PDA

View Full Version : மனிதன் என்று விளங்கியது.lolluvathiyar
22-05-2007, 04:04 PM
மனிதன் என்று விளங்கியது.

பறவைகள் பறந்து விசா இல்லாமல் எந்த தேசத்துகூட பறந்து செல்லும்
நான் ஆறு அறிவு படைத்த மனிதன் என்று இருமாப்புடன் உலாவினேன்
அப்படி இருக்க தான் எல்லாம் வேதமும் சொல்லுச்சாம்.

இல்லையடா, நீ இந்தியன் என்று கூறி ஒரு வரை படம் வரைந்து அதன் பிரஜை என்று
கூறி அதை போற்றினால் நாட்டு பற்றுடையவன் என்று பெயரிட்டனர் சிலர்.

ஆம் நான் இந்தியன் என்று இருமாப்புடன் வந்தே மாதிரம் என்று கத்தி போராடினேன்.

இல்லைடா நீ ஹிந்து என்றார்கள் சிலர்.
சில ஹிந்துகளை மதமாற்றம் பன்னிவிட்டார்களாம் என்று கிரிஸ்டியனை வெறுக்க வைத்தார்கள் சிலர்.
கோடி ஏக்கரா உள்ள நாட்டில் ஒரு ரெண்டே ஏக்கராவை காட்டி இது ராமஜன்ம பூமி என்று கூறி முஸ்லீமையும் வெறுக்க வைத்தார்கள் சிலர்.

நீ திராவிடன் உனக்கு இங்கே மட்டும் தான் வேலை என்று கூறி என்னை தென்னகத்தில் தங்க வைத்தார்கள் சிலர்.
ஆரியன் சகவாசம் வேண்டாம் ஆரியன் தெய்வம் வேண்டாம் என்று நம்ப வைத்தார்கள் சிலர்.

அது போதாது என்று என்னை தமிழன் என்று ரகம் பிரித்தார்கள் சிலர்.
கன்னடர், தெலுங்கர், மலையாளை திராவிடனாலும் அவர்களை வெறுக்க வைத்தார்கள் சிலர்

சரி தமிழன் என்று தமிழ் நாட்டில் சந்தோசமாக இருக்கலாம் என்றால்.
கோவை தமிழா சிறந்ததா மதுரை தமிழ் சிறந்ததா என்று வாக்குவாதம் பண்ணி நான் கோவை தமிழன் என்ற காலரை தூக்கி கோவையிலே கொட்டாரமடித்தேன். தெண்தமிழகத்தாரை வெறுக்க வைத்தார்கள்.

போதுமா, கல்லூரியில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மானவர்களுக்கு ஆகாதே
கணினி துரை மானவன் காமர்ஸ் துரை மானவியை சைட் அடித்தால் சண்டை வருதே.

நீ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவன் என்று புதிய மதத்தை எனக்கு புகுத்தினார்கள்.

பக்கத்து ஊருகாரங்க எங்க ஊர் வாய்காலை இரவில் வெட்டியதால் அந்த ஊர்காரரிடம் சண்டை.

எங்க ஊரில் வேறு சாதி பையன் எங்க சாதி பெண்ணை காதல் செய்தானாம்.

கோபம் தலைக்கேறியது, யாருடா அவன்
காட்ட வித்து கள்ளு குடித்தாலும் நான் ..... நிருபிக்க
வீச்சரிவாளோட புரப்பட்ட எங்கள் சாதி படை, இரு சாதியிலும் பல பெண்களை விதவை ஆகி விட்டோம்.

எங்க சாதி தான் ஆனா எங்க தெருவில் குப்பை கொட்டியதால் அடுத்த தெருவுக்கு போக்கு வரத்து கிடையாது.

இந்த பிளவு போதுமா? பத்துமா?

ஒரே சாதினாலும் குலம் வேற அல்லவா, முக்குக்கு ஒரு கோவில் கட்டியாச்சு.
ஒரே குலம் என்றாலும் சாமி வழிபாடு வேற வேற.
அபிசேகம பண்ண ஒரு சாமி, கிடா வெட்ட ஒரு சாமி.

என்கிருந்து எங்க வந்துட்டோம்னு பாருங்க.

