PDA

View Full Version : கிராமத்து கிரிக்கெட் ரூல்ஸ்(விதிகள்)



சக்தி
23-05-2007, 08:03 AM
கிராமத்து கிரிக்கெட் ரூல்ஸ்(விதிகள்)

* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.

* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.

* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.

* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.

* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...


* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது! ( எங்க கேப்டனு கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை! ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்! )

* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது! ( Form history: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டனுக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)

* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.

* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.

* டீமுக்கு 11 பேரு வேணுங்கறதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.


* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Air இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.

* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.

* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து "நீயெல்லாம் எப்படியா அம்பயரான? LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்! )

* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.

* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.

நன்றி: இளவஞ்சி

மனோஜ்
23-05-2007, 08:18 AM
அனைத்து அருமை
இப்படி அலுவுனி ஆட்டம் ஆடுனா எப்படி

அன்புரசிகன்
23-05-2007, 08:21 AM
முக்கிய சில விதிகளை மறைத்துவிட்டீர்கள்.

அதாவது லாஸ்ட் மன் ஐ சான்ஸ் ஆ அல்லது நோ சான்ஸ் ஆ என்பது தான். அதாவது 10 பேர் ஆட்டமிழந்தாலும் 11 ஆவது ஆள் தனியாக விளையாடுதல்.
---
பந்து மதிலில் பட்டால் 4 ஓட்டம்.. மதிலின் மேல் நுனியில் பட்டு வளவினுள் விழுந்தால் 6 ஓட்டம். (இது எப்போதாவது தான் நடக்கும்.) மதிலுக்கு வெளியே சென்றால் அதை அடித்தவர் ஆட்டமிழந்ததாக கருதப்படுவதோடு மட்டுமல்லாமல் அவரே அப்பந்தை எடுத்துக்கொண்டுவரவேண்டும். இல்லை புதுப்பந்திற்கான செலவு அடித்தவரது.
---
எங்களுக்கு டொஸ் போட காசெல்லாம் இருந்ததில்லை. இருந்தால் ஜுஸ் குடிச்சிருக்கமாட்டோமா... பழைய கூரை ஓட்டுத்துண்டு அல்லது சீற் துண்டு அல்லது சப்பட்டைக்கல்லு இதில் ஏதாவது ஒன்றை எடுத்து சகல ஆட்டக்காரர்களின் அனுமதி பெற்று பின்னர் ஓட்டுத்துண்டின் ஒருபக்கத்தில் எச்சில் பூசப்படும்.
எச்சில் பூசப்பட்ட பகுதி-கடல் எனவும் பூசாத பகுதி தரை எனவும் அறிவிக்கப்படும்.
டாஸ் போடும் போது கடல் - தரை ஏதாவதுஒன்றைக்கூறவேண்டும்.

vgmnaveen
23-05-2007, 08:45 AM
விட்டுப்போன விதிகளில் சில.

1. இரு அணியையும் சேர்த்து ஆட்கள் ஒற்றை படையில் வந்து விட்டால் ஒரு ஆள் ஜோக்கர். அவர் ரெண்டு பக்கமும் பேட் செய்யலாம், ஆனா அவருக்கு பந்து வீச அனுமது இல்லை.

2. பந்து ஏதாவது புதரில் சிக்கிக்கிச்சுன்னா பந்த தேடி எடுக்கிற வரைக்கும் ரன் ஒடிக்கிட்டே இருக்க முடியாது. ஒவ்வொரு புதருக்கும் ஸ்டம்ப்பிலிருந்து இருக்கும் தூரத்தை வைத்து பிக்சட் ரன் அளிக்கப்படும்.

ஷீ-நிசி
23-05-2007, 09:24 AM
இதுக்கு மேல என்ன சொல்ல.. எல்லாமே சூப்பரப்புங்களா...... இதில சண்டை எங்க நடக்கும்னா, ரன் அவுட்டா இல்லையான்றதுல...

சூரியன்
23-05-2007, 09:55 AM
விட்டுப்போன விதிகளில் சில.

1. இரு அணியையும் சேர்த்து ஆட்கள் ஒற்றை படையில் வந்து விட்டால் ஒரு ஆள் ஜோக்கர். அவர் ரெண்டு பக்கமும் பேட் செய்யலாம், ஆனா அவருக்கு பந்து வீச அனுமது இல்லை.

2. பந்து ஏதாவது புதரில் சிக்கிக்கிச்சுன்னா பந்த தேடி எடுக்கிற வரைக்கும் ரன் ஒடிக்கிட்டே இருக்க முடியாது. ஒவ்வொரு புதருக்கும் ஸ்டம்ப்பிலிருந்து இருக்கும் தூரத்தை வைத்து பிக்சட் ரன் அளிக்கப்படும்.




உங்களுக்குளா ஏன் இப்படி தோணுதோ??

அக்னி
23-05-2007, 11:52 AM
செம ரகளை...

