PDA

View Full Version : தூரிகைகள் அற்ற கூடங்கள்ஆதவா
19-05-2007, 09:05 AM
தேகங்களில் நீர்படர்ந்தவாறே
வர்ணக் கலவைகளை
அப்பிக் கொண்டு
மிதக்கும் கனவுகளில்
தூரிகைகள் துடைக்கப்படுகிறது
ஓவியனின் எச்சிலில்..

கூர் விழுதுகளால்
நேர் பார்க்கப்பட்ட
வர்ணக் கோலங்களைத்
தூக்கிக் கொண்டு செல்லும் முன்
மனம் கனக்க
பார்வையிடுகிறான்
கனவுகள் ஒடிந்த
கண்களில்

விட்டுப் போன தூரிகைகளை
பிணமாக்கி ஓடுகிறது
எலிக் குஞ்சுகள்.
வர்ணப் பெட்டிகளை
விசிறியடித்துச் செல்லுகிறது
பூனைக் குட்டிகள்

எல்லாம் எழுதியவை
வாங்கித் தருமோ?

கனவுகளை
வாங்குவார் யாருமில்லை
கனவெனப்பட்ட கைங்கரியங்களை
வாங்குவாருண்டோ?

என்றாவது ஒருநாள்
விற்கப்படும் அந்த ஓவியம்
அதுவரை தூரிகைகள் அற்ற
ஓவியக் கூடத்தை
எலிகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்கும்..

- ஆதவனின் அப்பனின் நிலை.

ஓவியன்
19-05-2007, 09:11 AM
ஆதவா!

கவிச்சமரில் உதித்த கருவை மெருகேற்றி இருக்கிறீர்கள் என நம்புகிறேன். இன்றைய பல கலைஞர்களின் அவல நிலை இப்படித்தானிருக்கிறது. எங்களைத் தங்கள் கலையால் மகிழ்விக்கும் அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் தீரா அவலம் தான். அந்த அவலத்தை உங்கள் வரிகளில் வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே!.

ஆதவா
19-05-2007, 10:11 AM
நன்றி ஓவியன்... இதில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. மறைமுகக் கருத்து.... அது என்னுடைய நிலை....

மனோஜ்
19-05-2007, 10:18 AM
கவிதை ஓவியமாக ஓவியத்தின் ஓலங்கள் அருமை நண்பா

ஆதவா
19-05-2007, 10:21 AM
ஆம்... அதில் என் ஓலமும் அடங்கியுள்ளது.... :(

ஓவியன்
19-05-2007, 10:25 AM
நன்றி ஓவியன்... இதில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. மறைமுகக் கருத்து.... அது என்னுடைய நிலை....

ஆமாம் உங்கள் தந்தையும் ஒரு ஓவியராச்சே!

அத்துடன் இது எல்லாக் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

சூரியன்
19-05-2007, 10:55 AM
மிக நல்ல கவிதை, வாத்தியார் இன்னும் இதை பார்க்கல போல இருக்கு
உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க நண்பர்களே!!

ஆதவா
19-05-2007, 11:02 AM
ஆமாம் ஓவியன்.... சரியாகச் சொன்னீர்கள்... நன்றி மிக்கி

அக்னி
19-05-2007, 11:07 AM
கலைஞர்களின் மன ஏக்கம் அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் இப்படித்தான். எத்தனையோ திறமைசாலிகள் இலை மறை காயாக மறைந்து வாழ்கிறார்கள் எங்கள் சமூகங்களில். அரசியல், பணபலம், ஜாதி, மதம் இவற்றின் கொடூர பிடிகளுக்குள் தலையெடுக்க முடியாமல் போகும் கலைஞர்கள் நிலை மாற வேண்டும். கலைஞனின் படைப்புக்கள்தான், எங்கள் வரலாற்றின் முக்கிய தூண்கள். அவைதான் உலகத்தின் இறுதிநாள் வரை மனிதன் வாழ்வை எடுத்துக் கூறும் ஆதாரங்கள். இதை உலகம் உணருமா? கலைஞரின் உணர்வுகளை மதிக்குமா?

