PDA

View Full Version : ஹைக்கூ 04 - கல்வெட்டு



meera
22-05-2007, 05:46 AM
மனிதன் மரித்தபோதும்
மாளாத ஜாதி
கல்லறை கல்வெட்டில்..............

ஷீ-நிசி
22-05-2007, 05:58 AM
அருமை மீரா!

என்ன ஆச்சு! ரொம்ப நாளா காணலையே மீரா! எப்படி இருக்கீங்க!

மதி
22-05-2007, 06:01 AM
நல்ல கவிதை..பாராட்டுக்கள்..

meera
22-05-2007, 06:07 AM
அருமை மீரா!

என்ன ஆச்சு! ரொம்ப நாளா காணலையே மீரா! எப்படி இருக்கீங்க!


நலமா நிஷி?
பரிட்சைக்காக கொஞ்சம் உழைத்தேன் நிஷி.(நிஜமா படிச்சேன் பா நம்புங்க).:sport-smiley-018:

வாழ்த்துக்கு நன்றி.

meera
22-05-2007, 06:09 AM
நல்ல கவிதை..பாராட்டுக்கள்..

பாராட்டுக்கு நன்றி ..

ஆதவா
22-05-2007, 06:19 AM
எனக்கு புரியும் சக்தி குறைவு... கவிதையை விளக்கினீர்களேயென்றால் புரியும்....

பிறகு விமர்சனம்...

ஓவியன்
22-05-2007, 06:23 AM
ஆமாம் மீரா!

உண்மையா நடந்த சம்பவம் ஒன்றை இங்கே தருகிறேன், எனக்கு தெரிந்த ஒரு நண்பர் எங்கள் வீட்டில் யாரோ ஒருவருடைய நினைவு மலரில் அவரது பெயருக்கு கீழே சாதி போட்டு இருப்பதைப் பார்த்து 'நாம செத்தாலும் விட மாட்டாங்க போலே" என்று கவலைப் பட்டார்.

கவி வரிகள் அருமை, வாழ்த்துக்கள்.

meera
22-05-2007, 06:25 AM
எனக்கு புரியும் சக்தி குறைவு... கவிதையை விளக்கினீர்களேயென்றால் புரியும்....

பிறகு விமர்சனம்...
நன்று ஆதவா,
கல்லறையில் மறைந்தவர் பெயர் போடுவார்களே அதிலும் ஜாதியின் பெயரை சேர்த்து போடுவது வழக்கம் இல்லையா அதைதான் சொன்னேன்.

எடுத்துக்காட்டு:"பிரதாப முதலியார்".

இதில் முதலியார் என்பது ஜாதியின் பெயர் தானே?

ஷீ-நிசி
22-05-2007, 06:27 AM
எனக்கு புரியும் சக்தி குறைவு... கவிதையை விளக்கினீர்களேயென்றால் புரியும்....

பிறகு விமர்சனம்...

ஆதவா, ஆச்சரியமாக இருக்கிறது.. புரியவில்லை என்பது...

ஒரு கல்லறையின் கல்வெட்டில் இறந்தவரின் பெயர் பொறிக்கபட்டிருக்கும்.. வேலுநாயக்கர், செட்டியார் ராமசாமி இப்படி பெயர்களோடு சேர்ந்தேயிருக்கும் அவர்களின் ஜாதி, அவன் மரித்தும் அவன் பெயரில் தொக்கிக்கொண்டிருக்கும் ஜாதி இன்னும் இறக்காமல் அக்கல்வெட்டில் இருக்கிறது...

இது நான் விளங்கிக்கொண்டது... இனி மீராதான் சொல்லவேண்டும்...

ஷீ-நிசி
22-05-2007, 06:28 AM
நலமா நிஷி?
பரிட்சைக்காக கொஞ்சம் உழைத்தேன் நிஷி.(நிஜமா படிச்சேன் பா நம்புங்க).:sport-smiley-018:

வாழ்த்துக்கு நன்றி.

நம்புறேன் மீரா! நம்புறேன்!

meera
22-05-2007, 06:28 AM
ஆமாம் மீரா!