சுட்டிபையன்
23-05-2007, 12:07 PM
சுட்டி விதி

விக்கட்டுக்கு பின்னடி இருந்து கீப்பர் சவுண்ட் விட்டா பட்டால மூஞ்சிய உடைச்சிட்டு சாறி சொல்லனும் மறக்காம

சுட்டிபையன்
23-05-2007, 12:14 PM
பந்து வீச வரும் பந்து வீச்சளனைப்பார்த்து துடுப்பாட்ட அணியில் துடுபெடுத்து ஆட இரூப்பவர்கள் ஆட்டமிழந்தவர்கள்

காமோன் ஈஸி போலர் ஈஸிபோலர் என்று கோரசாக பாடவேனும்

அதே போல துடுபெடுத்தாடுபவரை பார்த்து களத்தடுப்பு அனியினர் பட் பண்ணும் போது ஈஸி மான் ஈஸி மான் என்று கடுப்பேத்த வேண்டும்

சக்தி
23-05-2007, 12:50 PM
எப்படி சுட்டி இப்படியெல்லாம்.

அக்னி
23-05-2007, 01:01 PM
எப்படி சுட்டி இப்படியெல்லாம்.

சுட்டி உங்களுக்காக கவலைப்பட்டதை நீங்க இன்னும் காணலையோ?


அடச் சீ நின்ற மூச்சு வந்திட்டுதே திரும்பி:D

சுட்டிபையன்
23-05-2007, 01:42 PM
எப்படி சுட்டி இப்படியெல்லாம்.

எல்லாம் அனுபவம்தான். எத்தனை பேர் மண்டைய உடைச்சிருப்பம்,

சுட்டிபையன்
23-05-2007, 01:43 PM
Quote:
Originally Posted by rojainraja
எப்படி சுட்டி இப்படியெல்லாம்.

சுட்டி உங்களுக்காக கவலைப்பட்டதை நீங்க இன்னும் காணலையோ?


Quote:
Originally Posted by சுட்டிபையன்
அடச் சீ நின்ற மூச்சு வந்திட்டுதே திரும்பி

அடப்பாவி கொக்கா மக்கா

சக்தி
23-05-2007, 02:04 PM
இதெல்லாம் நண்பர்களுக்குள்ளே சகஜமப்பா. என்ன சுட்டி சரிதானே(மனசுக்குள் மவனே இரு வச்சுகிறன் உன்னை)

சுட்டிபையன்
23-05-2007, 03:12 PM
இதெல்லாம் நண்பர்களுக்குள்ளே சகஜமப்பா. என்ன சுட்டி சரிதானே(மனசுக்குள் மவனே இரு வச்சுகிறன் உன்னை)

சுட்டிக்கு இதெல்லாம் சகஜமப்பா சகஜம்:icon_cool1:

அமரன்
23-05-2007, 03:19 PM
இவ்விதிகளை சர்வதேச மட்டைப் பந்திலும் கொண்டுவரவேண்டும். ஆட்டம் சுவாரசியமாக இல்லாது விடிலும் இதன் மூலம் நமக்கு ஒரு நகைச்சுவை விருந்துகள் கிடைக்கலாம் அல்லவா.

maxman
05-07-2007, 09:30 PM
இந்த முறையினால்/விதிகளினால் நான் பல முறை அவுட்டாக்கப்பட்டேன் :(


நன்றி சக்தி

அறிஞர்
05-07-2007, 09:31 PM
இந்த முறையினால்/விதிகளினால் நான் பல முறை அவுட்டாக்கப்பட்டேன் :(


நன்றி சக்தி

உங்கள் அனுபவங்களை கூட எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே...

மலர்
06-07-2007, 09:32 AM
எங்க ஊரிலும் இப்படித்தான் விளையாடுவார்கள்... ஆனால் பரிசுத்தொகை உண்டு

pathman
06-07-2007, 10:12 AM
நாங்கள் விளையாடும் போது கார்க் பால் அடிபட்டால் வலிக்குமே என்று டென்னிஸ் பந்துதான் பாவிப்போம் அதுவும் லெக் சைட்டில் 4, 6 இல்லை எல்லாம் ஒப் சைட் தான் காரணம் சுற்றிலும் வீடுகள் (அதில் விளையாடிய பழக்கம் தான் இன்றுவரை லெக் சைட்டில் 4, 6 அடிக்க முடிவதில்லை) அதில் யாராவது ஜெயசூர்யா, தோனி ரேஞ்சிற்கு அடிக்க போய் எந்த பக்கத்தில் இருக்கும் வீட்டு கண்ணாடி உடைந்து விட்டால் அங்கு விளையாடி கொண்டிருந்த அனைவரும் நொடியில் ஏஸ்கேப்.

