PDA

View Full Version : சர்க்கரை முத்தம்



சிவா.ஜி
24-05-2007, 10:06 AM
என் ஏழாவது காதலி
என் முத்தம் இனிப்பதாக சொல்கிறாள்
அது அவள் மேல் எனக்குள்ள அக்கறையால் அல்ல
என் ரத்தத்தில் உள்ள சக்கரையால் என்று தெரியாமல்!
அவளைப் பார்த்ததும் என் இதயம்
படபடப்பதை பெருமையாய் பார்க்கிறாள்
அது பாழாய் போன ப்ரஷரால் என்று புரியாமல்!

அமரன்
24-05-2007, 10:10 AM
சிரிப்புக் கவிதையா அல்லது சிந்தனைக் கவிதையா என்ற பிரமிப்பு என்னுள். நன்றி நண்பரே

அன்புரசிகன்
24-05-2007, 10:19 AM
நகைச்சுவையாயினும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
24-05-2007, 10:23 AM
உளமார்ந்த நன்றிகள். ஊக்கமூட்டுகிறது உங்கள் வார்த்தைகள்

shangaran
24-05-2007, 11:02 AM
படித்தேன்... ரசித்தேன்.

இதயம்
31-05-2007, 04:30 AM
நல்ல நகைச்சுவை + எதார்த்தத்தை சொல்லும் கவிதை இது. ஏழாவது காதலி என்று குறிப்பிட்டதின் காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாமா..?

ஆதவா
31-05-2007, 04:37 AM
மீதி ஆறு காதலிங்க யாருங்க???? ரொம்ப ஹாஸ்யமா இருக்கு கவிதை... தொடருங்கள்... பின்னாடியே சர்க்கரையாக வருகிறோம்.... இதுக்கே நூறு காசு கொடுக்கலாம்...

சிவா.ஜி
31-05-2007, 04:41 AM
நன்றி ஆதவா.மீதி ஆறா, ஒரு எதுகைக்கு எழுதினேனுங்கோ.நமக்கு ஒரே காதலிதான் அது என் மனைவி.