PDA

View Full Version : நோய் தாக்கியதால் கொல்ல உத்தரவு: இங்கிலாநĮ



சுட்டிபையன்
24-05-2007, 08:52 AM
நோய் தாக்கியதால் கொல்ல உத்தரவு: இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் காளை உயிரை காப்பாற்ற பக்தர்கள் போராட்டம்
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது.

இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனையில் சம்போவுக்கு `காசநோய்; தாக்கியதாக அறிக்கை கொடுத் திருக்கிறார்கள். அனு மட்டு மல்ல உடனடியாக இதை வெட்டி கொன்று விட வேண் டும். அப்போதுதான் மற்ற மாடுகளுக்கும் அந்த நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று அந்த துறை அதிகாரி கள் உத்தரவு போட்டு இருக் கிறார்கள்.

பக்தர்களையும் பூசாரிகளை யும் இது அதிர்ச்சிக்குள்ளாக் கியது. மருத்துவ பரிசோதனை அறிக்கை சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அப்படியே இருந்தாலும் சரி யான சிகிச்சை அளித்தால் சம்போவை காப்பாற்றி விட லாம் என்கிறார்கள் பக்தர்கள். சம்போவை ஒருநாளும் கொல்ல விட மாட்டோம் என்றும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள் பக்தர்கள்.

சுகாதாரத்துறையின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்து இருக்கிறார்கள். தற் போது அந்த கோவில் மாடு மற்ற மாடுகளிடம் இருந்து பிரித்து தனியாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.

அந்த கோவிலை சேர்ந்த ஒரு பூசாரி கூறும்போது, `இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராட்டம். தர்மம் நிச்சயம் வெல்லும். அதர்மத்தை கந்தவேல் வெல்லும் என்று கூறியுள்ளார். அந்த கோவில் மாட்டின் உயிரை காப்பாற்ற பக்தர்கள் தினமும் அங்கு வந்து அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள். காயத்திரி மந்திரங்களை பாடுகிறார்கள். தினமும் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து செல்கிறார்கள்.இந்த விஷயத்தில் இந்திய அரசும் தலையிட்டு பக்தர்கள் மனதில் இடம் பிடித்த அந்த கோவில் காளையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

அந்த கோவில் காளையை காப்பாற்ற பக்தர்கள் `மோடிப்; என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை உரு வாக்கி உள்ளனர். சம்போவை கொல்லாதீர்கள் என்று உலகம் முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் இணைய தளம் மூலம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
விடுப்பு