PDA

View Full Version : "காதல்னா....?" பிரபலங்களின் பரபரப்பு பேட்டி...



சக்தி
23-05-2007, 01:39 PM
"காதல்னா....?" பிரபலங்களின் பரபரப்பு பேட்டி...
"காதல்னா....?" என்ற ஹைதர் காலத்து கேள்வியை நமது கோடம்பாக்கத்து பிரபலங்களிடம் கேட்டோம்....

நகரம் பரபரப்பாக ஆரம்பிக்கும் காலை பொழுது, நாம் ரஜினி வீட்டில் ஆஜர். வரவேற்பரையில் காத்திருக்கிறோம், ரஜினி "ஜி"யிடம் ( பாபாவிற்குப்பிறகு ரஜினி 'பாபாஜி'யை இப்படித்தான் அழைக்கிறாராம் ) பிரார்த்தனை பண்ணிகொண்டிருப்பதாக சொன்னார்கள். தனக்கேயுரிய ஏற்ற இறக்கங்களுடன் சொல்கிறார்...

"நல்லா கேட்டீங்க...
நச்சுன்னு கேட்டீங்க...
சூப்பரா கேட்டீங்க...

கண்ணா....

காதல்ங்கறது நதி நீர் இணைப்பு மாதிரி....
இழுக்கவும் முடியாது...
முடிக்கவும் முடியாது...
அப்பறம் ஏண்டா ஆரம்பிச்சோம்னு இருக்கும்.

நான் சொல்றத சொல்லிட்டேன்...
இல்ல நான் காதலிச்சே தீருவேன்னா...
என் பாக்கெட்லேர்ந்து ஒரு வெத்து பேப்பர் எடுத்து கொடுக்குறேன்...
லவ் லெட்டர் எழுதி டெவலப் பண்ணிக்கோ.

இது எப்படி இருக்கு?... ஹாஹா ஹ..___________________________________________________________________________________________________________

ஆரவரமில்லாத கமல் வீடு. கேள்வியை முன் வைத்ததும் காரணமின்றி சிறிது நேரம் நம்மை முறைக்கிறார். பிறகு சிரித்தவாரே சொன்னது இங்கே...

".... ம், காதல்ங்கறது புரிந்த புதிர்... ம்.. இப்படி சொல்லலாம். புரியாததற்கு பெயர்தான் புதிர் என்பது நம் அனைவருக்குமே புரிந்ததுதான், ஆனால் இது புரிந்த புதிர், அதாவது புதிர் என்பதே புரியாததுதான் என்று புரிந்த புதிர். நான் இன்னொன்றும் சொல்வேன்...
[இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாத நமது நிருபர் தெறித்து ஓடுகிறார்]
_______________________________________________________________________________________________________________

கட்சி தொடங்கும் பரபரப்பில் இருக்கும் விஜயகாந்தை தொடர்பு கொண்டோம். "நானே பிரஸ் மீட்டுக்கு ஏதாவது காரணம் கெடைக்காதான்னு இருந்தேன்.. சரி சரி மத்த பேப்பர்காரங்களையும் கூட்டிக்கிட்டு ஆண்டாள் அழகர் மண்டபத்திற்கு வந்திடுங்க." என்றார்.

மாலை 4 மணி, நிருபர்கள் புடைசூழ நின்றிருந்த விஜயகாந்திடம் கேட்டே விட்டோம். முன்பே தயாராக வந்தவராக எடுத்து விட்டார்..
"தமிழ் நாட்டுல மொத்தம் 63426 பேர் காதலிக்கிறாங்க, அதுல 31713 பேர் ஆண்கள், அதே 31713 பேர் பெண்கள் (!!??). நான் இவங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன், நான் புதுசா ஆரம்பிக்கப்போற கட்சியில 'காதலர் அணி' இருக்கு அதுல வந்து சேர்ந்துடுங்க... பிரச்சனய பெரிசாக்கி அப்புறம் சுமுகமா தீர்த்து வச்சிடறேன்...."________________________________________________________________________________________________________________

நம்ம விஜய டி.ராஜேந்தரின் பதிலில்லாத ஒரு பேட்டியா? தி.நகரிலிருக்கும் அவரது வீட்டில் போய் நின்றோம். எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கும் அவர் தனது வழக்கமான பாணியில் கூறியது..

"ஏய்.... நான் சொல்றேன்டா...
காதலிங்கறவ, கண்ணாடி மாதிரி..
கண்ணுக்கு வெளியில வெச்சு பாதுகாக்கணும்....
ஆனா, மனைவிங்கறவ, காண்டாக்ட் லென்சு மாதிரி
கண்ணுக்குள்ள வெச்சு பாதுகாக்கணும்."

(திடீரென்று சோகமானவராக...)
ஏய், நானும் காதலிச்சவந்தான்டா...
ஆனா, கடைசியிலதான் தெரிஞ்சிச்சு....
கண்ணாடி எப்பவும் காண்டாக்ட் லென்சு ஆவாதுன்னு...

