PDA

View Full Version : குறும் கவிதை.



தீபா
19-05-2007, 05:50 PM
காலையில் மணத்த
பூக்களை
மாலையில் வாட
தூக்கியெறிகிறாள்
பெண்

அமரன்
19-05-2007, 08:21 PM
குறைந்த வரிகளில் நிறைந்த பொருட்கொண்ட நிறை கவிதை. பாராட்டுகள்.

தீபா
24-05-2007, 11:46 AM
எமது கவிக்கு
ஆழ்ந்த பாராட்டளித்த
அமரனுக்கு
பேதையின் வணக்கம்.

தாமரை
24-05-2007, 11:48 AM
காலையில் மணத்த
பூக்களை
மாலையில் வாட
தூக்கியெறிகிறாள்
பெண்

அன்று சூடிய மல்லிகை
அவளை முகர்ந்தது
அதனால்தான் கோபமோ!

shangaran
24-05-2007, 11:52 AM
தனிமையை ரசிக்கப் பிடிக்கும்,
நானும் அவளும் சேர்ந்திருக்கும்
தருணங்களில் மட்டும்.

தீபா
24-05-2007, 11:54 AM
அன்று சூடிய மல்லிகை
அவளை முகர்ந்தது
அதனால்தான் கோபமோ!

முகர்ந்த மல்லியே
வாடியதென்றால்
சுமந்த இவள் மணம்
நறுமணமோ?

தீபா
24-05-2007, 11:57 AM
தனிமையை ரசிக்கப் பிடிக்கும்,
நானும் அவளும் சேர்ந்திருக்கும்
தருணங்களில் மட்டும்.

தனிமையை எனக்கு வெறுக்கப் பிடிக்கும்
நீயும் அவனும் இணைந்திருக்கும்
கருமகாலத்தில் மட்டும்.


வேலையற்று போகவேண்டுமா
கவிதைகள் உமது படைப்புகள்?
தேவையின்றி போடுகிறீர்கள்
தனித்திரி அல்லாமல்.

தாமரை
25-05-2007, 05:22 AM
முகர்ந்த மல்லியே
வாடியதென்றால்
சுமந்த இவள் மணம்
நறுமணமோ?


மல்லி வாடியது
அவல் மணத்தாலன்றி
அவள்
தாமரை முகத்தின்
செவ்விதழ் காண முடியா
ஏக்கத்தினாலே!

ஷீ-நிசி
25-05-2007, 05:36 AM
காலையில் மணத்த
பூக்களை
மாலையில் வாட
தூக்கியெறிகிறாள்
பெண்

வாசம் எட்டு மணிநேரம்
வடிவம் ஆறு மணிநேரம் போல!

தீபா
25-05-2007, 03:07 PM
மல்லி வாடியது
அவல் மணத்தாலன்றி
அவள்
தாமரை முகத்தின்
செவ்விதழ் காண முடியா
ஏக்கத்தினாலே!

மறுக்கிறேன்

இதழ்களின் வாசனை
மலர்களுக்கு
நாறுமோ என்று யோசனை.
செவ்விதழ்கள்
வெறும் குருட்டுச் சாயம்
ஏக்கங்கள் வெறும் பெருமூச்சு.
மலர்கள் பிணமானது
அதனாலோ என்னவோ?

சுகந்தப்ரீதன்
17-06-2008, 03:21 PM
வாசம் எட்டு மணிநேரம்
வடிவம் ஆறு மணிநேரம் போல!
அதென்ன வடிவம் ஆறுமணி நேரம்..?
எனக்கு புரியலையே கவிஞரே..!!
கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..!!

சுகந்தப்ரீதன்
18-06-2008, 04:20 AM
என்ன சுகந்தப்ரீதன் நீங்க,,,,?
நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ?
............. தெரியுமா ........... வாசம் ?
ஆமா அதத்தெரிஞ்சு அது என்னத்த கிழிக்கப்போகுது என்று நீங்க முணுமுணுக்கிறது எனக்கு தெளிவாவே கேக்குதுப்பா.
கேட்டுருச்சா..கிஷோரு..??!!
ஆனாலும் உனக்கு ஓவர் குசும்புப்பா..!!
விளக்கம் கேட்டா வெங்காயம் உரிக்க சொல்ற..?!

ஆதவா
18-06-2008, 04:27 AM
என்ன சுகந்தப்ரீதன் நீங்க,,,,?
நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க ?
............. தெரியுமா ........... வாசம் ?
ஆமா அதத்தெரிஞ்சு அது என்னத்த கிழிக்கப்போகுது என்று நீங்க முணுமுணுக்கிறது எனக்கு தெளிவாவே கேக்குதுப்பா.

தெரிந்துகொள்ள நினைப்பது தவறில்லை கிஷோர்.

அதை ஏதோ பூடகமாக நீங்க நினைத்து கோடிட்டு அசிங்கமாய் மன்ற நண்பர்களை மறைமுகமாய் திட்டாதீர்கள்.. இது உங்களுக்கு முதல் எச்சரிக்கையாக இருக்கும்.

புதிய நண்பர்கள் இதைக் கண்டு இவ்விதம் செய்யாமலிருக்க இப்பதிவு பொதுவில் பதிக்கப்படுகிறது.

-பொறுப்பாளர்கள்

ஓவியன்
18-06-2008, 04:30 AM
காலையில் மணத்த
பூக்களை
மாலையில் வாட
தூக்கியெறிகிறாள்
பெண்

காலையில் மணத்த பூக்கள் மாலையானதும்
அதாவது, பூ மாலையானதும்
வாடி விட்டதா....???

காலையில் மணத்த பூ வாடியதா..?
இல்லை, பூ மாலையே வாடியதா...??
அல்லது காலையில் மணத்த பூவே
வாடித்தான் இருந்ததா...?? (வாடியிருந்தாலும் பூ மணக்குமே..!!)
விளக்கம் தேவை தென்றல்...

ஆதவா
18-06-2008, 05:04 AM
உங்கள் அறிவுரைக்கு நன்றி.
ஆனால் நான் பதித்த அந்த பதிவு நீங்கள் எச்சரிக்கும் அளவுக்கு ஒன்றும் பாரதூரமானதல்ல.
உண்மையில் நான் அதனை ஒரு விளையாட்டாகவே,பொதுப்படையாக என்னையும் சேர்த்துதான் சொன்னேன், தனி எந்த ஒருவரையும் குறிப்பிடவில்லை, இதைவிடவும் மோசமான விளையாட்டான சாடல்கள் நம் மன்றில் இல்லையா சொல்லுங்கள்? நீங்கள்தான் அதை பூதாகரமாக்கியிருக்கிறீர்கள்.

நல்லது நண்பரே! அப்படியிருந்தால் சுட்டிக் காட்டுன்ங்கள்.. இனி நடக்காமல் கவனிக்கிறோம்.