PDA

View Full Version : உலக மாணவர் அமைப்புக்கு வேண்டுகோள்



சுட்டிபையன்
22-05-2007, 11:42 AM
இந்த கடிதத்தை பல்கலைகழகத்தில் படிக்கும் மன்ற உறவுகள் உங்கள் உங்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புக்கு அனுப்புங்கள்
அத்துடன் எம்பிமார்,உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் போன்றவருக்கும் அனுப்புங்கள்

http://www.eelampage.com/d/p/2007/MAY/20070522007.jpg

சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல்

- யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள்

- பாடசாலை மாணவர்கள் 8 பேர்

சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச் சாவடி அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 4 ஆம் நாள் நள்ளிரவில் 4 பாடசாலை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கண்முன்பே ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். மாணவர்களைக் கடத்தியோர் 20-க்கும் மேற்பட்ட உந்துருளிகளில் சிவில் மற்றும் இராணுவ உடைகளிலேயே சென்றுள்ளனர்.

அதே மே 4 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு ஆயுதம் தாங்கிய சில நபர்கள், யாழ். பல்கலைக்கழக பாதுகாவலரைத் தாக்கி, பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை கிழித்தெறிந்து நாசமாக்கியுள்ளனர்.

மே 10 ஆம் நாள் மாணவர்கள், கல்வி சமூகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் என 320க்கும் மேற்பட்டோர் பட்டியலை வெளியிட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலானது சில பாடசாலை மாணவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் முதன்மையான பாடசாலை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பாடசாலை மாணவர்கள் 16 பேர், 8 பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக சிவில் உடைதரித்த ஆயுதம் தாங்கிய நபர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளானது யாழ்ப்பாண கல்விச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

நாம் அமைதி வழியில் முன்னெடுத்து நடத்துகின்ற அனைத்துப் போராட்டங்களுமே வன்முறையால் ஒடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த எச்சரிக்கைப் பிரசுரத்திலோ, கல்விசார் நடவடிக்கைகளுக்கு அப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டாலும் பல்கலைக்கழகமே மூடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாம் சுதந்திரமாக எதுவித இடையூறுமின்றி கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான எமது உரிமைக்காக அனைத்துலக சகோதர, சகோதரிகள் குரல் கொடுக்க வேண்டுகிறோம். யாழ்ப்பாணத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மாணவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு சிறு நடவடிக்கையைக் கூட சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

எமது அடிப்படை உரிமைகளுக்காக நாங்கள் பேச முடியாதவர்களாக உள்ளோம்.

எங்களுக்காக தயவு செய்து நீங்கள் குரல் கொடுங்கள்

என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

அக்னி
22-05-2007, 11:50 AM
சுட்டி கடிதம் தெளிவாக இல்லையே. தெளிவாக பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தால், நல்லது.

சுட்டிபையன்
22-05-2007, 11:59 AM
அதை உங்கள் கணனியில் சேமித்து பேரிதாக்கம் செய்து பார்வையிடுங்கள் அக்கினி, அதுதான் அதன் அளவு