PDA

View Full Version : மனமே...



rambal
14-05-2003, 05:28 PM
விடை தெரியா
பயணம்
தினம் செல்லும்
சவப்பையாய்..

கோணிப்பையில்
கட்டி வைத்த
ஐஸ் கட்டியாய்..

லாந்தர் விளக்கினுள்
இருக்கும்
ஒளியாய்...

இத்தனை
உண்மை தெரிந்தும்
வேசியாய்..

பை நிறைய பாவம்...
வழிப்போக்கனுக்கு
மிகக் கொடிய தண்டனையாய்...

இன்னல் சேர்த்து
இன்னும் கொஞ்சம் பாவம் சேர்த்து
நிலையில்லாமல் அலைகிறாய்..

அலைகின்ற கண்களும்
போலி புன்னகையுமாய்
வலம் வருகிறாய் பத்தினியாய்..

ஓட்டைப் பானையில்
இருந்து சொட்டு சொட்டாய்
ஒழுகுகிறாய்..

தீயில் பொசுங்கி
நீரில் கரைந்து
காற்றில் கலந்து
காணாமல் போகப்போகும்
மனமே...

Nanban
15-05-2003, 05:28 AM
ஓட்டைப் பானையில்
இருந்து சொட்டு சொட்டாய்
ஒழுகுகிறாய்..

...

மனித மனதின் இயல்பை இத்தனை இயல்பாகக் கேட்டதில்லை.

ஓட்டைப் பானையிலிருந்து சொட்டு சொட்டாக வெளியேறும் நீரைப் போலத் தான், நம் மனமும், நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து போகிறது. என்ன, சிலருக்கு அந்த ஓட்டை பெரிதாக இருக்கிறது - விரைவிலேயே, மனிதம் ஒழுகி வெளியேறி, மிருகத்திலிருந்து வித்தியாசப் படுத்தமுடியாதவனாகப் போய்விடுகிறான். நாம் ப்ரார்த்திப்போம், நம் மனதிலுள்ள ஓட்டைகள் பெரிதாகாமல், இறக்கும் வரையிலாவாது கொஞ்சம் மனிதம் நம் மனதில் தெங்கி நிற்க.........

karikaalan
15-05-2003, 09:14 AM
மனக் கவிதை அருமை ராம்பால்ஜி!

மனம் நம்மிடம் எப்போதும் இருப்பதில்லை
மனத்தை அடகு வைத்து விடுகிறோம்
மனத்தைப் பறி கொடுத்து விடுகிறோம்
மனத்தைக் கல்லாக்கி விடுகிறோம்
மனம் கரைந்தும் போய்விடுகிறது
மனத்தைப் போல் வேகம் ஒளிக்குக் கூட கிடையாது
மனத்துக்கு நிறம் கூட உண்டு
சிலருக்கு வெள்ளை
சிலருக்கு என்னென்னவோ!

===கரிகாலன்

poo
15-05-2003, 09:34 AM
நன்றாக உருவகப்படுத்தியுள்ளாய் ராம்...

பாராட்டுக்கள்..