PDA

View Full Version : பூ கொடுக்கும் பூகம்பம்!!!



lenram80
22-05-2007, 12:29 AM
ஏ! ஐ நா சபையே! அமெரிக்காவே!
ஏன் ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை?
பெயருக்கு ஒரு எச்சரிக்கை கூட செய்யாமல்,
போகிற போக்கில் ஒரு அணுகுண்டை போட்டு விட்டு போய்விட்டாளே!

என்னப்பா செய்கிறீர்கள் வானிலை ஆய்வு மையத்தில்?
மணிக்கு 98.6 கிமீ வேகத்தில் ஒரு புயல்
என் இதயத்தை மையம் கொள்ளப் போகிறது
என்று ஒரு முன்னறிவிப்பு செய்திருந்தால்
கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருப்பேன்!
உடல் உறுப்புகளை ஒடித்துப் போட்டுவிட்டு
இதயத்தை மட்டும் எடுத்து சென்று விட்டது அந்தப் புயல்!!

டேய்! பிரம்மா! நீயும் திருடன் தானா?
என் கனவுகளை எப்போது திருடி
இவளைப் படைத்தாய்?

எப்படி "இவள்" என்ற பூகம்பத்தால் மட்டும்
இதயத்தை மட்டும் பிடித்து ஆட்டோ ஆட்டென ஆட்டிவிட்டு
இறுதியில் ஒரு பூவை கொடுத்துவிட்டு போக முடிகிறது?

எப்படி நீ குத்தும் குத்துக்கள் கூட
முத்தமாக மாறி என் மேல் விழுகிறது?
இது காதல் செய்யும் கைங்காரியமா?
குத்துக்களே முத்தமாக என்றால்,
முத்தங்கள் என்னவாக விழும்?
யாராவது அகநானூறிலேயும், இன்பத்துப் பாலிலேயும்
ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்களேன்!:209:

lolluvathiyar
23-05-2007, 03:08 PM
ஆண்டவனை திட்டியதோடு
நில்லாமல் ஐநா வையும் விட்டு
வைக்க வில்லையே உன் காதல் சோகம்


குத்துக்களே முத்தமாக என்றால்,
முத்தங்கள் என்னவாக விழும்?



முத்தங்கள் குத்துகளாக விழும்

அமரன்
23-05-2007, 03:13 PM
மீண்டும் ஒரு முறை லெனின் கவிதையால் கலக்கிவிட்டார். நன்றி.

abdullah
25-05-2007, 09:59 PM
அகநானூற்றிலேயும், இன்பத்துப்பாலிலேயும்
குத்துக்களைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லையே நண்பா.
ஒரு வேளை குத்துகின்ற அளவிற்கு அக்காலத்தில் நாகரிகம் வளரவில்லையோ.........???
ம்.................அநேகமாக முகம்மது அலியையோ அல்லது மைக்டைசனையோ
கேட்டால் தெரியும்........:cool008:

எப்படியோ கவிதை அருமை.

அக்னி
25-05-2007, 10:08 PM
வித்தியாசமான பார்வை. ஆனாலும் கடவுளர்களை இப்படி வைதல் தகுமோ..?

பென்ஸ்
25-05-2007, 10:26 PM
கவிதை போட்டியில் இந்த கவிதை வந்து இருந்தால் மிக துல்லியமாக சொல்லிவிடுவேன் இது லெனின் எழுதிய காவிதை என்று...

காதலின் அவஸ்தை, மிகக்கொடுமை
அந்த கேள்விகள், புரியாதவை
அதை நகைசுவையாய் கொடுக்க நான் இருவரை பார்த்திருக்கிறேன்..
1, பிராங்கிளின்
2, லெனின்
பிராங்கிளின் கவிதைகள் இருவரிகளில் ...
லெனின் ஒரு முழு நீள கவிதையை கொடுத்து மனதை அள்ளிசென்ரு விடுவார்...

பிரம்மனை பாராட்டுகிறிரா.. இல்லை செட்ல்லமாக ஏசுகிறிரா....எதுவோ தவறில்லாத வரை, அந்த வரிகள் அருமையோ அருமை, நல்ல கற்பனை.

தொடருங்கள்....

சிவா.ஜி
04-06-2007, 06:01 AM
சரளமான வார்த்தைகளால் விளையாடியிருக்கிறார் லெனின். பிரம்மனை திட்டி பாராட்டியிருப்பது அருமை.பாராட்டுக்கள்.