PDA

View Full Version : யதார்த்தக் காதல்



சக்தி
22-05-2007, 02:33 AM
உண்ண உணவு
உடுத்த உடை
உறங்க உறவிடம்
அப்பன் சொத்து
இங்கே இதயத்தை
யார் காதலிக்கிறார்
காரும்
மோட்டார் பைக்கும்
அவனின் பர்சையுமல்லவா
காதலிக்கிறார்கள்
பேதைகள்
ஆம் பேதைகள் தான்
பொய்யும் புரட்டும்
நிறைந்த
வஞ்சகக் கழுகுகளிடம்
சிக்கி சீரழிபவர்களை
வேறு என்ன சொல்ல
உடலை சுருக்கி
ஊனை உருக்கி
உள்ளத்தை கொடுத்தால்
பைத்தியக்காரன் என்கிறார்கள்
அதை கேட்டாலோ
யதார்த்தக் காதலாம்:traurig001:

அமரன்
22-05-2007, 06:43 AM
என்ன கவிஞரே வார்த்தைகளில் அனல் தெறிக்கின்றது. வாழ்த்துகள்.

சக்தி
22-05-2007, 09:39 AM
என்ன கவிஞரே வார்த்தைகளில் அனல் தெறிக்கின்றது. வாழ்த்துகள்.

நிஜம் சுடும் அமரா

lolluvathiyar
22-05-2007, 09:46 AM
யதார்த்தமான வரிகள்
அருமை ரோஜா
அறிவுள்ள பெண் முதலில் சொன்னவனை காதலிப்பால்
அறிவில்லாத வெறும் உனர்ச்சிகளுக்கு மட்டும் இடம் தரும் பெண்தான் இரண்டாது சொன்னவனை காதலிப்பால்

உனர்ச்சி முக்கியமா அறிவு முக்கியமா?

இந்த உன்மையும் சுடும்

ஷீ-நிசி
22-05-2007, 10:23 AM
நிறைய காதல் இப்படி இருக்கிறது.. ஆனால் அதை அந்தக் காதலர்களும் அறிந்தே இருக்கிறார்கள்..

சக்தி
23-05-2007, 12:44 PM
நன்றி நண்பர்களே

மயூ
23-05-2007, 01:09 PM
நிசமான வரிகள்..!!
இளைஞர்கள் புரியவேண்டிய வரிகள்
நிஜத்தை விடுத்து
கானலைத் தேடும் இந்த வாலிபர்கள்
காலத்தால் ஏமாற்றப்பட்டபின்
ஒரு நாள் வாடுவர்!!
அதுதான் காலத்தின் விளையாட்டும் கூட

நம்பிகோபாலன்
23-05-2007, 06:42 PM
காதல் சிலருக்கு உயிர் சிலருக்கு உடல்...உணர்ச்சிகளுகும் உணர்வுகளுக்கும் இன்றைய காதலில் சாத்தியம் இல்லை.

நம்பிகோபாலன்
23-05-2007, 06:42 PM
காதல் சிலருக்கு உயிர் சிலருக்கு உடல்...உணர்ச்சிகளுகும் உணர்வுகளுக்கும் இன்றைய காதலில் சாத்தியம் இல்லை.

மனோஜ்
23-05-2007, 07:01 PM
அருமை கவிதை
உணர்சியின் உச்சகட்தில் உள்து போல் எழுதியது அருமை

ஆதவா
25-05-2007, 07:33 PM
என்னங்க ரோசா... அனுபவமோ? :D :D

நல்ல காதல் கலந்த சமூகப் பார்வை... இன்றைய நிலைமையை எடுத்துச் சொன்னமாதிரி இருக்கிறது.... கடைசி இரு வரிகளும் சிலருக்கு சம்மட்டி அடி.... இப்படி அடி கொடுக்கும் வரிகளை நான் மிகவும் நேசிப்பேன்... அருமை அருமை....

abdullah
25-05-2007, 09:36 PM
ஓ....................ஒரு தென்றல் புயலாகி வருதே.........ஓ..............

அட விடுங்க ரா(ரோ)சா
இவிங்களயெல்லாம்
திறுத்தவே முடியாது.

பென்ஸ்
25-05-2007, 10:09 PM
அன்பு ராஜா....


நல்ல முயற்சி இது.... வார்த்தைகள் மட்டுமே அடுக்க படுகிறதோ என்று பயம் வந்தாலும் நல்லா முடித்து விட்டீர்கள்...

ஒரு சிந்தனையாளனாக:

எதற்காக ஒருவர் காதாலிக்க வேண்டும்..???
மனதில் தோன்றிய உணர்வு நிறைவேறவா... இல்லை நமக்கு ஒருவரை பிடித்தால் அவர் நம்முடனையே இருக்கவேண்டும் என்பதாலா....
சரி கல்யாணம் செய்ய என்றால், காதல் மட்டும் போதுமா..!!! வேற ஒன்னும் வேணாமா....

உணர்வுகள் மட்டுமே வாழ்கையா...???
உடல்பசியை வயிற்றுபசி வெல்லும்போது... இயலாமை தான் வேளிப்படும், காதல் அல்ல....

காதல் எனக்கு பிடிக்கும்தான்,
காதல் இருப்பதால் கவிஜாயிருக்கிறேன்...
யதார்த்தமாயிருப்பதால் இன்னும் மனிதனாயிருக்கிறேன்...
இல்லை என்றால்....

பைத்தியக்காரன் என்கிறார்கள்



காதலனாக :

இதயத்தை கொடுத்து
காதலை வாங்கினேன்..
நீ-
காதலை கொடுத்து
இன்னும் என்ன கேட்கிறாய்..!!!


ரோஜாவின் இந்த முள் இன்னும் ஆளமாய் குத்தவேண்டும்....

சக்தி
26-05-2007, 05:37 AM
ஆம் ஆதவரே ஆனால் பட்ட அனுபவமல்ல பார்த்த அனுபவம்.
பென்ஸ் அவர்களுக்கு என் நன்றி தங்களது பின்னூட்டம் என்னை மேலும் சீர்படுத்தும். தங்களது பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்