PDA

View Full Version : காற்றுவிடுதூதுசிவா.ஜி
24-05-2007, 07:30 AM
காற்றே சற்றே நில்
எனக்காக ஒரு முறை என் ஊருக்கு செல்!
வாடிய முகத்தோடு
விழியில் தேங்கிய நீர்
வழியாதிருக்க இமை அணையில் இருத்தி,
அமர்ந்திருப்பாள் வாசலில் ஒருத்தி!
எட்ட இருந்து என் பேர் சொல்,
அவள் விழிகள் ஆனந்தத்தில் விரியும்
அவள் என்னவள் என்பது புரியும்!
நீயே நானாய் மாறி அவளை அணைத்து
நீயே நுழைய முடியாவண்ணம் பிணைத்து
என்னை உணர வை!
ஒரு கணமேனும் அவளை மலர வை!
வரும்போது அவள் வாசத்தை வாங்கி வா
இங்கிருக்கும் காலம் வரை
என் இதயம் இயங்க
அவள் வாசமே என் சுவாசம்!

அமரன்
24-05-2007, 07:43 AM
மனைவியைப் பிரிந்து வாடும் ஒருத்தன் காற்றையே தனது உருவக தோற்றமாக்கி அனுப்பும் விதத்தில் அமைந்த கவிதைக்கு நன்றி.

சிவா.ஜி
24-05-2007, 10:33 AM
மிக்க நன்றி அமரன். தமிழ்மன்றத்தில் என் முதல் கவிதைக்கு முதல் பதில் தந்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்

வெற்றி
24-05-2007, 10:36 AM
ஓ அப்படியா??? இப்போது தான் புரிகிறது ...காதலில் தோற்றவர்கள் இதனால் தான் புகையை காற்றில் கலந்து விடுகிறார்களா??
கருப்புக்காற்று

சிவா.ஜி
24-05-2007, 10:39 AM
நன்பர் மொக்கசாமி அவர்களே அந்த நிக்கோடின் புகையில் மனைவியின் வாசம் திரும்பி வராது விசும்பல் சத்தம்தான் வரும்

வெற்றி
24-05-2007, 10:46 AM
நன்பர் மொக்கசாமி அவர்களே அந்த நிக்கோடின் புகையில் மனைவியின் வாசம் திரும்பி வராது விசும்பல் சத்தம்தான் வரும்

ஆஹா அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை...
என்னால் அந்த கவிதையை புரிந்து கொள்ள முடிந்தது...
நான் கூட ஆடி மாதத்தில் அது போல் ஒரு நிலையில் இருந்து இருக்கிறேன்...அதன் பிறகு (ஆடி முடிந்தவுடன்) இயல்பு நிலைக்கு வந்து விட்டேன்..அதன் பிறகு பல ஆடி வந்து விட்டது...ஆனால் இது போல் கவிதை பாட எனக்கு வாய்ப்பு வரவே இல்லை...(ஊருக்கு போவதே இல்லை)

சிவா.ஜி
24-05-2007, 11:11 AM
கொடுத்துவைத்த ஆத்மா....

வெற்றி
24-05-2007, 11:17 AM
கொடுத்துவைத்த ஆத்மா....

அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜ் சொல்லுவாரே...
அதன் அர்த்தம் உங்களுக்கு விரைவில் புரிய வாழ்த்துகிறேன்...

ஓவியா
09-08-2007, 04:29 AM
அருமையான கவிதை.

ஏக்கங்கள் பெண்களுக்கு மட்டும் உள்ளது, அது ஏறிக்கரையில் விளந்த நாண*ல் போல் காண்பவர் கண்களுக்கேள்ளாம் தெறியும் என்று பல கவிஞர்கள் சொல்லி மறைந்துள்ளனர்,

ஆனால் ஒரு ஆணின் ஏக்கம் குடதிற்க்குள் வைத்த ஒளிபோல் நிலத்தில் படாமலே மறைகின்றன, அதற்காக* ஒளி இல்லை என்று கூற முடியாது அல்லவா!!!

என்னவள் எங்கோ இருக்கின்றாள், எண்ணியவளை கண்டு ரசிப்போம் என்று எண்ணாமலிருக்கும் அனைத்து ஆண்களுக்கும் என் நன்றிகள்.

