PDA

View Full Version : நீதானடி அது!!!



lenram80
20-05-2007, 03:48 PM
அடங்கா புயலாய் இருந்த என்னை
உன் சுருக்குப் பையில் பிடித்து அடைத்தவள் நீதானடி!

கட்டுக் கடங்கா காளையாய் இருந்த என்னை
உன் கூந்தல் முடியில் கட்டிப் போட்டவள் நீதானடி!

சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்த என்னை
உன் சாந்தப் பார்வையாய் குளிரச் செய்தவள் நீதானடி!

விழுதுகளை மட்டுமே விடும் ஆலமரமான என்னை
உன் புன்னகையால் பூ பூக்க வைத்தவள் நீதானடி!

வேர்களைப் பிடுங்கிக் கொண்டு
வெறி கொண்டோடும் ஆறாய் இருந்த என்னை
பூ மழை பொழிந்து
உன் வேர்களை மூடி, விதைகளையும் மூடும்
அன்பு பொழியும் அம்மை(யா)ஆறாக மாற்றியவள் நீதானடி!

சிவனே என சிலையாய் இருந்த என்னை
சிற்பமாய் செதுக்கியவள் நீதானடி!

தாறுமாறாய் தாவிக் கொண்டிருந்த என்னை
உன் மூக்கால் முறைத்து முறைப்படுத்தியவள் நீதானடி!

கொதிக்கும் தார் பாலைவனமாய் இருந்த என்னை
உன் வல்லினத் தீண்டல் மூலம் வடகிழக்கில் மேலே தள்ளி
எவரையும் உறைக்கும் எவரெஸ்ட் சிகரமாய்
இயற்கையே உறையும் இமய மலையாய் மாற்றியவள் நீதானடி!

தண்டவாளமாய் தவித்துக் கொண்டிருந்த என்னை
நிமிர்த்திப் பிடித்து நடுத்தெரு விளக்குக் கம்பமாய் நட்டவள் நீதானடி!

கண்டதையும் எழுதும் எழுதுகோலாய் இருந்த என்னை
கண்ட தேவதை பற்றி எழுதும் கவிஞன் ஆக்கியவள் நீதானடி!

மௌனங்களையே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த என்னை
உன் சிரிப்புச் சங்கீதங்களை ரசிக்க வைத்து விட்டு
இப்போது நீ மௌனமானாய்!

முன்பு நான் ரசித்த அதே மௌனம்
இப்போது ரணமாய் கொல்ல...
தூரத்தில் நின்று அழுபவளும் நீதானடி!!!

மனோஜ்
20-05-2007, 03:56 PM
அருமை அருமை பிரிவுகளின் மனங்கள்
காதலில் வரும் இன்னல்கள் அருமைகவிதையாய்

சக்தி
20-05-2007, 04:01 PM
கவிதை அருமை லெனின். வலியின் வேதனை வந்தவனுக்குத்தான் தெரியும்

mravikumaar
21-05-2007, 02:00 PM
அருமையான கவிதை வாழ்த்துக்கள்

ரவிக்குமார்

lolluvathiyar
23-05-2007, 03:12 PM
அருமை, அருமை
பாராட்ட வார்த்தை இல்லையே
சரி 5 இ பணமாவது தருகிறேன்

சிவா.ஜி
04-06-2007, 04:27 AM
முன்பு நான் ரசித்த அதே மௌனம்
இப்போது ரணமாய் கொல்ல...
தூரத்தில் நின்று அழுபவளும் நீதானடி!!!

ரசித்தேன் இந்த வரிகளை.எல்லாமும் தந்து எல்லாமுமாய் இருந்து இல்லாமலே போனவளை என்னவென்று சொல்ல. நல்ல கவிதை. பாராட்டுக்கள் லெனின்.