PDA

View Full Version : இவையெல்லாம் சாத்தியம் காதலில் மட்டும் தா



lenram80
18-05-2007, 11:01 PM
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத இந்த உணர்வை
எப்படி கவிதை என்ற பெயரில் கட்டிப் போடுவது?

ஒரு சிட்டுக் குருவி, இதயத்தில் கூடுகட்டி
இரத்த நாளங்களில் ஊஞ்சல் ஆடுமே!

மூளையில் ஏதாவது ஒரு மூலையில்
எந்நேரத்திலும் ஒரு சந்தோஷ வண்டு குடைந்துகொண்டிருக்குமே!

அதுவரை கண்டிராத ஒரு அற்புத உணர்வு
உடலெங்கும் ஊறத் தொடங்குமே!

ஒரு கண் எப்போதும் கனவு உலகத்திலேயே
உலா வந்து கொண்டிருக்குமே!

இதயம் கூட "லப் டக்" எனத் துடிக்காமல்
அவளின் பெயரைச் சொல்லி சொல்லி சிரிக்கத் தொடங்குமே!

அவளைக் காணும் போதெல்லாம்
முடி முதல் நகம் வரை
சின்ன சின்ன வெடிகுண்டுகளாக மாறி
சிதற சிதற வெடிக்குமே!

உடம்பின் அனைத்து எடையையும்
ஒரு உருண்டையாக்கி
இதயம் எப்போதும் சுமக்குமே!

இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்படாத ஏதோ ஒரு விசை
அவளை நோக்கி ஈர்க்கத் தொடங்குமே!

ஒரு விசித்திர விலங்கு உடலில் குடி புகுந்து
உயிரைப் பிடித்து உலுக்கி எடுக்குமே!

விழி வழியே இடிமழை!
மூச்சு வழியே சூறாவளி!
இதழ் வழியே எரிமலை!
உடலெங்கும் பூகம்பம்! - என
சீற்றங்கள் எப்போதும் சில்லரிக்க வைக்குமே!

வித்தியாச விதை ஒன்று
இதயத்தில் முளைத்து
உடலெங்கும் கிளை பரப்பி
உயிரெங்கும் வேர் நிரப்பி
தென்றல் போல புயலையும்
புயல் போல தென்றலையும்
மூச்சுக் காற்றில் மாற்றி மாற்றி வீசுமே!

அவள் சிரித்த கணங்கள் - நான் சிலிர்த்த கணங்களாய்
அவள் மலர்ந்த கணங்கள் - நான் உலகை மறந்த கணங்களாய்
அவள் என்மீது உறைந்த கணங்கள் - நான் அவளை உணர்ந்த கணங்களாய்
அவளை அணைத்த கணங்கள் - என் ஆனந்தக் கணங்களாய்
இப்படி ஒவ்வொரு கணங்களையும்
சொர்க்கத்தில் நனைத்து சுவைக்கத் தொடங்குவோமே!

இவையெல்லாம் சாத்தியம், இந்தக் காதலில் மட்டும் தானோ!

பிரிவு என்று வந்துவிட்டால்
உயிரை பிரித்து எடுத்து
உடம்பை உரித்தெடுத்து
வாழ்வை கேள்வியாக்கி
தனிமையைப் பதிலாக்கி
கண்ணீரால் கடலை நிரப்பத் தொடங்குவோமே!
இதுவும் கூட சாத்தியம், இந்தக் காதலில் மட்டும் தானோ!

மயூ
19-05-2007, 06:18 AM
லெனின் அசத்திட்டீங்க போங்க...
அருமை.. அருமை...
நான் மீண்டும் சொல்கின்றேன்.. காதல்தான் கவிஞர்களை உருவாக்குகின்றது!!!!!!!

அறிஞர்
19-05-2007, 06:23 AM
லெனின் சற்று இடைவெளிக்கு பின் தங்கள் கவிதையை படித்தேன்..

அழகோ அழகு.... காதலில் ஏற்படும் அசைவுகளை ரசித்து எழுதியுள்ளீர்கள்....

காதல் பிரிவு வரிகளும் நச்....

அக்னி
19-05-2007, 10:40 AM
அழகிய கவிதை...

அவள் சிரித்த கணங்கள் - நான் சிலிர்த்த கணங்களாய்
அவள் மலர்ந்த கணங்கள் - நான் உலகை மறந்த கணங்களாய்
அவள் என்மீது உறைந்த கணங்கள் - நான் அவளை உணர்ந்த கணங்களாய்
அவளை அணைத்த கணங்கள் - என் ஆனந்தக் கணங்களாய்

காமத்தையும் கண்ணியமாய் சொல்லும் திறன் எல்லோருக்கும் அமைவதில்லை...

lenram80
20-05-2007, 03:50 PM
நன்றி மயூரேசன், அறிஞர் மற்றும் அக்னி

lolluvathiyar
23-05-2007, 03:15 PM
சத்தியாமாக இது அனுபவித்து
எழுதியது தான்
வாழ்த்துகள் லென்ராம்

நம்பிகோபாலன்
23-05-2007, 06:33 PM
எதனையும் ரசித்த பின்பு வெளிபடுத்தினால் அழகு..கவிதை அதனை சொல்கிறது..அருமை