கவிதையை ரசித்தேன். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
09-08-2007, 04:42 AM
நன்றி ஓவியா,எங்கோ புதைந்திருந்த என் முதல் கவிதையை தேடிப்படித்ததற்கு.வார்த்தைக்கு சொல்லவில்லை உண்மையாகவே என் சுவாசம் என்னவள்தான்.

ஓவியா
09-08-2007, 04:51 AM
சிவாஜி சாரே, நான் இன்னும் உங்க திரி பக்கமே வரலே!!! இப்பதான் ஆரம்பாம், இனி நேரங்கிடைக்கும் பொழுதெல்லாம் அந்தப்பக்கம் வாறேன்.

உங்கள் காதல் (மனைவியின்) என்றும் வற்றாத கடல் போல் பெருகி, நீங்கள் இருவரும் அதில் ஆனந்த முத்தெடுக்க எனது வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
09-08-2007, 04:55 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி ஓவியா.உங்கள் வாழ்த்து எங்களை உற்சாகப்படுத்துகிறது.

ஷீ-நிசி
09-08-2007, 05:52 AM
காத்திருக்கும் மனைவிக்கு
காற்றில் தன் வாசத்தினை அனுப்பி,
மறக்காமல் வரும்போது அவளின் வாசத்தினை வாங்கி வா...

ஆயிரம் கன்னியர்களை என் கண்கள் கண்டாலும்..
என் கன்னியவளின் வாசத்திற்கு ஈடேது காற்றே!

அவளின் வாசம் என் சுவாசத்தில் கலக்கட்டும்...
கலங்கியிருக்கும் என் கண்களில்
கண்ணீர் துளிகள் விலகட்டும்....

உணர்வுபூர்வமான கவி! வாழ்த்துக்கள் சிவா....

சிவா.ஜி
09-08-2007, 06:25 AM
அழகான பின்னுட்டம் ஷீ−நிசி. காதல் கவிதை இளவரசன் ஷீயின் ரசிப்புத்தன்மையே அழகு. மிக்க நன்றி ஷீ.

தளபதி
09-08-2007, 06:43 AM
கொஞ்ச நாள் பொறு தலைவா!!
உனக்கு விடுமுறை வந்துவிடும்.
வீட்டுக்குப் போகலாம்!!
காத்திருப்பவளின் கண்ணில்
சந்தொசம் பார்த்திடலாம்.
பிரிவின் வலி
எல்லோருக்கும் பொது.
ஆறுதலின் சுகம்
எல்லோருக்கும் இதம்.
இங்கிருக்கும் வரை
நாங்கள் இருக்கிறோம்
ஆறுதலுக்கு!!!

சிவா.ஜி
09-08-2007, 06:48 AM
உங்கள் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி குமரன்.

இனியவள்
09-08-2007, 06:12 PM
காற்றைத் தூதாய் அனுப்பி
தன் அன்பை தெரிவிக்கக்
கூறும் கவிதை அருமை
சிவா வாழ்த்துக்கள்

ஓவியா
09-08-2007, 06:15 PM
காற்றைத் தூதாய் அனுப்பி
தன் அன்பை தெரிவிக்கக்
கூறும் கவிதை அருமை
சிவா வாழ்த்துக்கள்

காற்று தூதாக போகிறது, ஆனால் அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் இசையாய் அவன் காதலை பொழிகிறது. :whistling:

இனியவள்
09-08-2007, 06:18 PM
காற்று தூதாக போகிறது, ஆனால் அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் இசையாய் அவன் காதலை பொழிகிறது. :whistling:

இசை நாங்கள் சொல்ல
முடியாதவைகளைக் கூட
சொல்லிவிடுமே தோழி

காற்றில் கூட இசை
கலந்திருக்கின்றது :whistling:

ஓவியா
09-08-2007, 06:20 PM
அட ஆமாங்க, காற்றில் இசை கலந்துல்லது அது சுவாசத்தில் உர் உர் உர் என்று அவன் காதலை உள் நுளைந்து அவளிடம் சொல்லிவிடும் என்றுதான் நானும் சொல்லியுள்ளேன். !!!!

