PDA

View Full Version : நினைப்பும்.., துடிப்பும்...



அக்னி
19-05-2007, 12:38 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j8.jpg

நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...

ralah
19-05-2007, 12:58 PM
நான் இறக்கும்வரை உன்னைதான் நினைத்திருப்பேன்...அன்பே இக்கணமே இறந்துவிடத்தான் துடிக்கின்றேன். வித்தியாசமாக இருக்கின்றது. இறந்து விட்டாளா? இல்லை, அவளின் நினைப்பு கொல்கின்றதா? எப்படி? விபரமாய் சொல்லுங்களேன்.

அக்னி
19-05-2007, 01:11 PM
மறக்க முடியாமல் இறக்கத் துடிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... (காதல்)
சேர்ந்து வாழ விரும்பாமல், பிரிவதற்காகவே இறக்கத் துடிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... (ஊடல்)

மயூ
19-05-2007, 01:14 PM
இறக்கும் வரை நினைக்க முடியுமா?
அப்போ ஏதற்கு
இறக்க இத்தனை துடிப்பு
உம்மேலே நம்பிக்கை இல்லையே!!!

அக்னி
19-05-2007, 01:26 PM
இறக்கும் வரை நினைக்க முடியுமா?
அப்போ ஏதற்கு
இறக்க இத்தனை துடிப்பு
உம்மேலே நம்பிக்கை இல்லையே!!!

காதலில் நினைப்பிருக்கும்போதே இறப்பும் வரும்...
நினைக்கும்போதும் இறப்பு வரும்...

இது என் அவநம்பிக்கையல்ல... மனதில் வந்த வரிகள்... என்னுடன் முடிச்சுப் போடாதீர்கள். மன்றக்கவிகள் வந்தால் மேலும் விளக்கம் தருவார்கள்தானே... நானும் குழம்பிவிட்டேன்...

ralah
19-05-2007, 01:31 PM
சேர்ந்து வாழ முடியவில்லையே என்றால் சரியாக வரும்.சேர்ந்து வாழவிருபாமல்...பிரிவதற்காகவே...எப்படி? புரியவில்லை. முடிந்தால் தெளிவு படுத்துங்களேன்.

மயூ
19-05-2007, 01:32 PM
ஹா.. ஹா.. பரவாயில்லை!

அக்னி
19-05-2007, 02:00 PM
சேர்ந்து வாழ முடியவில்லையே என்றால் சரியாக வரும்.சேர்ந்து வாழவிருபாமல்...பிரிவதற்காகவே...எப்படி? புரியவில்லை. முடிந்தால் தெளிவு படுத்துங்களேன்.

இரண்டு வரியைப் பதிந்துவிட்டு நான் படும் பாடு...

காதலித்தவர் பிரிந்து, மீண்டும் வந்தால், ஏற்கமுடியாத சூழ்நிலையில்... அல்லது மனம் வெறுத்த நிலையில்... இருக்கும் மனதின் குமுறலாகக் கண்நோக்குங்கள்...

அப்பாடா... இனித் தாங்காது...

அமரன்
19-05-2007, 03:24 PM
உயிரோடு இருக்கும் வரை உனது நினைவுகள் இருக்கும். உன்னை மறக்கச்சொல்லி நீ சொன்னதால் நான் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றீரோ அக்னி.

அக்னி
19-05-2007, 07:55 PM
உயிரோடு இருக்கும் வரை உனது நினைவுகள் இருக்கும். உன்னை மறக்கச்சொல்லி நீ சொன்னதால் நான் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றீரோ அக்னி.

நான் சொல்ல வந்தது...

உன்னை என்னால் மறக்க முடியவில்லை. எனவே நான் இறக்கும்வரைக்கும் உன்னை என் நினைவில் வைத்திருப்பேன்...
உன்னை என்னால் நினைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவேதான் இப்பொழுதே இறப்பதனால் இத்துன்பத்திலிருந்து விடுதலை பெற முனைகின்றேன்...

என்பதே...

அமரன்
19-05-2007, 08:23 PM
நன்றி அக்னி கவிதையின் கருவைச் சொன்னதற்கு.

அக்னி
12-06-2007, 12:49 AM
நன்றி அக்னி கவிதையின் கருவைச் சொன்னதற்கு.
நன்றி அமரன் கவிதை என்று ஏற்றுக்கொண்டதற்கு...

ஆதவா
12-06-2007, 02:18 AM
நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...


இறக்கும்வரை அவளை நினைத்திருக்கும் அவன் அந்த கணமே இறந்துபோவதாக இருப்பின் காதலித்து என்ன அர்த்தம்? இறப்பு என்பது காதலுக்கு வராதவரையில் அது உன்னதமான காதல்..

உங்கள் வரிகளின் மறைமுக அர்த்தம், காதலித்த/காதலிப்பதற்கு முன்பே இறந்துபோவேன் என்பது. அப்படியே அந்த வேதனைகளிலிருந்து மீண்டு வருவதாக இருப்பின் எதற்காக நினைக்கவேண்டும்?

