PDA

View Full Version : தோல்வி.



shangaran
23-05-2007, 04:51 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

அல்லிராணி
23-05-2007, 05:04 AM
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தவறாக முடிவெடுத்து கொல்ல வேண்டாம்.

மயூ
23-05-2007, 05:13 AM
எதற்கிந்த முயற்சி..!!!! விபரீத முயற்சி??

shangaran
23-05-2007, 05:22 AM
நன்றி நண்பர்களே.
இங்கே, நான் சொல்ல முற்படுவது நினைவுகளின் தற்கொலை முயற்சி,
உயிரை பற்றியல்ல... அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

மயூ
23-05-2007, 05:23 AM
நல்ல சிந்தனை நல்ல கவிதை.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!!

shangaran
23-05-2007, 05:26 AM
நன்றி மயூரேசன்.

அல்லிராணி
23-05-2007, 05:26 AM
நினைவுகள் சாவதில்லை
செத்துவிட்டால் நினைவுகள் இல்லை

shangaran
23-05-2007, 05:34 AM
ம்ம்ம்.
மிகச் சரியாக சொன்னீர்கள்.

ஷீ-நிசி
23-05-2007, 05:56 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

நல்ல கவிதை நண்பரே!

உன் நினைவுகளின்றி வாழ
முயற்சிக்கிறது என் மனமும்! -அதில்
வெற்றியின்றி தொடங்குகிறது!
என் ஓவ்வொரு தினமும்!

shangaran
23-05-2007, 06:23 AM
அருமையாக மாற்றியமைத்துள்ளீர்கள்.
நன்றி ஷீ-நிசி.

lolluvathiyar
23-05-2007, 06:30 AM
காதல் தோல்வி கவிதையோ
ஒரு ஐடியா தருகிறேன்
அவள் நினைவின்றி வாழனுமா?
இன்னொருத்திய நினைவில் வை

ஷீ-நிசி
23-05-2007, 06:40 AM
அருமையாக மாற்றியமைத்துள்ளீர்கள்.
நன்றி ஷீ-நிசி.

நண்பரே இப்படியும் எழுதலாம்... நீங்கள் எழுதியதில் ஒன்றும் தவறில்லை.. நன்றி சங்கரன்...

shangaran
23-05-2007, 06:45 AM
இந்த லொள்ளுதானே வேண்டாங்கிறது...

நம்பிகோபாலன்
23-05-2007, 06:54 PM
பிரிந்தப்பின் நினைவுகள் இருவருக்கும் உண்டு, அதனால் மரணிக்கும் முயற்சியை விட்டு நினைவுகளில் வெற்றி பெற முயலுங்கள்..கடினம்தான் ..அதுவே அவர்களும் எதிர்ப்பார்கலாமே

அமரன்
24-05-2007, 06:52 AM
சங்கரின் கவிதையுல் அதே கருத்துப்பட நிஷி கொடுத்த கவிதையும் கலக்கல். பாராட்டுகள் இருவருக்கும்.

மனோஜ்
24-05-2007, 08:17 AM
அருமை சங்கர்
காதல் என்றும் இப்படி தான் நம்மை புரியாத புதிராக்கிவிடும்

உதயசூரியன்
24-05-2007, 08:27 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

நினைவுகளை தற்செயலாக கொலை செய்யுங்கள்..
வாழ்க்கையை நிரந்தரமாக இட்டு செல்லுங்கள்..
வாலிபத்தின் கனவுகளே தற்கொலை செய்யுங்கள்..
வாழ்க்கை மட்டும் என்ற தத்துவத்தை நினைவில் வையுங்கள்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஆதவா
25-05-2007, 07:27 PM
எக்ஸலண்ட்.... அருமை சங்கர்... நினைவுகளின் தற்கொலை முயற்சி மிக அற்புதம்.... இன்னும் தொடருங்கள்.... அல்லியக்கா எப்படியும் பிளேட்ட திருப்பி போடறாங்க பாருங்க...