நீங்களே சொல்லுங்க ஐயா, அங்கங்க காரியம் ஆவனும்னா
காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்டு, ஆதிமுகா, திமுகா
இப்படி ஏதாவது சாதியில் சாரி கட்சியில இருந்தா தானுஙக் ஆகும்
அப்ப தான் நம்மள கண்டு ஊர்ல நாலு பேரு பயபடுவாங்க.
எந்த கட்சியில் இல்லீனா சொத்த புடுங்கிருவாங்கப்பா

இத்தோட நிப்பமுங்களா, பக்கத்து வீட்டுகாரன் நாய் எங்க வீட்டு மாட்ட கடிச்சு, நான் அவங்க நாய அடிச்சு, சண்டை முத்தி, இப்ப பேச்சு வார்த்தை இல்லை

பக்கது நாடு பகை, ஆரியர்கள் ஆகாது, பக்கத்து மாநிலம் கூடாது,
வேற்று மொழி எனக்கு அலர்ஜி, மற்ற மதங்கள் ஒத்துக்காது,
வேற சாதி ஏரியாவுக்கே போக மாட்டோம். எங்க சாதியில குலப் பிரச்சனை பக்கத்து தெரு, பக்கத்து வீடு எல்லாம் பகையா?


இப்படி என்னால மனித வர்கத்த எத்தனை கூறு போட முடியுமோ அத்தனை கூறு போட்டுட்டேன்.

சரி வீட்டில் மட்டும்தான் ஒற்றுமை இருக்க முடியுமா? வீடு தான் சொர்கமா.

எனக்கு வயசாயிருச்சு இனி பசங்களுக்கு சொத்த பிரிச்சு கொடுக்கலாம்னு முடிவு செய்தேன்.
யாருக்கு எந்த பாகம்னு சண்டை வந்து ஆளாலுக்கு ஒரு திசை போயிட்டாங்க.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி, ஒரே குலம், அட ஒரே வியிற்றில் பிறந்தவர்கள் கூட செத்து போன 4 செண்டு பாட்டன் சொத்த பிரிக்க சண்டை போட்டு கோர்ட்டு கேசுனு 20 வருசமா நடக்கராங்கப்பா?

சோர்ந்து போச்சு.
இப்பதான் ஆண்மீகம் புரிந்தது, வேதம் புரிந்தது, கீதை புர்ந்தது.

நாடு, மதம், மொழி, இனம், சாதி, தகுதி, குலம், சொந்தம், சொத்து எல்லாம் மறைந்து
மனிதன் என்றால் என்ன என்று விளங்கியது.


நண்றி

முற்றும்

இது எனது முதல் கதை

அன்புரசிகன்
22-05-2007, 04:12 PM
உண்மையை புட்டு புட்டு வைச்சிருக்கீங்கக.
நன்றாக இருந்தது.

அக்னி
22-05-2007, 04:30 PM
கதை என்பதற்குப் பதிலாக "சீர்திருந்த வேண்டிய சமுதாய சீர்கேடுகள்" என்று பதிவதே பொருத்தமானது என்று நினைக்கின்றேன்.

ஏன் என்றால் இங்கு தரப்பட்டவற்றை கதை என்று படித்துவிட்டு ஓரம்கட்டி விடுவார்களோ என உள்ளூர சிறு அச்சம்.

அறிஞர்
22-05-2007, 04:37 PM
இது கதையா...

சீர்த்திருத்த கட்டுரை போல் இருக்கிறது.......

நாடு என்றுதான் திருந்துமோ.... அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

lolluvathiyar
25-05-2007, 08:36 AM
அனைவருக்கும் நண்றி

அமரன்
25-05-2007, 09:47 AM
என்ன வாத்தியாரே. இப்புட்டுத் திறமையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கீரே. இன்னொரு சமூககதையை எழுதுறது. முதல்ல இக்கதைக்கு எனது நன்றிகள். வாழ்த்துச் சொல்லமாட்டேன். ஏன்னா பலர் சொல்லிப்புட்டாங்க.

ஷீ-நிசி
25-05-2007, 10:24 AM
அடடா அருமை வாத்யாரே! இப்படியான காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும் கண்ணிழந்த மனிதனாய்தானே நாம் வாழ்கிறோம்!

