PDA

View Full Version : செந்நிறமாகும் வெள்ளை ரோஜா



ஓவியன்
23-05-2007, 10:14 AM
எனது நண்பன் ஒருவன் கூறிய ஒரு கருவைக் கொஞ்சம் இட்டுக் கட்டி எனது நடையில் இங்கே ஒரு சிறுகதையாகத் தருகிறேன்.

செந்நிறமாகும் வெள்ளை ரோஜா

ஒரு மலையடிவாரத்தின் தோட்டத்திலே ஒரு ரோஜாச் செடியிருந்தது, அந்த தோட்டத்திலேயே அது தான் ஒரே ஒரு ரோஜாச் செடி அதுவும் காஷ்மீரத்து உயர் வகையைச் சார்ந்த ஒரு வெள்ளை நிற ரோஜாச் செடி. அந்த தோட்டத்திலே "சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு" என்று ஒரு அழகான சிட்டுக் குருவியும் வசித்து வந்தது. நீண்ட நாட்களாகப் பூக்காமலிருந்த அந்தச் ரோஜாச் செடியை, இந்த சிட்டுக் குருவி ஒவ்வொரு நாளும் பக்கத்திலே இருந்த அருவியிலிருந்து தண்ணீரைச் துளித் துளியாக மொண்டு வந்து அதை ரோஜாச் செடிக்குப் பாய்ச்சி கண்ணும் கருத்துமாகப் பராமரித்துவந்தது.

சிட்டுக் குருவியின் பராமரிப்பிலே சிலிர்த்த செடி ஒரு பனிவிழும் காலைப் பொழுதில் ஒரு அழகான வெள்ளை நிற ரோஜா மலரை மலர்ந்துவந்தது. வழமை போன்று ரோஜாவைத் தரிசிக்க வந்த சிட்டுக் குருவி, வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற இதழ்களில் துளித் துளியாய் உருண்டோடும் பனித்துளிகளுடன் கண்ணைப் பறிக்கும் எழிலுடன் விளங்கிய புதிதாய் அலர்ந்த ரோஜா மலரினால் தன் மனதினை இழந்தது. கதிரவனைக் கண்ட சூரிய காந்தி போல் வெள்ளை ரோஜாவையே இமைகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் அந்த சின்னஞ்சிறு ஜீவன் இறுதியாகத் தன் மனதினை அந்த ரோஜா மலரிடம் இழந்ததை தெரிந்தும் கொண்டது.

அந்த மலையடிவாரத் தோட்டத்திலேயே தான் தான் ஒரே ஒரு ரோஜாவென்ற பெருமித்த்தில் கர்வம் தலைக்கேறி, மூளை முழுவதும் வியாபித்துக் கிட்டத்தட்ட பித்துப் பிடித்த நிலையில் அந்த வெள்ளை ரோஜா இருப்பது தெரியாமல் இந்த அப்பாவிச் சிட்டுக் குருவி தன் காதலை அந்த மலரிடம் சொல்லியும் விட்டது.

தன் காதலைச் சொன்ன சிட்டுக்குருவியை அந்த ரோஜா மலர் ஏற இறங்க ஏறிட்டது. அதற்கு என்ன இந்த சிட்டுக்குருவி என்னிடம் வந்து காதல் இரஞ்சுகிறது என்ற எண்ணத்தின்பால் விளைந்த ஏளனமும், அதன் நிமித்தம் தன் அழகுகினால் தலைக்குள் ஏறிய பெருமிதத்தாலும் திணறியது.


ஏளனமும் பெருமிதமும் கலந்த தொனியில் பேசத் தொடங்கிய ரோஜா மலர், சிட்டைப் பார்த்து "ஏலே சிட்டு நான் உன் காதலின் வலிமையை பரீசீலனை செய்ய வேண்டும், நீ அதற்கு தயாரா? என்று கேட்ட்து. இதனைக் கேட்ட பக்கத்திலே மலர்ந்திருந்த பாரிஜாத மலர் சிட்டுக் குருவிக்கு புத்தி சொல்ல முற்பட்டது, ஆனால் அதன் அறிவுரையைக் கேட்கும் நிலையை அறவே இழந்திருந்தது அந்த காதல் கொண்ட சிட்டு. ஏற்கனவே
"செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னைக் கொன்றது பார்வையிலே" என்ற ரேஞ்சிலே ஜேசி கிப்டாகவே மாறி "மொழி" படப் பாடலைப் பாடிக் கொண்டிருந்த சிட்டுக் குருவியும் மறு பேச்சின்றி ஆமாம் போட்டது.

