PDA

View Full Version : சிங்களக் காற்று திசை மாறுகிறது!



роЪрпБроЯрпНроЯро┐рокрпИропройрпН
23-05-2007, 04:08 AM
சிங்களக் காற்று திசை மாறுகிறது!


ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். Сமனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்Т என்று அவர் கூறியிருக்கிறார்.

அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா?

உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்டது. பிரிட்டனும் சம்மதித்தது.

ஆனால், இப்போது அந்தக் கடனைத் தருவதற்கு இல்லை என்று கைவிரித்து விட்டது. என்ன காரணம்? Сநீங்கள் வாங்குகின்ற பணத்தை, ஈழத்தை எரிப்பதற்காகத்தான் பயன்படுத்துகிறீர்கள். ஆயுதங்கள்தான் வாங்குகிறீர்கள். எனவே, முதலில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துங்கள். விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்Т என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. இது இந்த வாரச் செய்தி. அதே சமயத்தில், ஈழ மக்களின் இயக்கத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை பிரிட்டன் தடை செய்திருக்கிறது. ஆனாலும் ஈழத்தில் சிங்கள இனவாத அரசு நடத்தும் மனித வேட்டைகளைக் கண்டிக்கிறது.

அமெரிக்காவோடு இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஈழ மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டுவதை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. ஈழ இயக்கத்தின் தூதர்களாகச் செயல்படுகிறவர்கள் என்று பலரைக் கைது செய்திருக்கிறது.

அதே சமயத்தில், Сஈழ மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்Т என்று அமெரிக்க அரசுப் பிரதிநிதி அண்மையில் ராஜபட்சேயைச் சந்தித்து அறிவுரை கூறினார்.

அவர் ஈழப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். மக்களைச் சந்தித்தார். ஈழப் போராளிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். சிங்கள இனவாத அரசு தமிழ்ப் பரப்பை எப்படி மயான பூமியாக்கியிருக்கிறது என்பதனைக் கண்டார். அதன் பின்னர், கொழும்பு திரும்பினார். ராஜபட்சேயைச் சந்தித்தார். Сஈழத்தை பட்டினிக் கொடுஞ் சிறையாக மாற்றியிருப்பது நியாயமா?Т என்று கேட்டார். Сமனித இனத்தின் சாதாரண உரிமைகளுக்குக்கூட சமாதி எழுப்பியிருக்கிறீர்களேТ என்றார். இறுதியாக, Сவிடுதலைப் புலிகளுடன் பேசுங்கள்Т என்றார். இதுவும் இந்த வாரச் செய்திதான்.

சிங்கள இனவாத அரசின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் தடை செய்திருக்கின்றன. பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்தன. ஆனால், விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வது பற்றி சென்ற வாரம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஈழ மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கவே சிங்கள இனவாத அரசு மறுக்கிறது. ராஜபட்சே பரிபாலனம் செய்ய வந்த நாள் முதலாய்ப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இறுக அடைத்துவிட்டது. போர் முனையில் தீர்வுகாணமுடியும் என்று நம்புகிறது. அதனால் உள்நாட்டு யுத்தம் தொடரவே செய்யும் என்று, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதுகின்றன. இத்தனைக்கும் இந்த நாடுகள் சிங்கள இனவாத அரசிற்குத் தேவையான ஆயுதங்களை அளித்த நாடுகள்தான்.

எப்படி சிங்கள இனவாத அரசு ஓர் இனத்தையே அழிக்க அநியாய யுத்தம் நடத்துகிறது என்பதனை ஈழத்தில் பயணம் செய்யும் எந்த நாட்டினரும் உணரவே செய்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சிகள் பேசுகின்றன.

ஐயோ! இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இவர்கள் தலையிடுகிறார்கள் என்று ராஜபட்சே புலம்புகிறார்.

ஏற்கெனவே, இலங்கையில் தூதர்களாகப் பணி செய்த பல்வேறு நாட்டு அறிஞர் பெருமக்கள், சிங்கள இனவாத அரசைக் குற்றம் சாட்டினர். Сவேலை முடிந்து ஊர் திரும்பியவர்கள் தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்க வேண்டும். சிங்களத்தின் உள் விவகாரங்களில் கருத்துச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லைТ என்று இலங்கை அரசு சீறியது.

ஈழத்தில் மனித உரிமைகள் மரித்து வருகின்றன என்று ஏற்கெனவே ஐ.நா.விற்கான மனித உரிமை அமைப்பு அறிவித்திருக்கிறது. இப்படி சிங்கள அரசு எல்லா முனைகளிலும் தனிமைப்பட்டு வருகிறது.

பதவி ஏற்றவுடன் சிங்கள அதிபர் ராஜபட்சே டெல்லி வந்தார். அதிகாரப் பகிர்வு பற்றி முடிவெடுங்கள் என்று, நமது அரசு அவருக்கு ஆலோசனை கூறியது. Сஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அந்தப் பணியைத்தான் செய்யப் போகிறோம்Т என்றார் ராஜபட்சே. கடந்த டிசம்பர் மாதமே அதிகாரப் பகிர்வு பற்றி அறிவிப்போம் என்றனர். அதன் பின்னர் ஐந்து மாதங்கள் உருண்டோடிவிட்டன. அதிகாரப் பகிர்வு இன்னும் குஞ்சு பொரிக்காத கூழ் முட்டையாகவே இருக்கிறது.