kalaianpan
09-08-2007, 06:39 PM
காற்றே சற்றே நில்
எனக்காக ஒரு முறை என் ஊருக்கு செல்!
வாடிய முகத்தோடு
விழியில் தேங்கிய நீர்
வழியாதிருக்க இமை அணையில் இருத்தி,
அமர்ந்திருப்பாள் வாசலில் ஒருத்தி!
எட்ட இருந்து என் பேர் சொல்,
அவள் விழிகள் ஆனந்தத்தில் விரியும்
அவள் என்னவள் என்பது புரியும்!
நீயே நானாய் மாறி அவளை அணைத்து
நீயே நுழைய முடியாவண்ணம் பிணைத்து
என்னை உணர வை!ஒரு கணமேனும் அவளை மலர வை!
வரும்போது அவள் வாசத்தை வாங்கி வாஇங்கிருக்கும் காலம் வரை
என் இதயம் இயங்க
அவள் வாசமே என் சுவாசம்!


தொலைவில் பிரிந்து உள்ள காத*ல*ர்க*ளுக்கு இதை ச*ம*ர்பிக்கலாமே!!!!
(அனேகமான ந*மது உறவுக*ள் இப்படிதான் தூர*த்தில் இருக்கின்ற*ன.....)
:frown: :frown:

சிவா.ஜி
11-08-2007, 05:07 AM
மிக்க நன்றி கலையன்பன்.உண்மைதான் நீங்கள் சொல்வது இங்குள்ள அநேக உறவுகள் பிரிவில் சோகம் சுமப்பவைதான். இந்த வரிகள் அப்படிப்பட்ட காதல் உள்ளங்களுக்காக....

குந்தவை
11-08-2007, 05:19 AM
அழகான கவிதை அண்ணா....

அண்ணி கொடுத்துவைத்தவர்...

சிவா.ஜி
11-08-2007, 05:29 AM
மனம் நிறைந்த நன்றி சகோதரி.அண்ணி கொடுத்து வைத்தவரோ இல்லையோ என்னை அவரிடம்தான் கொடுத்துவைத்திருக்கிறேன்.

பூமகள்
01-09-2007, 03:35 PM
வரும்போது அவள் வாசத்தை வாங்கி வா
இங்கிருக்கும் காலம் வரை
என் இதயம் இயங்க
அவள் வாசமே என் சுவாசம்!

காற்றைத் தூதனுப்பி வாசத்தை வாங்கிவரச் சொல்லி அதைச் சுவாசமாக்கும் உங்களின் காற்றொளிச்சேர்க்கைக் கற்பனை அருமை.:icon_good:
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....!!
தொடர்ந்து அசத்துங்க சிவா அண்ணா.:icon_give_rose:

சாராகுமார்
01-09-2007, 04:19 PM
வளைகுடா நாடுகளில் தவிக்கும் ஆத்மாவின் பரிதவிப்பு இந்த காற்று விடும் தூது.அருமை நண்பா.

சிவா.ஜி
02-09-2007, 04:26 AM
காற்றைத் தூதனுப்பி வாசத்தை வாங்கிவரச் சொல்லி அதைச் சுவாசமாக்கும் உங்களின் காற்றொளிச்சேர்க்கைக் கற்பனை அருமை.:icon_good:
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....!!
தொடர்ந்து அசத்துங்க சிவா அண்ணா.:icon_give_rose:

நன்றி சகோதரி.....பழம்பரணிலிருந்து இந்த கவிதையை வெளிக்கொணர்ந்து வாசித்ததற்கும்...பின்னூட்டத்திற்கும்.

சிவா.ஜி
02-09-2007, 04:27 AM
வளைகுடா நாடுகளில் தவிக்கும் ஆத்மாவின் பரிதவிப்பு இந்த காற்று விடும் தூது.அருமை நண்பா.

