PDA

View Full Version : ஊடல்

shangaran
22-05-2007, 05:46 AM
நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.

சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மரண தண்டனையாக உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று.

எத்துனை முறை, நீ என்னை நிராக*ரித்தாலும்,
ஓயாது என் காதல்,
கரை தொடும் அலை போல.

உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.

ஊடல் இல்லா காதலும்
கூடல் இல்லா காதலும் காதலன்று,
நமக்கும் இது விதிவிலக்கன்று.

அன்புடன்,
சங்கர்.

thevaky
23-05-2007, 08:24 AM
:icon_good:

மனோஜ்
23-05-2007, 08:33 AM
ஊடல் தான் காதலின் வளர்ச்சி
அருமையான கவிதை வாழ்த்துக்கள் தொடர..

shangaran
23-05-2007, 08:42 AM
தேவகி & மனோஜ்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஓவியா
23-05-2007, 02:42 PM
நல்ல ஆரம்பம். அருமை.

(சும்மா ஒரு குரும்பு)
ஊடல் அதிகமானால் காதல் சாதல்தான்
கூடல் அதிகமானால் காதல் கசமுசாதான்.....ஹி ஹி
கசமுசா அதிகாமானால் காதல் கன்றாவிதான்

ஓவியா
23-05-2007, 02:43 PM
உன் நினைவுகள் இன்றி வாழ்வதே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வது.

அன்புடன்,
சங்கர்.

இந்த வரிகள் நல்ல ரசனை. பாரட்டுக்கள்.

அமரன்
23-05-2007, 02:44 PM
நல்ல கவிதை சங்கர். பாராட்டுகள் இக்கவிதை எழுதிய உங்கள் திறமைக்கு. நன்றிகள் பல இதை நாமும் படிப்பதற்காக தந்ததற்கு.

lolluvathiyar
23-05-2007, 02:54 PM
அனுபவம் பேசுது போல

ஊடல் இருக்கலாம் காதல் இருக்கலாம்
ஆனால் நாவடக்கம் வேண்டும்
வார்த்தை கொட்டிவிட்டால் காதலியே விரோதி ஆவாள்
(இது என் அனுபவம்)

sarcharan
23-05-2007, 02:54 PM
சங்கரன், மனதை கொள்ளையடித்து விட்டீர்கள்.

shangaran
24-05-2007, 05:27 AM
என் கவிதை வாசித்து ஊக்கப்படுத்திய மன்றத்து நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

மயூ
24-05-2007, 05:33 AM
சங்கரன், மனதை கொள்ளையடித்து விட்டீர்கள்.
அனுபவமாய் இருக்குமோ??????:smilie_abcfra: :smilie_abcfra: :smilie_abcfra:

நல்ல கவிதை நண்பா..:4_1_8:

ஊடல் இல்லாமல் காதல் ஏது? ஊடல் இல்லாவிட்டால் காதலின் உணர்வே இல்லை!!!

ஆதவா
25-05-2007, 07:31 PM
சங்கர்... சில கவிதைகள் மிக உயரத்தில் வைக்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் அதன் புதுமை... புதுமையான எழுத்துக்கள்... அல்லது கருக்கள்... கிட்டத்தட்ட இம்மாதிரி கவிதைகள் ஏராளம் படித்துவிட்டேன்... அதோடு உங்களை நான் குறை சொல்லவில்லை... மிகக் கேவலமாக கவிதை எழுதி மன்றத்தில் நுழைந்தவன் நான்... சிலர் சீர்படுத்த படுத்த ஏதோ பேர் சொல்லும்படி எழுதுகிறேன்... உங்கள் சிலரையும் வேண்டுகோளாய் கேட்பது என்னவென்றால் உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது எனும்போது நீங்கள் ஏன் காதலை விட்டு வ்ரக்கூடாது? யோசியுங்கள்... இந்த பதில் உங்களை வருத்தமுறச் செய்யுமானால் என்னை மன்னியுங்கள்..

-----------------------
இறுதி வரிகளை நிதர்சனமாக என்னால் ரசிக்க முடிகிறது. கருத்து விளையாட்டு அரங்கேறியிருப்பதும் அழகு.... 50 பொற்காசுகள்....

பென்ஸ்
26-05-2007, 01:28 AM

ஆதவா....

நான் வலை பூவில் வாசித்த சில வரிகள்....

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

நன்றி: பரணி (http://bharan.blogspot.com/2007_04_01_archive.html)

காதல் கவிதை எழுத ஒரு அருமையான விஷயம்... எதை எழுதினாலும் இனிக்கும்....
இவரு ரொம்ப இனிப்பு கொடுக்கிறர் என்றது கொஞ்சம் காரமும் கொடூக்க சொல்லி கொட்டலாம்.//.....

சங்கர்.... கவிதை அருமை...
தொடருங்கள்...

ஆதவா
26-05-2007, 01:36 AM
சங்கர் இன்னும் குழந்தை அல்லவே!! அழகாக காதல் கவிதை எழுதுகிறார்.... ஆனால் கரு பழையதாக இருக்கிறது. அல்லது வெறும் வர்ணணையாக இருக்கிறது.... அதனாலேயே சொன்னேன்..

ஆதவா
26-05-2007, 01:37 AM
இவரு ரொம்ப இனிப்பு கொடுக்கிறர் என்றது கொஞ்சம் காரமும் கொடூக்க சொல்லி கொட்டலாம்.//.....

சங்கர்.... கவிதை அருமை...
தொடருங்கள்...

இதுவும் சரிதான்....

shangaran
28-05-2007, 04:23 AM
ம்ம்ம்... நீங்கள் சொல்வதுபோல் பெரும்பாலும் காதலை மையப்படுத்தியே
எழுதுகின்றேன். வேறு தளத்திற்கு மாற முயற்சிக்கிறேன்.

உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு மிக்க நன்றி ஆதவா & பென்ஸ்.

விகடன்
28-05-2007, 04:30 AM
ஊடலும் கூடலுமே காதலின் சுவாசமென்பதை வலியுறுத்துவதாக அமைந்த கவித அருமை.

பாராட்டுக்கள்.