PDA

View Full Version : பெண்மை



அமரன்
19-05-2007, 04:34 PM
1996 ஆம் வருடம். மாதங்களில் சிறந்த மார்கழி மாதம். அப்போது நான் கல்விப்பொதுத் தராதரத்தின் சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்தேன். இந்திய கல்விக்கொள்கையின் பிரகாரம் அது பத்தாவது வகுப்பு. மார்க்ழி மாதம் எமது ஆண்டுத்தேர்வுக் காலம். எனது எதிகாலத்தின் முதலாவது படியைத் தாண்டி அடுத்த படியில் ஏறப்போகின்ற சோதனைக்காலம்.

அன்று கணிதபாடப் பரீட்சை. அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து தயாராகி 7.30 மணியளவில் பேருந்துக்காகக் தரிப்பிடத்தில் காத்திருந்தேன். வீதியில் அக்காலை வேளையில் வாக நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. நான் தங்கியிருந்த கொழும்பு நகரம் ஒரு வியாபார நகரம். இலங்கையின் தலை நகரம். மேல் வர்க்கத்தினரின் மகிழுந்துகளும் நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து சாதனமான பேருந்துகளும் முச்சக்கர வாகனங்களும் போக்குவரத்தை நெரிசலாக்கிக்கொண்டிருந்தன.

நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக இருக்கும் நாடு என்பதால் பேருந்துகல் நிறைமாதக்கர்ப்பிணி போல இருந்தன. ஏற முடியாத அளவுக்கு மக்களால் நிறைந்து வந்தன. அப்படியாக பேருந்துகள் சிலவற்றை தெரிந்தே தவற விட்டேன். நேரம் 8 மணியை நெருங்கியது. 8.30 மணிக்கு தேர்வு மண்டபத்தில் இருந்தாக வேண்டும். அடுத்து வந்த பேருந்தில் தொற்றிக்கொண்டேன்.

ஒரு காலை பேருந்தின் மிதிபலகையில் பாதி வைத்துக்கொண்டு மறுகாலை காற்றில் அந்தரத்தில் தொங்கவிட்டேன். அப்படித்தான் நிற்க முடிந்தது. மிதிபலகை முழுக்க பயணிகள் நின்றிருந்தனர். ஒரு கையை மட்டும் பேருந்தின் யன்னல் கம்பியில் பிடித்திருந்தேன். கையை விட்டால் பின்னால் வரும் பேருந்து என்னை எமலோகம் அனுப்பிவிடும். அதனால் மிக கவனமாகப் பிடித்திருந்தேன்.
என் பக்கமாக வந்த ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியது. உள்ளே இருந்த பயணிகள் உட்பட அனைவரும் என்பக்கம் தள்ளப்பட்டனர். எனக்கு முன்னால் மிதிபலகையில் நின்றோரும் என்பக்கமாகத் தள்ளப்பட்டு என்னை மிதிபலகையிலிருந்து கீழே தள்ளி விடும் அளவுக்கு வந்தனர். எனது கைப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டிருந்தது. பின்னாலோ வேறு பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்பேருந்தைப் பார்க்க எனக்கு யமதர்மராஜன் வருவதுபோல இருந்தது. என் கை யன்னலின் கம்பியிலிருந்து விடுபட்டுவிட்டது.

செத்தேன் என நினைத்தேன். ஆனால் என்னை அறியாமல் மரணம் தந்த பயத்தில் என் கைகள் ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டன. அப்பிடியை வலுவாக்கிக்கொண்டு என்னை நிலை நிறுத்தினேன். பேருந்தும் நிமிர்ந்ததனால் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது. என் கை பற்றி இருப்பது எதுவென்று பார்த்தேன். அது ஒரு பெண்ணின் பாவாடை. அப்பெண் ஒருகையால் பேருந்துக் கம்பியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் பாவாடை அவிழ்ந்து விடாமால்ப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்தேன். பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. புரிந்துகொண்ட அப்பெண் 'பரவாயில்லை. பிடித்துக்கொளுங்கள்' என்று சிங்களத்தில் சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவாறு பரீட்சை எழுதி முடித்து விட்டேன். அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் புதினத்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கடைசிப்பக்கத்தில் மந்திரியின் விபச்சார விடுதியில் பிடிபட்ட பெண்ணைப் பாற்றிய செய்தி நிழல்படத்துடன் இருந்தது. அந்த நிழல் படத்தில் இருந்தது பேருந்தில் என்னைக் காப்பாற்றிய அதே பெண்.

