Log in

View Full Version : மெழுகுவர்த்தி.

கேசுவர்
21-05-2007, 12:53 PM
மௌனமாக உடன்கட்டையேறுகிறாள்
என் வெள்ளை நிற தேவதை
தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...

அமரன்
21-05-2007, 12:54 PM
நச்சென்று இருக்குங்க கவிதை. ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு கவிதை இங்கே படித்ததாக நினைவு.

அக்னி
21-05-2007, 12:58 PM
மௌனமாக உடன்கட்டையொறுகிறாள்
என் வெள்ளை நிற தேவதை
தன்னை விட்டு சென்ற மின்சாரத்திற்காக...

கவிதை நன்று... நீங்கள் மின்சாரமாக இருந்தால் மட்டும்...

கேசுவர்
21-05-2007, 01:07 PM
நன்றி .....
இது தாங்க கரு

இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
என் முன்னால் காதலி தமிழச்சி...
ஆகையால்...

அமரன்
21-05-2007, 01:09 PM
நன்றி .....
இது தாங்க கரு

இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
என் முன்னால் காதலி தமிழச்சி...
ஆகையால்...
சின்னதாக ஒருதிருத்தம். முன்னாள் காதலி முன்னாள் தமிழச்சி. (யாருமே இப்போ உடன்கட்டை ஏறுவதில்லைங்க)

அக்னி
21-05-2007, 01:10 PM
இது தாங்க கரு

இதில் மெழுகுவர்த்தி என் முன்னால் காதலி (கற்பனைக்காக)
மின்சாரம் அவளின் கணவன் , சதா தொல்லைகளை மட்டும் பாய்ச்சிக்கொண்டிருக்க, ஓரு நாள் அவளையும் விட்டு மறைந்தான்.
என் முன்னால் காதலி தமிழச்சி...
ஆகையால்...

புரட்சிகரமான சிந்தனை...
ஆனாலும் நீங்களும் தமிழன் என்பதால், பிறன்மனை நோக்குதல் சரியல்லவே...

ஆனாலும் கவிதை அழகு நண்பா...

கேசுவர்
21-05-2007, 01:20 PM
மிகச்சரி...
வாதத்திற்கு சொல்லவில்லை,
இவள் கணவனை இழந்த விதவையாக இருபின் வாழ்வு தருவது தமிழனின் குணமன்றொ ?

உடன்கட்டை ..என்பதை இன்னமும் தேவையற்ற சம்பிரதயங்களை கடைப்பிடிபதை உணர்த்த பயன்படுத்தினேன்...

பிழை இருப்பின் மன்னிக்கவும்...

அக்னி
21-05-2007, 01:25 PM

நீங்கள் உங்கள் மனதில் பட்டதை சொன்னீர்கள்...
நான் எனது மனதில் பட்டதை சொன்னேன்...

இதிலெதற்கு மன்னிப்பு...

அவள் தமிழச்சி என்பதால், விதவையானதும் இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டபின், முதற் கணவனுக்காக உடன்கட்டை ஏறுதல் சரியோ..?

கேசுவர்
21-05-2007, 01:32 PM
என் காதலை , அவள் எற்காத்திற்கு
இந்த தேவையற்ற சம்பிரதயங்களே !! காரணம்.

விதவையாகான பின்னும்,
அவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...

அக்னி
21-05-2007, 01:37 PM
என் காதலை , அவள் எற்காத்திற்கு
இந்த தேவையற்ற சம்பிரதயங்களே !! காரணம்.

விதவையாகான பின்னும்,
அவளை மணக்க விரும்பும் ஒரு ஆடவனின் புலம்பல்...

ஆக, காதலன் மறுவாழ்வு கொடுக்க விரும்பிய போதிலும்... சம்பிரதாயங்களுக்காக உடன்கட்டை ஏறுகிறாள் ஒரு காதலி...

மாளவேண்டியது வீண் சம்பிரதாயங்கள்...
வாழவேண்டியது விதவைகள்...

இப்பொழுது புரிந்து கொண்டேன். நன்றிகள்...

கேசுவர்
21-05-2007, 01:53 PM
இன்னமும் பட்டை தீட்டவேண்டும்...முயற்சிக்கிறேன்...
உளிகள் பட பட பாறை ஒளிப்படும்.

நன்றி அக்னி.
நன்றி அமரன்.

lolluvathiyar
26-05-2007, 07:01 AM
கவிதை நாலு வரிதான்
அது பல உனர்ச்சிகளை தூண்டியது
விவாதமும் களை கட்டியது

kusumban
04-06-2007, 01:03 PM
கண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்கவில்லை என்பதனால்

- மெழுகுவர்த்தி.

சிவா.ஜி
04-06-2007, 01:12 PM
யாருப்பா அது ஊடாலப்பூந்து குசும்பு பன்னிக்கிட்டு. புதியமுகமே வருக. உங்களைப்பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே. முதல் பதிவே கவிதையாகவா?

இதயம்
04-06-2007, 01:19 PM
புதிய உறுப்பினருக்கு வரவேற்புகள்..!! எழுத்துப்பிழைகளை தவிர்க்கப்பாருங்கள். முக்கியமாக கவிதைகளில். இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும், உங்களுடைய மேலே உள்ள கவிதை போல். காத்திருந்தால் அல்ல.. காத்திருந்தாள்..!

இன்பா
05-06-2007, 12:35 PM
கண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்கவில்லை என்பதனால்

- மெழுகுவர்த்தி.

யாருப்பா அது ஊடாலப்பூந்து குசும்பு பன்னிக்கிட்டு. புதியமுகமே வருக. உங்களைப்பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே. முதல் பதிவே கவிதையாகவா?

புதிய உறுப்பினருக்கு வரவேற்புகள்..!! எழுத்துப்பிழைகளை தவிர்க்கப்பாருங்கள். முக்கியமாக கவிதைகளில். இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும், உங்களுடைய மேலே உள்ள கவிதை போல். காத்திருந்தால் அல்ல.. காத்திருந்தாள்..!

ஐயா குசும்பரே எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனிக்க....

உங்களின் முதல் பதிப்பே கவிதையா...? மகிழ்ச்சியாக இருக்கிறது...

மிகவும் ரசித்தேன்...
(அறிமுகப் பகுதியில் உங்களைப் பற்றி சிறு குறிப்பு கொடுக்கலாமே...?)

அறிஞயரே நான் சொல்ல வில்லையா...? பாருங்கள் ஆரம்பமே அசத்தல் கவிதையுடன்...

அறிஞர்
05-06-2007, 12:39 PM
கண்ணீர் விட்டு காத்திருந்தால்.... தன்னை யாரும் அனைக்கவில்லை என்பதனால்

- மெழுகுவர்த்தி.
வாருங்கள்.. நண்பரே...
கவிதை வெள்ளம் தானாக வருகிறதே...
அறிமுகப்பகுதியில் தங்களைப்பற்றி கொடுக்கலாமே.

அறிஞர்
05-06-2007, 12:39 PM
கேசுவர்.. சில வரிகளில் அருமையாக நல்ல கருத்துக்களை கூறி சிந்திக்க வைக்கிறீர்கள்..

இன்னும் கவிதைகள் அதிகமாக வெளிவரட்டும்.