ஒரு அறை விட்டு உயிரை எடுத்து விடுவேனோ எ‎ன்ற அநியாய கோபத்தில் நா‎ன் இருந்தே‎ன். என் நிலை உணர்ந்தவ‎ன் எக்குத் தப்பாய் பேசி எத்து வாங்காமல் எதார்த்தமாக எழுந்து, இயல்பாக நடக்க ஆரம்பித்தா‎ன். எடையை ஏற்ற வேண்டும் ஆசைப்பட்டு, இப்படி ஒரு எடுபட்ட பயலோடு கூட்டு சேர்ந்ததை நினைத்து குற்ற உணர்வோடு எ‎ன் தலைவிதியை நொந்து கொண்டே அவனோடு சேர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தே‎ன். அத்தோடு எடையை ஏற்றும் திட்டம் எனக்கு எட்டாக் கனியானது..!

ஷீ-நிசி
24-05-2007, 10:36 AM
உங்க எடை ஏற்றம் சம்பவத்தை ஒரு தேர்ந்த எழுத்தாளனைப் போல் எழுதியுள்ளீர்கள் நண்பரே! மிக நகைச்சுவையாக இருந்தது.. இது தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.. அருமை... உங்களுக்கு 50 சன்மானம்.

இதயம்
24-05-2007, 10:39 AM
நன்றி ஷீ-நிசி..! ஒரு சிறு திருத்தம். அது எடை குறைப்பு சம்பவம் அல்ல, எடை ஏற்றம்..!!

இதயம்
26-05-2007, 06:24 AM
என்ன இந்த திரி விஜய டி.ராஜேந்தரின் வீராசாமி படம் ஓடும் தியேட்டர் போல வெறிச்சோடிக்கிடக்கு..??:icon_shout:

சித்திரம் பேசுதடி படம் போல் லேட் பிக்-அப்பிற்கு வாய்ப்பில்லையோ..!!:D

அக்னி
26-05-2007, 06:54 AM
அனுபவத்தை அழகாக ரசனையாகக் கூறியத்ற்கு முதலில் வாழ்த்துக்கள்...
சின்னச் சின்ன சொற்களையும் கூர்ந்து செதுக்கியிருக்கிறீர்கள்.
வர்ணனைகள்... அளவு, அழகு.

இப்பொழுது எடை எப்படி? கூட்டிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது கூட்டி விட்டீர்களா?

அன்புரசிகன்
26-05-2007, 07:03 AM
நன்றாக உள்ளது... இப்போது உங்கள் எடை எவ்வளவு?

இதயம்
26-05-2007, 09:40 AM
அனுபவத்தை அழகாக ரசனையாகக் கூறியத்ற்கு முதலில் வாழ்த்துக்கள்...
சின்னச் சின்ன சொற்களையும் கூர்ந்து செதுக்கியிருக்கிறீர்கள்.
வர்ணனைகள்... அளவு, அழகு.

இப்பொழுது எடை எப்படி? கூட்டிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது கூட்டி விட்டீர்களா?

இப்போது எடை கூடவில்லையே என்ற பிரச்சினை போய், இப்போது எடை கூடுகிறதே என்று உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று அல்லாடுகிறேன். வழி இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே

நன்றாக உள்ளது... இப்போது உங்கள் எடை எவ்வளவு?

ஏற்ற நினைத்த போது 53.. இறக்க நினைக்கிற இப்போது 78..!! என்ன கொடுமை சார் இது..!?

யாருக்கேனும் உடல் எடையை சுலபமாக ஏற்றவேண்டும் என்றால் உடன் தெரியப்படுத்துங்கள். நான் எப்படி பெற்றேனோ, அதே வழிமுறையை சொல்லித் தருகிறேன்.

சிவா.ஜி
26-05-2007, 11:17 AM
முதன்முதலில் நிஜக்குடிமகனாக மாறிய சம்பவத்தை மிக நேர்த்தியாக விவரித்துள்ள நன்பர் ஜாபர் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.எழுத்தில் நல்ல ஆளுமை தெரிகிறது.