அப்போது அந்த ரோஜா "என் வெள்ளை மேனியை இன்றைய சூரிய அஸ்தமனத்தினுள் செந்நிறமாக மாற்றினால் நான் உனது காதலை ஏற்றுக் கொள்வேன்" என்று மொழிந்தது. அந்தக் கோரிக்கையின் விளைவையோ ஆழத்தையோ அறியாத அந்த செல்லச் சிட்டு அப்படியே ஆகட்டும் என மொழிந்து அதற்கான வழியைத் தேடவும் முற்பட்டு உயரே, உயரே பறந்தது அந்த மொழிப் பாடலின் மீதி வரிகளை முணுமுணுத்த படி...
"வெட்கங்கள் கிள்ளி வைப்பேன்,
ஆனந்தம் அள்ளி வைப்பேன்,
ஐ-லவ் யூ சொல்ல வைப்பேன்." என்று.

ஏழு கடல் கடந்தும் ஏழு மலை பறந்தும் சிட்டுக் குருவியினால் சரியான வழிமுறை ஒன்றைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியாக தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் பொருட்டு தன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சோகமே உருவாக தன் மனை திரும்பியது. பல மலைகள், கடல்கள் கடந்த சோர்வு அந்த அப்பாவி ஜீவனின் சிறகுகளிலும் பிரதிபலித்து கிட்டத் தட்ட பறக்கும் வலிமையையே இழந்திருந்தது. அதன் கண்கள் ஒளி இழந்திருந்தன, வார்த்தைகள் வர மறுத்து அடித் தொண்டையிலேயே பஸ்மமாகின.

ஒருவாறு தன்னை ஒரு நிலைப் படுத்திய சிட்டு ரோஜா என்னால் உன் பரீட்சையில் நான் தோற்றுவிட்டேன், தோற்றுவிட்டேன் எனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று என்று உரைத்து முடிக்கையில் அது தன் பறக்கும் சக்தியை அறவே இழந்து தலை குப்புற கரணமடித்து முள் நிறைந்த அந்த ரோஜாச் செடி மேலே விழுந்தது

ரோஜாச் செடிமேல் விழுந்த சிட்டு ரோஜாவின் வலிய முற்களில் ஒன்றில் வசமாக மாட்டிக் கொண்டது, முள் துளைத்து மரத்திலே தொங்கிய சிட்டுக் குருவியின் குருதி துளித் துளியாக அந்த கொலைகார முள்ளின் நேர் கீழே இருந்த வெள்ளை ரோஜா மலரின் மேல் சிந்தியது.

தன் காதலுக்காக தன் உயிரையே கொடுக்கும் நிலைக்கு வந்த சிட்டுக் குருவியின் காதல் ரோஜா மலரின் கல்லிதயத்தையும் அசைத்தது. சிட்டுக் குருவியின் குருதியின் நிறத்தினால் செந்நிறமாகவே மாறிவிட்ட அந்த ரோஜா மலர் இப்போது அன்புச் சிட்டே என்னை விட்டுப் போய்விடாதே!, நான் உன் காதலை ஏற்கின்றேன் என்று கதறியது. ஆனால் ஏற்கனவே விண்ணுலகை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய சிட்டுக் குருவி ரோஜாவின் கதறலைச் செவி மடுக்கும் நிலையில் இல்லை.

தன் ஆணவத்தால் ஒரு அன்புள்ளத்தின் சாவிற்கு தானே காரணமாகிவிட்டமையாலும், அந்த அன்புள்ளத்தின் காதலை ஏற்க தவறி விட்டமையாலும் ரோஜாவின் கண்களின் கண்ணீர் அருவியாகியது. அந்த கண்ணீரும் சிட்டுக் குருவியின் குருதியும் ஒன்றோடொன்று கலந்து ரோஜா மலரிலிருந்து சிதறிக் கொண்டிருக்க அந்த மலையடிவாரத் தோட்டத்தின் அமைதியை ரோஜா மலரின் விசும்பல் சத்தம் குலைத்துக் கொண்டிருந்தது.

பி.கு - நம் வாழ்க்கையிலும் பலர் இப்படித்தான் வலிய வந்த வளமான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்புரசிகன்
23-05-2007, 10:48 AM
ரோஜாச் செடிமேல் விழுந்த சிட்டு ரோஜாவின் வலிய முற்களில் ஒன்றில் வசமாக மாட்டிக் கொண்டது, முள் துளைத்து மரத்திலே தொங்கிய சிட்டுக் குருவியின் குருதி துளித் துளியாக அந்த கொலைகார முள்ளின் நேர் கீழே இருந்த வெள்ளை ரோஜா மலரின் மேல் சிந்தியது.

