PDA

View Full Version : முதல் கிறுக்கல் ...

பிரசாத்
20-05-2007, 01:07 PM
இது வரை ஒரு கவிதைக் கூட நான் எழுதியதில்லை
முடிவு செய்துவிட்டேன் இன்றைக்கு ஒரு கவிதை எழுதிவிடுவதென்று,

இதற்க்கு கிடைக்கப் போகும் வரவேற்ப்பைப்பற்றி கவலையில்லை,

என் கவிதைகள் - நான்
கட்டிய தாஜ்மகால்
அவன் காதலியை புதைத்தான் -
நான் என் காதலை...

-----------------------------------------

நெடு நாட்க்களுக்கு முன் நான் ரசித்த புன்னகை
நெடுங்காலமாய் நான் யாசித்த புன்னகை
மீண்டும் கண்டேன் - பெண்ணே
உன் மறுமுறை வருகையில்

உன் உதடுகளின் சிறு கருணையில்...

உங்கள் பிரசாத்...
வரவேற்ப்பை பொறுத்தே படைப்புகள் தொடரும்...

lolluvathiyar
20-05-2007, 01:14 PM
முதல் கவிதையா முதல் 4 வரிகள் அருமை
ஆரம்பமே அசத்தலா

இதற்க்கு கிடைக்கப் போகும் வரவேற்ப்பைப்பற்றி கவலையில்லை,
ஏன் இந்த முரன்பாடு
வரவேற்ப்பை பொறுத்தே படைப்புகள் தொடரும்...

ஓவியன்
20-05-2007, 01:14 PM
,இதற்க்கு கிடைக்கப் போகும் வரவேற்ப்பைப்பற்றி கவலையில்லை,

நண்பரே நல்லவற்றைத் தட்டிக் கொடுத்து மெருகேற்ற இந்த மன்றம் என்றும் தவறாது.

நீங்கள் கவலைப் பட்டாலும், படாவிட்டாலும் உங்கள் கவிதைகளைச் செம்மையாக்கும் விமர்சனங்கள் இங்கே உங்களுக்குக் கிடைக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையிலுள்ளது.

பிரசாத்
20-05-2007, 01:17 PM
முதல் கவிதையா முதல் 4 வரிகள் அருமை
ஆரம்பமே அசத்தலா

முதல் முயற்சியை பாராட்டி ஊக்கமூட்டியமைக்கு மிக்க நன்றி . . .

leomohan
20-05-2007, 03:58 PM
இது வரை ஒரு கவிதைக் கூட நான் எழுதியதில்லை
முடிவு செய்துவிட்டேன் இன்றைக்கு ஒரு கவிதை எழுதிவிடுவதென்று,

இதற்க்கு கிடைக்கப் போகும் வரவேற்ப்பைப்பற்றி கவலையில்லை,

என் கவிதைகள் - நான்
கட்டிய தாஜ்மகால்
அவன் காதலியை புதைத்தான் -
நான் என் காதலை...

-----------------------------------------

நெடு நாட்க்களுக்கு முன் நான் ரசித்த புன்னகை
நெடுங்காலமாய் நான் யாசித்த புன்னகை
மீண்டும் கண்டேன் - பெண்ணே
உன் மறுமுறை வருகையில்

உன் உதடுகளின் சிறு கருணையில்...

உங்கள் பிரசாத்...
வரவேற்ப்பை பொறுத்தே படைப்புகள் தொடரும்...

பலே பிரசாத். முதல் கவிதை போலே இல்லை. வாழ்த்துகள்.

மனோஜ்
20-05-2007, 04:01 PM
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
மன்றத்தில் அடுத்த கவியாக போகிறீர்கள் என்பது நிச்சயம்
வார்த்தை அழகாக உள்ளது வரிகளில்

சக்தி
20-05-2007, 04:10 PM
இரண்டுகவிதைகளும் தூள் ரகம்

அக்னி
20-05-2007, 07:39 PM
இது வரை ஒரு கவிதைக் கூட நான் எழுதியதில்லை
முடிவு செய்துவிட்டேன் இன்றைக்கு ஒரு கவிதை எழுதிவிடுவதென்று,

இதற்க்கு கிடைக்கப் போகும் வரவேற்ப்பைப்பற்றி கவலையில்லை,

எண்ணித் துணிக கருமம்...

உங்கள் பிரசாத்...
வரவேற்ப்பை பொறுத்தே படைப்புகள் தொடரும்...
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...

பிரசாத்...
அனுபவமோ, கற்பனையோ... இக்கவிதைகள் சிறந்த வடிவமைப்பு...
சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்...
உங்களுக்கு இருக்கிறது... வளர்த்திடுங்கள் தொடருவதன் மூலம்...

இங்கே, செவ்வந்தி மன்றில் கவிதை புனைவதற்கு அழகாக சொல்லித் தந்திருக்கிறார்கள்... வாசித்து பயன்பெற்று வளர்ந்திடுங்கள்...

கன்னிக்கவிதையே கவர்கிறது... தொடரும் கவிதைகளால் மலர்ந்திடுங்கள்...

அமரன்
21-05-2007, 01:51 PM
பிரசாத். இங்கே தட்டிக்கொடுத்து வளர்த்துவிடப் பலர் இருக்கின்றனர். உங்கள் முதல் கவிதை அருமை. உங்களது கவி ஆற்றலை இன்னும் மேம்படுத்த இங்கே

நீங்களும் கவிதை எழுதலாம் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=85)
போய்ப் பாருங்கள்.