மனோஜ்
26-05-2007, 06:44 PM
கதையை மிகவும் சுவரசியமாக எழுதியது அருமை

மயூ
26-05-2007, 08:11 PM
நல்ல சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்... பாராட்டுக்கள்.. இப்போ ஆண்டவன் புண்ணியத்தில ஏதோ கொஞ்சம் எடை போட்டிருப்பீங்க என்றுறு நம்புகின்றேன்.!!! :)

இதயம்
27-05-2007, 07:43 AM
நல்ல சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்... பாராட்டுக்கள்.. இப்போ ஆண்டவன் புண்ணியத்தில ஏதோ கொஞ்சம் எடை போட்டிருப்பீங்க என்றுறு நம்புகின்றேன்.!!! :)

உங்களுக்கான பதில் 7-ம் பதிவில் இருக்கிறது.

ஓவியா
01-09-2007, 01:24 AM
ஜபார் அண்ணா, என்ன அட்டகாசமான பதிவு!! அடடே.

கரு எனக்கு முக்கிய*மில்லை, நான் குறைக்க வழிதேடும் டீம், ஆனாலும் உங்க நகைச்சுவை உணர்வு அநியாயத்திற்க்கு ஜாஸ்தியா இருக்கு, சரியான ரசனை தேன் சொட்ட சொட்ட எழுதி இருக்கின்றீர்கள். பாராட்டுகிறேன்.

இப்படி ரசனையான பதிவுகளில் மனதை பரிக்கொடுக்கும் சமயம் கவலைகள் நம்மை விட்டு சற்று ஒதுங்கியிருக்கும். மிக்க நன்றி.

arun
01-09-2007, 02:32 AM
தங்களது அனுபவத்தை ரசனையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

lolluvathiyar
01-09-2007, 07:04 AM
சூப்பர் அனுபவம் இதயம், இது போன்ற அனுபவங்கள் நிரைய பேருக்கு இருக்கும் . ஆனால் அதை அழகாக எழுதும் திறன் உங்களை போல சிலருக்கு தான் உண்டு. இன்னும் ஒல்லியாக தான் இருகிறீர்களா.
அப்படியானால் என் வீட்டுக்கு வாங்க எடை ஏத்தலாம்

மலர்
01-09-2007, 08:31 AM
இப்போது எடை கூடவில்லையே என்ற பிரச்சினை போய், இப்போது எடை கூடுகிறதே என்று உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று அல்லாடுகிறேன். வழி இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு தொடர்ந்து குடித்து வர உடல் சீக்கிரம் மெலிந்து விடும்...
(ஆனால் அருகம்புல் உடலுக்கு அதிக குளிர்ச்சி)

சிவா.ஜி
01-09-2007, 10:44 AM
வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு தொடர்ந்து குடித்து வர உடல் சீக்கிரம் மெலிந்து விடும்...
(ஆனால் அருகம்புல் உடலுக்கு அதிக குளிர்ச்சி)

நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...இதயம் அவர்களை அஃறினையாக்கும் மலரின் இந்த சதியை நான் எப்பாடுபட்டாவது முறியடிப்பேன்...ஹா..ஹா..ஹா..

இதயம்
01-09-2007, 10:49 AM
நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...இதயம் அவர்களை அஃறினையாக்கும் மலரின் இந்த சதியை நான் எப்பாடுபட்டாவது முறியடிப்பேன்...ஹா..ஹா..ஹா..

போதுமா மலர்..? திட்டம் போட்டது நிறைவேறிருச்சா..? இப்ப திருப்தியா..?? எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..?!! உடல் இளைக்க உதவி தான் கேட்டேன், உபத்திரவமல்ல..!! போய்ட்டு வாங்க அம்மணி.. எனக்கு உடலும் இளைக்கவேணாம், ஒண்ணும் இளைக்க வேணாம்..!!:traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியா
01-09-2007, 10:54 AM
வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு தொடர்ந்து குடித்து வர உடல் சீக்கிரம் மெலிந்து விடும்...
(ஆனால் அருகம்புல் உடலுக்கு அதிக குளிர்ச்சி)

அப்படியா!!! இனி லண்டனில் அருகம்புல்லில் ஷேர் ஏறத்தான் போகுது,

இப்பதான் முகவரி இருக்கு, அதனாலே இதயத்திற்க்கு ஒரு 10கிலோ அனுப்பிவைப்போம்...(சும்மா சும்மா)

:love-smiley-008::love-smiley-008::love-smiley-008:

இதயம்
01-09-2007, 10:55 AM

இப்ப வேணாம், ஒரு ஒட்டகம் வாங்கினப்புறம் சொல்லியனுப்புறேன்..!