ஈழ மக்களுக்கு எந்த உரிமையும் கூடாது என்பதில் புத்த பிக்குகள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய தொண்டர்களாக சிங்கள இனவாதிகள் இருக்கிறார்கள். இவர்களை மீறி ராஜபட்சேக்களால் செயல்பட முடியாது.

இலங்கையை Сபௌத்த மகாதேசம்Т என அறிவிப்போம் என்று, புத்த பிக்குகளுக்கு ராஜபட்சே உறுதி அளித்திருக்கிறார்.

அடுத்து, Сஇரண்டு மாவட்டங்களுக்குТ ஒரு முதலமைச்சர் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அது ஒரு கோமாளித் திட்டம் என்று, கொழும்பு குமுறிக் கொண்டிருக்கிறது.

ஈழப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற இந்தியாவின் யோசனையை இன்று வரை ராஜபட்சேக்கள் செயல்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவை இழுத்து விடுவதற்கான திட்டங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப் போராளிகளின் விமானங்கள் கல்பாக்கத்தில் குண்டு வீசும். நமது நீர் மின் நிலையங்களை நிர்மூலமாக்கும் என்று சிங்கள அரசு அபாய அறிவிப்புச் செய்கிறது. சிறகுகள் தாக்கி கோபுரங்கள் சாய்வதில்லை. அந்தச் சிறகுகள் இந்திய ஆலயங்களை நோக்கிப் பறந்து வரப் போவதும் இல்லை. இந்திய விமானப் படையின் வலிமை எல்லோருக்கும் தெரியும்.

இலங்கை ராணுவத்தோடும் கடற்படையோடும் விடுதலைப்புலிகள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மோதல்கள், இலங்கைக் கடற்படைப் பகுதியிலேயே நடைபெறுகின்றன. எல்லை தாண்டி விடுதலைப் புலிகள் இந்தியக் கடற்பகுதிக்கு வருவதில்லை என்று இப்போது இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி ஆர்.பி. சுதன் தெரிவித்திருக்கிறார். பின்னர் ஏன் கல்பாக்கத்தை விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று, சிங்கள அரசு பூச்சாண்டி காட்டுகிறது? ஈழப் போராளிகளின் விமானத் தாக்குதலால் சிங்கள அரசு மட்டுமல்ல, அதன் ராணுவமும் உளவியல்ரீதியாகத் துவண்டு போய் இருக்கின்றன.

Сவான்புலிகளை இடைமறித்துத் தாக்கும் ஆற்றல், சிங்கள வான்படைக்கு இல்லைТ என்கிறார் சிங்கள விமானப் படையின் முன்னாள் தளபதி ஹரிகுணதிலக்க. அவருடைய பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது.

அதே சமயத்தில், வன்னி வான் பரப்பில் பறந்த சிங்கள விமானப் படையின் Сமிக்Т ரக போர் விமானத்தை, ஈழப் போராளிகளின் தானியங்கி பீரங்கிகள் சுட்டு வீழ்த்தியிருக்கின்றன.

இந்த நிலையில், நந்தவனத்திற்கு எரியூட்டுபவர்கள் கல்பாக்கம் பற்றிக் கவலைப்படலாமா?

அது கரையும் மணற்பாக்கமல்ல. கரையாத, குலையாத Сகல்Тபாக்கம்.

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு _ அமைதி என்கிறது இந்தியா.

இன்றைக்கு இந்தியாவின் இந்தக் குரலை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நார்வே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஈழ மக்களின் கோரிக்கைகளுக்கு என்ன தீர்வு என்று, அந்த நாடுகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.

இல்லை. ஆயுதம் ஆயுதம் என்கிறது சிங்கள அரசு. ஆனால், சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களையெல்லாம் ஈழப் போராளிகள் அப்பளமாக நொறுக்கிக் காட்டுகிறார்கள். எனவே, போர்முனையில் அவர்களை வெற்றி கொள்ள முடியாது என்பதால்தான், ஈழப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று பல்வேறு நாடுகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

Сபயங்கரவாத இயக்கம்Т என்று எந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரிட்டன் தடை விதித்ததோ, அதே பிரிட்டன் ஒரு நன் முயற்சியைத் தொடங்கி இருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரு குழுவை அமைத்திருக்கின்றன.

சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் சமரசத்திற்கு முயலும் நார்வே நாடு உள்பட மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளை அந்தக் குழு அழைக்கிறது. முத்தரப்பு மாநாட்டை நடத்தப் போகிறது.

இனப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு விரும்புகிறது. இப்படி காற்று திசை மாறி வீசத் தொடங்கி இருக்கிறது. எனவே, சிங்கள அரசு ССஐயோ! இலங்கையைக் துண்டாட அமெரிக்கா சதி, பிரிட்டன் சதி! என்று புதிய புலம்பலை ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சதி முறியடிக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி? இந்தியாவின் யோசனையை ஏற்று அமைதியாகப் பேசி, அதிகாரப் பகிர்வு பற்றி அறிவிக்க வேண்டும்.

- குமுதம் ரிப்போர்ட்டர்

рооропрпВ
23-05-2007, 05:43 AM
சுட்டி தகவலை இங்கே போட்டமைக்க நன்றி!!