நல்ல புரிதலுடன் கூடிய உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சாராகுமார்.

lolluvathiyar
03-09-2007, 03:58 PM
புறாவை தூது அனுப்பினான் − பலர்
அன்னபறவை தூது அனுப்பினான் − தமயந்தி
குரங்கை தூது அனுப்பினான் − ராமன்
இன்று காற்றை அனுப்பினான் − சிவா ஜி
ஆனால் யாரும் மனிதனை அனுப்பவில்லை
மனிதனை மீது அந்தஅளவுக்கு நம்பிக்கை

உங்கள் கவிதை அருமை சிவா ஜி
பாத்துங்க காத்து தென்றலாய் போய்
புஇயலாய் திரும்பி வந்துர போகுது

சிவா.ஜி
04-09-2007, 04:12 AM
வீட்டுக்குள்ளேயே மையம் கொண்டிருக்கும் சூறாவளியையே சமாளிக்கும் எனக்கு இந்த புயலெல்லாம் ஜுஜூபி வாத்தியாரே.பாராட்டுக்கு நன்றி.

இலக்கியன்
04-09-2007, 07:41 AM
காதல் மனைவியின் பிரிவினால் வாடும் உள்ளத்தின் குமுறல் கவிதையில் தந்தீர் வாழ்த்துக்கள்

பென்ஸ்
04-09-2007, 10:22 AM
நல்ல கவிதை சிவா....
இயலாமையின் வேளிப்பாடு, கவிதையாய்...

காதலில் கொடுமை இதுதான்...
என்னவள் துயரத்தில்தான் இருப்பாள் என்பதை அறிந்து அவளுக்காய் காற்றை தூது விட்டு, ஒரு நிமிடம் அந்த காற்றாய் மாறி அவளில் கலந்து, மூச்சாய் அவளில் பயணித்து....
என்ன ஒரு சுகமான வலி...

காதல் அல்லவா... இப்படிதான் ...

ஆனாலும் களவு செய்யவும், காதல் செய்யவும் யாரையும் துனைக்கு அழைக்க கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க....

சிவா.ஜி
04-09-2007, 10:32 AM
மிக்க நன்றி பென்ஸ்.உங்களின் பின்னூட்டங்களைப்பற்றி இளசு அடிக்கடி குறிப்பிடுவார்.சமீப காலங்களில் உங்களின் வேலைபளுவாலோ என்னவோ அதிக பின்னூட்டங்கள் வருவதில்லை.இன்று இந்த அருமையான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.களவுக்கும்,காதலுக்கும் துணைக்கு யாரும் இருக்கக்கூடாதுதான்....,ஆனா நாம விவரமானவங்களாச்சே அதான் தூதுக்கு மட்டும் உபயோகிக்கிறோம்...!!

மன்மதன்
04-09-2007, 12:22 PM
காதலன்
காதலிக்கு
காற்றை
தூது அனுப்ப
திரும்பிய
காற்றில்
ஈரம் இருந்தது..
காதல் இருந்தது..

தொடர்ந்து எழுதுங்க சிவா.ஜி...

சிவா.ஜி
04-09-2007, 12:24 PM
ஆஹா...நான் அனுப்பிய காற்று கொண்டுவந்தது வாசம் மட்டுமே...மன்மதனின் காற்று....காதல் ஈரத்தையுமல்லவா சுமந்து வந்துள்ளது.
உங்களின் ஊக்குவிப்பில் தொடர்கிறேன் மன்மதன்.மிக்க நன்றி.

அக்னி
06-09-2007, 10:11 AM
ஓ..!
இதுதான் சிவா.ஜி யின் முதற்கவிதையா மன்றத்தில்...

தூதனுப்பிய காற்று,
திரும்பி வந்தது...
அவள் வாசம் தாங்கி வந்தது...
ஆனால்,
என் பிரிவு தந்த கண்ணீரை,
என்னை புத்துணர்வாக்கும்,
சாரலாக
கூடவே அனுப்பியிருந்தாள்...
அந்த ஈரப்பதன்...
எம் பந்தத்தின் சாரத்தை,
சொல்லி நிற்க...
நான் சிலிர்த்தேன்,
என் பாதத்தில்,
என் கண்ணீர்பட்டதால்...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

ஓவியன்
07-09-2007, 05:38 AM
அன்பான சிவா!
தமிழ் மன்றில் உங்கள் முதல் கவிக் குழந்தைக்கு பின்னூட்டம் இடாமலேயே இருந்து விட்டேனே..........!
மன்னிக்க என் தவறை..............!

