PDA

View Full Version : எங்கிருந்தாய் என்தன் நிலவே



nparaneetharan
19-05-2007, 02:12 PM
http://www.tamilmantram.com//vb/showthread.php?t=5717

வணக்கம்

18.01.2003 இல் தமிழ்மன்றத்தில் கரவை பரணீ என்ற பெயரில் எழுதிய ஓர் கவிதை

எங்கிருந்தாய் என்தன் நிலவே ! ந.பரணீதரன்

1)
ஒரு வார்த்தைபேச
நாவெங்கும் மொழிகளாயிரம்
ஒரு பார்வை பார்க்க
உடலெங்கும் கண்களாயிரம்
உனக்காக காத்திருந்து
என் நிழல்கூட சிலையாகிவிட்டது
நீ மட்டும் வரவேயில்லை

2)
என்மேலான உன் இஸ்டம்
இலைமேல் பனித்துளியா ?
நீர்மேல் நீந்தும் குமிழியா?
மழையை அழைக்கும் மயிலாட்டமா ?
விழிகாக்கும் இமையா ?
இன்னமும் பூயவில்லையே ?

3)
புள்ளிவைத்த கோலமிட்டு
பூக்கள் கோர்த்து மாலைவைத்து
மழைத்துளி சேர்த்து தடாகம் அமைத்து
வானவில் பறித்து வண்ணம் அடித்து
எனக்காக காத்திருந்ததாய் சொல்லும்போதுதான்
காதல் ஐலிக்கின்றது

4)
தென்றல் தொட்டுப்போனதாய்
திங்கள் சுட்டுச்சென்றதாய்
மகரந்த தீண்டல் மனதை வருடியதாய்
வீழ்ந்த துளி பாதம் குளிர்ந்ததாய்
சொல்லிக்கொள்கின்றாய்
என்காதல் என்ன செய்கின்றுதென
எப்போது சொல்லிக்கொள்வாய் ?

5)
மனசின் கதவினை
அறியாமல் திறந்தாய்
உள் நுழையத்தயங்குவதேன் ?
துளித்துளியாய் வீழ்வதென்றால்
ஏன் இத்தனை துடிப்பு உனக்குள்ளே ?

6)
நீ இல்லாமல் எனக்கில்லை வாழ்வு
நீ இல்லாமல் ஓர் கனவில்லை
உன் தொடுகையில்லாமல் உறக்கம் இல்லை
உன் எண்ணம் இல்லாமல் கவிதை இல்லை
உன் அருகாமையில்லையென்றால் - அன்பே
நான் இல்லவே இல்லை

7)
மலானுள்ளே வண்டறியாத
வாசல் எதுவும் உண்டோ ?
உனக்குள்ளே எனக்கே பூயாமல்
இன்பம் வேறு உண்டா ?
சொல்லிவிடு அள்ளித்தருகின்றேன்

8)
திரைவிலக்கு
பார்வை பரப்பு
வெற்றி உன்பக்கம்

தீபமேற்று
புலன்கள் தீட்டு
வாழ்க்கை பூயும்

இமை திற
சிந்தனை சிதறவை
வானம் உன்வசம்

பாதங்கள் தரையில்வை
புலன்களை பறக்கவிடு
உலகம் கையெத்தும் தூரத்தில்

9)
ஆண்டவர் மாண்டபின்பு
தோண்டுகின்றர் வாழ்பவர்
மீண்டும் மாள்வதற்கு
(அயோத்தி பிரச்சினை)

10)
இலக்கு தொந்தும்
இணைய மறுக்கும்
தண்டவாளங்கள்
தமிழர் - சிங்களவர்


உங்கள் அன்பின்
ந.பரணீதரன்

--------------------------------------------------------------------------------

அமரன்
19-05-2007, 03:19 PM
நல்ல கவிதை. படித்தேன் ருசித்தேன். (அதுதான் பழைய பெயர் இருக்கே. அப்புறம் ஏன் புதிய பெயர். பழைய நுழைவுச்சொல்லின் இரகசிய குறியீடு மறந்து போயிருந்தால் நிர்வாகியுடன் தொடர்பு கொண்டு ஏதாச்சும் பண்ணலாமே)