PDA

View Full Version : பைத்தியக்காரன்



நிலா
14-05-2003, 10:56 PM
இப்பொழுதெல்லாம்
சோதனை எனக்குச் சுவாசமாகிவிட்டது
வேதனை வாடிக்கையாகி விட்டது
இழப்புகளும் இறுமாப்படைய வைக்கின்றன
என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
என் உணர்வை உலுக்குவதில்லை
யார் எந்தன் தன்மானத்தை
உரசிப்பார்ப்பினும் கோபம் வருவதில்லை
காத்திருக்கும் காதலி
என்னைக் கவரவில்லை
சூரிய விழிப்பு,தூக்கங்கள்
வேறுபாட்டைத் தெரிவிப்பதில்லை
பசிக்கும்,உறக்கத்திற்கும்
வித்தியாசம் உணர்வதில்லை
கலவரங்கள் என்னைக் கலவரப் படுத்துவதில்லை
பாதிப்புகளும் என்னால் பணிவாய் ஏற்கப்படுகின்றன

ஆனாலும்(அதனால்தானோ)
என்னைச் சங்கிலியால் பிணைத்து
கம்பிக் கதவுகளுக்குள் வைத்துள்ளதேன்?

poo
15-05-2003, 07:08 AM
அருமை அருமை நிலா.... இப்படியெல்லாம் எழுதி அடிமனதை தொடுகிறீர்கள்!!!

rambal
15-05-2003, 10:48 AM
அழகான கவிதை..
இந்த அவலத்தை அழகாய் சொல்லிய நிலாவிற்கு என் வாழ்த்துக்கள்..

பைத்தியகாரன்
15-05-2003, 04:58 PM
நிலாவே கவிதை நிலாவின் கவிதை பற்றி கேட்க வேண்டுமா?
அழகு

Nanban
16-05-2003, 09:13 AM
யார் எந்தன் தன்மானத்தை
உரசிப்பார்ப்பினும் கோபம் வருவதில்லை


தன் நிலை மறந்தவன் மட்டுமல்ல
தன் நிலை உணர்ந்தவனுக்குக் கூட
தன் மானம் இருப்பதில்லை....

நாம் எல்லோரும் விலங்கிடப்படாமலே
விலங்குகளாய் திரிவதனால்,
விலங்கு மனமில்லாத மனிதனை
விலங்கிட்டு பத்திரப்படுத்தினோம்....

நிலா
16-05-2003, 11:53 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

Narathar
17-05-2003, 03:57 AM
அருமையான கவிதை!
வாழ்த்துக்கள்