ஓவியா
01-09-2007, 10:59 AM
பாவம் உலகத்திலே மனிதனால் ஒட்டகம் இளைத்த கதை வெகு விறைவில் பி.பி.சி யில் ஒளிபரப்பாகும்.

ஒட்டகத்திற்க்கு எனது அட்வான்ஸ் அனுதாபங்கள்.

இதயம்
01-09-2007, 11:01 AM
பாவம் உலகத்திலே மனிதனால் ஒட்டகம் இளைத்த கதை வெகு விறைவில் பி.பி.சி யில் ஒளிபரப்பாகும்.

ஒட்டகத்திற்க்கு எனது அட்வான்ஸ் அனுதாபங்கள்.

சரியாச்சொல்லுங்க... ஒட்டகம் இளைக்குறது மனிதனாலா..? அருகம்புல்லாலா..?:nature-smiley-008:

தளபதி
01-09-2007, 11:03 AM
நா‎ன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக பக்கா குடிகாரனைப் போல் படு ஜோராக நடித்துக் கொண்டிருந்தே‎ன். இனி இவ‎ன் சகவாசமே வேண்டாம்..! என்று மிச்சம் வைத்த முக்கால் பாட்டிலை எடுத்து கொண்டு, எ‎ன்னிடமிருந்து பிரிந்து நாற்பதடி தூரத்தில் நல்லபடியாக அமர்ந்து கொண்டார். நா‎ன் என் உடம்பின் கோணத்தை மாற்றி, மல்லாந்து படுத்துக் கொண்டு எ‎ன் இனிய ந‎ண்பரை எ‎ன்ன செய்து இம்சிக்கலாம்..? எ‎ன்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

நண்பரே!! ஜாபர். இந்த இடத்தில் நான் கு(பீர்) என்று சிரித்துவிட என்னைச் சுற்றி இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இது எப்படி?? எக்கச்சக்கத்துக்கு நகைச்சுவையை அள்ளிவிட்டுருக்கிறீர்கள். அநியாயத்துக்கு அட்டகாசம் பண்ணியிருக்கிறீர்கள்.

பத்து வடிவேல் சேர்ந்து அடித்த லூட்டியை இங்கே காண முடிந்தது.

நண்பரே!! பிடியுங்கள் 100 இ கேஷ். முடிந்தால் மீண்டும் ஒரு பீர் அடியுங்கள் அந்த நண்பருடன்.

மலர்
01-09-2007, 11:09 AM
போதுமா மலர்..? திட்டம் போட்டது நிறைவேறிருச்சா..? இப்ப திருப்தியா..?? எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..?!! உடல் இளைக்க உதவி தான் கேட்டேன், உபத்திரவமல்ல..!! போய்ட்டு வாங்க அம்மணி.. எனக்கு உடலும் இளைக்கவேணாம், ஒண்ணும் இளைக்க வேணாம்..!!:traurig001::traurig001::traurig001::traurig001:

நல்லது பண்ணுனா இப்படித்தானா......

இதயம்
01-09-2007, 11:10 AM
நல்லது பண்ணுனா இப்படித்தானா......

ஆப்பு வைக்கிறதை உங்க ஊர்ல "நல்லது"ன்னா சொல்வாங்க..?!! எப்படி கருப்பா இருக்கிற ஆடை "வெள்ளாடு"ன்னும், ஆபத்தான பாம்பை "நல்லபாம்பு"ன்னும் சொல்றாங்களே.. அப்படியா...?!!!