தன் இரத்தத்தைக்கொடுத்து தன் காதலை வாழவைத்துவிட்டது அந்த சிட்டு.
நன்றாக அமைந்தது ஓவியரே:icon_good: . வாழ்த்துக்கள்.

ஓவியன்
23-05-2007, 11:06 AM
தன் இரத்தத்தைக்கொடுத்து தன் காதலை வாழவைத்துவிட்டது அந்த சிட்டு.
நன்றாக அமைந்தது ஓவியரே:icon_good: . வாழ்த்துக்கள்.

நன்றிகள் ரசிகரே!!

நண்பன் ஒருவன் ஒரு நாள் எனக்குச் சொன்ன சின்ன ஒரு கதையை இங்கே கொஞ்சம் பெரிதாக்கித் தந்தேன்.

இந்த மன்றில் இது என் முதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன்
23-05-2007, 11:20 AM
அருமை ஓவியன். வர்ணனையில் அசத்தி விட்டீர்கள். நம்மில் சிலரல்ல பலர் இதுபோலவே இருக்கின்றனர். நிதர்சன உண்மையை சிறுகதையாக தந்த உங்களுக்கு எனது அன்புப்பரிசு 50 இ-பணம்.

ஓவியன்
23-05-2007, 11:21 AM
அருமை ஓவியன். வர்ணனையில் அசத்தி விட்டீர்கள். நம்மில் சிலரல்ல பலர் இதுபோலவே இருக்கின்றனர். நிதர்சன உண்மையை சிறுகதையாக தந்த உங்களுக்கு எனது அன்புப்பரிசு 50 இ-பணம்.

நன்றிகள் அமரா!!

உங்கள் ஊக்கம் என்னை மேன் மேலும் உயர்த்தும்.

ஷீ-நிசி
23-05-2007, 11:30 AM
இந்தக் கரு மிக பழையது என்றாலும் (படம்: ஒரு தலை ராகம் பாருங்கள்) நீர் கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது ஓவியன்.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
23-05-2007, 11:41 AM
இந்தக் கரு மிக பழையது என்றாலும் (படம்: ஒரு தலை ராகம் பாருங்கள்) நீர் கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது ஓவியன்.. வாழ்த்துக்கள்!

உண்மை ஷீ!

இது என் கருவில்லை.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

அக்னி
23-05-2007, 12:09 PM
வர்ணனைகள் , கதை கொண்டு செல்லப்பட்ட பாங்கு என்பன சபாஷ் போட வைக்கின்றன. ஒரு கதாசிரியனின் வெற்றி தனது படைப்பின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதில் தான் உள்ளது. அந்த வகையில் உணர்வு கொள்ள வைத்த பாத்திரப் படைப்புக்கள்.

வாழ்த்துக்கள் ஓவியன்.
அன்புடன் 50 iCash.

ஓவியன்
23-05-2007, 12:23 PM
வர்ணனைகள் , கதை கொண்டு செல்லப்பட்ட பாங்கு என்பன சபாஷ் போட வைக்கின்றன. ஒரு கதாசிரியனின் வெற்றி தனது படைப்பின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதில் தான் உள்ளது. அந்த வகையில் உணர்வு கொள்ள வைத்த பாத்திரப் படைப்புக்கள்.

வாழ்த்துக்கள் ஓவியன்.
அன்புடன் 50 iCash.

நன்றிகள் அக்னி!

பென்ஸ்
25-05-2007, 03:11 PM
ஓவியனுக்கு என்னுடைய பாராட்டு எப்பவும் இருக்கு....
கதை நல்லாயிருக்கு என்று பொய் சொல்ல விரும்பவில்லை...
ஆனால், முயற்சி நன்றயிருக்கு...

ஓவியனே...
காதல் புனிதமானதுதான், ஆனால் யதார்தமானதாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். இது கூட காதல் எனக்கு கற்று கொடுத்த பாடமாக இருக்கலாம்.
எதுவும் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பவன் நான்...
இதை மீறும் போது எதாவது ஒன்றை இழந்து மற்றதை பெறவேண்டி வரும்...
சிலர் குடும்பத்தை இழந்து காதலியை பெறுவது போல... இந்த பறவை உயிரை இழந்து காதலை பெற்றுள்ளது... பிரயோஜனம் இருக்காது ... :-)

முடியுமானால், ஆஸ்கர் ஒயில்ட் எழுதிய "The Nightingale and the Rose (http://www.online-literature.com/wilde/178/)" என்ற சிறு கதையை படித்து பார், கதை இதே போன்றுதான் இருக்கும்... ஆனால் அருமையாக இருக்கும்...