ஓவியா
19-05-2007, 04:43 PM
Join Date: 16 Feb 2007
Posts: 1,000

ஆயிரத்தாவது பதிவிற்க்கு வாழ்த்துக்கள். :music-smiley-010: :music-smiley-010:


அணைவரின் நன்பரே,
முதல் கதையிலே அசத்திட்டீங்க. கதையின் கரு என்னை பாதித்து விட்டதென்றே சொல்லலாம். கடைசிவரி நெஞ்சில் கல் வைத்ததுபோல் இருந்தது.

சின்ன கருவை அழகாக வலைத்து கையாண்டிருகின்றீர்கள்.

இது உண்மை சம்பவமாக இருந்தால், அப்பெண்ணுக்கு என அனுதாபங்கள். உலகில் இளகிய மனதுடைய பெண்கள் நிரைந்துள்ளனர். ஒருசிலருக்கு மட்டுமே அவர்களின் எண்ணம் காணக்கிடைகின்றது.

நல்ல எழுத்துத்திரன் உங்களுக்கு, பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.


................................................................................
ஒரு கேள்வி
எதற்க்காக பெண்மை என்று பெயர் சூட்டியுள்ளீர்கள்??

ஷீ-நிசி
19-05-2007, 04:47 PM
மிக அருமை நண்பரே! வாழ்த்துக்கள்! உண்மை சம்பவமோ என்று வியக்க வைக்கிறது.. கதை நடை மிகவும் அழகாக உள்ளது... தொடர்ந்து எழுதுங்கள்!

ralah
19-05-2007, 05:19 PM
பேருந்தில் தன் மானத்தையை ஒரு உயிருக்காக இழந்தாள் என்று சொல்ல முடியுமா? ஆனால் தன் உயிருக்காக...... மிகவும் யோசிக்க வைக்கிறது உங்கள் கதை.

சிறுகதை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். அருமையாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

அன்புடன்
ரலா.

அமரன்
19-05-2007, 08:35 PM
வாழ்த்துகள் சொன்ன ஓவியாவுக்கும் கதையைப் படித்து விமர்சித்துப் பின்னூட்டமிட்ட ஷீ-நிஷி ரலா இருவருக்கும் எனது நன்றிகள்.

gragavan
19-05-2007, 09:02 PM
இது கதையா...உண்மை நிகழ்ச்சியா? கதை என்றால் சிந்தனை ஓட்டம் மிகச் சிறப்பு. பெண்மையின் முழுப்பரிமாணத்தையும் அந்தப் பாத்திரம் காட்டுகிறது என்று நம்புகிறேன்.

அக்னி
19-05-2007, 09:22 PM
உண்மையா... பொய்மையா..?
எதுவாக இருந்தாலும்,
பெண்மை... மேன்மை...

சிறந்த எழுத்தாளுகை உங்களில் தெரிகிறது...
மேலும் மேலும் படைப்புக்களால் எங்களை மகிழ்வித்திடுங்கள்...

அன்புரசிகன்
20-05-2007, 11:11 AM
கதை மிக சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி - வாழ்த்துக்கள். தவிர இது உண்மைக்கதை போல் உள்ளதே...

ஓவியன்
20-05-2007, 11:42 AM
அமரா!

உங்கள் கதையின் யதார்த்தம் அறிந்தவர்களில் நானும் ஒருவன். இலங்கையில் இல 104,154,155,255 ம் இலக்க பேரூந்துகளில் தொங்கியபடி பயண்ணித்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. அந்த அவலத்தைக் கண் முன் நிறுத்தியது உங்கள் வரிகள்.

வாழ்த்துக்கள் நண்பரே! - தொடரட்டும் உங்கள் எழுத்தும் பணி.

அன்புரசிகன்
20-05-2007, 02:19 PM
117, 120, 141 இவற்றை தவறவிட்டுவிட்டீரே...