ஓவியா
01-09-2007, 11:13 AM
சரியாச்சொல்லுங்க... ஒட்டகம் இளைக்குறது மனிதனாலா..? அருகம்புல்லாலா..?:nature-smiley-008:

அருகம்புல் சார குடித்து விட்டு ஒட்டகத்து மேல் சவாரி செய்தால், ஒட்டகம் இளைத்துதான் போகும்.

ஆமாம் என் முதல் பின்னூட்டத்திற்க்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே!!! நான் தான் ஓவெர் பிசி, நீங்கள் எல்லாம் ஃபிரிதானே!! ஒரு நன்றி கார்ட் போட்டால் என்னவாம்! :icon_smokeing:

இதயம்
01-09-2007, 11:20 AM

எந்த முதல் பின்னூட்டம்..?????????:sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019:

ஓவியா
01-09-2007, 11:27 AM
ஜபார் அண்ணா, என்ன அட்டகாசமான பதிவு!! அடடே.

கரு எனக்கு முக்கிய*மில்லை, நான் குறைக்க வழிதேடும் டீம், ஆனாலும் உங்க நகைச்சுவை உணர்வு அநியாயத்திற்க்கு ஜாஸ்தியா இருக்கு, சரியான ரசனை தேன் சொட்ட சொட்ட எழுதி இருக்கின்றீர்கள். பாராட்டுகிறேன்.

இப்படி ரசனையான பதிவுகளில் மனதை பரிக்கொடுக்கும் சமயம் கவலைகள் நம்மை விட்டு சற்று ஒதுங்கியிருக்கும். மிக்க நன்றி.

இதான் சகோ.

மலர்
01-09-2007, 11:28 AM
நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...இதயம் அவர்களை அஃறினையாக்கும் மலரின் இந்த சதியை நான் எப்பாடுபட்டாவது முறியடிப்பேன்...ஹா..ஹா..ஹா..

போதுமா மலர்..? திட்டம் போட்டது நிறைவேறிருச்சா..? இப்ப திருப்தியா..?? எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..?!! உடல் இளைக்க உதவி தான் கேட்டேன், உபத்திரவமல்ல..!! போய்ட்டு வாங்க அம்மணி.. எனக்கு உடலும் இளைக்கவேணாம், ஒண்ணும் இளைக்க வேணாம்..!!:tra urig001:

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி...!!!
சிவா.ஜி நிம்மதியா.....
ஸ்டொமக் பர்ன் ஆனது நின்னுட்டா.....

இதயம்
01-09-2007, 11:31 AM
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி...!!!
சிவா.ஜி நிம்மதியா.....
ஸ்டொமக் பர்ன் ஆனது நின்னுட்டா.....

மலர் நீங்க நல்லவரா..? கெட்டவரா..? உலகத்துல என்ன நடக்குதுன்னே புரியலையே..!!!:sport-smiley-019::sport-smiley-019:

மலர்
01-09-2007, 11:34 AM
மலர் நீங்க நல்லவரா..? கெட்டவரா..? உலகத்துல என்ன நடக்குதுன்னே புரியலையே..!!!:sport-smiley-019::sport-smiley-019:

எனக்கும் தான் ஒண்ணுமே புரியலை..... ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு...:icon_shout:

இதயம்
01-09-2007, 11:40 AM
இதான் சகோ.

பொதுவா என்னை பாராட்டி போடும் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில்லை அல்லது விரும்புவதில்லை. காரணம், அந்த பாராட்டுக்கு நான் தகுதியில்லாதவன் என்பதால் தான். இதுவே நீங்கள் என் பதிவை விமர்சித்து, குறை சொல்லி எழுதியிருந்தால் தன்னிலை விளக்கம் அல்லது வருத்தம் தெரிவித்து உடன் பின்னூட்டம் போடுவேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்க வேண்டியது அவசியம். மற்றபடி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால், அதற்கான நேரம் மட்டும் எனக்கு கிடைத்தால் , "மன்றத்தின் தூண் ஆகும் இதயம்..!" என்று அமரனோ, ஓவியனோ எப்போது திரி கொளுத்தியிருப்பார்கள். அவ்வளவு நன்றிகள் ஸ்டாக் உள்ளது.!!