ஓவியன்
26-05-2007, 09:42 AM
ஓவியனுக்கு என்னுடைய பாராட்டு எப்பவும் இருக்கு.... ...நன்றிகள் அண்ணா! - இந்த வாழ்த்துக்கள் என்றும் என்னை உயர்த்தும்.
கதை நல்லாயிருக்கு என்று பொய் சொல்ல விரும்பவில்லை...
ஆனால், முயற்சி நன்றயிருக்கு...

ஓவியனே...
காதல் புனிதமானதுதான், ஆனால் யதார்தமானதாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். இது கூட காதல் எனக்கு கற்று கொடுத்த பாடமாக இருக்கலாம்.
எதுவும் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பவன் நான்...
இதை மீறும் போது எதாவது ஒன்றை இழந்து மற்றதை பெறவேண்டி வரும்...
சிலர் குடும்பத்தை இழந்து காதலியை பெறுவது போல... இந்த பறவை உயிரை இழந்து காதலை பெற்றுள்ளது... பிரயோஜனம் இருக்காது ... :-)

முடியுமானால், ஆஸ்கர் ஒயில்ட் எழுதிய "The Nightingale and the Rose (http://www.online-literature.com/wilde/178/)" என்ற சிறு கதையை படித்து பார், கதை இதே போன்றுதான் இருக்கும்... ஆனால் அருமையாக இருக்கும்...
உங்கள் கருத்து யதார்த்தமானது, தலை வணங்குகிறேன்.

நான் கூட கிட்டத் தட்ட காதலில் உங்கள் கட்சி தான் போலுள்ளது.
ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது - இங்கே ஓவியன் இழந்து கொண்டிருப்பது காதல் இன்னுமொரு புனிதமான விடயத்திற்காக...

பூமகள்
02-11-2007, 11:29 AM
ஓவியன் அண்ணாவின் முதல் கதையா??
இந்த கதைக்கரு கேள்விப்பட்ட ஒன்று தான் என்றாலும் கதை நகர்த்திய பாங்கு அருமை.
முதல் கதையே அழகான வர்ணிப்புகளோடு சிறப்பாய் எழுதிய ஓவியன் அண்ணா இன்னும் நிறைய கதைகள் எழுதனும் என்பது என் கருத்து. (உங்க தங்கை நானே கிறுக்கிட்டு இருக்கேன்.. நீங்க எவ்வளோ புலமை பெற்றவர்... இப்படி எழுதாமல் இருக்கலாமா ஓவியன் அண்ணா?)

கரு பென்ஸ் அண்ணா சொன்னது போல் நிகழ்காலத்துக்கு ஒத்துப் போகாவிட்டாலும் கற்பனையில் மனதை தொடும் சிட்டுக் குருவியின் நிலை மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை.
வாழ்த்துகள் ஓவியன் அண்ணா.
உங்களின் கதையைப் பாராட்டி 1000 இ-காசுகள் பரிசு..!!
(ஐ-கேஸ் என்னால் உங்களின் கணக்குக்கு மாற்ற இயலவில்லையே?? ஏனென்று தெரியவில்லையே... எப்படி அனுப்புவது என்று சொல்லுங்க அண்ணா.)

யவனிகா
02-11-2007, 12:14 PM
உண்மை தான் பென்ஸ் அவர்களே!...காதலுக்காக சாதல் என்ற நிலை வரும் போது கல்லி வல்லி காதல் என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும். பூவு அந்தச் சிட்டுக் குருவியை எங்கிட்ட கூட்டிட்டு வா. நல்ல புத்தி சொல்லிக் குடுக்கலாம். முடிஞ்சா பாரிஜாத மலரை அதற்குக் கல்யாணம் செய்து வைக்கலாம்.கதை சொன்ன விதம், சிறிய கருவை சுவாரசியமாக எழுத்தில் வடித்த விதம் நன்று.முதல் கதை என்று சொன்னால் தான் தெரியும்.பாராட்டுகள்.

lolluvathiyar
02-11-2007, 02:33 PM
நெஞ்சை தொட வைத்த பஞ்சதந்திர கதை போல அழகான காதல் கதை படை ஓவியனை பாராட்டுகிறேன்.
கதையில் இருக்கும் மெசெஜ் முக்கியமல்ல, அந்த சிட்டு குருவி குறுதி தந்து ரோஜாவின் நிறம் மாற்றி நிருபித்தது உள்ளத்தை முட்களால் குத்தியது போல் ஆகிவிட்டது. என்றும் மறக்க முடியாத ஒரு சிறு கதை.
அருமை ஓவியன்
காதலின் வலிமையை கற்பனையாய் தந்த உங்களுக்கு நன்றி