PDA

View Full Version : வாழ்க்கை



நிலா
14-05-2003, 10:44 PM
சொல்லாமல் சொல்லும்
சொல்லின் பொருள்போலாகும்!
புரிந்ததுபோல் நிமிர்ந்திருப்பின்
புதிராய் புன்னகைக்கும்!
வாழுகின்ற நிலைக்காய்
சேர்ப்பார் செல்வம்தனை
செல்வம் தனித்து நிற்க
வாழ்வு முடிந்து போகும்!
உரிமையாய், உயர்வோரைக்
கீழிறக்கும் வீணருக்கும் வாழ்வு தரும்!
அடுத்த நொடி உணராத கூட்டம்
அடுக்கடுக்காய் தவறுகள் செய்வதில் நாட்டம்!
மண்ணோடு மறைவதற்கே
பிறவியென்பது போலே மன்றாடும் ஓட்டம்!
ஆராய எண்ணும்போதே முடிந்திருக்கும்
அதற்குப் பெயர்தான் வாழ்க்கை!!!

poo
15-05-2003, 07:05 AM
விளக்கம் அருமை........

இன்னும் வளரட்டும் நிலா!!

Nanban
15-05-2003, 07:31 AM
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிட்டா வாழ்க்கை -
எத்தனை அருமையானது.

வீணிலே, எதைஎதையோ தேடித் தேடி ஓடி ஓடி காலம் கழிந்த பின்னர் திரும்பிப் பார்த்தால், வாழ்க்கை முடிந்திருக்கும்.

பாராட்டுகள் நிலாவிற்கு.

karikaalan
15-05-2003, 09:07 AM
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு" -- வள்ளுவர்.

rambal
15-05-2003, 10:57 AM
ஒரே ஒரு முறை வாய்க்கும் வாய்ப்பு வாழ்க்கை
அருமை நிலா அவர்களே.. பாராடுக்கள்

chezhian
15-05-2003, 12:12 PM
வாழுகின்ற நிலைக்காய்
சேர்ப்பார் செல்வம்தனை....

செல்வம் தனித்து நிற்க
வாழ்வு முடிந்து போகும்!

*********************


உயர்வோரைக் கீழிறக்கும்!

வீணருக்கும் வாழ்வு தரும்!


உன்னத முரண்கள்....
உண்மையில் இதுவே வாழ்வின் முறைகள்!

பாராட்டு நிலா அவர்களே... தொடருங்கள்...

நிலா
16-05-2003, 11:52 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

Narathar
17-05-2003, 04:27 AM
வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்ந்து தான் பார்ப்போமே?

puppy
08-01-2004, 08:45 PM
உண்மை வரிகள்...தெரிந்தும் இன்னமும் அப்படியே தான் நாம்...பாராட்டுக்கள் நிலா

விகடன்
06-06-2008, 06:11 PM
வாழ்க்கையின் சுருக்கத்தை அழகாக கவிதையில் சொல்லிவிட்டீர்கள்.
தத்துவம் சொல்லவும் ஆரம்பித்திருக்கிறீர்காள்

அழகான கவிக்கு பாராட்டுக்கள்.

இளசு
07-06-2008, 12:08 PM
சக்கரமா?
நூலேணியா?
பரமபதமா?
நூற்கண்டுச் சிக்கலா?
ராஜபாட்டையா?
கனவுமேடையா?


வாழ்க்கை என்றால் என்ன?
தேடல் என்பார் சிலர்..
தேடல் என்றால் என்ன?
தேடிக்கொண்டிருக்கிறேன் தேடலை!

நிலாவையும்தான்..? எங்கே நம் நிலா?

பூமகள்
05-07-2008, 02:32 PM
பெரியண்ணாவின் பின்னூட்டத்துக்கு பின்
சொல்ல ஏது வார்த்தைகள்??!!

பேச்சிழந்து.. பாராட்டி மகிழ்கிறேன்..!! :)