சின்ன பிள்ளை போல் அடம்பிடித்து அன்பையும், நன்றியையும் வாங்கும் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை அதிகமாக பெண்களிடம் பார்க்கிறேன் (ஆரம்பிச்சிட்டார்யா "மகளிர் காவலன்" என்று சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.!!"). அவர்கள் தான் அன்பில் இராட்ஸசிகள்..! அடுத்து பிடித்தவர்களுக்குள் பிடிக்காத வார்த்தை "நன்றி..!" அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றும். நீங்கள் என் சராசரி சகோதரி என்ற நிலை தாண்டி ரொம்ப நாளாயிற்று..!!

இதயம்
01-09-2007, 11:42 AM
எனக்கும் தான் ஒண்ணுமே புரியலை..... ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு...:icon_shout:

ஆனா, சொல்றதுக்கும், செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியலையே..?!!:Christo_pancho:

மலர்
01-09-2007, 11:44 AM
ஆனா, சொல்றதுக்கும், செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியலையே..?!!:Christo_pancho:

அதுக்காக இப்படியெல்லாம் மீசை வச்சி மிரட்டக்கூடாது....

இதயம்
01-09-2007, 11:51 AM
அதுக்காக இப்படியெல்லாம் மீசை வச்சி மிரட்டக்கூடாது....

அதை ஆண்கள் மொட்டையாக, சரணாகதி அடைய* காரணமா இருக்கிற நீங்கள் சொல்லலாமா..?!!:nature-smiley-008::nature-smiley-008::nature-smiley-008:

பூமகள்
01-09-2007, 12:04 PM
உங்களின் வாழ்வில் நடந்த பீரான ..ச்சீ.... வீராமான சம்பவம் பற்றி சொன்னதற்கு நன்றிகள் இதயம் அண்ணா...!:nature-smiley-008:

ஆனால்... ஒன்னு புரியலை..... நீங்க சொன்ன மாதிரி..

அத்தோடு எடையை ஏற்றும் திட்டம் எனக்கு எட்டாக் கனியானது..!
அத்திட்டத்தை மட்டும் தான் கைவிட்டீர்களா???? இல்லை..... உங்கள் நண்ப(பீ)ரை அடிப்பதையும் சேர்த்தா?? :sport-smiley-018:

விளக்க முடியுமா?? :icon_cool1:

இதயம்
01-09-2007, 12:13 PM
பச்சப்புள்ள மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு, பவர்ஃபுல் வெடியை கொளுத்தி எம்மேல வீசறீங்க*..! இதில் விளக்கம் வேறு வேணுமா..? :Christo_pancho::Christo_pancho:

எடையை ஏற்ற ஏகப்பட்ட வழிகளை கையாண்ட நான், இறுதியில் உறுதியாக நின்றது மந்திர பானத்தின் மகத்தான சக்தியை அறிந்து தான். அதுவே அவுட் ஆன பிறகு எடை ஏற்றும் எண்ணமே என்னை விட்டு போனது என்பது தான் உண்மை. மற்றபடி ஒரு நாளைக்கு மூன்று வேளை வழக்கம் போல் சாப்பிட்டுக்கொண்டு தான் இருந்தேன்.:icon_dance::icon_dance:

ஓவியா
01-09-2007, 12:21 PM
பொதுவா என்னை பாராட்டி போடும் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில்லை அல்லது விரும்புவதில்லை. காரணம், அந்த பாராட்டுக்கு நான் தகுதியில்லாதவன் என்பதால் தான். இதுவே நீங்கள் என் பதிவை விமர்சித்து, குறை சொல்லி எழுதியிருந்தால் தன்னிலை விளக்கம் அல்லது வருத்தம் தெரிவித்து உடன் பின்னூட்டம் போடுவேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்க வேண்டியது அவசியம். மற்றபடி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால், அதற்கான நேரம் மட்டும் எனக்கு கிடைத்தால் , "மன்றத்தின் தூண் ஆகும் இதயம்..!" என்று அமரனோ, ஓவியனோ எப்போது திரி கொளுத்தியிருப்பார்கள். அவ்வளவு நன்றிகள் ஸ்டாக் உள்ளது.!!

