PDA

View Full Version : பந்திக்கு...கேசுவர்
21-05-2007, 10:37 AM
பந்திக்கு...

அவனின் உணர்ச்சி மொழி கவிதையை
இவள் உணரும் நிலைமறந்து,
வெறும் வாயசைவினால் பாராட்டிக்கொண்டிருந்தாள்.

பாராட்டுகள் தான்
இங்கு சன்மானங்களை நிர்ணயக்கின்றன.
பந்திக்கு முந்தி

கேள்விகள் சுலபமும் அல்ல
பதில்கள் பலமாகவும் இல்லை.

புரியாத புதிராக வாழ்கை
புரியக்கூடிய வினா, இவள்
பதிலை நோக்கிய பயணத்தில்
இரைப்பை இல்லாதிருந்தால்
இனிதே முடிந்திருக்கும்.,
என்ன முரண்பாடு
நிறை குறையாக போய்விட்டதே !!!

lolluvathiyar
26-05-2007, 07:03 AM
ஓவரா அனுபவிச்சிட்டீங்களா கெசவர்
ஒரே உனர்ச்சி மயமா இருக்கு
உங்கள் கவிதகளில்

கேசுவர்
26-05-2007, 04:35 PM
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை வாத்தியாரே!!!!,
பாலோ கொலோ (Paulo Cohelo) அவர்கள் எழுதிய பதினொறு நிமிடங்கள் புத்தகத்தின் தாக்காம் தான் இந்த கவிதை......

விகடன்
26-05-2007, 04:40 PM
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை வாத்தியாரே!!!!,
பாலோ கொலோ (Paulo Cohelo) அவர்கள் எழுதிய பதினொறு நிமிடங்கள் புத்தகத்தின் தாக்காம் தான் இந்த கவிதை......

ஏங்க
நம்ம ஓவியன் ஏதாச்சும் தன்னுடைய சோகக்கதை என்று கரடிவிட்டாரா?

அமரன்
26-05-2007, 04:43 PM
மன்னிக்கவும் கேசவன். கவிதை புரிகின்றமாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. கொஞ்சம் விளக்கமுடியுமா நண்பரே!

கேசுவர்
26-05-2007, 04:44 PM
அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே !!!....java.
ஒவியனை பற்றி எதேனும் கதை இறுக்குதா ???

விகடன்
26-05-2007, 04:49 PM
அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே !!!....java.
ஒவியனை பற்றி எதேனும் கதை இறுக்குதா ???

ஐயகோ
அதை ஏன் கேற்கிறீர்கள்.
அது கதை அல்ல... காவியம்.

தான் எழுதிய காதல் கடிதங்களை இந்த மன்றத்தில்த்தான் "இப்படிக்கு ஜிம்பாலாரேசன்" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9514)என்றதலைப்பில் சிரிப்புகள், விடுகதைகள் பகுதியில் எழுதிக்கொண்டிருக்கிறார். பார்க்கவில்லையா?

கேசுவர்
26-05-2007, 05:13 PM
இதோ முயச்சிக்கிறேன் அமரன்.....


காதல் இதுவா என்ற குழப்பத்தில் ...
தன்னுடைய நாட்டை(ப்ரேசில்) விட்டு ஒரு பெண் மரியா,
பிழைப்பிற்காக இன்னொரு இடத்திற்கு வருகிறாள்.
தான் நினைத்தாது வேறு , வந்தயிடத்தின் நிலைமைவேறு...
பல மனப்பேராட்டங்களுக்கு ,
பின் விபச்சாரத்தை தன் தொழிலாக தேர்வு செய்கிறாள்,
என்எனில் குறைந்த காலகட்டதில் தான் விரும்பியி பணத்தை சம்மாத்திக்க ஆசை.

அந்த் நய்ட் கிளப்பில் அவள் ஒரு அங்கம் ,
எல்லா விபாச்சாரப் பெண்களை போல் இல்லாமல் , தன்னுடைய ஒய்யு நேரங்களில்
பல புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கிறாள் ...

பின் தான் தன் செயல்கள் பற்றி , தன்னுடைய தொழில் பற்றி...தன்னுடைய தொழிலின் நேர்த்திகளை
எப்படி கற்றாள் ...

....


அவன் ---> அவளின் (மரியாவின் இரவுநேரக்காதலர்கள்)
இவள் ----> மாரியா

பாராட்டுகள் தான்
இங்கு சன்மானங்களை நிர்ணயக்கின்றன.
----------------> அவள் அவர்களை .....
பந்திக்கு முந்தி------> இதில் முந்தி என்பது புடவை முந்தி

...............


இத்துனைக்கும் காரணம் வயிறு தானே ?

நிறை -> துய்மையாய் இருந்த மரியா

அமரன்
26-05-2007, 05:15 PM
விளக்கத்திற்கு நன்றி கேசவ். இப்போது கவிதை புரியக்கூடியமாதிரி இருக்கின்றது.

கேசுவர்
26-05-2007, 05:17 PM
இதோ படிக்க்றேன் java, அதைவிட என்ன வேலை எனக்கு இங்கே ?

விகடன்
26-05-2007, 05:28 PM
ஆஹா.
முக்கியமானதை கவனிக்காது ஓவியனை இழுத்துப்போட்டேனே...
மன்னுச்சுங்கப்பா.
இப்படி வைத்துக்கொள்ளுங்களேன்...

பெரும்பாலானவை பொருந்தினாலும் விபச்சாரத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. இன்றும் படிப்பு...
என்றும் படிப்பு என்ற நிலை என்ற நிலை....

கேசுவர்
26-05-2007, 05:56 PM
java அவர்களே , நான் அந்த ப்ரேசில் நாவலின் சிலவற்றைத்தான் இங்கே முயற்ச்சித்தேன்.....