உண்மையா நடந்த சம்பவம் ஒன்றை இங்கே தருகிறேன், எனக்கு தெரிந்த ஒரு நண்பர் எங்கள் வீட்டில் யாரோ ஒருவருடைய நினைவு மலரில் அவரது பெயருக்கு கீழே சாதி போட்டு இருப்பதைப் பார்த்து 'நாம செத்தாலும் விட மாட்டாங்க போலே" என்று கவலைப் பட்டார்.

கவி வரிகள் அருமை, வாழ்த்துக்கள்.

நன்றி ஓவியன்.

தங்களின் விமர்சம் நிதர்சன உண்மை.

அமரன்
22-05-2007, 06:34 AM
கல்லறை தோண்டிப் புதைக்கவேண்டிய ஜாதி கல்லறைகளில் விதைக்கப்படுவதை நினைத்து கண்ணீர் வுடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஹைகூ அருமை.
ஆதவன் உங்களுக்கு புரியவில்லை என்பது சும்மாதானே

namsec
22-05-2007, 06:34 AM
அருமையான கவிதை

ஆதவா
22-05-2007, 07:30 AM
உண்மையில் அதை நினைத்தேன்.. ஆனால் வேறுயேதும் இருக்குமோ என்ற அச்சமும் இருந்தது.. குறிப்பாக ஹைக்கூவிலிருந்து எப்போதுமே தள்ளி இருப்பவன் நான். அதனால் இந்த காரணம் நிகழ்ந்திருக்கலாம்.

மனிதர்கள் ஜாதியை ஏன் வளர்க்கிறார்கள்? தனக்குப் பின்னும் தன் வாரிசுகள் ஜாதியை விட்டு போய்விடக்கூடாது என்பதுவும் ஜாதிக்குண்டான அந்தஸ்து தவறிவிடக்கூடாது என்பதுவும் காரணம். இறந்தபிற்பாடும் இந்த நிகழ்வுகள் தொடருகிறது. ஜாதி என்பது எத்தனை கேவலமானது என்பதை மென்மையாக இந்த ஹைக்கூ சொல்கிறது.

இறந்த பின்னும் சாதி வளர்ப்பவர்கள், சாதி மேலே பயங்கரமான பற்று உள்ளவர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஹைகூ அருமை... சமூக சிந்தனையுள்ளது.. வாழ்த்துக்கள்.

தாமரை
22-05-2007, 05:59 PM
மனிதன் மரித்தபோதும்
மாளாத ஜாதி
கல்லறை கல்வெட்டில்..............

இதை இப்படியும் பார்க்கலாம் மீரா!

மனிதன் கீழே புதைக்கப்பட்டான்
மேலே ஜாதி புதைக்கப்பட்டது
கல்லறைக் கல்வெட்டு...

-----------------------------

பென்ஸ்
22-05-2007, 06:01 PM
இதை இப்படியும் பார்க்கலாம் மீரா!

மனிதன் கீழே புதைக்கப்பட்டான்
மேலே ஜாதி புதைக்கப்பட்டது
கல்லறைக் கல்வெட்டு...

-----------------------------
புதைக்கபடவில்லையே தாமரை..
பொறிக்கபட அல்லவா செய்யபட்டிருக்கிறது...

அக்னி
22-05-2007, 06:10 PM
திருவள்ளுவர் இன்றிருந்தால் ஹைக்கூவில் வந்திருக்குமோ திருக்குறள்..?

தொடர்க மீரா...

அல்லிராணி
22-05-2007, 06:11 PM
புதைக்கபடவில்லையே தாமரை..
பொறிக்கபட அல்லவா செய்யபட்டிருக்கிறது...

அதுதான் வித்தியாசமான பார்வை பென்ஸூ.

சுடுகாட்டிற்குப் போயும்
சாகவில்லை ஜாதி

என்கிறீர்கள் நீங்கள்.

ஜாதி சுடுகாட்டுக்கு போனது
செத்துப் போனதோ?

என்பது இன்னொரு பார்வை.

சுடுகாட்டு ஜாதியை வச்சு இட ஒதுக்கீடு பெறமுடியாது. இரட்டை டம்ளர் போடமுடியாது.

சமரசம் உலாவும் இடத்தில்
ஜாதி
கல்லறைக் கல்வெட்டு

என்றும் எழுதலாம்.