சின்ன பிள்ளை போல் அடம்பிடித்து அன்பையும், நன்றியையும் வாங்கும் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை அதிகமாக பெண்களிடம் பார்க்கிறேன் (ஆரம்பிச்சிட்டார்யா "மகளிர் காவலன்" என்று சிலர் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது.!!"). அவர்கள் தான் அன்பில் இராட்ஸசிகள்..! அடுத்து பிடித்தவர்களுக்குள் பிடிக்காத வார்த்தை "நன்றி..!" அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றும். நீங்கள் என் சராசரி சகோதரி என்ற நிலை தாண்டி ரொம்ப நாளாயிற்று..!!

என்னைபோன்ற பெண்கள் பொன் பொருளுக்கு மயங்குவதில்லை, அன்பில் மட்டுமே அடைகலம் ஆகிவிடுவார்கள்.

நன்றியும் அன்பும் என் அன்னை என்னை மறவாமல் அரவனைக்க சொன்ன தாரக ம*ந்திரங்கள். அவை எப்பொழுதும் என்னுள் ஒளித்துக்கொண்டேதான் இருக்கும்.

என் மம்மிக்கு ஒரு ஜே :icon_dance:

பூமகள்
01-09-2007, 12:24 PM
மற்றபடி ஒரு நாளைக்கு மூன்று வேளை வழக்கம் போல் சாப்பிட்டுக்கொண்டு தான் இருந்தேன்.:icon_dance::icon_dance:
ஓ.... அப்படிங்களா... !!;)
இருங்க இருங்க ... :icon_hmm:
இன்னிக்கி இருக்கு உங்க வீட்ல..... !!:spudnikbackflip:
அர்ச்சனை கும்பாபிஷேகம் எல்லாம் நடக்கும்...! :angel-smiley-004:
மறக்காமல் அதன் புகைப்படங்களை மன்றத்தோடு பகிருங்கள்...!! ஹி ஹி.........!:p :icon_good:

சிவா.ஜி
01-09-2007, 12:28 PM

அய்யோ அய்யோ பச்சப்புள்ளையா இருக்கியேம்மா...வீரத்தழும்புகள்ன்னா பெருமையா காமிக்கலாம்.....வீட்டம்மா குடுக்கற அர்ச்சனையெல்லாம் போயீ.......சின்னபுள்ள*த்தனமாவுல்ல இருக்கு....

இதயம்
01-09-2007, 12:28 PM
சகோதரிக்கு சொந்த ஊர் சிவகாசியா..? இல்ல.. கொளுத்திப்போடறதிலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎயே குறியா இருக்கீங்களே.. அதான் கேட்டேன்.!! :violent-smiley-034::violent-smiley-034::violent-smiley-034:

கும்பாபிஷேகமா..? ஏற்கனவே இது வீட்டுக்கு தெரிந்து "திருவிழா" நடந்த காரணத்தில் தான் சமத்தா இருக்கேன்..!! :engel016:

மலர்
01-09-2007, 12:31 PM
திருவிழா எப்படி நடந்ததுன்னு பாக்க ஆசையா இருக்கு....

பூமகள்
01-09-2007, 12:34 PM
அய்யோ அய்யோ பச்சப்புள்ளையா இருக்கியேம்மா...வீரத்தழும்புகள்ன்னா பெருமையா காமிக்கலாம்.....வீட்டம்மா குடுக்கற அர்ச்சனையெல்லாம் போயீ.......சின்னபுள்ள*த்தனமாவுல்ல இருக்கு....

தெரியாம தானே கேட்டோம் சிவா அண்ணா...! :icon_rollout:
அப்பதானே நாங்க டிரய்னிங் எடுக்க முடியும் அண்ணா.....!! :icon_rollout: ஹி ஹி...! :whistling:

பூமகள்
01-09-2007, 12:37 PM
கும்பாபிஷேகமா..? ஏற்கனவே இது வீட்டுக்கு தெரிந்து "திருவிழா" நடந்த காரணத்தில் தான் சமத்தா இருக்கேன்..!! :engel016:

ஓ... திருவிழா முடிந்து விட்டதா.... !