விகடன்
26-05-2007, 06:11 PM
நான் உங்கள் மீது குறை கூறவில்லை கேசுவரே.

என்மீதுதான் எனக்குக்கோபம்.
ஓவியனை வாருவது வேறு.

ஆனால் அவரை வாரும்போது அவருடன் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்காதிருக்க வேண்டுமல்லவா?

ஏம்பா ஓவியன். மனதை புண்படுத்தினால் மன்னிச்சுக்கப்பா. அடுத்தவாட்டி உமது கடனை தீர்க்கும்போது கவனமாக இருப்பேனுப்பா.

மயூ
26-05-2007, 06:21 PM
மரியாவா....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1 ஆதவா.. நான் எதுவும் சொல்லல ஆமா!!! :)

கேசுவர்
26-05-2007, 06:39 PM
மயூரேசன் ஏன் இந்த அச்சிரியம் ?
....மரியா , அந்த நாவலில் வரும் கதாப்பத்திரன் பெயர்..அவ்வள்ளவே!!!..

ஆதவா
06-06-2007, 07:44 PM
பந்திக்கு...

அவனின் உணர்ச்சி மொழி கவிதையை
இவள் உணரும் நிலைமறந்து,
வெறும் வாயசைவினால் பாராட்டிக்கொண்டிருந்தாள்.

பாராட்டுகள் தான்
இங்கு சன்மானங்களை நிர்ணயக்கின்றன.
பந்திக்கு முந்தி

கேள்விகள் சுலபமும் அல்ல
பதில்கள் பலமாகவும் இல்லை.

புரியாத புதிராக வாழ்கை
புரியக்கூடிய வினா, இவள்
பதிலை நோக்கிய பயணத்தில்
இரைப்பை இல்லாதிருந்தால்
இனிதே முடிந்திருக்கும்.,
என்ன முரண்பாடு
நிறை குறையாக போய்விட்டதே !!!


இதோ முயச்சிக்கிறேன் அமரன்.....


காதல் இதுவா என்ற குழப்பத்தில் ...
தன்னுடைய நாட்டை(ப்ரேசில்) விட்டு ஒரு பெண் மரியா,
பிழைப்பிற்காக இன்னொரு இடத்திற்கு வருகிறாள்.
தான் நினைத்தாது வேறு , வந்தயிடத்தின் நிலைமைவேறு...
பல மனப்பேராட்டங்களுக்கு ,
பின் விபச்சாரத்தை தன் தொழிலாக தேர்வு செய்கிறாள்,
என்எனில் குறைந்த காலகட்டதில் தான் விரும்பியி பணத்தை சம்மாத்திக்க ஆசை.

அந்த் நய்ட் கிளப்பில் அவள் ஒரு அங்கம் ,
எல்லா விபாச்சாரப் பெண்களை போல் இல்லாமல் , தன்னுடைய ஒய்யு நேரங்களில்
பல புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கிறாள் ...

பின் தான் தன் செயல்கள் பற்றி , தன்னுடைய தொழில் பற்றி...தன்னுடைய தொழிலின் நேர்த்திகளை
எப்படி கற்றாள் ...

....


அவன் ---> அவளின் (மரியாவின் இரவுநேரக்காதலர்கள்)
இவள் ----> மாரியா

பாராட்டுகள் தான்
இங்கு சன்மானங்களை நிர்ணயக்கின்றன.
----------------> அவள் அவர்களை .....
பந்திக்கு முந்தி------> இதில் முந்தி என்பது புடவை முந்தி

...............


இத்துனைக்கும் காரணம் வயிறு தானே ?

நிறை -> துய்மையாய் இருந்த மரியா

நண்பர் கேசுவர்... சில கவிதைகள் புரிந்தும் புரியாமலும் இருக்கும். இந்தவகைக் கவிதைகள் படைப்பவன் என்ற
பெயர் எனக்குமுண்டு. அதனால்தான் அடுத்த கவிதைக்கு கரு கிடைத்தும் எளீமையாக்க யோசித்துக்
கொண்டிருக்கிறேன்,.. இந்த இடைவெளி வேண்டியதாகப் படுகிறது. சரி.. உங்கள் கவிதைக்கு வருவோம்..

அநேகமாக நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை என்று நினைக்கிறேன். அர்த்தம் சில வார்த்தைகளுக்கு அழகாக இட்டும் கவிதைக் கட்டை சரியாக பயன்படுத்தவில்லை என்பது நிதர்சன உண்மை.

கவிதையை திருத்தும்போதே படித்து புரியாமல் சென்றவன் நான். உங்கள் விளக்கம் கண்டபிந்தான் தெரிகிறது கவிதையில் சில விளக்கங்கள் கோரவேண்டியிருப்பது.

உங்கள் மனதில் மறைந்துள்ள கரு முழுமையாக வெளிப்பட்டால்தான் கவிதைக்கான நிறைவு இருக்கும்.. நீங்கள் விளக்கத்திற்குச் சொன்ன பிறகும் இங்கே விளங்காமல் இருக்கிறது எனக்கு.. காரணம்

அவன் என்பதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அர்த்தம், மரியாவின் இரவு நேரக் காதலர்கள்.. முரண்பாடாக அல்லவா இருக்கிறது. ஒருமைக்கு பன்மையை ஒப்பிடுதல்..

அதுபோக ஒரு வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்தவாறு இயற்றப்பட்டிருக்கீறது.

இந்த கவிதையை பென்ஸ்/இளசு படித்தால் நல்ல விமர்சனம் பண்ணூவார் என்ற நம்பிக்கையில்,
ஆதவன்