உன் கல்லறையில்
ரோஜா நட வந்தேன்
எனக்கு முன்னே
யாரோ
ஜாதியை நட்டிருக்கிறார்கள்

என்றும் எழுதலாம்.. பார்வை வித்தியாசம்தான்

மனோஜ்
22-05-2007, 06:16 PM
ஆகா ஹைகூ அருமை
சாதிவெறியை கல்லறையிலும் விடுவதில்லை மனிதர்கள்

ஓவியா
23-05-2007, 03:03 PM
மனிதன் மரித்தபோதும்
மாளாத ஜாதி
கல்லறை கல்வெட்டில்..............

சூப்பர் ஹைக்கூ.

குக்கூனு ஒரு கூவு கூவிட்டு ஓடி போய்ட்டேலே!!!

.........................................................................................

பின்னூட்டங்கள் அருமையோ அருமை.. நன்றி நண்பர்களே.

meera
24-05-2007, 11:14 AM
அதுதான் வித்தியாசமான பார்வை பென்ஸூ.

சுடுகாட்டிற்குப் போயும்
சாகவில்லை ஜாதி

என்கிறீர்கள் நீங்கள்.

ஜாதி சுடுகாட்டுக்கு போனது
செத்துப் போனதோ?

என்பது இன்னொரு பார்வை.

சுடுகாட்டு ஜாதியை வச்சு இட ஒதுக்கீடு பெறமுடியாது. இரட்டை டம்ளர் போடமுடியாது.சமரசம் உலாவும் இடத்தில்
ஜாதி
கல்லறைக் கல்வெட்டு

என்றும் எழுதலாம்.

உன் கல்லறையில்
ரோஜா நட வந்தேன்
எனக்கு முன்னே
யாரோ
ஜாதியை நட்டிருக்கிறார்கள்

என்றும் எழுதலாம்.. பார்வை வித்தியாசம்தான்


சுடுகாடு கூட ஜாதிக்கு ஒன்றாய் இருப்பது தெரியாதா அல்லியக்கா.

வெற்றி
24-05-2007, 11:15 AM
அப்படி போடு,,,
மிக யதார்த்தம்...மிக நுண்ணிய கரு..

meera
24-05-2007, 11:17 AM
இதை இப்படியும் பார்க்கலாம் மீரா!

மனிதன் கீழே புதைக்கப்பட்டான்
மேலே ஜாதி புதைக்கப்பட்டது
கல்லறைக் கல்வெட்டு...

-----------------------------

செல்வா அண்ணா,தங்களின் கருத்துக்கு எனது பதிலும் பென்ஸின் கருத்தை ஒத்ததே.

இன்கே ஜாதி புதைக்கப்படவில்லை,வளர்க்கப்பட்டிருக்கிறது.

தாமரை
24-05-2007, 11:33 AM
செல்வா அண்ணா,தங்களின் கருத்துக்கு எனது பதிலும் பென்ஸின் கருத்தை ஒத்ததே.

இன்கே ஜாதி புதைக்கப்படவில்லை,வளர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த ஜாதி போர்டால் புதைக்கப் பட்ட பிணத்திற்கு ஒரு பயணும் இல்லை. சமாதிக்கு வெளியே இருக்குறவன் தான் அதை உபயோகப்படுத்தறான்.

உன் ஜாதியை நீயே வெச்சுக்கோன்னு மத்தவங்க விட்டுட்டுப் போயிருக்கலாம் இல்லையா?

தாமரை
24-05-2007, 11:35 AM
சுடுகாடு கூட ஜாதிக்கு ஒன்றாய் இருப்பது தெரியாதா அல்லியக்கா.
ஜாதிக்கு ஒன்றாய் சுடுகாடு
ஆனால் எரிக்கப்படுவது
மனிதம்

தீபா
24-05-2007, 11:35 AM
மனிதன் மரித்தபோதும்
மாளாத ஜாதி
கல்லறை கல்வெட்டில்..............

மனிதன் மாளாதபோதும்
மரித்த ஜாதி
வாழ்க்கையில்.