நல்ல உபயோகமான கட்டுரை....

பென்ஸ்
25-05-2007, 02:57 PM
வாத்தியாரே...

சிலநேரத்தில் மனசு கேக்காது... உன்மையை சொல்லிடனும்னு தோனும்...
உன்மை கசக்கும் என்றலும், நான் அதை நெல்லிகனிகடிப்பது போல தான் நினைக்கிறென்... தண்ணிர்குடிக்கும் போதுதானே தெரியும் அதன் இனிமை...

மன்றத்தில் நீங்க வந்து பதியும்போது எல்லாம் உங்க பதிவுகளை கவனமா பாப்பேன், எதாவது இடக்கு முடக்கா பதிக்கிறங்களா என்று, பல முறை உங்களுக்கு சின்ன சின்ன கொட்டல்களும் கொடுத்திருக்கிறேன்....

மத்தியஸ்தம் பண்ணியபோது பாராட்டில் தொடங்கி....
இன்று....
கதையாய் ஒரு கட்டுரை... இதற்கு அன்பின் அரவணைப்புதான்....
உங்கள் வார்த்தைகள் கூர்மையாகவும், செம்மையாகவும் ஆகிவருவது மறுக்க முடியாதது... எழுத்துபிழைகள் இன்னும் இருக்கு, அது மாறவேண்டும்.

நீங்க சிறுகதை வடிவில் ஏன் கதைகள் எழுதகூடாது...
முயற்சியுங்கள்....
வாசிக்க நான் காத்திருக்கிறேன்....

தீபா
25-05-2007, 03:18 PM
பிரிவுகளில் இத்தனை பிரிவா?
லொள்ளு வாத்தியார்
அல்ல நீங்கள்
நல்ல வாத்தியார்
பாடங்கள் சொல்லும்
அறிவு வாத்தியார்.
இத்தனை யுகம் கண்டபின்னும்
தீரா பிரச்சனைகளை
புட்டு புட்டு வைக்கும்
புட்டு வாத்தியார்...
வாழ்க வளர்க

lolluvathiyar
29-05-2007, 10:19 AM
பெண்ஸ் இந்த திரி கதை பகுதியில் இருக்கலாமா?
இல்லை வேறு தகுந்த பகுதிக்கு மாற்ற தகுந்ததா

இன்பா
30-05-2007, 06:47 AM
உங்களை இங்கு சற்று வித்தியாசமாக பார்ப்பதில் மகிழ்ச்சி வாத்தியாரே...
உங்கள் கருத்துக்கள் மிகவும் உண்மைக் கூற்றாக இருக்கிறது...

என்ன செய்வது அதிகாலத்திலிருந்தே இப்படித்தான் மனிதனை பிறிந்த்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்....

lolluvathiyar
03-06-2007, 08:29 AM
உங்களை இங்கு சற்று வித்தியாசமாக பார்ப்பதில் மகிழ்ச்சி வாத்தியாரே...


நண்றி வரிபுலி
நீ பார்ப்பது என் இன்னொரு முகம்
ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கும்

lolluvathiyar
19-06-2007, 08:07 AM
வாத்தியாரே...
மன்றத்தில் நீங்க வந்து பதியும்போது எல்லாம் உங்க பதிவுகளை கவனமா பாப்பேன், எதாவது இடக்கு முடக்கா பதிக்கிறங்களா என்று, பல முறை உங்களுக்கு சின்ன சின்ன கொட்டல்களும் கொடுத்திருக்கிறேன்....


உங்கள் கொட்டல்கள் தானே எங்களை முன்னேற்றுகிறது.

கோழி மிதித்து குஞ்சு முடமாகாது

சிவா.ஜி
19-06-2007, 08:20 AM
வாத்தியாருக்கு ரவுசு விட மட்டும்தான் தெரியுமென்று நினைத்தால் இந்த போடு போட்டிருக்கிறீரே. ஒவ்வொண்றும் அப்பட்டமான நிர்வாண நிஜங்கள் இதை படித்து யார் திருந்துவார்கள் என்று பலாபலன்களை எதிர்பார்க்காமல் இப்படிப்பட்ட சாட்டையடிகளை வீசிக்கொண்டேயிருக்க வேண்டும். படிக்கும்போது பாதிக்காமலா இருக்கும். எல்லாம் கோணலாக இருந்தும் நேராகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். பாராட்டுக்கள் ஐயா.

lolluvathiyar
20-06-2007, 04:17 PM
லொள்ளு வாத்தியார்
புட்டு வாத்தியார்...