அதனால் தான் என் அண்ணா சமத்தா இருக்காரா???:lachen001:

எங்களுக்கு கொஞ்சம் மறு ஒளிபரப்பு பண்ணினால்
உபயோகமாக இருக்கும் எதிர்காலத்திற்கு....!!:whistling:

இதயம்
01-09-2007, 12:38 PM
திருவிழா எப்படி நடந்ததுன்னு பாக்க ஆசையா இருக்கு....

ஆ........ஹா..! ஆரம்பிச்சிட்டாங்கைய்யா..!! இரத்தம் பாக்காட்டி தூக்கம் வராது போலிருக்கே..!

இதயம்
01-09-2007, 12:40 PM
ஒரு ஒளிபரப்பிலேயே உருக்குலைஞ்சி போனேன். இதில் மறுஒளிபரப்பு வேறயா..? வேணாமே இந்த விஷப்பரீட்சை..!!:shutup::shutup:

சிவா.ஜி
01-09-2007, 12:40 PM
தெரியாம தானே கேட்டோம் சிவா அண்ணா...! :icon_rollout:
அப்பதானே நாங்க டிரய்னிங் எடுக்க முடியும் அண்ணா.....!! :icon_rollout: ஹி ஹி...! :whistling:

அதுசரி....இந்த காலத்து புள்ளைங்களுக்கு சொல்லித்தரனுமா....ட்டூ வீலர் வாங்கும்போதே ஹெல்மெட் வாங்கிகனும்ன்னு சொல்ற மாதிரி...கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு கவசம் வாங்கிக்கறது பெட்டெர்.....வெளியில கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா திரியலாம்...

இதயம்
01-09-2007, 12:42 PM

சிவாஜியோட புத்தி எனக்கு இல்லாம போச்சே..!! இளைய தலைமுறைக்கு மிக.. மிக.. உபயோகமான தகவலை சொல்லிருக்கார்..!! ஆமா... குண்டு துளைக்காத உடையெல்லாமா நீங்க வச்சிருக்கீங்க..?!!:nature-smiley-008::nature-smiley-008:

சிவா.ஜி
01-09-2007, 12:45 PM
சிவாஜியோட புத்தி எனக்கு இல்லாம போச்சே..!! இளைய தலைமுறைக்கு மிக.. மிக.. உபயோகமான தகவலை சொல்லிருக்கார்..!! ஆமா... குண்டு துளைக்காத உடையெல்லாமா நீங்க வச்சிருக்கீங்க..!!:nature-smiley-008::nature-smiley-008:

வீட்டம்மாவப் பத்தி இப்படியெல்லாம் சொல்லப்படாது ஆமாம்...

ஓவியா
01-09-2007, 12:47 PM
அடடே, நாம ராசியான பொண்ணூனு ஊருக்குள்ளே பேசுராங்களே, அது உண்மையோ!!!! நம்ப பின்னூட்டம் தொட்ட திரியெல்லாம் என்னமா துலங்குது, வெள்ளி விழாவையும் தாண்டி திருவிழாவிற்க்கே போச்சே

மாப்பு,
கும்மாபிஷேகம் வரை வந்தாச்சா!!!!!!!

ஷு ஷு ஐக்கோ இப்பவே கண்ண கட்டுதே!!!

பூமகள்
01-09-2007, 12:50 PM
ஒரு ஒளிபரப்பிலேயே உருக்குலைஞ்சி போனேன். இதில் மறுஒளிபரப்பு வேறயா..? வேணாமே இந்த விஷப்பரீட்சை..!!:shutup::shutup:

சரி.... அழாதீங்கண்ணா...:icon_nono::icon_nono:

போனா போட்டும்... பாவம் என்று விடுகிறேன் அண்ணா....!:icon_clap:

தப்பிச்சிட்டீங்க....!:icon_hmm:

இதயம்
01-09-2007, 12:50 PM
வீட்டம்மாவப் பத்தி இப்படியெல்லாம் சொல்லப்படாது ஆமாம்...

