PDA

View Full Version : இதுவரையான நான்கு கட்ட ஈழப்போரை விடவும் பĬ



சுட்டிபையன்
23-05-2007, 04:09 AM
இதுவரையான நான்கு கட்ட ஈழப்போரை விடவும் புலிகளின் வான் தாக்குதல் அரசை உலுக்கியுள்ளது

புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் "சண்டே ரைம்ஸ்' ஆங்கில வார இதழில் எழுதும் கள நிலைமை என்ற தமது பத்தியில் இம்மாதம் 13ஆம் திகதி எழுதிய ஆய் வுக் கட்டுரையின் தொகுப்பு இது.
நான்கு கட்டங்களாக நாட்டில் பிரி வினைவாதப் போர்கள் இடம்பெற்று விட் டன. கடைசிப் போர் தற்பொழுது இடம் பெற்றுவரும் பிரகடனப்படுத்தப்படாத நான் காவது ஈழப்போராகும். இந்தப் போர் களைவிட கடந்த ஒரு மாத காலத்துக்குள் புலிகள் அமைப்பு நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியிருப் பதானது நாட்டின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் அதிக அச்சத்தையும் கவலையையும் தோற்று வித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இரா ணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் பொலீஸ் தலைவர்களைக் கொண்ட தேசிய மட்ட மாநாடுகளில் விடுதலைப் புலி களின் விமானப்படை அச்சுறுத்தல் தொடர்பாகவே அதிகமாக ஆராயப் பட்டு வருகிறது.
புலிகள் திடீர் தாக்குதல் நடத்தலாம்
ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை வேளையில் கடைசியாக இடம்பெற்ற விமானத் தாக்குதலை அடுத்து வான் பரப் பில் அமைதி நிலவியபோதிலும் மேலும் அதிக திடீர் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதை அலட்சியப்படுத்திவிட முடி யாது என்று பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் ஒத்த கருத்துடையன வாகவே உள்ளன.
எதிர்த்தாக்குதல்கள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதற்கு முன்பதாக புலிகள் மேலும் பல இலக்குகளைத் தாக் கும் திட்டங்களைப் பூர்த்திசெய்து விட முனைவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இவ்வாறு பெரிய தாக்குதல் எதுவும் இடம்பெறுவதற்கு முன்னர் உடனடியாக சில தற்காப்பு நடவடிக்கைகளை பாது காப்புப் படையினரும் பொலீஸாரும் எடுத்து வருகிறார்கள். இந்தவகையில் இந்தியா வழங்கியுள்ள ராடர் கருவிகளை யும் ஏனைய சாதனங்களையும் இந்திய நிபுணர் குழுவொன்று இலங்கை வந்து சீர்செய்துள்ளது.
விமானத் தாக்குதல்களையும் உள்ள டக்கிய இப்போதைய போர் ஏற்கனவே உல்லாசப் பயணிகள் வருகையை வெகு வாகப் பாதித்துள்ளது. சர்வதேச விமான நிலையத்தை இரவு 10.30 மணியிலி ருந்து காலை 4 மணி மணிவரை மூடி விடுவது என்ற புத்திசாதுர்யமற்ற முடிவு நிலைமையை, மேலும் மோசமடையச் செய்துள்ளது.
நாட்டுக்கு மிக அதிகமாக அந்நியச் செலாவணியைத் தேடித்தரும் தேயிலைத் தொழில்துறை வெளிநாடுகளுக்கு தேயிலை மாதிரிகளை அனுப்புவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவ தாக கூறப்படுகின்றது. அதேபோல மலர் கள் மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களின் பொதிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரும் வர்த்தகக் கோரிக்கைகள் ரத்துச் செய்யப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
அரசின் பலவீன நிலைமை
