PDA

View Full Version : மனதில் உறுதியுடன் (ஒரு பக்க கதை)



மயூ
21-05-2007, 04:01 PM
ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.

கற்பனைகளுடன் அனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றேன். வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன் எதிர்பார்த்ததுதான்.

மீண்டும் கூறிக்கொண்டான்...டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும் இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே திடப்படுத்திக்கொண்டான்.

அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன் காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!

அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள் தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக் கொள்கின்றான்.

அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது. சிலர் வந்து முதுகில் வந்து தட்டி என்னை ஆசுவாசப் படுத்துகின்றனர். அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில் அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.
http://www5a.biglobe.ne.jp/~mameco/flower/hana/syougatu/s_boke_1.jpg

இதை யாராவது கவிதையாக வடிப்பீர்களா???

அமரன்
21-05-2007, 04:05 PM
கையைக் கொடுங்க மயூ. கலக்கிட்டீங்க. சேது படத்தில் கிளைமாக்ஸ் காட்சியைப்போல கண்ணீர்த்துவமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
மன்றத்தின் கவிகள் கண்டிப்பாக இதை கவிதையாக வடிப்பார்கள்

சக்தி
21-05-2007, 04:28 PM
அற்புதமான கதை. மயோ வாழ்த்துக்கள். உண்மையிலேயே நீங்கள் பல்துறை வித்தகர் தான்.

அக்னி
21-05-2007, 04:32 PM
உன் கருங்கூந்தலைத்
தேடி..,
திரண்டதுவோ
முகிற்கூட்டம்..?

உன் ஆத்துமத்தை
வரவேற்க,
வானம் கொட்டியதோ
முரசு..?

மின்னல்கள்...
மின்னலிடையாள்
எங்கே எங்கே
என்று தேடித் தேய்கின்றனவோ..?

கண்ணீருக்குள்,
மூழ்கியே...
நானும் மூச்சடங்கிப்போக
முனைகின்றேன்...

ஆனாலும், கன்னியே...
என் காதலியே...
கருமையும் வெண்மையும்,
விருப்பமாய்க் கொண்ட,
என்னவளே...

என்
கறுப்பு வெள்ளைக்
கனவிலாவது...
உன்னோடு
ஜென்மங்கள் தாண்டி
வாழ்வதற்காய்..,
வாழ்கின்றேன் ஒரு ஜடமாய்...

காதலனாய் இருந்தேன்..,
உனக்கு மட்டும்...
ஒரு முறை
கண்விழித்து
தாலியை மட்டுமாவது
வாங்கிச்செல்
என்னவளே...
தபுதாரனாய் வாழ்ந்திடுவேன்,
நான்...
இருக்கும் மட்டும்...

அறிஞர்
21-05-2007, 04:36 PM
அருமையான கதை... ஒருபக்கத்தில் நெஞ்சை கொள்ளை கொள்கிறது...

அக்னியின் அசத்தல் கவிதை.. இன்னும் சிறப்பாக உள்ளது.

அக்னி
21-05-2007, 04:37 PM
என்னால் முடிந்தது...
இது கற்பனைதானே மயூர்...
எதிர்கொள்ளவே முடியாத தருணங்கள், யாருக்குமே வராதிருக்கவேண்டும்.

மயூ
21-05-2007, 04:52 PM
கையைக் கொடுங்க மயூ. கலக்கிட்டீங்க. சேது படத்தில் கிளைமாக்ஸ் காட்சியைப்போல கண்ணீர்த்துவமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
மன்றத்தின் கவிகள் கண்டிப்பாக இதை கவிதையாக வடிப்பார்கள்
நன்றி அமரன் ஒருத்தர் வடித்திட்டார்... அருமையாக உள்ளது...!!!!


அற்புதமான கதை. மயோ வாழ்த்துக்கள். உண்மையிலேயே நீங்கள் பல்துறை வித்தகர் தான்.
நன்றி நண்பரே.. என்னை மயூ என்று அழைத்தால் நலம் அல்லது முழுப்பெயர் சொல்லி மயூரேசன் என்றழையுங்கள்:sport-smiley-018: .

பல்துறை வித்தகர் என்பதற்கு அப்படி என்ன கிழித்துவிட்டேன்..???:Christo_pancho:

மயூ
21-05-2007, 04:56 PM
அருமையான கதை... ஒருபக்கத்தில் நெஞ்சை கொள்ளை கொள்கிறது...

அக்னியின் அசத்தல் கவிதை.. இன்னும் சிறப்பாக உள்ளது.
நன்றி அறிஞரே!!!