அங்க அவ்வளவு வன்முறை இல்லையா..? இங்க அப்படி இல்லை..! வீட்டம்மா என்னை ஆசையா ஓஓஓஓஒங்கி ஒரு குத்து குத்துனா யாரு குத்துனதுன்னு வெளில வந்து ரத்தம் எட்டிப்பார்க்கும்..!!

உங்களுக்கு எப்படி..? என்னதான் மடக்கி வச்சி குத்துனாலும் ஒரு சொட்டு இரத்தம் வராத அந்த இரகசியத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்..!!

பூமகள்
01-09-2007, 12:52 PM
வீட்டம்மாவப் பத்தி இப்படியெல்லாம் சொல்லப்படாது ஆமாம்...

அப்படி போடுங்க....! ம்....... !! :4_1_8: :icon_clap:

இதயம்
01-09-2007, 12:54 PM
அடடே, நாம ராசியான பொண்ணூனு ஊருக்குள்ளே பேசுராங்களே, அது உண்மையோ!!!! நம்ப பின்னூட்டம் தொட்ட திரியெல்லாம் என்னமா துலங்குது, வெள்ளி விழாவையும் தாண்டி திருவிழாவிற்க்கே போச்சே

மாப்பு,
கும்மாபிஷேகம் வரை வந்தாச்சா!!!!!!!

ஷு ஷு ஐக்கோ இப்பவே கண்ண கட்டுதே!!!

ஆமா.. ஆமா.. இராசியான பொண்ணு தான். இல்லேன்னா பீர் அடிக்கிறதுல ஆரம்பிச்ச திரி கும்பாபிஷேகம், திருவிழான்னு போய் இப்ப வெட்டு, குத்து, இரத்தம் வரைக்கும் வந்து நிக்குமா..? இனி எத்தனை கொலை விழுமோ தெரியல..?! யார் சொன்னா உங்களை இராசியில்லாத பொண்ணுன்னு..?? ஆளை காட்டுங்க.. மலர், பூமகள்கிட்ட சொல்லி வீட்டுமேல பாம் வீசச்சொல்லிருவோம்..!!

ஓவியா
01-09-2007, 01:06 PM
நாந்தான் சொன்னேன், என்னாது பாம்மா!!! அப்ப என் வீட்டில் தான் போடனும்.......................அய்க்கோ இதான் சொந்த செலவில் ....... வச்சுகிறதா!!!

சிவா.ஜி
01-09-2007, 01:12 PM
நாந்தான் சொன்னேன், என்னாது பாம்மா!!! அப்ப என் வீட்டில் தான் போடனும்.......................அய்க்கோ இதான் சொந்த செலவில் ....... வச்சுகிறதா!!!

நீங்க எத்தன வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினீங்க....இப்ப உங்களுக்கே பாமா...இதைத்தான் காலத்தின் கொடுமைங்கறதா....அய்யகோ.....

ஓவியா
01-09-2007, 01:21 PM
ஆமாம் கத்தி எடுத்தவன், கத்தியில் கதி.

என்னைப்போல் ஆட்டோ கைகளுக்கு அன்பளிப்பை வீட்டின் மேல் விட்டேறியும் ஆட்டோதான்.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது!!!!!!

சிவா.ஜி
01-09-2007, 02:56 PM
ஆமாம் கத்தி எடுத்தவன், கத்தியில் கதி.

என்னைப்போல் ஆட்டோ கைகளுக்கு அன்பளிப்பை வீட்டின் மேல் விட்டேறியும் ஆட்டோதான்.

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது!!!!!!

இதை அப்படியே எம்.ஆர்.ராதா குரலில் ஓவியா பாடுவதைப்போல் கற்பனை செய்து பார்த்தால்.....:music-smiley-008:

ஓவியா
01-09-2007, 03:05 PM
கு'பீர்' என்று சிரிப்பு வரும்.