அரசாங்கம் தனது விமான நிலை யத்தை குறைந்தது அதன் விமான நிலைய வான்பரப்பையாகுதல் பாது காத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை விமான நிலையத்தை இரவில் மூடுவதன் மூலம் வெளிப்படையாக ஒப் புக்கொள்வதைக் காட்டுவதாக உள்ளது. இது எமது மெதுவாக நாட்டின் பொருளா தாரத்தைச் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. உல்லாசப் பயணி களின் வரவு தடைப்பட்டதால் விமான நிலையத்தை அண்டியுள்ள ஹோட்டல் களில் வியாபாரம் முடங்கிப்போய் விட் டது. வாடகைக்கார் ஓட்டுநர்களும் தொழில் இழந்து வருகின்றார்கள்.
புதிதாக வருகை தரும் சாரார்
இருந்தபோதிலும் இலங்கைக்கு வருகை தரும் இன்னொரு சாரார் மட்டும் இப்பொழுது அதிகரித்துக் காணப்படு கின்றார்கள். இவர்கள் யார் தெரியுமா? பல்வேறு வகையான ராடர்கள், செயற் கைக் கோள்கள் மூலம் கண்காணிப்புச் செய்யும் அமைப்புகள் போன்று விமா னத் தாக்குதல்களைச் சமாளிக்கும் இன் னோரன்ன பொருள்களின் விற்பனை முகவர்களே இப்பொழுது எப்போதும் இல்லாதவாறு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இவர்களில் சிலர் பாது காப்பு அமைச்சின் அதிகாரிகளைச் சந் தித்துப் பேசும் வாய்ப்பையும் பெற்றுள்ள னர். இன்னும் சிலர் தமது கொழும்பு முக வர்கள் மூலமும் வேறு உள்ளூர் தொடர்பு கள் மூலமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை படைக்கலங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பக் கருவி கள் உபகரணங்களை விற்பனை செய்யும் முகவர் அமைப்புகள் செயலற்றுப்போய் இருந்தன.
முற்றிலும் அரசுக்குச் சொந்தமான படைக்கலங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமை யில் நிறுவப்பட்டுள்ளது. இலங்கை பாது காப்புப் படைகளுக்கும் பொலீஸ் திணைக் களத்துக்கும் கருவிகள் மற்றும் சேவை களைப் பெற்றுக்கொள்ளும் முழுப் பொறுப்பும் இந்த நிறுவனத்திடம் கைய ளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் திறைச் சேரிச் செயலாளர் டாக்டர் பி.பி.ஜயசுந்தர, முப் படைகளின் தளபதிகள் மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோரும் இடம்பெற்றுள் ளனர்.
இந்த நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச் சரவைக்கு விளக்கமளித்தபோது இத னால் இரண்டு நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
முதலாவது இதன் மூலம் நேரடியா கவும் மறைமுகமாகவும் நாட்டின் பணம் பெருமளவில் மிச்சமாகும்.
இரண்டாவது கடந்த காலத்தில் பல் வேறு வட்டாரங்களாலும் பொதுமக்களா லும் கண்டனத்துக்குள்ளான விசாலமான கொள்வனவுகளின் போது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து கொள்ளமுடியும்.
வெளிநாட்டிலுள்ள தூதரகங்கள் படைகளுக்குத் தேவையான எல்லாவித கொள்வனவுகளையும் இந்த நிறுவனத் தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டு மென பணிக்கப்பட்டுள்ளன.
எதுவானாலும், முகவர் அமைப்புகள் செயற்படாவிட்டாலும், எங்கே யார், எது, எதனைக் கொள்வனவு செய்கிறார்கள், அவைகளின் விலைகள் என்பன போன்ற விடயங்களை எல்லாம் அறிந்து வைத்தி ருக்கும் கூட்டங்களுக்கும் குறைவில்லை. பெரிய ஹோட்டல் விடுதிகளில் மட்டு மல்ல அதற்கு வெளியிலும் தகவல்கள் கசிந்துவிடுகின்றன.
"புதினம்' முதலில்
வெளியிட்ட தகவல்
விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இணையத்தளமான "புதினம்' இணை யத் தளமே முதன் முதலில் அரசாங் கம் மிக் 29 ரக விமானங்களை வாட கைக்கு கொள்வனவு செய்ய உத்தே சித்துள்ளது என்ற தகவலை வெளி யிட்டது.