துரத்திக் கொண்டு வரும்
சாதிமீனை தூண்டிலிட
மீனவக் குமரன்கள்
ஒருவனுமில்லை
மீன் துள்ளல்
அடக்கப்பட்டிருக்கிறது
ஆயின்
மீனவக்குப்பம்
சொல்லிக் கொடுக்கிறது
சாதிப்பாடம்.
உமது
ஹைக்கூ அருமை.

meera
24-05-2007, 11:38 AM
அந்த ஜாதி போர்டால் புதைக்கப் பட்ட பிணத்திற்கு ஒரு பயணும் இல்லை. சமாதிக்கு வெளியே இருக்குறவன் தான் அதை உபயோகப்படுத்தறான்.

உன் ஜாதியை நீயே வெச்சுக்கோன்னு மத்தவங்க விட்டுட்டுப் போயிருக்கலாம் இல்லையா?

அண்ணா,யுத்தம் ஆரம்பமா?

செத்தவனா சொன்னான்,எழுதுங்கள் என் கல்லறையில் ஜாதியின் பெயரையும் என்று. மத்தவங்க தானே அதை எழுதுவது. :icon_shok:

தாமரை
24-05-2007, 11:38 AM
சாதி நிழல் பூதம்
அதனை அழிக்க
ஆயுதங்கள் வேண்டாம்
ஒளி போதும்
அறிவு

தீபா
24-05-2007, 11:40 AM
சாதி நிழல் பூதம்
அதனை அழிக்க
ஆயுதங்கள் வேண்டாம்
ஒளி போதும்
அறிவு

அறிவென்ற
ஆயுதம்
ஆற்றலின்றி இருக்கே
அதனை ஒழிக்க..:icon_shok:

meera
24-05-2007, 11:41 AM
அந்த அறிவு ஒளியை தேடித்தானே அலைந்து கொண்டிருக்கிறது சமுதாயம்.

தாமரை
24-05-2007, 11:45 AM
அணுக்கரு பிளந்தாலும் ஒளி
அக்கரு இணைந்தாலும் ஒளி
ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும்
மாற்றி மாற்றி ஒளிரும்
ஆதவனுக்குத் தெரியுமிது
தென்றலே!
கருமாறினால்
உருமாறும்
ஒளியேறும்
அறிவு

shangaran
24-05-2007, 11:47 AM
மின்னல் வெட்டியது,
உயிர் போகவில்லை,
ஆனால், சொர்க்கம் தெரிந்தது,
அவள் முகத்தில் புன்னகை.

தீபா
24-05-2007, 11:50 AM
ஒளியேதும்
வெளியேறும்
எப்பொதெனில்
உருமாறா
கருமாற்றத்தினால்
அறிவு.

தீபா
24-05-2007, 11:52 AM
மின்னல் வெட்டியது,
உயிர் போகவில்லை,
ஆனால், சொர்க்கம் தெரிந்தது,
அவள் முகத்தில் புன்னகை.

இதென்ன
இடைக்கவிதை?
இதற்கெனத் தனித்திரி
வேண்டாமா?
இல்லை
இருந்தாலும்
இருப்பதிலென்ன லாபம்?

meera
24-05-2007, 11:57 AM
அணுக்கரு பிளந்தாலும் ஒளி
அக்கரு இணைந்தாலும் ஒளி
ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும்
மாற்றி மாற்றி ஒளிரும்
ஆதவனுக்குத் தெரியுமிது
தென்றலே!
கருமாறினால்
உருமாறும்
ஒளியேறும்
அறிவு

அண்ணா தங்கை சரண்டர்.தங்களுடன் போட்டி போட அவளால் இயலாது.:traurig001:

தீபா
24-05-2007, 11:59 AM
அண்ணா தங்கை சரண்டர்.தங்களுடன் போட்டி போட அவளால் இயலாது.:traurig001:

ஆயின்
நான் சரணில்லையே?
தென்றலெனும் பேர்தான்
புயலுக்கு மறுபக்கம் நான்
செல்வக் காற்று வீசட்டும்
தென்றல்காற்று போகுமோ
பார்ப்போம்?