மனோஜ்
20-05-2007, 03:50 PM
கதை கண்முன் நடப்பது போன்று அழகாக எழுதியுள்ளீர்கள்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அமரன்
20-05-2007, 06:46 PM
அனைவரது கருத்துக்கும் நன்றி. இது உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. கற்பனை பாதி நிஜம் மீதி.

Gobalan
21-05-2007, 09:02 AM
இது உண்மை சம்பவம் என்று தெரிந்ததும் அந்த பெண்ணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரு மனிதனின் உள் எண்ணங்களின் பிரதிபலிப்பு அவன் வயிற்றுக்காக செய்யும் வேலயில் இல்லை, அவன் பிற மனிதர்களுக்கு செய்யும் நற்செயல்களில் தான் என்று உங்கள் சிறுகதை வெகு அழகாக எடுத்து காட்டுகிறது. நல்ல நடையுடன் எழுதிய கதை. என் வாழ்த்துக்கள். நன்றி.

அமரன்
21-05-2007, 12:01 PM
நன்றி கோபாலன். ஆழ்ந்து படித்துக் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்.

சிவா.ஜி
26-05-2007, 10:14 AM
யோசிக்கவைத்த கதை.எழுத்துநடையும் மிக நன்றாக இருக்கிறது. கதையை முடித்த விதம் அருமை.மன்மார்ந்த பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
26-05-2007, 03:16 PM
நன்றி சிவா. உங்களின் கருத்துகள் எனக்கு உற்சாகத்தைக்கொடுக்கின்றன. இன்னும் எழுதத் தூண்டுகின்றன.

விகடன்
03-11-2007, 03:42 AM
அழகான சிறு அநுபவம். மானத்திற்கு கொடுத்த பெறுமதியை விட மானிடத்திற்கு கொடுத்த பெறுமதி அதிகம் என்று சுட்டிக்காட்டிய பெண்.
அமரனின் சிரம் காத்த பெண் வாழ்க.
அநுபவத்தை பகிர்ந்துகொண்ட அமரிற்கு நன்றுகள்
--------
இந்த சுட்டியை தட்டிவிட்ட ஓவியனிற்கும் நன்றிகள்

அமரன்
03-11-2007, 08:33 AM
ஆஹா...
தறிகெட்டுப் போய்க்கொண்டு இருந்த எனது வாழ்வில்..
திருப்புமுனையாக மன்றம்; கடிவாளமாக தமிழ்..!
ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
முதல் கதை எழுதிய சம்பவம் நினைவில்..
தூசு தட்டிய விராடனுக்கும் உதவிய ஓவிக்கும் நன்றி..

யவனிகா
04-11-2007, 03:13 AM
ஏற்கனவே ஆண்...பெண்...அழகான தருணங்களுக்காக இந்தக் கதையைப் படிக்க நேர்ந்தது. நல்ல கதைக்கரு. சிறியதொரு சம்பவத்தை மையமாக வைத்து நேர்த்தியாகப் பின்னப்பட்ட கதை. அதிலும் கடைசி வரிகள் ஆழமான வரிகள்.பாராட்டுக்கள் அமரன்.

க.கமலக்கண்ணன்
04-11-2007, 02:59 PM
அருமையான கதை மனதை கனக்க வைத்துவிட்டது

அகம் மிக துய்மையான பெண்ணின்

அற்புத கதை மிக மகிழ்ந்தேன்...

இளசு
04-11-2007, 05:06 PM
பிறரின் வலி, பசி, கண்ணீர், உய்த்தறிய
, உதவ
தாய்மை உணர்வு தேவை.

அது இயல்பாக இயற்கை அளித்த இடம் பெண்!

அமரனின் படைப்பு அதைப்
பறைசாற்றுகிறது தெளிவாக!

நன்றி அமரா!

நேசம்
05-11-2007, 01:44 AM
சூழ்நிலையால் அல்லது விருப்பப்ட்டோ இந்த தொழிலை செய்தாலும் அவளுக்கு ஒரு மனம் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை அழகாக முதல் முயற்சியிளே முத்திரை பதித்து விட்டார்.ஜி.அமரன் ஜி

மதி
09-11-2007, 02:32 AM
அமரன்
இது உங்க முதல் கதையா..?
அற்புதமாய் எழுதியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்..