காற்றினைத் தூதாக்கி
மனைவியிடமிருந்து
வாசத்தை எடுத்து வா
என் சுவாசத்திற்காக........

என்று வந்த சிவாவின் வரிகள் வாசமாக, இனிய தென்றலாக மனதை வருடுகிறது.....
பாராட்டுக்கள் சிவா!.

ஓவியன்
07-09-2007, 05:41 AM
காதலன்
காதலிக்கு
காற்றை
தூது அனுப்ப
திரும்பிய
காற்றில்
ஈரம் இருந்தது..
காதல் இருந்தது.....

அசத்தல்.........:)
இப்போதெல்லாம் உங்கள் கவிதைகளை இங்கே பதிப்பதேயில்லையே........
பழைய பதிப்புக்கள் மாத்திரமே சொல்லி நிற்கின்றன உங்கள் கவியாற்றலை....

புதியபடைப்புக்களை புதியவர்களுக்காக தொடரலாமே........?

சிவா.ஜி
07-09-2007, 06:32 AM
ஓ..!
இதுதான் சிவா.ஜி யின் முதற்கவிதையா மன்றத்தில்...

தூதனுப்பிய காற்று,
திரும்பி வந்தது...
அவள் வாசம் தாங்கி வந்தது...
ஆனால்,
என் பிரிவு தந்த கண்ணீரை,
என்னை புத்துணர்வாக்கும்,
சாரலாக
கூடவே அனுப்பியிருந்தாள்...
அந்த ஈரப்பதன்...
எம் பந்தத்தின் சாரத்தை,
சொல்லி நிற்க...
நான் சிலிர்த்தேன்,
என் பாதத்தில்,
என் கண்ணீர்பட்டதால்...

மிக அருமையான பதில் கவிதை அக்னி.இது நான் மன்றம் வந்த புதிதில் பதித்தது.உங்கள் அழகான பின்னூட்டத்தால் இன்னும் பொலிவு பெறுகிறது.மிக்க நன்றி.

சிவா.ஜி
07-09-2007, 06:35 AM
அன்பான சிவா!
தமிழ் மன்றில் உங்கள் முதல் கவிக் குழந்தைக்கு பின்னூட்டம் இடாமலேயே இருந்து விட்டேனே..........!
மன்னிக்க என் தவறை..............!

இதில் தவறென்ன ஓவியரே..உங்களின் பழைய கவிதைகள் பலவற்றை நான் இன்னும் பார்க்கக் கூட இல்லையே.சமயம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாய் சுவைக்கிறேன்.உங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ஓவியன்.

இளசு
08-09-2007, 01:53 PM
தென்றலைத் தூதுவிட்டவர் ஏராளம்..

ஆடை தொட்டதா என் ஆளைத் தொட்டதா என ஊடவும்
அவர் இருக்க, இடையில் நீ வர இயலாது எனக் கூடவும்
பட்டத்து ராணியையும் ராஜா இருக்கையிலேயே தழுவும் என வம்பிழுக்கவும் ( திருவிளையாடல் பாடல்)
மனைவி கட்டில் வர தாமதமானால், விரைந்தணைக்கும் சக்களத்தி என
சண்டை போடவும் ( பாரதிதாசன் கவிதை)...

எத்தனை எத்தனை பாத்திரங்கள் காற்றுக்கு!

இங்கே சிவாவும், மன்மதனும், நண்பர்களும்
இந்த நூற்றாண்டுக் காற்றுக்காய் வடித்தவைகள்..
அழகியலும் நிகழ்வியலும் கலந்து வீசுகின்றன..

பாராட்டுகள்!

சிவா.ஜி
08-09-2007, 02:29 PM
ஆஹா..இளசு ஒரு இலக்கியத்தேன் குடத்தையே என்மேல் கவிழ்த்ததுபோல உணர்ந்தேன் உங்கள் பின்னூட்டம் படித்து.திரும்பத்திரும்ப வாசித்தேன்..ரசித்தேன்.இறைக்க இறைக்க சுரக்கும் இலக்கிய ஊற்று உங்களிடம் உள்ளது...அதை வெளிக்கொணரவாவது.....தரமுள்ள பல படைப்புகளை தரவேண்டுமென்று ஆவலாக இருக்கிறது.நன்றி இளசு.