தாமரை
24-05-2007, 11:59 AM
அறிவென்பது யாதெனில்
அனுபவத்தின் திரட்டு
அனுபவமென்பது யாதெனில்
தவறுகளின் பாடம்
தவறென்பது யாதெனின்
முதல்படி
முதலில் படி

meera
24-05-2007, 12:03 PM
ஆயின்
நான் சரணில்லையே?
தென்றலெனும் பேர்தான்
புயலுக்கு மறுபக்கம் நான்
செல்வக் காற்று வீசட்டும்
தென்றல்காற்று போகுமோ
பார்ப்போம்?


தென்றல் நடக்கட்டும் நடக்கட்டும்.ஏதோ நம்மால முடிஞ்ச உதவி.:music-smiley-010:

தீபா
24-05-2007, 12:04 PM
அறிவென்பது யாதெனில்
அனுபவத்தின் திரட்டு
அனுபவமென்பது யாதெனில்
தவறுகளின் பாடம்
தவறென்பது யாதெனின்
முதல்படி
முதலில் படி


யாவரும் செய்யா
தவறுண்டோ?
யாவரும் தாண்டா
முதற்படியுண்டோ?
இதன்படி
யாவரையும்
தீண்டா அனுபவமுண்டோ?
பின்னெதற்கு படி?

தீபா
24-05-2007, 12:06 PM
தென்றல் நடக்கட்டும் நடக்கட்டும்.ஏதோ நம்மால முடிஞ்ச உதவி.:music-smiley-010:

நீங்கள் செய்யும்
உதவி
கித்தார் வாசிப்பதா?
இல்லை
முடிந்தவரை
அவருடன் போராடுங்கள்.
சரண் என்பது கூடாது
அரண் என்பது நீங்கள்தான்
நான் பாடாது.

meera
24-05-2007, 12:12 PM
நீங்கள் செய்யும்
உதவி
கித்தார் வாசிப்பதா?
இல்லை
முடிந்தவரை
அவருடன் போராடுங்கள்.
சரண் என்பது கூடாது
அரண் என்பது நீங்கள்தான்
நான் பாடாது.

இசையுடன் துவங்கி வைக்கிறேன்.

தாமரை
24-05-2007, 01:26 PM
ஆயின்
நான் சரணில்லையே?
தென்றலெனும் பேர்தான்
புயலுக்கு மறுபக்கம் நான்
செல்வக் காற்று வீசட்டும்
தென்றல்காற்று போகுமோ
பார்ப்போம்?
செல்வம் இருக்கும்
பக்கத்தில்தான்
இப்பொழுதெல்லாம்
தென்றல் கூட வீசுகிறது


(எப்படி வேணும்னாலும் அர்த்தம் கொள்ளலாம்)

தாமரை
24-05-2007, 01:28 PM
யாவரும் செய்யா
தவறுண்டோ?
யாவரும் தாண்டா
முதற்படியுண்டோ?
இதன்படி
யாவரையும்
தீண்டா அனுபவமுண்டோ?
பின்னெதற்கு படி?

படி தாண்டவா
இல்லை
படியேறவா?
தாண்டியேறிவர் யாருமில்லை
படி படியின்படி
படிப்படியாய்.

தாமரை
24-05-2007, 01:51 PM
தெற்கிருந்து வீசும்
தென்றலே
கிழக்கிருந்து வீசும்
கொண்டலைக் கண்டாயோ!
இல்லை
கடற்கரை
சுண்டலுடன் நின்றாயோ!

தென்றலால்
தாமரை மலருக்குப் பயன்!
செல்வத்துக்குப் பயனுண்டோ!!

தாமரை
24-05-2007, 04:34 PM
நீங்கள் செய்யும்
உதவி
கித்தார் வாசிப்பதா?
இல்லை
முடிந்தவரை
அவருடன் போராடுங்கள்.
சரண் என்பது கூடாது
அரண் என்பது நீங்கள்தான்
நான் பாடாது.
ஜால்ரா போடும்படி ஒரு ஸ்மைலியும் இல்லையே!

abdullah
25-05-2007, 12:19 AM
நன்று.
மீண்டும் தொடரட்டும் உங்களின் கவிதைப் பயணம்.

franklinraja
25-05-2007, 07:16 AM
சாகா வரம் பெற்றதோ -
சாதி .... !
இதை 'என்கவுன்டர்' செய்ய அதிரடிப்படை தேவையில்லை -
இன்றைய இளைஞர் படையே போதும் !!