பென்ஸ்
26-05-2007, 02:02 AM
தமிழ் மன்றத்தின் தனிசிறப்பாக நான் நினைப்பதே இதேபோன்ற கவிதைகளையும் அதன் பின்னுட்டங்களும்.....



தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.


வலியை மனதில் வைத்துகொண்டு சித்திரவாதை அடையும் ஒரு மானதின் ஆற்றாமை...
உணர்வுகளை தற்கொலை செய்ய சொல்லும் மனம்... அருமை



தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தவறாக முடிவெடுத்து கொல்ல வேண்டாம்.


இந்த வரிகள் சொல்லும் அர்த்தம் பல... அல்லியின் சிறப்பும் இதுதான், பன்முக பொருள்படும் கடுத்துகள்...

கருத்து 1
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். --- இந்த காதல்/ ஊடல் நிலையை தவறாக எடுக்கவேண்டாம்
தவறாக முடிவெடுத்து கொல்ல வேண்டாம்.-- அப்படி ஒரு முடிவேடுத்து, அவாள் மனதையூம் கொல்ல வேண்டாம்.

கருத்து 2
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். --- இந்த நிலையில் நான் சொல்வதை நீங்கள் தவறாக எடுக்க வேண்டாம்
தவறாக முடிவெடுத்து கொல்ல வேண்டாம். -- உன்னை நீயே கோல்லவேண்டாம்...

கருத்து 3 ... கருத்து N (உங்கள் விருப்பபடி)


நன்றி நண்பர்களே.
இங்கே, நான் சொல்ல முற்படுவது நினைவுகளின் தற்கொலை முயற்சி,
உயிரை பற்றியல்ல... அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

இது உங்கள் விளக்கம்...


நினைவுகள் சாவதில்லை
செத்துவிட்டால் நினைவுகள் இல்லை

இது மாற்று கருத்து.... நாணயத்துக்கேஏ இரு பக்கம் இருக்கும்போது... மனிதனின் சிந்தனைக்குன், செயலுக்கும் வழிக்கள் தான் எத்தனை என்ரு சொல்லும் அல்லியும்.....


நல்ல கவிதை நண்பரே!

உன் நினைவுகளின்றி வாழ
முயற்சிக்கிறது என் மனமும்! -அதில்
வெற்றியின்றி தொடங்குகிறது!
என் ஓவ்வொரு தினமும்!

வந்து தன் கவிதைகளை மட்டும் விட்டு சென்றுவிடாமல், அடுத்தவர்களீன் கவிதைக்கு மாற்று கவிதை கொடுக்கும் ஷீ-க்கு முதலில் என் பாராட்டுகள்....

மனமுடைத்து இருக்கும் போது இருக்கும் ஒரு உணர்வையும் எத்துனை புதியதாக, இனியதாக எடுக்க முடியும் பாருங்கள் சங்கர் ....


காதல் தோல்வி கவிதையோ
ஒரு ஐடியா தருகிறேன்
அவள் நினைவின்றி வாழனுமா?
இன்னொருத்திய நினைவில் வை

என்னடா... இது சீரியசாக கவிதையை பேசும் போதி இப்படி வந்து சொல்லுறார்....
இதுதான் யதார்த்தம் என்பேன் நான்.... மனிதனின் மனம் "feelings modifiyable" என்று கூறுபவன் நான்...
வாத்தியார... என்ன நம்ம அலைவரிசை ஒத்து போகுது...???



நண்பர்களே
ஒரு தொடக்க நிலை எழுத்தாளர் தன்னுடைய கவிதைகளுக்கு கிடைக்கும் ஊக்கங்களும், ஆலோசனைகளையும், கருத்த்ஹுகளையும் விட என்ன சன்மானம் அதிகமாக கொடுத்துவிட முடியும்....

shangaran
28-05-2007, 04:31 AM
எந்த தோல்வியும் சோகமும் நிரந்தரமானது அல்ல என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

இவ்வளவு தெளிவான, விரிவான பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி பென்ஸ்.

