PDA

View Full Version : மணல்வாசம்



சிவா.ஜி
24-05-2007, 07:22 AM
என் பாலைவனப்பயனத்தில் ஒரு நாள்
மல்லிகைச் செடியைக்கண்டேன்
மல்லிகையும் பூத்திருந்தது!
முகர்ந்தேன் மணல் வாசம்
அதைச்சொல்லிக்குற்றமில்லை
நீருண்டு வாழ்ந்திருந்தால்
நீர் வாசம் வீசும்,இது
மணலுண்டு வாழ்ந்ததால்
மணல் வாசம் வீசுகிறது!
ஊரிலும் இதை உணர்ந்தேன்!
உண்ணும் உணவிலும்
உடுக்கும் உடையிலும்
மனைவியின் அனைப்பிலும்
மகளின் முத்தத்திலும்
ஆக மொத்தத்திலும் மணல் வாசம்!
மீன் விற்ற காசு நாறுகிறதோ இல்லயோ
மணல் தேசக்காசு மணல் வாசம் வீசுகிறது!
மனைவியிடம் சொன்னேன்
அதற்கு மறுமொழி சொன்னாள்,
'உங்களுக்கு வீசுவது மணல் வாசம் ஆனால்
உங்களிடம் வீசுவது பண வாசம்.....
வேறு வேலையைப்பாருங்கள்,
இன்னும் இருப்பது ஒரு மாசம்!'

அமரன்
24-05-2007, 07:29 AM
இது நிதர்சன உண்மை. கடல் கடந்து திரவியம் தேடுவது என்பது நமது முன்னோர் காலத்திலிருந்து நடந்து வருகின்றது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுக்கான காரணம் வேறுபடுகின்றது. நாட்டின் சூழ்நிலையால் பலரும் வீட்டின் சூழ்நிலையால் பலரும் என இது தொடர்கின்றது. பராசக்தியில் கலைஞர் வசனம் எழுதியிருப்பார். பிறக்க ஒரு ஊர். பிழைக்க இரு ஊர் எனபது விதி என்று. என்னைப் போன்றவர்களின் மன ஆதங்கத்தைக் கவிதையாக வடித்த உங்களுக்கு எனது நன்றி.

ஆதவா
29-05-2007, 05:03 AM
இந்த கவிதை ஏன் பார்வையிடாமல் கிடக்கிறது?... எவ்வளவு இனிமையான ஆழமான கவிதை.!!!

வேற்று நாட்டில் வாழ்பவர் வலிகள்>.. இது பொதுவாக எடுத்துக் கொள்ளலாம்.. எந்த நாட்டினரும் படித்தாலும்.

உருவங்கள் அருமை. உண்மை.

வலிகளை அடக்க முடியாது என்பது கவிதையின் வெளிப்பாட்டில் தெரிந்துகொண்டேன்.. வாழ்த்துக்கள்... சிவா.ஜி

மற்றைய கவிதைகளை இரவுக்கு படித்து பின்னூட்ட மிடுகிறேன்.

சிவா.ஜி
29-05-2007, 05:17 AM
மிக்க நன்றி அமரன் ஆதவா.

கோபி
29-05-2007, 01:32 PM
அருமையான கவிதை சிவா... அயல்நாட்டில் குடும்பத்தினரை விட்டு வசிக்கும் என் போன்றோர் நிலையை விளக்கும் கவிதை.... பாராட்டுக்கள் சிவா...

சிவா.ஜி
29-05-2007, 01:38 PM
மிக்க நன்றி கோபி. முதன்முறையாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.