என்னால் முடிந்தது...
இது கற்பனைதானே மயூர்...
எதிர்கொள்ளவே முடியாத தருணங்கள், யாருக்குமே வராதிருக்கவேண்டும்.
அக்கினி..கற்பனைதான் அக்னி...
உங்கள் கவிதை.. அதே.. அதே.. அதைத்தான் எதிர்பார்த்தேன்!!! நன்றி அக்கினி.. பல தடவை நான் எழுத முயன்று தோற்றுப் போய்தான் அதைக் கதையாக எழுதி இங்கே சமர்ப்பித்தேன்.. நன்றி அக்னி!!!:nature-smiley-008:

அக்னி
21-05-2007, 05:18 PM
அக்கினி..கற்பனைதான் அக்னி...
உங்கள் கவிதை.. அதே.. அதே.. அதைத்தான் எதிர்பார்த்தேன்!!! நன்றி அக்கினி.. பல தடவை நான் எழுத முயன்று தோற்றுப் போய்தான் அதைக் கதையாக எழுதி இங்கே சமர்ப்பித்தேன்.. நன்றி அக்னி!!!:nature-smiley-008:

கற்பனையிலேயே மனதை நடுங்கவைக்கும் நிகழ்வுகள் யாருக்கும் நேரக் கூடாது...

வாழ்க்கை வசந்தமாக இல்லவிடினும் பரவாயில்லை... வலிகள் மட்டும் இப்படி வேண்டாம்...

மனோஜ்
21-05-2007, 06:40 PM
உயிரினில் கலந்திட்டு
உலகத்தை வெல்ல நினைத்தேன்
உறிமையை கொடுத்து
உறவினை அடைந்திட நினைத்தேன்

மலரினை கொடுத்து
மனதினை வாங்கிட நினைத்தேன்
மனதில் திடமாய்
மனையில் புகுதிட்ட எனக்கு

மனிதர்களின் ஓலசத்தம்
மனதினில் மயிலுக்கு பிறந்தநாலே
மனமாறது மசிந்திட
மனதை அவளிடம் காட்டிடுவேன்

அந்தே கண்களது
அறியாது கண்களில் பிரளயம்
இதயம் துடித்து
இதயம் வெடித்து இறந்திடவா

உருகிடும் உள்ளத்தில்
உழன்றிடும் உள்மனதை உதறிடவில்லை
உன்உறவுகள் உள்த்தில்
உசிப்பட்டது உன்அன்பு ஆனால்

உயிறற்ற உடலாய்
உலகினில் என்னை விட்டு
அமைதியில் நிசேன்றால்
அடைந்திடும் அழிவை அறிவாயே என்னவளே

அக்னி
21-05-2007, 08:39 PM
அந்தே கண்களது
அறியாது கண்களில் பிரளயம்
இதயம் துடித்து
இதயம் வெடித்து இறந்திடவா

அருமையான வரிகள். சோகத்தை எண்ணத்தின் முன்னால் படம்பிடித்துக் காட்டுகின்றது...

மனோஜ்
22-05-2007, 01:19 PM
நன்றி அக்னி
மயூ எப்படி இருக்கு கவிதை ?

மயூ
22-05-2007, 03:13 PM
நன்றி அக்னி
மயூ எப்படி இருக்கு கவிதை ?
சூப்பர் நண்பரே!!! நான் எத்தனை தடவை முயன்றும் எழுதஇயலவில்லை.. அல்லது அந்தக் காட்சிகளை மனதில் நிறுத்த முடியவில்லை.!! சிறப்பாக உள்ளது நண்பரே.. தொடரட்டும் நின் பணி!!!:natur008:

ஓவியா
23-05-2007, 12:56 PM
மயூ, அக்கினி, மனோஜ் உங்கள் கூட்டு படைப்பு அருமை. கலக்கறீக..

கடைசி வரியில் கோணி ஊசி வச்சு முடிகறதே மயூவின் சிறுகதை தந்திரம். நல்லா இருக்குலே.

ஆமாம் மயூ நீர் ஏன் என் சிறுகதையை படிச்சு ஒரு பின்னூட்டங்கூட போடலே??

மயூ
23-05-2007, 01:01 PM
மயூ, அக்கினி, மனோஜ் உங்கள் கூட்டு படைப்பு அருமை. கலக்கறீக..

கடைசி வரியில் கோணி ஊசி வச்சு முடிகறதே மயூவின் சிறுகதை தந்திரம். நல்லா இருக்குலே.

ஆமாம் மயூ நீர் ஏன் என் சிறுகதையை படிச்சு ஒரு பின்னூட்டங்கூட போடலே??
தந்திரத்தைக் கண்டுபிடித்த அக்காவிற்கு வாழ்த்துக்கள்..!!! அப்புறம் எப்ப எங்க கதை எழுதினியள்...இருங்கோ பாக்கிறன்!!!:music-smiley-010:

அக்னி
23-05-2007, 01:07 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8976

இதுதான் ஓவியா அவர்களின் முதற்கதை...

மயூ
23-05-2007, 01:11 PM
நன்றி அக்கினி!!!