PDA

View Full Version : எடக்கு-மடக்கு-பாட்டு



அமரன்
23-05-2007, 11:32 AM
இது ஒரு பாட்டுக்குப் பாட்டு வகையிலான நகைச்சுவை விளையாட்டு. இங்கே திரைஇசைப்பாடல்களின் இரு வரிகளைக் கூறி அதுக்கு பதிலடியாக நகைச்சுவையாக உங்கள் கறபனைக் காமென்டுகளை சொல்லுங்கள். உதாரணமாக,

ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம்

என்ற பாடல் வரியை ஒருவர் கொடுத்தால் அடுத்தவர்

அப்போ இரண்டு மணி அடித்தால் யார் ஞாபகம்
என்பது போன்ற எடக்கு முடக்கு பதிவைப் பதிய வேண்டும். இதோ முதலாவது பாடல்

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.

மதி
23-05-2007, 11:35 AM
உன்னை கண்டவுடன் அது பயந்துட்டு ஓடுது...

அக்னி
23-05-2007, 11:36 AM
அப்படியே அடுத்த பாடல் வரிகளையும் கொடுப்பது ஒரு ஒழுங்கில் இத்திரி செல்லவுதவும் என்று எண்ணுகின்றேன்....

மதி
23-05-2007, 11:37 AM
சரி..அக்னி..உங்க விருப்பப்படியே..

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா..??

சுட்டிபையன்
23-05-2007, 11:39 AM
அடடடா அமரேசா சூப்பர் திரி எங்கே விரைவில் ஆரம்பியுங்கள்

சுட்டிபையன்
23-05-2007, 11:40 AM
சரி..அக்னி..உங்க விருப்பப்படியே..

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா..??

அப்போ டெலிபோன் பல்ல இழிக்குதா.........?

அவள் வருவாளா, அவள் வருவாளா.......?

ஓவியா
23-05-2007, 11:43 AM
டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா..??

அப்ப டெலிபோன் மணி எப்படி அலரூம்? அஹ் அஹ அஹ அஹ கீ க்கீ கீன்னா?


குற்றம் புரிந்தவன் வழ்க்கையில் நிம்மதி கொள்வதேது!!!!

அமரன்
23-05-2007, 11:49 AM
குற்றம் புரிந்தவன் வழ்க்கையில் நிம்மதி கொள்வதேது!!!!
அப்போ நிம்மதியை நீ கொல்லு

அப்படிப்போடு போடு போடு