PDA

View Full Version : காதலாகி கசிந்து கவிஞனாகி ..........



nparaneetharan
19-05-2007, 01:51 PM
வணக்கம்

இராவண மன்னன் ஆண்ட இலாங்கபுரியிலே மாற்றானிற்கு மண்டியிட மாட்டேன் தன்மானம் போனாலும் தமிழ் மாணம் காத்து நிற்பேன் என்று தலைநிமிர்ந்து நின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த யாழ் மண்ணின் கவி மன்னவன் வாழ்ந்த கரவெட்டியில் பிறந்தவன் என்ற பெருமையுடைவன் ஆகின்றேன். கற்றவர் நிறைந்த கரவை மண்ணிலே இச் சிறியவன் நான் வளர்ந்தேன் என்னும்போது சிரம் கொஞ்சம் செருக்கடைவதில் தப்பில்லை.

பாட்டன் வாயிலாக தமிழ் வைசசமயம் என்னும் ஒரு சுழற்சிக்குள் சிக்கி சிறுவயது முதலே தமிழ்மேல் தீராத மோகம் கொண்டவனாய் அன்னைத் தமிழிற்குமாய் தாய்மண்ணிற்குமாய் வாழவேண்டும் என்று அவாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். அன்று தாய்மண்ணில் கற்ற தமிழ் இன்று இந்த புலம்பெயர் மண்ணிலும் தமிழ் கற்பிக்க பேருதவியாக இருக்கின்றது.

சிறுவயதில் தமிழமேல் கொண்ட காதல் பருவவயதில் மங்கைமேல் சிறிது தாவிக்கொண்டது. அது காலப்போக்கில் காலத்தின் சில கட்டளைகளால் மாற்றமாகி தேசம்விட்டு பறக்க வைத்தது. காதலோடு வாழ்ந்து இன்று காதலினால் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறியதோர் கிறுக்கல் கவிஞன் நான் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகின்றேன்.

காதல் தந்த ஊக்கம்தான் தாயையும் தாய்மொழியையும் தாய் மண்ணையும் சொல்லமுடியாத அளவிற்கு நேசிக்க வைக்கின்றது.

ஆயிரம் கவிஞர்களை கண்டுகொண்டேன் அவர்களின் பின்பற்றலாய் அவர்களின் தடங்களைத் தொடர்ந்தவனாய் நானும் வளர ஆசைப்பட்டேன். வளர்வேன் என்ற நம்பிக்கையுடன்

எனது கவிதைகளை யாழ்.கொம் இல் காணலாம்.

www.paranee.wordpress.com


எங்கிருந்தாய் என்தன் நிலவே ! ந.பரணீதரன் (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=5717)

18.01.2003

1)
ஒரு வார்த்தைபேச
நாவெங்கும் மொழிகளாயிரம்
ஒரு பார்வை பார்க்க
உடலெங்கும் கண்களாயிரம்
உனக்காக காத்திருந்து
என் நிழல்கூட சிலையாகிவிட்டது
நீ மட்டும் வரவேயில்லை

2)
என்மேலான உன் இஸ்டம்
இலைமேல் பனித்துளியா ?
நீர்மேல் நீந்தும் குமிழியா?
மழையை அழைக்கும் மயிலாட்டமா ?
விழிகாக்கும் இமையா ?
இன்னமும் பூயவில்லையே ?

3)
புள்ளிவைத்த கோலமிட்டு
பூக்கள் கோர்த்து மாலைவைத்து
மழைத்துளி சேர்த்து தடாகம் அமைத்து
வானவில் பறித்து வண்ணம் அடித்து
எனக்காக காத்திருந்ததாய் சொல்லும்போதுதான்
காதல் ஐலிக்கின்றது

4)
தென்றல் தொட்டுப்போனதாய்
திங்கள் சுட்டுச்சென்றதாய்
மகரந்த தீண்டல் மனதை வருடியதாய்
வீழ்ந்த துளி பாதம் குளிர்ந்ததாய்
சொல்லிக்கொள்கின்றாய்
என்காதல் என்ன செய்கின்றுதென
எப்போது சொல்லிக்கொள்வாய் ?