கவிதை மூலமாகவே வாழ்த்து கூறிய உங்களுக்கு என் இனிய நண்றி

ஓவியா
20-06-2007, 05:09 PM
தங்கள் சிந்தனை எங்களை சிந்திக்க தூண்டுகிறது. மிகவும் அருமையான பதிவு

பல நல்ல கருத்துக்களை பிரித்து அடுக்கி எழுதியதால் கட்டூரை அனைவரையும் கவருகின்றது.

படித்தேன், ரசித்தேன், பாராட்டுகிறேன்.


நன்றி.
தொடருங்கள்.

lolluvathiyar
19-07-2007, 06:21 AM
முதல்ல இக்கதைக்கு எனது நன்றிகள். வாழ்த்துச் சொல்லமாட்டேன். ஏன்னா பலர் சொல்லிப்புட்டாங்க.
அமரன் உங்கள் விமர்சனங்கள் என்றுமே வித்தியசமாக இருகிறது, நன்றி

leomohan
23-07-2007, 12:39 PM
அற்புதம் வாத்தியாரே. மனக்குமறல்களை கொட்டி தீர்த்துவிட்ட கதை. வாழ்த்துக்கள்.

Raaj
23-07-2007, 12:48 PM
முதலில் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
தனிமனிதர்களின் குழுமம்தான் ஒரு சமூகம் ஆக சமூகத்தை திருத்துவதைவிட குறிப்பிட்ட மனிதரை திருத்துவோம்
முதலில் எம்மில் உள்ள தவறுகளை இனங்கண்டுகொள்வோம் எம்மை திருத்துவோம் எம்மை தொடர்கின்ற வருங்கால சமூகத்தை ஒரு ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம்

மள்ளர்
23-07-2007, 12:50 PM
இப்பவாவது மனித நேயத்தை ஒப்புக்கொள்கின்றனரே!வாத்தியாருக்குத்தான் அது போய்ச்சேரும்.

leomohan
23-07-2007, 02:13 PM
முதலில் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
தனிமனிதர்களின் குழுமம்தான் ஒரு சமூகம் ஆக சமூகத்தை திருத்துவதைவிட குறிப்பிட்ட மனிதரை திருத்துவோம்
முதலில் எம்மில் உள்ள தவறுகளை இனங்கண்டுகொள்வோம் எம்மை திருத்துவோம் எம்மை தொடர்கின்ற வருங்கால சமூகத்தை ஒரு ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம்

பொன்னான வார்த்தைகள். வாழ்த்துக்கள் திவ்யா

மீனாகுமார்
23-07-2007, 04:45 PM
கசப்பான உண்மைகளை அப்படியே பிறழாமல் கொடுத்து இருக்கின்றீர்கள்.

நாம ரொம்ப யோசிச்சா வாழவே முடியாது ன்னு யாரோ சொன்னது ஞாபகம். உழுதவன் கணக்கு பார்த்தா உழக்க கூட மிஞ்ஞாது என்பது பழமொழி..

அருமையான துவக்கம் வாத்தியாரைய்யா... நடத்துங்க...

விகடன்
26-07-2007, 04:31 AM
இது எனது முதல் கதை

முதல் கதை இல்லை வாத்தியாரே. பலருக்கு தேவைப்படும் உபதேசம் இது. இந்தப் பிரிவினைகளால் போட்டி ஒன்று உருவாகி முன்னேற்றப்பாதையில் அனைவரையும் சீர்ப்படுத்துமாகில் அவற்றை வரவேற்கலாம். ஆனால் மாறாக முன்னேற்றப்பாதைக்கு 20% வித்திட்டால் பொறாமைக்கும் அழிவிற்குமல்லவா 80% வித்திடுகிறது.