ஆதவா
19-05-2007, 11:11 AM
கலைஞர்களின் மன ஏக்கம் அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் இப்படித்தான். எத்தனையோ திறமைசாலிகள் இலை மறை காயாக மறைந்து வாழ்கிறார்கள் எங்கள் சமூகங்களில். அரசியல், பணபலம், ஜாதி, மதம் இவற்றின் கொடூர பிடிகளுக்குள் தலையெடுக்க முடியாமல் போகும் கலைஞர்கள் நிலை மாற வேண்டும். கலைஞனின் படைப்புக்கள்தான், எங்கள் வரலாற்றின் முக்கிய தூண்கள். அவைதான் உலகத்தின் இறுதிநாள் வரை மனிதன் வாழ்வை எடுத்துக் கூறும் ஆதாரங்கள். இதை உலகம் உணருமா? கலைஞரின் உணர்வுகளை மதிக்குமா?

சரியாகச் சொன்னீர்கள் அக்னி... உங்கள் எழுத்துக்களில் அனுபவமும் முதிர்ச்சியும் தெரிகிறது... கலைஞனின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் மூடர்கள் என்றுதான் சொல்லவேண்டும்... கவிதைக்கருவைக் கையாண்டு நீங்கள் சொன்னவைகள் எனக்கு அமிர்தம்..
நன்றி

ஓவியா
19-05-2007, 12:04 PM
ஆதவா நெஞ்சைத்தொடும் ஓரு கவிதை. அருமையான படைப்பு.

என் யூகம் இந்த கவிதை எழுத ஒரு 15 நிமிடம் தானே எடுத்துக்கொண்டாய்?? உங்கள் திறமை அப்படி.

நல்ல கரு, ஓவியம் மட்டுமில்லை ஆதவா இந்த உலகில் பல விசயங்கள் இப்படிதான் எத்தாவது ஒரு விடியலுக்காக ஏங்கிக்கொண்டுதான் இருகின்றது.

சில கைவண்ண கலைகள் வாங்குவார் இல்லாமல் அப்படியே புளுதி படிந்து காண மனம் கணக்கும்.

கலங்காதே அனைத்திற்க்கும் கடவுள் ஒரு விடியல் வைத்துள்ளார். ஒன்று யாராவது அதனை வாங்கிச்செல்வார், இல்லை இயற்க்கை வாங்கிக்கொள்ளும்.

lolluvathiyar
19-05-2007, 12:30 PM
கலைஞனின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் மூடர்கள் என்றுதான் சொல்லவேண்டும்


மூடன் என்று சொல்ல கூடாது ஆதவா.
அது கலை தினிப்பு ஆகும்

இன்றைய பரபரப்பு வாழ்கையில் பணத்தை தேடி ஒரு
இலக்கு இல்லாத பந்தயத்தில் ஓடி கொண்டிருகிறார்கள் மனிதர்கள்

இந்த சூல்நிலையில் கலை ரசனை அனைவருக்கும் வர முடியாது.

இது கிராபிக்ஸ் யுகம், விரைவில் ஓவியங்கள் நீ சொன்ன நிலமை தான் வரும்

கவிதை அருமை,
எலிகள் ஓவியம் ர(ரு)சிக்க வந்ததோ

ஆதவா
19-05-2007, 01:44 PM
நன்றிங்க ஓவியா பத்துநிமிடத்தில் எழுதிய கவி இது.
----------------------------
லொள்ளு அண்ணா.. நன்றி சுட்டி காட்டியமைக்கு.... நானும் ஒருவகையில் கலைஞன் (ஓவியன்) என்ற உரிமையில் அப்படி சொன்னேன்... உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை மீறியது தவறு.

நன்றி அண்ணா.