PDA

View Full Version : முடக்கத்தான் கீரை



namsec
20-05-2007, 01:01 PM
காடு மேடுகளில் வேலியில் கொடி போல் படர்ந்து வளரும் கீரைதான் முடக்கத்தான் கீரை. இதில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. இக்கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டு வருவது நல்லது. அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூலநோய், பாதவாதம், கரப்பன் போன்ற நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

ஜோய்ஸ்
20-05-2007, 02:34 PM
அப்படியா சித்தரே,
ஆனால் அது எப்படி இருக்கும் தோற்றத்தில்,என்று தெரியாதவரை எப்படி அதை நான் அறிந்து கொள்வது.கண்டுபிடிக்க எதேனும் வழிவகை உள்ளதா சித்த சுவாமிகளே.

aren
20-05-2007, 03:09 PM
நல்ல செய்தி. ஆனால் இந்த கீரை இப்பொழுதெல்லாம் எங்கே கிடைக்கிறது. வேலிகள்தான் இப்பொழுது காம்பெளண்ட் சுவராகிவிட்டனவே. கடைகளில் கிடைக்கிறதா?

வெற்றி
21-05-2007, 04:06 AM
நல்ல செய்தி. ஆனால் இந்த கீரை இப்பொழுதெல்லாம் எங்கே கிடைக்கிறது. வேலிகள்தான் இப்பொழுது காம்பெளண்ட் சுவராகிவிட்டனவே. கடைகளில் கிடைக்கிறதா?

சந்தைகளில் கிடைக்கும்...
இந்த கீரையில் அடை செய்து சாப்பிட்டால் கடுமையான உடல் வலி இருந்தாலும் காணமல் போய்விடும்...(சிக்குன் குனியா வின் போது முடக்கத்தான் கீரை தான் என்னை முடங்காமல் செய்தது...)

ஜெயாஸ்தா
21-05-2007, 04:34 AM
எங்கள் கிராமங்களில் இதைப்போன்ற அனைத்து கீரைவகைகளும் சுற்றி சுற்றி கிடக்கும். இப்போது எல்லா கிராமும் நகரமாகி வருகிறதே என்ன செய்ய? இப்போதெல்லாம் கீரைவகைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டதே... இன்னும் சில நாள் கழித்து அருங்காட்சியகங்களில் மட்டும்தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.

வெற்றி
08-06-2007, 02:12 PM
புழுங்கல் அரிசியை ஊறப்போடும் போது ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
முடக்கத்தான் கீரையை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
கீரையை நைசாக அரைத்துக் கொண்டு உப்பு சேர்த்துக் கரைத்து விடவும். மறுநாள் மாவு எப்போதும் போல் புளித்து இருக்கும்.
தோசைக் கல்லில் நல்லெண்ணை இரண்டு கரண்டி ஊற்றி முடக்கத்தான் தோசை மாவை வார்த்து எடுக்கவும்.
சாம்பாருடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 10 நபர்களுக்கு
வழங்கியவர் R. சத்யப்பிரியா, நாகை.

ஓவியா
08-06-2007, 06:50 PM
நல்ல தவல்கள்.

அனைவருக்கும் நன்றி.