PDA

View Full Version : பில்லியர்ட்ஸ்,கோல்ப் விளையாடுவது எப்படி



தங்கவேல்
20-05-2007, 02:55 AM
பில்லியர்ட்ஸ், கோல்ப் விளையாட்டு விதிமுறைகள்

பில்லியர்ட்ஸ், கோல்ப் விளையாட்டை பற்றி சொல்லுங்கள். மேலும், டிவியில் பார்த்தால் விளையாடுவது புரிய வேண்டும். பாயிண்டுகள் எப்படி எடுக்கிறார்கள். விதி முறைகள் என்ன ? எப்படி வெற்றி நிர்னயிக்கப்படுகிறது ? விளக்குவீர்களா ?

aren
20-05-2007, 05:42 AM
காஃல்ப் விளையாட ஆரம்பிப்பதற்குமுன் இது என்ன விளையாட்டு, இதில் என்ன இருக்கிறது என்று நினைத்திருந்தேன். இதை ஆட ஆரம்பித்தபிறகு இதில் இருக்கும் சுவாரசியமும் மன நிம்மதியும் புரிந்தது. இப்பொழுதெல்லாம் எப்பொழுது நேரமும் சந்தர்பமும் கிடைத்தால் Greens-க்கோ அல்லது Driving Range-ற்கோ சென்றுவிடுகிறேன். ஆனால் நேரம்தான் சரியாக கிடைப்பதில்லை.

காஃல்ப் ஆட்டம் 18 குழிகள் (hole) கொண்டது. இந்த 18 குழிகளுக்குள் 72 ஹிட்ஸ்களில் பந்தை உள்ளே அடித்துவிடவேண்டும். சில குழிகள் மூன்று ஹிட்டிலும், சிலது நான்கு அல்லது 5 ஹிட்டிலும் பந்தை உள்ளே செலுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தூரத்திற்கு தகுந்தமாதிரி மட்டைகள் (Clubs) உள்ளன. அதை உபயோகித்து பந்தை அடிக்கவேண்டும்.

முதலில் ஆட்டத்தைத் தொடங்கும் பொழுது அதற்கு Tee Off என்று பெயர். ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒவ்வொரு குழியைத் தொடங்கும்பொழுதும் ஒரு சிறிய குச்சியை (Tee) மண்ணில் சொருகி அதில் பந்தை வைத்து (பந்து கொஞ்சம் மேலே நிம்பி இருக்குமாறு செய்வதற்கு) அதை அடிப்பார்கள். பந்தை அடிக்கும் மட்டை பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

தலை பெரியதாக உள்ள மட்டைக்கு Driver என்று பெயர். இது தொலை தூரம் அடிப்பதற்கு உபயோகப்படும். நான்கு அல்லது ஐந்து ஹிட்கள் அடிக்கும் குழிகளுக்கு இதை உபயோகப்படுத்துவார்கள். இது தவிற Woods என்று ஒன்று உள்ளது. இதில் 1, 3 மற்றும் 5 என்ற எண்களில் woods உள்ளன. இவைகள் தூரத்திற்கு தகுந்தமாதிரி உபயோகப்படும். 5 குறைந்த தூரத்திற்கும், 1 அதிக தூரத்திற்கும் பயன்படும்.

இது தவிற Irons என்ற மட்டை பிரிவு உள்ளது. இவைகள் 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் P வரிசையில் உள்ளன. இதில் மூன்று அதிக தூரம் செலுத்துவதற்கும் P குறைந்த தூரம் செலுத்துவதற்கும் பயன்படும். P என்றால் Pitcher என்று அர்த்தம். இது பந்தை நெம்பி மேலெழும்பி குறைந்த தூரத்தை கடப்பதற்கு உபயோகப்படுகிறது.

இது தவிற S என்ற மட்டையும் உள்ளது. இது Sand உள்ள பள்ளத்தில் விழுந்து பந்தை எடுப்பதற்கு பயன்படுகிறது.

கடைசியாக Putter என்ற மட்டை உள்ளது. அது Hole இருக்கும் Greens உள்ளே இருக்கும் பந்தை மெதுவாக Holeக்கு அனுப்ப உபயோகப்படும்.

மீதி அடுத்த பகுதியில் எழுதுகிறேன். தமிழில் எழுதுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
21-05-2007, 03:26 PM
பயனுள்ள தகவல்கள் ஆரென். விரைவில் தாருங்கள்.

அக்னி
21-05-2007, 08:56 PM
செல்லிடப்பேசியில் கூட விளையாடத் தெரியாது எனக்கு. ஆனாலும் அறிய ஆவலாய் உள்ளேன்...

தங்கவேல்
22-05-2007, 01:40 AM
பில்லியர்ட்ஸ் விளையாட்டை பற்றி யாராவது சொல்லுங்க

வெற்றி
24-05-2007, 11:02 AM
நன்றி Aren ...நல்ல தகவல்..
நான் இரண்டு விளையாட்டையும் வீடியோ கேமில் விளையாண்டதோடு சரி..

இராசகுமாரன்
26-05-2007, 03:12 PM
பில்லியர்ட்ஸ் விளையாட்டை பற்றி யாராவது சொல்லுங்க

பில்லியர்ட்ஸில் பல வகை உண்டு என்று கூறுவார்கள். இதில் அனைவரும் பொதுவாக விளையாடுவது "பாக்கெட் பில்லியர்ட்ஸ்" என்று நினைக்கிறேன். நாமெல்லாம் இதை தூர இருந்து பார்த்ததோடு சரி.

ஒவ்வொரு வகையான பில்லியர்ட்ஸின் விதிமுறைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://departments.weber.edu/wildcatlanes/billiard_rules.htm

பில்லியர்ட்ஸ் பற்றிய இந்த வீடியோ நன்றாக உள்ளது, உங்களுக்கு உதவுமா?
http://www.expertvillage.com/interviews/billiards-basics.htm

பில்லியர்ட்ஸ் விளையாடினவர்கள் யாரும் இங்கே இருந்தால் நண்பருக்கு உதவுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

leomohan
26-05-2007, 03:40 PM
நல்ல தகவல் ஆரென். கால்ஃப் பணக்கார ஆட்டமோ.

தகவலுக்கு நன்றி ராஜகுமார் அவர்களே. சென்னையில் எல்லா இடத்திலும் துவக்கிவிட்டனர் இந்த பில்லயர்ட் ஆட்டம். அரை மணிக்கு 30 ரூபாய் ஒரு மணிக்கு 50 ரூபாய்.