(திடீரென்று உச்சஸ்தாதியில் பாட ஆரம்பிக்கிறார்...)
"அட பொன்னான மனசே பூவான மனசே...
வக்காத பொண்ணு மேல ஆச...
அட வக்காத பொண்ணு மேல ஆச...
........
நீ ஆச வச்ச பச்சகிளியோ.....
(நாம் இடத்தை காலி செய்த பிறகும் அவரது குரல் தூரத்தில் கேட்டுக்கொண்டே இருந்தது)
________________________________________________________________________________________________________________

அந்நியன் விக்ரமிடம் பேட்டி வாங்க ஆசைதான் ஆனால் அவர் இன்னும் எம்பிடி(MPD)யிலிருந்து மீண்டாரா என ஒருபுறம் பயமாகவேயிருந்தது. அதனால், அவரை பின் தொடர்ந்து நோட்டமிட முடிவு செய்தோம். என்ன ஆச்சர்யம் அவர் இன்னும் விடுபடவேயில்லை!

அம்பியாக : காதல் தோல்வியை தாங்க முடியாத அம்பி விறு விறுவென வீட்டிற்கில் நுழைந்து தண்ணீரை மொண்டு குளித்துக்கொண்டே புலம்புகிறார்..

"ஏன் தான் இந்த பொண்ணுங்கள்லாம் இப்படி பண்றாளோ தெரியல..
பேசும் போது நன்னா அம்பி அம்பின்னு வழியறா...
காதல்ன்னு நெனச்சு சொன்னாக்க அண்ணான்றா...
இவாளுக்கெல்லாம் என்ன தண்டனயோ தெரியல..."

(தூள் சொர்ணாக்கா ஸ்டைலில் ஒரு குரல்..)
"எவன்டா அவன், நான் கஷ்டப்பட்டு தண்ணி லாரில புடிச்ச தண்ணிய மோண்டு மோண்டு குளிக்கறது..."

"அய்யய்யோ பார்த்துட்டேளா......!!" - அம்பி எஸ்கேப்

ரெமோவாக: லேட்டஸ்ட் பைக்கில் ஸ்டைலாக வந்திறங்கிய ரெமோவிடம் நண்பன்..
"என்னடா ரெமோ ஒன்ன உன் ஆளு அண்ணான்னுட்டளாமே..."

"ஹாய் கைஸ்.. ஹவார்யூ மேன்...
டேய் காடல்ங்கறது (காதல்தான்) எக்ஸாம் மாதிரி யூ நோ.. எழுத பயப்படவும் கூடாது, பெயிலாயிட்டா வருத்தப்படவும் கூடாது... கே...!"

அந்நியனாக: இருள் கம்மும், ஆள் அரவமற்ற மெரீனா பீச்.... தனது டிரேட் மார்க் கெட்டப்புடன் அந்நியன் என்டராகிறான். ஒரு இளம் காதல் ஜோடியிடம் ஸ்லோ மோஷனில் நெருங்கி.. காதலனது சட்டையப்பிடித்து கேட்கிறான்...

"டேய், காதலிச்சா தப்பா....?"

"தப்பில்லீங்க.."

"அஞ்சு பேர காதலிச்சா தப்பா....?"

"பெரிய தப்பில்லீங்க.."

"அட் எ டயத்துல அஞ்சு பேர காதலிச்சா தப்பா....?"

"ரொம்ப பெரிய தப்பில்லீங்க....."

(கோபமா, அழுகையா என வகைப்படுத்த முடியாததொரு குரலில்....)
"டேய், அதுல ஒண்ணு எ ஆளுடா......."

அடித்து துவைத்து கருட புராணத்தில் சொல்லப்பட்ட 'கல்யாண போஜனம்' தண்டனயை தந்துவிட்டு.... தனியே ஒஊ ஓஊஊ என தீம் ம்யூசிக்கை பாடிக்கொண்டே(!) இருட்டில் மறைகிறான்.

அமரன்
23-05-2007, 02:09 PM
மொத்தத்துல எல்லோர்ரது கருத்திலுமிருந்து ஒன்று மட்டும் புரியுது . காதல் விளங்க முடியாப் பரீட்சை.

ராஜா
23-05-2007, 02:40 PM
நல்லா இருக்குப்பு..!

அறிஞர்
23-05-2007, 02:49 PM
அருமை... இன்னும் மற்றவர்களையும் சேர்த்து பெரிய லிஸ்ட் கொடுங்கள்...

ஓவியா
23-05-2007, 02:55 PM
நல்ல கற்பனை. நன்றி.

ரசித்தேன். மகிழ்ந்தேன். சிரித்தேன்.

ஆதவா
23-05-2007, 03:53 PM
அய்யோ அய்யோ@@@ ஒரே அலம்பல்...

அக்னி
23-05-2007, 05:24 PM
காதல்னா...
இதுவா...???

விகடன்
30-05-2007, 05:49 AM
என்னங்க. காதலிற்கு ஆளால் ஒவ்வொன்றை சொல்லிக்கொண்டே இருக்கிறாங்க. இதற்கு "நியூட்டனின் விதி" மாதிரி ஏதாச்ச்சும் வரைவிலக்கணம் கண்டுபிடிக்கேலாதுங்களா.