மலர்
10-11-2007, 12:01 PM
அமரு இது உங்களின் முதல் கதையா..?
நம்பவே முடியலை...

முதல் கதையையே அசத்தலா ஆரம்பித்து இருக்கீங்க...
பராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.

உங்களுக்கு உதவிய பெண் உண்மையில்
அவரை பாராட்டாமல் இருக்கமுடியலை....

அமரன்
10-11-2007, 05:03 PM
எனது கதைப்பயணத்தின் தொடக்கப்புள்ளிக்கு கிடைக்கும் தட்டுகள்
எங்கோ இருக்கும் கதையின் தாய்க்கு நான் கொடுக்கவேண்டிய கடன்கள்...
தந்த அனைவருக்கும் நன்றி. தந்த அன்னைக்கும் நன்றி..

சுகந்தப்ரீதன்
12-11-2007, 07:43 AM
அன்புள்ள அமர்.. இந்த கதையை இரண்டு வாரங்களுக்கு முன்பே படித்தேன்.. அவசரத்தில் பின்னூட்டம் கொடுக்காமல் சென்றுவிட்டேன்..! என்னை ரொம்ப ஈர்த்த கதையிது..கதையல்ல உண்மை சம்பவம்.. அந்த தாய்க்கு எனது நன்றிகள்.. உங்களை காத்து எங்களுக்கு வழங்கிய அந்த தாய் எங்களுக்கும் தெய்வம்தானே.... முதல்கதையே அசத்தல் அமரரே..!வாழ்த்துக்கள்..!

ஆதவா
12-11-2007, 08:23 PM
முதல் கதையா? கரு எடுத்தவிதம் ஓட்டம் ஆகியன அருமையாக இருக்கிறது.

தலைப்பு? சம்பந்தமில்லாத கொட்டகைக்குள் ஆடுகள் நுழைந்தது போல/

(ஓவியாவின் கருத்து) அப்பெண்ணைப் பற்றி அனுதாபப் படவேண்டிய அவசியமில்லை. அது அவள் தொழில். இன்று பல நாடுகள் தொழிலாக ஏற்றிருக்கிறார்கள். என்ன? நம் கலாச்சாரத்திற்கு ஏற்றதல்ல என்று நினைக்கிறீர்களா? இன்று நேற்றா இருக்கிறது ? இந்திய வரலாற்றின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறதே!!

கதையின் போக்கும் முடிவும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஆனால் இன்றைய அமரனின் கையில் விளையும் இதே கரு, நல்ல வர்ணனைகள் நிறைந்த களமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

பெரும்பாலும் தமிழ் சொற்களே! ஆங்கிலம் மருந்துக்கும் இல்லை. (பேருந்துப் படிகள் கூட மிதிபலகைகள் என்று மின்னுகிறது.)

வாழ்த்துகள் அமரன்

அமரன்
13-11-2007, 06:49 AM
நன்றி பிரீதன் மற்றும் ஆதவா.!
பாலியல்தொழிலாளிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாட்டுக்கு வரி செலுத்த பணிக்கப்படுகின்றனர் என்பது பல இடத்து நிதர்சன உண்மை. எனக்கு தெரிந்து அந்நாட்டு/பிறநாட்டு மக்களில் பெரும்பான்மையினர் அவர்களை இழியோராகப் பார்ப்பதில்லை. அங்குள்ள நம்தேசத்தவர் தீண்டத்தகாதோராக கருத்தில் நிறுத்தி, நிறுக்கமுடியாத இழிசொற்பிரயோகிப்புகளும், கடைநிலைப் பார்வையும்...அப்பப்போ மனப்புழுக்கம் தரும் செயல்கள்...

ஆங்கிலக்கலப்பு இல்லாமல் எழுத முயன்றேன்.. இப்போது பார்த்தால் இன்னும் மெருகேற்றி இருக்கலாம் எனத்தோன்றும்.

MURALINITHISH
22-09-2008, 09:43 AM
சில இடங்களில் பாவடை கழற்றி கிடப்பவள் இன்று அவனின் உயிர்க்காக பாவடையை பிடித்து கொள்ள செய்தாள்

எங்கும் இருக்கிறார்கள் பெண்கள் பெண்மையின் சாயலோடு அது எங்கிருந்தாலும் ஏற்று கொள்வதே பண்பு