விகடன்
28-05-2007, 04:41 AM
அவள் நினைவின்றியிருப்பது சடமாக இருப்பதைப் போன்றது என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.

எதுவும் அளவோடிருந்தால் நன்மையே என்று நினைப்பவன் நான். எந்தளவிற்கு அவ்வளவுகாலத்திற்கு செல்லுபடியாகுமென்றுதான் தெரியவில்லை.

சிவா.ஜி
28-05-2007, 04:53 AM
நினைவுகள் என்றும் மறைவதில்லை,லேசாக மங்கும் அவ்வளவுதான். அடுத்தடுத்த நினைவுகள் மனதில் அடுக்கப்படும்போது அந்த நினைவுகள் ஆழ்மனதில் தங்கிவிடும் மீண்டும் அதே போன்ற முகம்பார்க்கும்போதோ,பெயர் கேட்கும்போதோ,நிகழ்வு நடக்கும்போதோ மீண்டும் அது மேலே வரும்.மனம் விரும்பிய நினைவுகள் என்றும் மறைவதில்லை.

இன்பா
28-05-2007, 05:16 AM
ஏன் இந்த முயற்சி ...
தோல்வி என்பது பயணம்...
வெற்றி என்பது இலக்கு...
இலக்கு எட்டும் வரை - தோல்வி சகஜம்
எட்டியபின் நிழல் எல்லாம் நிஜம்...

துவண்டுவிடாமல் காத்திரு
ஒரு நாள் வருவாள்
உன் வாழ்க்கை தீபத்தை ஏற்ற...
அந்த வெளிச்சத்தில் ஆனந்தம் பெறும்

அன்று புரியும் - இதற்க்காத்தான இவ்வளவு தோல்விகளா என்று

தோல்விகளால் தான் பக்குவம்
பக்குவத்தால் தான் வெற்றி....

----
வரிப்புலி

சக்தி
28-05-2007, 05:31 AM
தோல்வி கண்டு துவண்டுவிடாதே தோழா
இன்னொரு தோழி கிடைப்பால் அதற்கும் மேலா

குறிப்பு: கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

thevaky
28-05-2007, 06:00 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

நினைவின்றி வாழவேண்டுமானால்
மனமின்றி
மனசாட்சியின்றி வாழ பழக வேண்டும் நண்பரே

காதலில் தோள்வியுற்ற ஒவ்வொருவரின் நிலை இதுதான்
தாரமான கவிதை நண்பரே

அரசன்
28-05-2007, 06:03 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

இனியவள்
08-06-2007, 09:28 AM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

நினைவுகளை கொலை செய்ய முயற்சிக்கும் போதுதான் அது வீருட்டு எழுகிறது
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது தொடருங்கள்
எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
08-06-2007, 02:11 PM
நினைவுகளை மையப்படுத்தி ஒரு கவிதை..
அதை வேறு வேறு கோணங்களில் கண்டு.. பல கருத்துக்கள்.. அருமை...

ஓவியா
08-06-2007, 02:47 PM
தினம் உன் நினைவுகள் இன்றி
வாழ முயற்சிக்கிறேன்,
ஒவ்வொரு நாளும் தோல்வியிலேயே முடிகிறது,
என் தற்கொலை முயற்சி.

முயற்ச்சி திருவிணையாகுமாம், பெரியவங்க சொன்னாங்க. மீண்டும் முயற்ச்சி செய்து பார்க்கலாமே!!!

கவிதையை ரசித்தேன். நன்று.

ஜோய்ஸ்
08-06-2007, 02:51 PM
நன்றி நண்பர்களே.
இங்கே, நான் சொல்ல முற்படுவது நினைவுகளின் தற்கொலை முயற்சி,
உயிரை பற்றியல்ல... அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

நல்ல வேளை.படைத்த இறைவனுக்கு நன்றி.