5)
மனசின் கதவினை
அறியாமல் திறந்தாய்
உள் நுழையத்தயங்குவதேன் ?
துளித்துளியாய் வீழ்வதென்றால்
ஏன் இத்தனை துடிப்பு உனக்குள்ளே ?

6)
நீ இல்லாமல் எனக்கில்லை வாழ்வு
நீ இல்லாமல் ஓர் கனவில்லை
உன் தொடுகையில்லாமல் உறக்கம் இல்லை
உன் எண்ணம் இல்லாமல் கவிதை இல்லை
உன் அருகாமையில்லையென்றால் - அன்பே
நான் இல்லவே இல்லை

7)
மலானுள்ளே வண்டறியாத
வாசல் எதுவும் உண்டோ ?
உனக்குள்ளே எனக்கே பூயாமல்
இன்பம் வேறு உண்டா ?
சொல்லிவிடு அள்ளித்தருகின்றேன்

8)
திரைவிலக்கு
பார்வை பரப்பு
வெற்றி உன்பக்கம்

தீபமேற்று
புலன்கள் தீட்டு
வாழ்க்கை பூயும்

இமை திற
சிந்தனை சிதறவை
வானம் உன்வசம்

பாதங்கள் தரையில்வை
புலன்களை பறக்கவிடு
உலகம் கையெத்தும் தூரத்தில்

9)
ஆண்டவர் மாண்டபின்பு
தோண்டுகின்றர் வாழ்பவர்
மீண்டும் மாள்வதற்கு
(அயோத்தி பிரச்சினை)

10)
இலக்கு தொந்தும்
இணைய மறுக்கும்
தண்டவாளங்கள்
தமிழர் - சிங்களவர்


உங்கள் அன்பின்
ந.பரணீதரன்

நட்புடன் என.பரணீதரன்

ஆதவா
19-05-2007, 01:58 PM
நண்பரே! அழகிய அறிமுகம்... அட்டகாசம்.... மற்ற தளங்களிலிருந்து கவிதையைப் பார்வையிடும்படி சொல்லவேண்டாம். இங்கே என்ன கவிதைகள் பதிக்கிறீர்களோ அதை மட்டும் சுட்டியாக கொடுங்கள்....

ஓவியா
19-05-2007, 01:59 PM
நல்ல அருமையான தமிழில் அழகான விமர்சனம். நன்றி நண்பரே.

(www.yarl.com) சென்று உலவினேன். கவிதைகளை தேடி பிடிக்க அதிக நேரம் எடுப்பதால், தாங்களே அந்த கவிதைகளை இங்கு பதிக்கலாமே!.

தொடருங்கள் உங்கள் தமிழ் சேவையை.

வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும்.

ஆதவா
19-05-2007, 03:00 PM
தொந்தும்

இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருப்பது இப்போதுதான் அறிகிறேன்... நண்பரே! தெரிந்தும் ஆ? இல்லை தொலைந்தும் ஆ?

அமரன்
19-05-2007, 03:12 PM
நல்ல ஒரு அறிமுகம். ஆதவாவின் கருத்தை நான் பிரதிபலிக்கின்றேன். அங்கே உள்ள கவிதைகளையும் புதிய கவிதைகளையும் தமிழ்மன்ற உறவுகளுக்காக தாருங்கள்.

மதுரகன்
19-05-2007, 05:44 PM
வணக்கம் பரணி நானும் இலங்கைதான் வவுனியாவில் வசிக்கிறேன்..

உங்கள் கவித்திறம் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்...

அக்னி
19-05-2007, 09:14 PM
காதலாகி கசிந்து கவிஞனாகிய பரணீ உங்கள் கவிதைகளால் எங்களை உருக வைத்திடுங்கள் என்றென்றும்...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

lolluvathiyar
20-05-2007, 01:18 PM
யாழ்.காம் இல் இருக்கும் உங்கள் கவிகளை
இங்கு தர வேண்டும்.
இங்கு அனைவரும் வெல்கம்
அறிமுகம் சூப்பர்

மனோஜ்
24-05-2007, 08:02 AM
மிக அருமை நண்பரே அறிமுகமும் கவிதைகளும்
தொடர்ந்து மன்றத்தில் வளர வாழ்த்துக்கள்