PDA

View Full Version : நிலா விடு தூதூ



சக்தி
20-05-2007, 07:42 AM
வானத்து வெண்ணிலவே
என் வஞ்சியவளை
காண்பாயோ?

கணமேனும் அவளை
மறவேன் - என்று
அவள் காதருகில்
சொல்வாயோ?

நினைவெல்லாம்
அவளாக
நித்திரையைத்
தொலைத்து விட்டேன்
உயிரெல்லாம்
அவளாக
உண்பதையும்
நிருத்திவிட்டேன்
என்றவள்
மனமறிய சொல்வாயோ?

உயிர் தான்
பிரிந்தனவே
உடலிருந்து என்ன பயன்
என்றவள் எண்ண வேண்டாம்
அவள் உயிரை
மீட்டெடுத்து சேர்ப்பேன்
என்று உரைப்பாயோ?

பசலை கண்டு
அவள் படுத்திருந்தால்
அவள்
பசலை நீக்க
வருவேன் - என்று
அவள்
பாதந்தொட்டு
சொல்வாயோ?

அவள்
உன்னில் பேரழகி
என்று
போகாமல்
இருந்து விடாதே
உன் தோழி
துயர் துடைப்பது
உந்தன் கடமையன்ரோ.

ஓவியன்
20-05-2007, 07:49 AM
பாவம் இந்த நிலா, எத்தனை பேருக்குத் தான் தூது போவது?

கவிதை அருமை ரோஜா!

வாழ்த்துக்கள்.

சூரியன்
20-05-2007, 07:58 AM
நிலவுக்கு பதில் சூரியனை தூது அனுப்பலாமே நண்பரே.

சக்தி
20-05-2007, 08:11 AM
சூரியனை தூதூ அனுப்பலாம், ஆனா அவர் பிக்கப் பண்ணீடாருன்னா?

ஓவியன்
20-05-2007, 08:14 AM
சூரியனை தூதூ அனுப்பலாம், ஆனா அவர் பிக்கப் பண்ணீடாருன்னா?

ஆமா!

சூரியனுக்குப் பதில் நம்ம ஆதவனை அனுப்புவோமா?:sport-smiley-014:

சூரியன்
20-05-2007, 08:21 AM
ஆமா!

சூரியனுக்குப் பதில் நம்ம ஆதவனை அனுப்புவோமா?:sport-smiley-014:




நம்ம ஆதவன் கரெக்ட் பண்ணிட்டா என்ன பன்னுவீங்க நண்பரே.

சக்தி
20-05-2007, 08:24 AM
அய்அய்யோ அதுக்கு சூரியன் எவ்வளவோ மேல். தல இப்பவும் சைட் அடிக்கத்தானே போயிருக்காரு!