:angel-smiley-033: :angel-smiley-033: :angel-smiley-033:

தீபா
25-05-2007, 03:03 PM
படி தாண்டவா
இல்லை
படியேறவா?
தாண்டியேறிவர் யாருமில்லை
படி படியின்படி
படிப்படியாய்.

தாண்டியேறய பெண்களுண்டு
படி மட்டுமேற ஆண்களுண்டு
ஆக
படிபடி என்று
படித்து என்ன லாபம்?

தீபா
25-05-2007, 03:05 PM
தெற்கிருந்து வீசும்
தென்றலே
கிழக்கிருந்து வீசும்
கொண்டலைக் கண்டாயோ!
இல்லை
கடற்கரை
சுண்டலுடன் நின்றாயோ!

தென்றலால்
தாமரை மலருக்குப் பயன்!
செல்வத்துக்குப் பயனுண்டோ!!

தென்றல் தெற்கிலும் வீசுவாள்
இங்கு மன்றத்திலும் பேசுவாள்
கொண்டல் வெறும் வண்டல்
பல கவிதைகள்
நான் தின்ன சுண்டல்

சுண்டல் சுடவும்
செல்வம் வேண்டும்
இந்த தென்றல் சூடவும்
செல்வம் வேண்டும்..

அமரன்
12-06-2007, 07:18 PM
இப்படியும் சொல்லலாமா,
கீழே இருக்கவேண்டிய ஜாதி
மேலே பொறிக்கப்பட்டது
கல்லறை கல்வெட்டு

தாமரை
13-06-2007, 01:22 AM
தாண்டியேறய பெண்களுண்டு
படி மட்டுமேற ஆண்களுண்டு
ஆக
படிபடி என்று
படித்து என்ன லாபம்?

தாண்டிப் பறந்தார்
தலைக்குப்புற விழுந்தார்
படிப்புக் கோலினை ஊன்றி
மெதுவாய் எழுந்து நின்றார்
கைதட்டியது
சில்லரை வேண்டி
இன்னொரு கூட்டம்.

தாமரை
13-06-2007, 01:29 AM
தென்றல் தெற்கிலும் வீசுவாள்
இங்கு மன்றத்திலும் பேசுவாள்
கொண்டல் வெறும் வண்டல்
பல கவிதைகள்
நான் தின்ன சுண்டல்

சுண்டல் சுடவும்
செல்வம் வேண்டும்
இந்த தென்றல் சூடவும்
செல்வம் வேண்டும்..

கத்திரி வெய்யில்
சுத்தி சுத்தி எரித்த போது
எங்கு சென்றிருந்தாய் தென்றலே
ஏ.சி ரூமுக்கா

கொடும் வெய்யிலிலே
விசிறி விடும்
கொண்டலே தாயன்றோ
அந்தி வெய்யிலில்
கேட் வாக் விடும் நீ
மாடல்தான்

விளம்பர பகட்டில் நீ
வீண்வாதம் பேசாதே
தாய் கை மணம்
கொஞ்ச நாள் மறந்திருக்கும்
கொஞ்சும் நாள் போனவுடன்
எல்லாம் மாறிவிடும்

கொடுக்கும் காசு
செல்வம்
உன்னிடமிருப்பதோ
செல்லாக் காசு

தாமரை
13-06-2007, 01:31 AM
இப்படியும் சொல்லலாமா,
கீழே இருக்கவேண்டிய ஜாதி
மேலே பொறிக்கப்பட்டது
கல்லறை கல்வெட்டு

ஜாதி இல்லாமல் இருக்க வேண்டியதாயிற்றே அமரன்.

அமரன்
17-06-2007, 07:13 PM
ஜாதி இல்லாமல் இருக்க வேண்டியதாயிற்றே அமரன்.
ஆமாம் செல்வரே

புதைக்கப்படவேண்டிய ஜாதி
பொறிக்கப்படுகின்றது
கல்லறை கல்வெட்டு

மன்மதன்
11-11-2007, 09:16 PM
நல்ல கவிதை... அதை விட நண்பர்கள் கொடுத்த பின்னூட்டங்கள் மிக அருமை..

ஆதி
12-11-2007, 02:55 AM
நிதர்சனம்.. பாரட்டுகள் மீரா