அதற்கு பிறகு 2 நாட்களுக்கு கிரிக்கட் ஒத்திவைக்கப்படும் 2 நாட்களுக்கு பிறகு
"பழைய குருடி கதவை திறடி"

ஓவியன்
06-07-2007, 01:59 PM
பந்து வீச வரும் பந்து வீச்சளனைப்பார்த்து துடுப்பாட்ட அணியில் துடுபெடுத்து ஆட இரூப்பவர்கள் ஆட்டமிழந்தவர்கள்

காமோன் ஈஸி போலர் ஈஸிபோலர் என்று கோரசாக பாடவேனும்

அதே போல துடுபெடுத்தாடுபவரை பார்த்து களத்தடுப்பு அனியினர் பட் பண்ணும் போது ஈஸி மான் ஈஸி மான் என்று கடுப்பேத்த வேண்டும்

நீர் இலங்கையில் எப்படி கிரிக்கெற் அணியில் விளையாடியிருக்கிறீர் எண்டு இப்ப நல்லா விளங்குது!! :sport-smiley-014:

ஓவியன்
06-07-2007, 02:01 PM
இவ்விதிகளை சர்வதேச மட்டைப் பந்திலும் கொண்டுவரவேண்டும். ஆட்டம் சுவாரசியமாக இல்லாது விடிலும் இதன் மூலம் நமக்கு ஒரு நகைச்சுவை விருந்துகள் கிடைக்கலாம் அல்லவா.

ஏன் இப்பவும் நம்ம சர்வதேசக் கிரிக்கற் வீரர்கள் எல்லாம் நகைச்சுவை விருந்து தானே படிக்கிறார்கள் அடச்சே! படைக்கிறார்கள். :sport-smiley-014:

அமரன்
06-07-2007, 02:03 PM
ஏன் இப்பவும் நம்ம சர்வதேசக் கிரிக்கற் வீரர்கள் எல்லாம் நகைச்சுவை விருந்து தானே படிக்கிறார்கள் அடச்சே! படைக்கிறார்கள். :sport-smiley-014:
சுட்டி எப்போ சர்வதேச வீரர் ஆனான்...:icon_wacko: :icon_wacko:

சுட்டிபையன்
06-07-2007, 02:09 PM
நீர் இலங்கையில் எப்படி கிரிக்கெற் அணியில் விளையாடியிருக்கிறீர் எண்டு இப்ப நல்லா விளங்குது!! :sport-smiley-014:


அதெல்லாம் கண்டுக்ககூடாது நைனா:starwars006:

தாமரை
08-07-2007, 05:54 PM
சுட்டி எப்போ சர்வதேச வீரர் ஆனான்...:icon_wacko: :icon_wacko:

ஒரு தேசத்துக்காக மட்டுமே ஆடுபவரை எப்படி சர்வதேச வீரர்னு சொல்லலாம்?

உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்..

ஓவியன்
08-07-2007, 06:17 PM
ஒரு தேசத்துக்காக மட்டுமே ஆடுபவரை எப்படி சர்வதேச வீரர்னு சொல்லலாம்?

உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்..

அப்படியா அப்படினா சர்வதேச வீரர் ஒருவருக்கு உதாரணம் தாங்க செல்வன் அண்ணா? − பிளிஸ்! :D

உட்கார விடாமல் அலுப்படிப்போர் சங்கம்!.:D

அமரன்
08-07-2007, 08:58 PM
ஒரு தேசத்துக்காக மட்டுமே ஆடுபவரை எப்படி சர்வதேச வீரர்னு சொல்லலாம்?

உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்..

இப்பொதான் ஏரோ−ஆசியா கோப்பை. சூப்பர் லெவின் போட்டின்னு ஏடகூடமாக வைத்து நகைச்சுவைபண்ணுறாங்களே!


−ஏடாகூடமாக சிந்திபோர் சங்கம்

தாமரை
09-07-2007, 04:51 PM
அப்படியா அப்படினா சர்வதேச வீரர் ஒருவருக்கு உதாரணம் தாங்க செல்வன் அண்ணா? − பிளிஸ்! :D

உட்கார விடாமல் அலுப்படிப்போர் சங்கம்!.:D

அட இது கூட தெரியலையா?

(அடுத்த) கிரகத்தோட ஆடுறவர்... ஹி ஹி ஹி...

அன்புரசிகன்
09-07-2007, 04:54 PM
அட இது கூட தெரியலையா?

(அடுத்த) கிரகத்தோட ஆடுறவர்... ஹி ஹி ஹி...

ஓ... அப்போ பந்து அடித்து அது வியாழன் கிரகத்தில் பட்டால் 4 ரன்ஸ். சூரியனில் பட்டால் 6 ஓட்டங்கள்... சரியா?:icon_cool1:

தாமரை
09-07-2007, 04:59 PM
விட்டா சூரியனையே சுழற்றி பந்தா போடச்சொல்லுவீர் போல இருக்கே!
அப்புறம் ஆடியன்ஸ் எங்க உட்காருவது? விளம்பரப் பலகைகளை எங்க வைக்கிறது?


அப்போ நாடுகள் ஆடும் கிரிக்கெட்டில் காஷ்மீரும் கன்னியாகுமரியுமா பவுண்டரி லைன்கள்?

அண்ணாத்தே! சர்வதேச வீரர்னா அனைத்து நாடுகளுக்காகவும் ஆட வேணாமோ? நாலைஞ்சு நாடுகளுக்கு மாத்திரம் ஆடினா அது எப்படி சர்வதேசமாகும்? முதல்ல கிரிக்கெட் ஒரு சர்வதேச விளையாட்டே அல்ல.