மொஸ்கோவுக்குச் சென்று மிக் 29 ரக விமானங்களைக் கொள்வனவு செய்ய விருந்த குழுவின் பயணம் பிற்போடப்பட்டுவிட்டது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனினும் விமானப்படை பொறியி யல்துறைப் பணிப்பாளர் ஏயர்வைஸ் மார்ஷல் பிரிஷாந்த சில்வா இந்த வாரம் உக்ரேனுக்குச் சென்று இரண்டு மிக் 29 விமானங்களைக் குத்தகைக்கு அமர்த்திக் கொள்வதற்கான சாந்தியங் களை ஆராயவிருக்கின்றார்.
மிக் 29 விமானங்களைச் செலுத்தும் திறன் இலங்கை விமான ஓட்டிகளுக்கு இல்லாமையால் அவர்கள் உரிய தகுதி பெறும்வரை உக்ரேனிலிருந்து விமான ஓட்டிகளையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
புலிகளைச் சமாளிக்க
மிக் 29 உதவுமா?
விடுதலைப் புலிகளின் விமானப் படை அச்சுறுத்தலை எதிர்கொண்டு சமா ளிப்பதற்கு மிக் 29 விமானங்கள் முழு மையான பயனைத் தரக்கூடியவைதானா என்பதில் விமானப் படை அதிகாரிகள் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
தம்மை அடையாளம் காட்ட விரும்பாத விமானி ஒருவர் பின்வருமாறு கூறு கிறார்
இது மாட்டுவண்டில் ஒன்றை புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் கொண்டு முட்டி விழுத்துவது போலாகும்.
மிக் 29 விமானங்கள் அதே ரகத்தி லான விமானங்களுடன் ஆகாயத்தில் போரிடுவதற்காகவே தயாரிக்கப்பட்டவை. யுத்த விமானங்கள் அல்லாத இலகு ரக விமானங்களைத் தாக்குவதற்கு உல கில் வேறு எங்குமே அது பயன்படுத்தப்பட்ட தாகத தெரியவில்லை.
மிக் 29 விமானங்கள் வேகமாகப் பறந்து வானில் போரிடக்கூடியவை. புலி களிடம் அந்த ரகத்திலான போர் விமா னங்கள் அல்ல. அதிக பட்சம் முன்கூட் டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மீது உள்ளூரில் தயாரித்த குண்டுகளை அவர் களால் போடமுடியும். மற்றும் விரக்தி யடைந்த நிலையில் தற்கொலைத் தாக்கு தல்களுக்கும் இந்த விமானங்களை அவர் களால் பயன்படுத்தக்கூடியதாக இருக் கும் ஆனால் விண்ணில் நம்முன் பறந்து போரிடும் நிலையில் அவர்கள் இல்லை. என்றார் அவர்.
புலிகளின் வான்படை அச்சுறுத்தலை நீக்குவதற்கு இன்னும் மலிவான அதிக வலுவுள்ள பொறிமுறைகளைக் கையாள் வது பற்றி அதிகாரிகள் ஆலோசிக்கின்ற னர். புலிகளின் இப்போதைய இலகு ரக விமானங்களை எதிர்ப்பதற்கு மட்டு மன்றி எதிர்காலத்தில் அவர்கள் மிக நவீன விமானங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் மிக் 29 விமானங்கள் பயனுள்ள வையாக இருக்கும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள்.
அண்மையில் வன்னியில் படையின ரிடம் சரணடைந்த நான்கு புலி உறுப்பி னர்களை விசாரித்ததன் மூலம் புலிகளின் வான்படை நிலைமை குறித்து பல விவ ரங்களைப் படையினர் தெரிந்துகொண் டுள்ளனர்.
சரணடைந்தவர்கள் புதிதாக அமைக் கப்பட்ட சாள்ஸ் அன்ரனி மற்றும் ராதா பிரிவுகளைச் சேர்ந்தவர்களாம். விடு தலைப் புலிகளின் விமானப்படைக் கட்ட மைப்பு மற்றும் விவரங்களை அதிகாரி கள் இவர்களிடமிருந்து சேகரித்திருப்ப தாகச் சொல்லப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு முறைகள் குறித்தும் அவர்களிடம் தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
மேலும் அதிக விமானத்தாக்குதல் களை புலிகள் நடத்தும் பட்சத்தில் எதிர் கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் இப்போது அரச தரப்பில் செய்யப்பட்டு வருகிறது.

உதயன்

மயூ
23-05-2007, 05:50 AM
செய்யட்டும் செய்யட்டும் கடைசியாக என்ன நடக்குதண்டு பார்ப்பம்!!!