இது என் கருத்துக்கு முரணாக இருக்கிறதே தவிர கவிதையை நான் குறை சொல்லவில்லை என்ப்தை நீர் அறிவீர்.

இறப்பில்லா கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அக்னி
15-06-2007, 09:58 AM
இது என் கருத்துக்கு முரணாக இருக்கிறதே தவிர கவிதையை நான் குறை சொல்லவில்லை என்ப்தை நீர் அறிவீர்.

இறப்பில்லா கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
உங்கள் ஒரு துளி விமர்சனத்தையாவது எதிர்பார்க்கும் எனக்கு,
எதுவுமே குறையல்ல...
என்னை நிறைவாக்க வரும் உற்சாகமே ஆதவா...

நன்றி!

ஷீ-நிசி
15-06-2007, 10:04 AM
நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...

எனக்கு மரணம் என்ற ஒன்று வந்திடும்வரையில் என் நினைவுகளில் நீயே இருப்பாய்... உன் நினைவுகளோடே நான் இறந்திட விரும்புகிறேன்.. அது இக்கணமே என்றாலும்.....

அருமை அக்னி!

அக்னி
15-06-2007, 10:06 AM
எனக்கு மரணம் என்ற ஒன்று வந்திடும்வரையில் என் நினைவுகளில் நீயே இருப்பாய்... உன் நினைவுகளோடே நான் இறந்திட விரும்புகிறேன்.. அது இக்கணமே என்றாலும்.....

அருமை அக்னி!
உன் நினைவுகளோடு வாழ்வது எனக்கு தாங்கமுடியாத வேதனை என்பதால்
இக்கணமே இறக்க விரும்புகின்றேன் என்றும் கொள்ளலாம்.
அதாவது,
நீயின்றி நினைவுகளோடு வாழ்வதும் இயலாது என்றும்,
உன் நினைவுகளோடு கூட வாழவும் இயலாது, மறக்கவும் முடியாது என்றும்,
கருதலாம்.

நன்றி!

சுட்டிபையன்
17-06-2007, 04:02 AM
காதல் யாரையும் இறக்க வைப்பதில்லை
காதல் வாழத்தான் வைக்கும் எப்போதும்

:D:D:D:D:DD:D:D

ஓவியன்
17-06-2007, 09:01 AM
நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...
அன்பே..!
நான் இக்கணமே
இறந்துவிடத்தான்
துடிக்கின்றேன்...


ஏன் அக்னி!

நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து, அவள் ஞாபகங்களுடன் நினைத்து நிலைத்து நிற்க வேண்டாமா?

இப்படி இறக்க விரும்புகிறேன் என்கிறீர்களே?

நீங்கள் நீண்ட நாட்கள் அவளுடன் அவள் ஞாபகங்களுடன் வாழ என் வாழ்த்துக்கள்.

மனோஜ்
17-06-2007, 09:11 AM
காதல் என்பது வாழ்வதாற்காக
சாவதற்கு இல்லை அகினி வரிகள் அருமை

இனியவள்
17-06-2007, 09:23 AM
நல்ல கவி வரிகள் பாராட்டுக்கள் நண்பரே..

நான் இக்கணம் இறந்து விடத் தான் துடிக்கிறேன்
ஆனால் உன் நினைவுகள் என்னை மரணிக்க விடாமல் தடுக்கின்றன.
உன் நினைவினில் வாழ்வது கூட ஒர் இன்பம் தான்

greatsenthil
18-06-2007, 08:31 AM
சிறியதாக இருந்தாலும் பெருமையாக உள்ளது.

அக்னி
18-06-2007, 11:01 PM
மிக்க நன்றி நண்பர்களே...
விமர்சனங்கள் என்னை விரிவாக்க உதவுகின்றன...

வசீகரன்
19-06-2007, 05:45 AM
உங்களது உள்ள உணர்வுகள்..... உங்கள் அவர்களும் இப்படி சொல்வார்களா....?

அக்னி
30-06-2007, 02:21 AM
காதலில் எப்போதும் சோகம் ஆண்களுக்கு மட்டு
உங்களது உள்ள உணர்வுகள்..... உங்கள் அவர்களும் இப்படி சொல்வார்களா....?
தலைப்பில்,
காதலில் எப்போதும் சோகம் ஆண்களுக்கு மட்டு என்கின்றீர்களா...
அல்லது,
மட்டுமா என்று வினவுகின்றீர்களா..?

தவிர,
நான் ஆண், பெண் என்று யாரையும் சுட்டவில்லையே...
இதையே ஒரு பெண் எழுதி இருந்தால், என்ன சொல்வீர்கள்..?

சூரியன்
30-06-2007, 09:52 AM
அக்னி கவிதையுடன் படமும் சேர்த்தது இன்னும் அருமை.

அக்னி
02-07-2007, 08:57 PM
அக்னி கவிதையுடன் படமும் சேர்த்தது இன்னும் அருமை.

நன்றி சூரியன்...