PDA

View Full Version : நரகம்



shangaran
22-05-2007, 08:14 AM
உன் முகம் பார்க்கா நாட்களும்,
உன் குரல் கேட்கா நொடிகளும்,
உன் அரவணைப்பில்லா அந்திப்பொழுதுகளும்,
நீ இல்லா என் தனிமையும்,
நரகமடி எனக்கு.

அமரன்
22-05-2007, 03:21 PM
காதல் கவிதையா. காதலனின் மனவோட்டத்தை கவிதையாக கூறிய உமக்கு எனது பாராட்டுக்கள். தொடரட்டும் உமது கவிப்பயணம்.

shangaran
23-05-2007, 04:47 AM
கவிதையை வாசித்து விமர்சித்ததற்கு மிக்க நன்றி அமரன்.

மயூ
23-05-2007, 05:31 AM
பாராட்டுக்கள் நண்பரெ... உணர்ந்து எழுதியதாகத் தெரிகின்றது..!

shangaran
23-05-2007, 05:35 AM
ஆமாம் நண்பரே!

ஷீ-நிசி
23-05-2007, 06:13 AM
இந்தக் கவிதை நரகத்திலிருந்து எழுதப்பட்டதா?! அல்லது சொர்க்கத்திலிருந்தபோதா.... அருமை அன்பரே!

shangaran
23-05-2007, 06:25 AM
காதலெனும் நரக சொர்கத்திலிருந்து எழுதப்பட்டது.
ந*ன்றி.

lolluvathiyar
23-05-2007, 06:28 AM
என்ன சங்கர் அனுபவம்
பேசுது போல இருக்கு

shangaran
23-05-2007, 07:07 AM
ம்ம்ம்.
நம் அனுபவதிலும் பேசலாம், பிறர் அனுபவத்தையும் பேசலாம்.

சிவா.ஜி
24-05-2007, 10:26 AM
இது காதலனுக்கு சரி, இதுவே கனவனுக்கு நரகம் சொர்க்கமாகுமல்லவா(இதே காதலியே மனைவியானாலும்!)

shangaran
24-05-2007, 10:59 AM
ஆமாம், பெரும்பாலும் திருமணத்திற்குபின் காதல் கசந்து விடுகிறது, ஏனோ தெரியவில்லை.

வெற்றி
24-05-2007, 11:13 AM
இது காதலனுக்கு சரி, இதுவே கனவனுக்கு நரகம் சொர்க்கமாகுமல்லவா(இதே காதலியே மனைவியானாலும்!)

அருமையான கவிதை.,,,,அதற்க்கு சரியான கேள்வி...
இது போல் சின்ன புள்ள தனமாக கேட்க கூடாது..அப்பறம் நான் எதுக்கு இருக்கேன்????

மேற்படி ஆசாமி 100 வயசு வரை வாழ்ந்துட்டு ஆயுசு முடிஞ்சி மேலே போனான்...
எமராசா சொன்னாறு " உனக்கு சொர்க்கம் கிடச்சு இருக்குன்னாரு..."
நம்மாளு கேட்டான் " எனக்கு பத்து வருசம் முந்தி செத்த எம்பொண்டாட்டி எங்கே?ன்னான்"
எமராசா சொன்னாரு " இங்கே தான் சொர்க்கதிலேயே இருக்கான்னு""
பதறிபோய் சொன்னான் " ஐயா ,,,ராசா..உனக்கு புண்ணியமா போகும் என்னை நரகத்துக்கே அனுப்பிச்சுடுய்யா"ன்னு...

shangaran
24-05-2007, 11:25 AM
ஐயா, மொக்கச்சாமி உங்கள் பதிலை படித்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.