PDA

View Full Version : இறைவனின் அன்புமனோஜ்
21-05-2007, 08:25 PM
உலகம் அன்பில் அடைய
உலக இரட்சகர் உயிர் கொடுத்தார்
உலகின் மனிதர்கள்
உள்ளம் உணர்ந்து ஏற்று கொண்டால்
உருகிடும் இயேசுவின் அன்பு

இரத்தம் சிந்தி மீட்பை கொடுத்தது
இட்சகர் இயேசுவின் திவ்விய அன்பு
இரட்சிப்பு வேண்டுமா நோக்கிடு
இயேசுவின் அன்பை கல்வாரி பாதையில்

காலூன்றி நின்றிடவும் முடியாது
கள்வராய் கல்வாரியில் கலங்கித்தவித்தது
கலகங்கள் செய்யும் உலகமனிதனுக்கு
கரைகள் போக்கி கலங்கிடும் மனதில்
கருணையை ஊற்றிட

உள்ளம் திறந்து உருகிடும் மனதுடன்
உற்று நோக்கிடும் உலகமனிதனுக்கு
உறவுகள் மலந்திடும் பரலோகத்தில்
உணர்திட மறுத்திடும் மனதிற்கு கிடைப்பது
உழன்றிடும் நரகமே உணர்ந்திடு மனமே
இயேசுவில் கலந்திடு

ஷீ-நிசி
22-05-2007, 04:55 AM
நல்ல ஒரு இயேசு பாடல் மனோஜ்.... தொடருங்கள்!

அமரன்
22-05-2007, 07:41 AM
ஒற்றை வார்த்தையில் சொல்கின்றேன் அருமை மனோஜ். பாராட்டுகள். தொடர வாழ்த்துக்கள்.

ஓவியா
23-05-2007, 01:19 PM
மனோஜ் கவிதை அருமை, உங்க பக்த்தியில் அடியேனும் கலந்துக்கொள்கிறேன்.

ஆம். இந்த கவிதையை வாசித்த சமயம் என் எண்ணம் முழுதும் இயேசுவிடமே இரூந்தது.

உங்களுடைய இந்த ஒரு தொண்டு போதும் அவரை நீங்கள் நெருங்க.

இயேசு ஆசிர்வதிப்பார் உங்களை.

lolluvathiyar
23-05-2007, 04:04 PM
பாடல் அருமை
ஹிந்துவாகிய என்னையும் கவரும் வன்னம்
எழுதிய உங்கள் வாக்கியம் அருமை
வாழ்த்துகள்

ஆதவா
25-05-2007, 08:37 PM
மோனைகளை அடுக்கி அழகிய கவிதை... மனோஜ்... இப்போது கவிதை வரவு அதிகரிப்பதால் முன்பு போல விரிவான விமர்சனம் இடமுடியவில்லை மன்னிக்கவும்... இந்த கவிதை காதல் பகுதியில் வரக் காரணமென்ன என்பது மட்டும் தெரியவில்லை. உங்கள் இறைபக்தி மெய்சிலிர்க்கிறது... மேலும் பணி தொடரவேண்டுகிறேன்... இந்த பக்திக்கு அடிமையாகி 100 பொற்காசுகள் உண்டியலில் போடுகிறேன்... நன்றி

அன்புரசிகன்
25-05-2007, 08:42 PM
அன்பிற்கு ஒரு உருவம் இருந்தால் அது யேசுபோல தான் இருக்கவேண்டும். அவரை வர்ணிக்க மனோஜ் இன் வார்த்தைகள் மிக கொடுத்துவைத்தவை.

மனோஜ்
25-05-2007, 08:42 PM
என்ன ஆதவா சாமியாராக்கிட்டிங்க
இயேசு மீது பற்று அதிகம் அதற்காக என்னை சாமியராக்கிவிடாதீர்கள்
மோலும் நான் உங்கள் தட்டி கொடுத்து வந்த கவிஞன் என்பதில் பெறுமை தான்

ஆதவா
25-05-2007, 08:44 PM
என்ன ஆதவா சாமியாராக்கிட்டிங்க
இயேசு மீது பற்று அதிகம் அதற்காக என்னை சாமியராக்கிவிடாதீர்கள்
மோலும் நான் உங்கள் தட்டி கொடுத்து வந்த கவிஞன் என்பதில் பெறுமை தான்

அடடா அப்படி இல்லீங்க.... பக்தி என்பது ஒரு உருவத்திற்கு நான் கொடுக்கும் அதிகப்படியான மரியாதை... அதை செவ்வனே செய்வது சிறப்பு... செய்யாமல் விட்டால் அது மறுப்பு. மற்றபடி சாமியார் இல்லை....... நானெங்கேங்க தட்டி கொடுத்தேன்.... இந்த கதை தானே வேணாங்கறது... :icon_shok: ... வந்த போதிலிருந்தே நீங்கள் பெயர்களை வைத்து கவிதை எழுதீட்டு இருந்தீங்களே..... பின்ன இடையிலே நான் எப்படி நுழைந்தேன்?

மனோஜ்
25-05-2007, 08:47 PM
நன்றி ஷீ
நன்றி அமரன்
நன்றி ஓவியா (யக்கா)
நன்றி வாத்தியார்
நன்றி அன்பு

மனோஜ்
25-05-2007, 08:49 PM
நானெங்கேங்க தட்டி கொடுத்தேன்.... இந்த கதை தானே வேணாங்கறது... :icon_shok: ... வந்த போதிலிருந்தே நீங்கள் பெயர்களை வைத்து கவிதை எழுதீட்டு இருந்தீங்களே..... பின்ன இடையிலே நான் எப்படி நுழைந்தேன்?

அது அடுக்கு கவி ஆதவா
மற்றபடி கவிதைகளை விமர்சித்து இப்டி எழுதுங்கள் என்று ஊக்குவித்தவர் நீர் அல்லவா என்றும் நான் அதை மறுப்பதில்லை
நன்றி ஆதவா

abdullah
25-05-2007, 10:22 PM
உள்ளம் திறந்து உருகிடும் மனதுடன்
உற்று நோக்கிடும் உலகமனிதனுக்கு
உறவுகள் மலந்திடும் பரலோகத்தில்
உணர்திட மறுத்திடும் மனதிற்கு கிடைப்பது
உழன்றிடும் நரகமே உணர்ந்திடு மனமே
இயேசுவில் கலந்திடு

ஒரு........மா........திரி மெறட்டரமா........திரி........
தெரியுதே?? ம்.........
பக்தியல்லாம் காட்டி பயமூர்த்தாதிங்கப்பா.........

பென்ஸ்
26-05-2007, 01:53 AM
நல்ல கவிதை மனோஜ்...

உள்வாங்கி கொண்டுள்ளேன்...

இக்கவிதையை ஆண்மீக பகுதிக்கு மாற்றுகிறேன்....

அக்னி
26-05-2007, 02:39 AM
ஒரு இறைபுகழ் பாடுதல் பல தடவைகள் செபிப்பதற்குச் சமானமாகும்...
போற்றுதல்கள்...